Skip to Content

பகுதி 12

கணவர் : இவருக்கு என்ன குறை?

தாயார் : அவருக்குக் குறை என்று இல்லை. நிறைவுக்குரியவர் அல்லர். இரண்டிற்கும் போட்டி வந்தால் குறையை நாடும் மனம் உடையவர் இவர்.

கணவர் : அவரிடத்தில் நாம் என்ன செய்திருக்கலாம்? அவரே எப்படி நடந்திருக்கலாம்?

தாயார் : மனைவியிடம் பெரிய பொய்களைப் பெருமைக்காகச் சொல்லியிருக்க வேண்டாம். அவற்றை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு நிலைமையைச் சீர் செய்திருக்க முடியும்.

கணவர் : அது கஷ்டமான காரியம்.

தாயார் : அது கடமை. அதற்குக் குறைவாகப் பலன் தரும்படிச் செயல்பட முடியாது.

கணவர் : இன்று அவர் அதைச் செய்தாலும் பலனிருக்குமா?

தாயார் : நிச்சயமாக இருக்கும். சொந்தப் பிள்ளையைக் காணவில்லை என்றபின் 1000 ரூபாய் காணிக்கை கொடுக்க மனமில்லாத தகப்பனார். பணம் அவ்வளவு முக்கியம்.

கணவர் : நமக்கு அவர்கள் முக்கியமில்லை. நாம் என்ன செய்யக்கூடாது? என்ன செய்யவேண்டும்? என்பதே முக்கியம். பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும்.

தாயார் : பொதுவாகப் பிள்ளைகள் தாயாரை அனுசரித்து வளரும். ஏதோ ஒரு சமயம் தகப்பனாரை அனுசரிப்பதும் உண்டு. தகப்பனாரும், தாயாரும் கட்சி கட்டினால் குழந்தைகளைத் தங்கள் கட்சியில் சேர்த்தால், பிள்ளைகள் வீணாகிவிடும்.

கணவர் : நம் வீட்டில் கட்சியில்லையே.

தாயார் : அன்னை கட்சியில் அனைவரும் இருப்பது நல்லது. யார் கட்சி சேர்க்கிறார்களோ, பிள்ளைகள் அவருக்கு எதிராக முடியும். தகப்பனார் மடியிலேயே வளர்ந்த பையன் தகப்பனாருக்கு எதிரானான்.

கணவர் : அது சமர்ப்பணத்திற்குக் கட்டுப்படாதா?

தாயார் : சமர்ப்பணத்திற்கும், இவர்கட்கும் காத தூரம். அது என்ன என்றே தெரியாது.

கணவர் : எதிரியான மகன் மனம் மாற தகப்பனார் என்ன செய்யலாம்?

தாயார் : பிள்ளையைத் தம் வயப்படுத்தியது தவறு என உணரவேண்டும்.

கணவர் : கணவன், மனைவிக்குள் தகராறா?

தாயார் : எந்தப் பிரச்சினையுமில்லாத குடும்பம். தாயாருக்குப் பாசமில்லை. பெண்ணும், பிள்ளையும் தகப்பனாரிடம் நெருங்கிவிட்டனர். தகப்பனாருக்குக் குழந்தைகள் என்றால் பொதுவாக உயிர்.

கணவர் : அவர்மீது தவறிருப்பதாகத் தெரியவில்லையே.

தாயார் : அமெரிக்காவில் வசதி அதிகம். அனைவரும் தேவைக்கு மேல் 1 1/2 மடங்கு, இரண்டு மடங்கு என சாப்பிட்டு பூதாகாரமாக இருக்கிறார்கள். அதற்குரிய வியாதிகள் எல்லாம் வருகின்றன.

கணவர் : நம் நாட்டில் பணம் உள்ள இடத்திலும் அப்படியிருக்கிறது.

தாயார் : தகப்பனாருக்குப் பாசம் அதிகம். அது அளவுமீறிப் போனால் - எது அளவுமீறிப் போனாலும் - பிரச்சினை ஆகும்.

கணவர் : தகப்பனார் என்ன செய்திருக்கலாம்?

தாயார் : தம் பற்றைப் பாசமாக்கியிருக்கலாம், பாசத்தை அன்பாக மாற்றியிருக்கலாம்.

கணவர் : அவரால் முடியுமா?

தாயார் : அவருக்கு பிரச்சினை வந்தபிறகு பிரச்சினை தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லை. He is unconscious.

கணவர் : நாம் என்ன செய்யலாம்?

தாயார் : நமக்குப் பிரச்சினையேயில்லையே. பாசம், பற்று இருந்தால்தான் பிரச்சினை. அது இல்லை.

கணவர் : நாம் அதை வளர்க்க முடியாதா?

தாயார் : செய்யலாம். வளர்ந்த பிள்ளைகளாகிவிட்டபடியால் முறையாக நடக்கலாம்.

கணவர் : நான் என்ன செய்ய வேண்டும்.?

தாயார் : அன்னையைப் பின்பற்றவேண்டும்.

கணவர் : பார்ட்னர் சொற்படி நடக்கலாமா?

தாயார் : அது போதும்.

கணவர் : பிள்ளைகள்?

தாயார் : முறையாகப் பழகவேண்டும்.

கணவர் : நீ சொல்பவர்கள் அனைவரும் உயர்ந்தவராகத் தெரிகிறது. அவர்கள் எல்லோரும் முறையாகப் பழகவில்லை?

தாயார் : அன்னையிடம் தவறுபவர்கள் அனைவரும் உயர்ந்தவர்களே.

கணவர் : முரணாகப்படுகிறது.

