Skip to Content

20. எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்

எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்

‘‘இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் நல்லதல்ல. அடக்கமே செய்ய வேண்டும்’’ என அன்னை கூறுகிறார்கள். ஒருவர் இறந்தபின் அவரது உயிர் தீயின் சுடும் உணர்வை அறியும் உயிர் அவருடலில் ஏழு நாட்களிலிருப்பதால், அவர் உடலைச் சுட்டால் அவ்வுயிர் அதிர்ச்சியடைகிறது. ‘‘அப்படி அதிர்ச்சியடைந்த பல உயிர்கள் என்னிடம் வந்து முறையிட்டு இருக்கின்றன’’ என்கிறார் அன்னை.

அன்னைக்குச் செய்யும் சேவைக்குப் பலன் இருப்பதைப் போலவே, அன்னையின் பக்தர்களுக்குச் செய்யும் சேவைக்கும் பலன் உண்டு.

அன்னையை வந்தடைந்தபின் மனிதனுடைய திறமைகள் அதிகரிக்கின்றன. சாதாரண மனிதனும் சிறப்பான உயர்வை வாழ்க்கையில் பெறுகிறான். பயனற்ற மனிதர்களும் வாழ்வில் பெரிய மனிதராகிறார்கள். தொழிற் சங்க ஊழியனும் நாட்டுத் தலைவனாகிறான்.

நீ வெறும் மரக்கட்டையானாலும், கட்டை செய்யும் சேவையை அன்னைக்கு நீ செய்தாலும், இன்று ஒரு சேவையை அன்னைக்குச் செய்ய பூர்வஜன்மப் புண்ணியம் தேவை.

ஆத்மீகப் பலனை நாடுபவர்கள் பவித்திரமான காணிக்கையையும் (மலர், இலை) லௌகிகப்பலனை நாடுபவர்கள் பொருள் (பணம்) காணிக்கையையும் அளிப்பது அவசியம்.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும், அன்னையின்பால் ஈர்க்கப்பட்டவர்கட்கு தெய்வ தரிசனம் கிடைக்கும். தங்கள் கோட்பாடுகளில் ஊன்றியவர்கட்கு, அன்னை அவர்கள் வழிபடும் தெய்வ உருவிலேயே காட்சி அளிப்பார்கள்.

**********



book | by Dr. Radut