தாயார் : ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவர்களே அன்னையிடம் வருகிறார்கள். அவர்கட்குச் சில சமயங்களில் பல நல்ல குணங்களிருக்கும். ஓரிரு எதிரானவையாய் இருக்கும். நல்ல குணமிருப்பதாலேயே எதிரான குணமிருக்கும்.

கணவர் : மீண்டும் எதிர்மறையாக இருக்கின்றது.

தாயார் : நல்ல குணம் இயல்பாக இல்லாமல், முயன்று பெற்றால் personalityஇல் ஏற்படும் குறை எதிரான குணத்தைத் தரும்.

கணவர் : உதாரணத்தின்மூலம் சொல்.

தாயார் : வருமானம் ஏராளமாக இருந்து பெரிய வீடு கட்டினால், பெரிய திருமணம் செய்தால், பெரிய விருந்து நடத்தினால் பாதிக்காது. நம் நிலைமைக்கு நாம் செய்வது மீறியதானால், அன்றாட வாழ்வு பாதிக்கப்படும்.

கணவர் : புரிகிறது.

தாயார் : இந்தப் பெரிய மனிதர்கள் எல்லாம் அன்னையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள். அன்னையிடம் வந்தவர்கள், ஏற்றுக்கொண்டிருந்தால் குறை நிறைவாகும்.

பெரியவன் : நன்றாக விளக்கிச் சொல்லுங்கள்.

தாயார் : அன்னையிடம் வருவதும், ஏற்றுக்கொள்வதும் வேறு.

பெரியவன் : சரி.

தாயார் : அன்னையிடம் வந்தபின் நாம் கருமாதி செய்வது தவறு என அறிகிறோம். செய்தால் ஆவிக்கு சாந்தி செய்வதாகும். நாம் ஆவிக்கு உட்படுகிறோம். நெருங்கிய உறவினர் காலமாகி கருமாதி செய்தால் போவதா, இல்லையா என்ற பிரச்சினை எழும்.

கணவர் : போகாமலிருப்பது அன்னையை ஏற்பதாகும்.

பெரியவன் : அன்னையை ஏற்றுக்கொண்டால், உறவினர்களை விட்டுவிட வேண்டுமா?

தாயார் : மாடு மேய்த்தவன் கலெக்டரானபின் பழைய நண்பர்களை விடாமலிருந்தால்.....

கணவர் : அது சரி வாராது. அவர்களே நாம் விடும்படி நடந்துகொள்வார்கள்.

தாயார் : உறவினர்கள் சம்பிரதாயத்தை ஏற்றவர்கள். நாம் சம்பிதாயத்தை விட்டுவிட்டவர்கள். ஒத்து வாராது. சம்பிரதாயம், பொய், குடி, சூது, ஆகியவை நம்மைச் சமமாகப் பாதிக்கும்.

கணவர் : எப்படி உலகில் பழகுவது?

தாயார் : நாம் யாரையும் விட முயலவில்லை என்றாலும், மெய்யைக் கடைப்பிடித்தால் அனைவரும் தாமே விலகிவிடுவர். எந்த உறவிலும் முறை என்று ஒன்றுள்ளதன்றோ? சமூகம் அம்முறையைக் கடந்து சௌகரியம் தேடும். முறையை சமூகம் ஏற்காது.

கணவர் : எல்லாம் சத்தியத்தில் அடங்குகிறது.

தாயார் : சத்தியத்தை விடாமல் பிடித்துக்கொண்டால், உறவு, நட்பால் சிரமம் வாராது. தானே விலகும்.

கணவர் : நீ சொல்லும் பதில் எல்லாம் சமர்ப்பணம் சுலபமாகத் தெரிகிறது.

தாயார் : சுலபம் என்று ஒன்றை நாடினால், பலன் பெரியதாக இருக்காது. சமர்ப்பணம் மிகவும் கடினமானது.

கணவர் : ஏன்?

தாயார் : மனிதன் இறைவனாகும் முறை அது என்பதால் கடினமானது.

கணவர் : கடினத்தைச் சொல் கேட்போம்.

தாயார் : போன் மணியடித்தவுடன் சமர்ப்பணம் நினைவு வாராது, பேசுவோம்.

கணவர் : நான் பார்த்திருக்கிறேன். அதை என்ன செய்வது?

தாயார் : நாம் செயல்படத் தயாராக இருக்கிறோம். நினைக்கவோ, உணரவோ, சமர்ப்பணம் செய்யவோ தயாராக இல்லை.

கணவர் : மேலும் விளக்கம் தேவை.

தாயார் : இரவில், தோட்டத்தில் சத்தம் கேட்டால், முதலில் என்ன தோன்றுகிறது?

கணவர் : பயம்.

தாயார் : நினைவு என வந்தால், என்ன வருகிறது?

கணவர் : போலீஸ், பக்கத்து வீட்டு உதவி நினைவு வருகிறது.

தாயார் : அன்னை நினைவு வருகிறதா?

கணவர் : கற்பனையாகப் பேசும்பொழுதே நினைவு வரவில்லை.

தாயார் : நாம் மனத்தாலான மனிதன் என்றாலும், செயலளவில், நடைமுறையில் உடலால் வாழ்கிறோம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பதைப்போல், மேலே ஏதாவது விழுந்தால் உதறுவதுபோல், உடல் செயல்படத் தயாராகக் காத்துள்ளது.

கணவர் : நினைவு?

தாயார் : நினைவெல்லாம் உடலில் உற்பத்தியாகின்றது.

கணவர் : சமர்ப்பணத்தில் வேறு விவரங்களுண்டா?

தாயார் : நினைவு என வந்தவுடன் அதை விலக்கினால் உணர்வு வரும். அதை விலக்கினால் உடல் உணர்வு வரும். அதையும் விலக்கினால் ஜீவனின் நோக்கம் தெரியும். அது சுயநலமாக இருக்கும். அதைச் சமர்ப்பணம் செய்ய மனம் வாராது. வந்தால் சமர்ப்பணம் அன்னைக்கு உரியதாகும்.

கணவர் : பார்ட்னரைப் பார்த்தவுடன் பாங்க் விஷயம் என்னாயிற்று எனக் கேட்பதற்குப் பதிலாக அன்னையை மட்டுமே நினைக்கவேண்டும்.

தாயார் : நினைவு, உணர்வு, உடலுணர்வு, ஜீவனுடைய நோக்கம், இடைப்பட்டிருப்பதால் இவற்றைக் கடந்து செல்வது முக்கியம், சிரமம். நினைவைக் கடந்தால் உலகில் எவருடைய மனமும் நமக்குத் தெரியும்.

கணவர் : அது ஞானிகட்கேயில்லாத சித்தியாயிற்றே.

தாயார் : அதுபோல் 4 கட்டங்களிலிருப்பதால், சமர்ப்பணம் கடினம்.Legend of Brahman  என்ற கதையில் பிரம்மத்தைச்

சித்தித்தவர் அனைவருக்கும் பிரம்மானுபவத்தைக் கொடுக்கிறார்.

கணவர் : பிரம்மம் என்னவாகச் சித்திக்கிறது?

தாயார் : மௌனமாகச் சித்திக்கின்றது. தியானம், நிஷ்டை, ஜபத்திற்குப் பதிலாக தத்துவ விசாரணை, சப்தம், இயற்கையுடன் ஒன்றியிருப்பது ஆகியவை இக்கதையில் பயன்படுகின்றன.

கணவர் : பிரம்மம் அற்புதமாகச் சித்திக்கவில்லையா?

தாயார் : மௌனமாகச் சித்திப்பதையே நோக்கமாகக்கொண்ட கதையிது. எங்கும் உள்ள பிரம்மம் எங்குமில்லாதது என்ற கருத்தில் வகுப்பு ஆரம்பிக்கிறது.

கணவர் : அது முரண்பாடு.

தாயார் : அதை உடன்பாடாக ஏற்பவருக்கு மனம் மௌனத்தைத் தொடுகிறது.

கணவர் : ஏற்றால் மௌனம் வருமா?

தாயார் : இளம்பிள்ளைகள் என்பதால் அவர்கள் மனத்தை ஆழ்ந்து தொடுமன்றோ! பலர் மௌனத்தை ஏற்று ரசிக்கிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள்.

கணவர் : ஏன்?

தாயார் : மௌனத்தை மந்தமாக நினைப்பதால் பயம் வருகிறது. அதைக் கடந்தவருக்கே மௌனம் உரியது. தொடர்ந்து உயர்ந்த நிலைகளில் மௌனத்தை விரும்புகிறவர், கதையில், ஓர் இளைஞன். அவனுக்கு காடு, மலை போன்ற இடங்கள், ஏற்கனவே சித்தி பெற்ற பெண்மணி ஒருத்தி, ஆகியவற்றால் மௌனம்

ஆழ்ந்து நிலைக்கிறது. பிரம்ம ஞானம் பிரம்ம மௌனம் முடிவானது. அதைப் பெற அந்த சித்தி பெற்றவரைத் தன்னையறியாமல் நாடுகிறான். அவர்கள் ஒரு மாதம் மௌனமாக இமயமலையில் சந்தித்து அவன் பிரம்ம விழிப்பு பெறுகிறான். பின் பிரம்மம் மௌனமாகச் சித்திக்கிறது. உலகம் அதை ஏற்றுப் போற்றி பெற விழைவதால், ஒரு பெருங்கூட்டத்தில் - 45 ஆயிரம் பேர் - அனைவரும் கைகளை கோத்துக்கொண்டு 5 நிமிஷம் பிரம்மானுபவம் பெற்று, 2 மணி நேரம் அசைவற்றிருந்து அமைதியாகக் கலைகின்றனர்.

கணவர் : நமக்கு?

தாயார் : சமர்ப்பணத்திற்கு அடிப்படை பிரம்ம மௌனம்.

கணவர் : அன்னை என்பது கோயிலுக்குப் போய் தேங்காய் உடைப்பதில்லை போலிருக்கிறதே.

தாயார் : அது வழிபாடு, ஆன்மீகமாகாது.

கணவர் : ஏன் கை கோத்துக்கொள்ளவேண்டும்?

தாயார் : அதுவுமில்லாமல் பிரம்மம் பரவவேண்டும். அது சிரமம். கைப்பட்டால் எளிதாகப் பரவும்.

கணவர் : கைப்பட்டுப் பரவுவது பிரம்மமாக இருக்குமா?

தாயார் : பிரம்மம் (vital) தொடு உணர்வால் பரவும்.

கணவர் : பலன் பெற தொடு உணர்ச்சி போதும்.

தாயார் : சப்தம் உள்ளிருந்து எழவேண்டும். உள்ளிருந்து ஒரு கதிர் எழுந்து உலகில் உலவி அனைவரையும், இந்தக் கருவிகள் - தொடுவது, மணியடிப்பது - இல்லாமல் தொடவேண்டும்.

கணவர் : அது சூட்சுமம்.

தாயார் : சூட்சுமம் அல்லது காரணம்.

வீட்டில் உள்ள அனைவரும் தங்களை உள்ளும், புறமும் ஒழுங்கு செய்ய (organise) ஒத்துக்கொண்டு cleanliness,orderliness, soft speech, பிறர் நோக்கில் காண்பது, கடந்த காலச் சமர்ப்பணம், சமர்ப்பணம் என எல்லா அன்னையின் சட்டங்களையும் முழுவதும் பின்பற்ற முயன்றதில் ஒரு சில மாதங்களில் கிண்டல், கேலி, குத்தலாகப் பேசுவது, போன்ற குறைகள் பெரும்பாலும் விலக்கப்பட்டன. அனைவரும் நடப்பனவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்து அன்னைக் கோணத்தில் புரிந்துகொள்ள முயன்றனர். வீட்டின் புறச்சூழல் மாறிவிட்டது. அகம் அந்த அளவுக்கு மாறவில்லை. படபடப்பு குறைந்து பொதுவாக நிதானம் அதிகரித்தது. கம்பெனியும் அதேபோல் இருந்தது. பார்ட்னருடைய புதுப்போக்கு அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. வீட்டிற்குப் பெரிய மனிதர்கள் வருவதும், பெரிய இடங்களுக்கு அழைப்பு வருவதும் தொடர்ந்தது. இந்தச் சமயம் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் திடுக்கிடச் செய்தது. ஹாஸ்டலில் ஒரு நண்பனைப் பார்க்க சிறியவன் போயிருக்கிறான். அவன் ரூமில் 2000/- ரூபாய் பணம் தொலைந்துவிட்டது. அவன் போலீஸுக்குச் செய்தி அனுப்பியபொழுது, அந்த நேரம் சிறியவன் அங்கிருந்ததால், போலீஸ் அவனை சந்தேகப்படுகிறது. நண்பன் எவ்வளவு மறுத்தாலும் போலீஸ் ஏற்பதாக இல்லை. எந்த நேரமும் இவனைத் தேடி வருவார்கள் என்பது செய்தி. வீடு பீதியால் பீடிக்கப்பட்டது. பையன் அழுகிறான். "என்னை அன்னை கைவிட்டுவிட்டார்கள்'' என அழுகிறான். கேஸ் என்று வந்தால் கேஸ் நடத்தலாம். உண்மை என்றும் வெல்லும். அனைவரும் தாயாரைப் பேசச் சொன்னார்கள்.

வீட்டில் யார் மனதில் திருட்டு எண்ணமிருந்தாலும் அது இந்த

நிகழ்ச்சியாக மாறியிருக்கும்

என்றார். அனைவரும் திகைக்கின்றனர். எண்ணம் அந்த அளவு பாதிக்குமா? என்ற கேள்வி வருகிறது. விவாதம் அப்புறம். பையன்

லாக்கப்பிற்குப் போகாமலிருக்க வேண்டுமானால் எண்ணம் மாறவேண்டும் என்பதை அனைவரும் ஏற்றனர்.

கணவர் : கம்பெனி நடக்க ஆரம்பித்தால் என் கைக்குப் பணம் உபரியாக வரும். கணக்கில் காட்டவேண்டாம் என நினைத்தேன்.

தாயார் : எண்ணத்தை மனதில் மாற்றமுடியுமா?

கணவர் பூஜை அறைக்குப் போனார். போலீஸ் கான்ஸ்டபிள் வேலு வந்தான். இவன் குடும்பத்திற்கு அறிமுகமானவன். அவனைக் கண்டு அனைவரும் தலைகுனிந்தனர். "குற்றம் நம் பையன் மீதில்லை என்று சொல்ல வந்தேன்'' என்றான். வேறு விபரம் சொல்லாமல் உடனே போய்விட்டான்.

பெரியவன் : அப்பாவை எழுப்பி சொல்லுங்க, அம்மா.

பெண் : அவரே எழுந்து வரட்டும், பொறு.

பெரியவன் : வேலுவைப் பார்த்ததும் வெட்கமாயிற்று.

தாயார் : அவன் நல்லவன். அவன்மூலமாகக் கெட்ட செய்தி வாராது.

சிறியவன் : என்னை அன்னை காப்பாற்றிவிட்டார், தப்பித்துக் கொண்டேன்.

பெண் : தப்பே செய்யவில்லையே, எப்படித் தப்பிப்பது?

சிறியவன் : நான் திருடவில்லை, ஆனால் திருட நினைத்தேன்.

தாயார் : அது என்ன?

சிறியவன் : என் நண்பன் செலவுக்கு 2000/- ரூபாய் வைத்திருப்பதாகச் சொன்னான். எனக்கு அப்படிப் பணமில்லையே, உங்கள் அலமாரியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தேன். அதற்கா இவ்வளவு பெரிய தண்டனை?

பெரியவன் : எப்படி, தம்பி தப்பித்தான்? ஹாஸ்டலில் என்ன நடந்தது? என்று சொல்லாமலேயே வேலு போய்விட்டான். நான் போய்த் தெரிந்துவருகிறேன்.

கணவர் : என்ன விஷயம்?

பெண் : பழி விலகியது. வேலு வந்து சொன்னான்.

கணவர் : ஓர் ஆட்டம் ஆடிவிட்டது. அரெஸ்டாயிருந்தால் அசிங்கம்.

தாயார் : ஏன் வந்தது, எப்படிப் போயிற்று என்றறிவது முக்கியம், பலன் தரும்.

கணவர் : மனம் அசுத்தமாகயிருந்ததால் வந்தது, அருளால் போயிற்று.

தாயார் : நாம் அதை உணருவதும், 5 ஊர்களில் பெரிய ஆஸ்பத்திரி கட்டுவதும் சமம்.

கணவர் : 5 ஊர்களில் ஆஸ்பத்திரி கட்டியவர் பிறருக்கோ, தாய் ஸ்தாபனத்திற்கோ, உறவுக்கோ, உதவ முயலவில்லை. பிறரைத் தன்னைப்போல் தயார் செய்ய முயலவில்லை. தானே செய்தார், பிறரைச் செய்யச் சொல்லவில்லை. தாயார் : எட்ட இருந்தால், அன்னை அபரிமிதமாகப் பலிக்கிறார் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

கணவர் : உலகம் தன்னளவு ஒருவரில் முன்னேறும் என்று இங்கு காண்கிறோம். உலகமே ஒன்றுகூடி ஒருவரை முன்னுக்குக் கொண்டுவர முயன்றதுபோல் 5 பெரிய ஆஸ்பத்திரிகளை ஒருவர் நிறுவியுள்ளார்.

தாயார் : அது ஸ்தாபனம் செய்வது (management). அந்த ஆஸ்பத்திரிகளில் சுத்தம் அபரிமிதமாக இருக்கும். அது ஒரு முக்கியக் காரணம். அன்னை இங்கு அபரிமிதமாகச் செயல்பட்டதற்கு இந்த மூன்று காரணங்கள் முக்கியம்.

1. திட்டம் தோற்கும் வகைகளை விலக்கியது.

  • உதவியை இரண்டாம்பட்சமாக்கியது.
  • தாமே செய்ய முன்வந்தது.
  • பொறாமைக்காரருக்குப் பிடிகொடுக்காதது.

2. ஸ்தாபன முறைகளைக் கடைப்பிடித்தது.

3. அளவுகடந்த சுத்தம்.

கணவர் : நாம் இந்த மூன்றையும் பின்பற்றக் கூடாதா?

தாயார் : அவசியம் செய்யவேண்டும். மனம் இந்தப் பெரிய சாதனையைவிடப் பெரியது. மனம் அன்னையை ஏற்றால், சரணாகதியை ஏற்றால், அல்லது அன்னை கோட்பாடுகளை ஏற்றால், அவை மேற்சொன்னவற்றை விடப் பெரியது. மனம் உலகத்தைத் தன்னுட்கொண்டது. அதை நாம் வெல்லுதல் முடியும், அவசியம்.

கணவர் : எப்படி ஆரம்பிப்பது?

தாயார் : இந்த எண்ணத்தை ஏற்க முடியுமா? புரிந்து மனம் ஏற்குமா? ஏற்பது அவசியம், ஏற்றால் பலிக்கும் என மனம் அறியுமா?

கணவர் : மனம் என்றால் என்னவென்று தெரியாதபொழுது இவற்றையெல்லாம் எப்படிச் செய்வது?

தாயார் : கடந்த ஓரிரு ஆண்டுகளாக நடப்பது எப்படி எனப் புரிகிறதன்றோ?

கணவர் :Mother's Grace எனக் கொள்கிறோம்.

தாயார் : மதர் அருள் செயல்பட நம் மனம் இடம் கொடுத்தது தெரிகிறதா?

கணவர் : அதைச் சொல்கிறாயா? எனக்கு மனம் இடம் கொடுக்காதது தெரிகிறது.

தாயார் : மனம் இடங்கொடுக்காதது தெரிவதும், இடம் கொடுப்பது தெரிவதும் ஒன்றே. இரண்டும் மனத்தை அறிவதே. மனம் புரிந்துகொண்டவை நடந்தது, புரிந்ததால் நடந்தது அன்றோ?

கணவர் : அது தெரிகிறது.

தாயார் : மனம் புரிந்துகொள்வது, மனம் விஷயத்தைப் புரிந்துகொள்வது, மனம் அன்னையைப் புரிந்து கொள்வது, மனம் விஷயத்தை அன்னைமூலம் புரிந்துகொள்பவை அடுத்த, அடுத்த கட்டங்கள் அல்லவா?

கணவர் : இது விளங்குகிறது.

தாயார் : புரிந்துகொள்வதால் நடப்பதைவிட புரிந்து கொள்ளாததால் நடக்கவில்லை என்ற தெளிவு பெரியது.

கணவர் : ஆமாம், அது முக்கியம். இப்போ நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிகிறது. உள்ளே' நிறைய வேலை இருக்கிறது. பார்ட்னர் இதைப் பெரிதும் விரும்புவார்.

தாயார் : கம்பெனி வேலைகளை இப்பொழுது எப்படிச் செய்கிறோம்? அன்னை முறைப்படி எப்படிச் செய்ய

வேண்டும்? என மனதால் தயார் செய்யவேண்டும். அதற்கு மனம் ஒத்துக்கொண்டால், மனம் தயாராகும். கணவர் : விஷயமே மனத்தில்தானிருக்கிறது. சர்க்கார் எடுத்துக்கொண்ட 1 1/2 ஏக்கர் நிலத்தை மீண்டும் அருளால் பெற்றது எனக்கு நினைவிருக்கிறது. பிற்காலத்தில் 47,000 ரூபாய்க்கு விற்ற மனையை எடுத்துக்கொண்டு சர்க்கார் 2,350/- ரூபாய் கொடுக்க முன்வந்தது பரிதாபமன்றோ?

தாயார் : அது கஷ்டப்பட்டுச் சம்பாதித்த காசு, கைவிட்டுப் போகாது. அதனால் அன்னை எளிதில் காப்பாற்றினார்.

கணவர் : அப்படியிருக்கும்பொழுது எப்படிக் கைவிட்டுப் போயிற்று?

தாயார் : மனம்.

கணவர் : என்ன விஷயம்.

தாயார் : நண்பருக்கு நிலம் பேரம் பேசி வாங்கிக் கொடுக்கும் நேரம் அந்த நிலத்தில் பாதியை தமக்குக் கேட்டார்.

கணவர் : இனாமாகக் கேட்டாரா?

தாயார் : நண்பரையே வாங்கிக் கொடுக்கும்படிக் கேட்டார்.

கணவர் : அப்படியும் மனிதர்கள் கேட்பார்களா? நண்பர் என்ன சொன்னார்?

தாயார் : பாதிக்குப் பதிலாக 1/3 பாகம் தர நண்பர் சம்மதித்தார்.

கணவர் : இவர் ஏற்றாரா?

தாயார் : இல்லை.

கணவர் : அதனால்தான் இவர் பொருள் திரும்பிவந்ததா? மன பிறர் பொருளை நாடியதால், இவருடைய பொருளுக்கு ஆபத்து வந்ததா?

தாயார் : யார் பொருளை அபகரிக்க இவர் முயன்றாரோ, அவரே வந்து இவர் பொருளைக் காப்பாற்றினார்.

கணவர் : உதவி உபத்திரமாவதற்கு வேறு உதாரணம் வேண்டாம். நினைவே பலிக்கிறது என்பதற்கும் இது பெரிய உதாரணம்.

தாயார் : விஷயம் எவ்வளவு பெரியதானாலும் மனம் மாறினால் காரியம் முடியும்.

கணவர் : ஈராக் போரை அப்படி நிறுத்த முடியுமா?

தாயார் : முடியும். அமெரிக்கா மனம் மாறினால் போரிருக்காது.

கணவர் : ஏன்?

தாயார் : ஈராக் அடாவடி செய்வது அனைத்தும் அமெரிக்கா (diplomacy) செய்வதுதானே. பலமுள்ள இடம் அடாவடி செய்வது எல்லா நாடுகளும் செய்வதுதானே. காஷ்மீர் பிரச்சினையானது பிரிட்டனும், அமெரிக்காவும் பாக்கிஸ்தானுக்குத் துணை போனதால்தானே. ரஷ்யா ரத்து அதிகாரத்தைச் செலுத்தாவிட்டால் காஷ்மீர் நம் கையை விட்டுப்போயிருக்கும்.

கணவர் : பிணக்கில் இருவரும் தவறு என்பது அன்னை சட்டம்.

தாயார் : எதிரி சக்திகள் நம்மை அழிக்க முடியும்வரை நிச்சயமாக அழிக்கும். முடியாது எனத் தெரிந்தால்

நம் ஸ்தாபனத்துள் வந்து நம்முடனிருந்து உள்ளிருந்து நம் வேலையைக் கெடுக்கும். அவற்றை evil persona தீயவன் என பகவான் கூறுகிறார். நம்முள் உள்ள அத்தீயவனைக் கண்டு அவனைச் சரணடைவது சரணாகதி. நாம் அவற்றைத் தவறான குணமெனக் கூறுகிறோம்.

கணவர் : கேலி, குத்தலாகப் பேசுவது, அதுவா?

தாயார் : அவை எழும்பொழுது க்ஷணத்தில் காரியம் கெட்டு விடும். அதேபோல் அருள் எழும்பொழுது க்ஷணத்தில் காரியம் முடியும். அந்த இடங்களில் இயல்பாக உள்ள உண்மையை sincerity என்கிறார் அன்னை.

கணவர் : நமக்குப் புரியவில்லை என அந்த நேரம் கூறுவது insincerity. நான் உன் காரியத்தை அழிக்க வந்துள்ளேன் எனக் கூறுவதாகும். அவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

தாயார் : நாமே அவர்.

கணவர் : பயமாயிருக்கிறது.

தாயார் : நம்மைச் சுற்றியுள்ளவர்கள், நாம் அடிக்கடிச் சந்திப்பவர்களிடம் உள்ள அத்தனைக் குணங்களும் நம்முடைய பிரதிபலிப்பு என எடுத்துக்கொள்ள முடியுமா?

கணவர் : அப்படியானால் நான் பெரிய லிஸ்ட் தரமுடியும். அப்படிச் சொல்ல முடியுமா?

தாயார் : அதுவே உண்மை.

கணவர் : சரி, செய்கிறேன். நல்லதை முதல் சொல்கிறேனே.

  • இனிமையாக மட்டும் பேசுவது.
  • எவர்க்கும் உதவி செய்வது.
  • செய்வதைத் திறமையாகச் செய்வது.

தாயார் : இது உலகில் உள்ள அனைத்தையும் கூறும்படி அமையும்.

கணவர் : எப்படிச் சொல்ல?

தாயார் : நம்முள் இருப்பதாக நாம் காணும் எந்தச் சிறிய தவறும் பிறரில் கண்டால் அதை மட்டும் கூறவேண்டும்.

கணவர் : நல்லது வேண்டாமா?

தாயார் : கெட்டதை விலக்குவது முக்கியம்.

கணவர் : சரி, அப்படிச் சொல்கிறேன்.

  • நல்ல சொல் 10 சொன்னபின், மனம் புண்படும்படி ஒரு சொல் சொல்லி எல்லாவற்றையும் கெடுப்பது.
  • எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் பல ஆண்டுகள் வேலை செய்தபின் முடிவில் ஒரு சிறு பலனை எதிர்பார்த்து கெட்ட பெயர் வாங்குவது.
  • நம்மைச் சுற்றி நடப்பதை அறியாதது.
  • எதிரியை நண்பனாக நினைப்பது.
  • பிறர் நம்மை மட்டமாக நினைப்பதை அறியாதது.
  • நாமாகச் செய்யாத தவற்றைப் பிறர் தூண்டுதலால் செய்வது.
  • அடுத்தவரை அவரிஷ்டப்படித் திருப்தி செய்ய முயல்வது.

  • நடக்காததை நடத்த ஆசைப்படுவது.
  • தராதரம் தெரியாமல் பழகுவது.
  • பிறர் குறையை அறிய முடியாததால் சிரமப்படுவது.
  • மனிதனுக்குப் பொறாமை, சுயநலம் உண்டு எனத் தெரியாதது.
  • எவரும் பொய் சொல்வார் என அறியாதது.
  • பிறரை மனிதராக, நல்லவராக, சமமாகக் கருதுவது.
  • நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவரை நம்புவது.
  • பிடியை விட்டுக்கொடுப்பது.
  • மட்டமானவர்க்கு இடம் தருவது.

தாயார் : இவை பிள்ளைகளிடமிருந்தால், கண்டுபிடித்தால் நீக்க முடியும்.

மனம் பக்குவப்படவில்லை எனினும், பாக்டரியும், காரும் வந்ததாலும், பெரிய இடத்துச் சம்பந்தங்கள் ஏராளமாக வந்தபடியிருப்பதாலும், முக்கியமாகக் கணவரும், மற்றபடி பிள்ளைகளும் எல்லா வகையான புறக்கட்டுபாடுகளையும், மனக்கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டனர். அதன் பலனாக,

  • வீட்டில் அசம்பாவிதமாக எவரும் பேசுவதில்லை.
  • சுத்தம் தொடர்ந்து உயர்ந்தபடியிருக்கிறது.
  • எவர் வீட்டினுள் நுழைந்தாலும் மலர்ந்த முகத்துடன் வருகிறார்கள்.
  • டெலிபோன் மணியடித்தால் ஓடிப்போய் எடுக்கிறார்கள்.
  • வந்தவர்களைச் சாப்பிடாமல் அனுப்புவதில்லை.
  • யார் வந்தாலும், அனைவரும் அவரவரளவில் விசாரிக்கிறார்கள்.

  • வருபவர் அனைவரும் தங்கள் வீட்டிற்கு வரும்படி வீட்டில் உள்ளவர்களை அழைக்கிறார்கள்.
  • இதுவரை இருந்த சில்லறைப் பிரச்சினைகள் தாமே மறைந்துவிட்டன.
  • டாக்டரிடம் போவது குறைந்தது, மறைந்தது எனலாம்.
  • ஊதுவத்தி ஏற்றாவிட்டாலும், வீடு முழுவதும் வத்தி மணமிருக்கிறது.
  • எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஏதாவது சிறிய, பெரிய வாய்ப்புகள் வந்தபடியிருக்கின்றன.
  • பார்ட்னர் வருந்தோறும் ஒரு பெரிய செய்தியைச்சொல்லி விட்டுப் போகிறார்.

இவையெல்லாம் ஒரு பெரிய காரியம் நடப்பதன் அறிகுறி எனத் தாயார் அறிவார். நடப்பது ஓரளவு பெரியதானால் வீட்டுச் சூழல் இடம் கொடுக்கும். அளவுகடந்து பெரியது நடந்தால், அந்த அளவுக்கு வீட்டு மக்கள் உடனே உயர்ந்து ஆதரவு தரமுடியுமா என்பது கேள்வி. எழவேண்டியது கேள்வியில்லை, சமர்ப்பணம் என மனம் சமாதானமாயிற்று. மனம் சமாதானமானாலும் அதற்குரிய அமைதி எழவில்லை. இவை பெரிய காரியங்கள் என்பதால், வேண்டாம் என ஒரு நினைவு எழுந்தாலும் காரியம் முழுவதும் கெட்டுப் போகும். எழுந்த கேள்வியைச் சமர்ப்பணம் செய்வது எளிதன்று எனத் தீவிரமாக நினைத்தபொழுது பார்ட்னர் வந்தார்.

பார்ட்னர் : கவர்னர் கூப்பிட்டு அனுப்பியிருந்தார். நம் பாக்டரிக்கு எந்தவிதமான சர்க்கார் ஒத்தாசை வேண்டுமென்றாலும் செய்கிறேன் என்றார்.

கணவர் : எப்படி கவர்னர் இதுபோல் பேசுகிறார்?

தாயார் : (பார்ட்னரை நோக்கி) கவர்னரிடம் என்ன சொன்னீர்கள்?

பார்ட்னர் : நன்றி கூறினேன். கவர்னர் இதுபோன்ற ஆதரவை முதல் வரிசையிலிருக்கும் முதலாளிகளுக்கே கொடுப்பார்.

கணவர் : கவர்னர் அவர்களை உதவி கேட்பார், கொடுக்கமாட்டார்.

தாயார் : அதுவே சரி. அதனுடைய ஆன்மீக அர்த்தம் புரிய வேண்டும்.

பார்ட்னர் : என்ன?

தாயார் : நாம் எது செய்தாலும் கூடிவரும் எனப் பொருள். "உனக்கு எது வேண்டுமானாலும் நான் செய்கிறேன்'' என அன்னை கவர்னர்மூலம் கூறுகிறார்.

பார்ட்னர் : நான் என்ன செய்ய?

தாயார் : சமர்ப்பணத்தை மேற்கொள்ளவேண்டும்.

பார்ட்னர் : 500 கோடி கம்பெனிகள் நாணயமான பார்ட்னர்கள் தேடுவதாகவும், நம் பெயரை அவர்கட்குத் தரலாமா எனவும் கவர்னர் விசாரித்தார். என்னிடம் மூலதனம் இல்லையே என்றேன். தேவையில்லை என்றார். எனக்குப் புரியவில்லை.

கணவர் : எனக்கும் புரியவில்லை. நாம் அவர்கட்கு என்ன செய்ய முடியும் என கவர்னர் நினைக்கிறார்.

பார்ட்னர் : ஓரிருவர் நம் பெயரையே கவர்னரிடம் கூறியதாகச் சொன்னார்.

தாயார் : என்ன பதில் சொன்னீர்கள்.

பார்ட்னர் : ஒத்துக்கொண்டேன். கம்பெனியின் நாணயத்தைக் கணக்கிடும்பொழுது நல்ல பெயருக்கு மரியாதை உண்டு.

கணவர் : அது பணத்திற்குண்டு.

பார்ட்னர் : பிறகு பெரிய பதவியிலிருந்த ஆபீசர்கட்கு அந்த அந்தஸ்திருந்தது.

தாயார் : நாம் முதலிலிருந்து கம்பெனியின் பெயரை உயர்வு குறையாமல் வைத்திருக்கிறோம்.

கணவர் : அது கணக்கில் சேராது.

பார்ட்னர் : இதுவரை சேராது. இனி சேரும் போலிருக்கிறது. நம் கம்பெனி 7, 8 வருஷமானாலும், சிறிய அளவிலிருந்தாலும் - 5 கோடி அளவில் - அந்த அளவு கம்பெனிகள் செய்யும் தில்லுமுல்லுகளை நாம் செய்யவில்லை.

கணவர் : கறுப்புப் பண முதலை நாம் பல முறை மறுத்துவிட்டோம்.

பார்ட்னர் : இது எந்தக் காலத்திலும், எந்தக் கணக்கிலும் சேராது.

தாயார் : இப்பொழுது அன்னையால் சேருகிறது.

பார்ட்னர் : அன்னையால் சேர்வதுதான் சேருவது. இந்த அந்தஸ்தை நாம் எப்படிக் காப்பாற்றுவது?

கணவர் : நம் கம்பெனியை நல்லபடியாக நடத்தினால் போதும்.

தாயார் : அன்னை முறைப்படி நடத்தினால் போதும்.

பார்ட்னர் : பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்களைச் சந்தித்துச் சொற்பொழிவாற்ற அழைத்துள்ளனர். பேப்பர் ரிப்போர்டர் வந்து என்னைப் பேட்டி கண்டான். பிரபலம் நம்மைத் தேடி வருகிறது என்பதை நான் அடிக்கடி கேட்டுள்ளேன். இப்பொழுதுதான் பார்க்கிறேன்.

தாயார் : ரேடியோ டைரக்டர் உபசாரமாக பேசச் சொன்னபின் மறந்துவிட்டார். பேப்பரில் பல போட்டோக்களுடன் வந்தபின் தானே அழைத்துப் பேசச் சொன்னார் என்பது நடக்கக் கூடியதில்லை.

பார்ட்னர் : இப்பொழுது நமக்கு நடக்கிறது. பேப்பர் அன்பர்கள் கட்டுரையை வெளியிட்டால் அதிகப் பிரதிகள் விற்கின்றன என்பதை நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். போட்டி பேப்பரைவிட 7 மடங்கு விற்கும் என நான் கருதவில்லை.

தாயார் : எதுவுமே நம்மால் நினைக்க முடியாதபடியே நடக்கும் என்பது மட்டும் நான் அறிவேன். நடக்கும் செய்திகள் நமக்கு மட்டும் தெரிவதில்லை.

கணவர் : தெரிந்தால் நமது அல்ப சந்தோஷம் அத்தனையையும் வீணாக்கும்.

தாயார் : அதிர்ஷ்டம் ஆயிரம் வழியாக வருவது அன்னை வாழ்வு. இந்த எலக்ட்ரிகல் கம்பெனியில் நடந்தது அதிர்ஷ்டம்.

கணவர் : யாரைச் சொல்கிறாய்?

தாயார் : கணபதி எலக்ட்ரிகல்ஸ்.

கணவர் : அவருக்குத் தொழில் கெட்டுப் போயிற்று.

பார்ட்னர் : இன்று நான் அந்த வழியாக வந்தேன். ஏதோ வேலை நடந்ததே.

கணவர் : அவருக்குக் கடனாகிவிட்டது. கம்பெனியை மூடிவிட்டார். கட்டிடத்தை வாடகைக்கு விடமுடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

தாயார் : அவருக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். அவருடைய அண்ணார் மகனுக்கு தோலெல்லாம் நீர் வடிவது அவருக்கு வேதனை. அது குணமாகவில்லை. அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்.

பார்ட்னர் : அது அவருடைய அண்ணார் மகனா? அவர் மகன் என நினைத்தேன். அன்னையைத் தெரியுமா அவருக்கு?

தாயார் : தோல் வியாதி, கனவில் அன்னை வந்து கடலில் குளிக்கச் சொல்லிப் போய்விட்டது. அதனால் நம்பிக்கை வந்து கட்டிடத்தில் அன்னை படத்தை வைத்தார். புரோக்கர் கைவிரித்துவிட்டார், கேட்பாரில்லை. கேட்டால்தானே கிராக்கி செய்யலாம்.

பார்ட்னர் : வேலை நடக்கிறதே.

தாயார் : ஒரு பாங்க் வாடகைக்கு எடுத்துக்கொண்டது. பெரிய அட்வான்ஸ் கொடுத்தது. அவருக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது. அதிர்ஷ்டம் ஆயிரம் வழியாக வரும். எந்த வழியாகவும் நம்பிக்கை வருவதில்லை.

பார்ட்னர் : நம்பிக்கை வருவதுதானே அதிர்ஷ்டம்.

தாயார் : தினமும் கேள்விப்படுகிறோம். யாருக்காவது, ஏதாவது நடந்தபடியிருக்கிறது. வயதாகிறது, மாப்பிள்ளை வரவில்லை.

கணவர் : தாயாரும், அக்காவும் எதிரியாக இருந்தால் மாப்பிள்ளை எப்படி அமையும்? பணமில்லை, வயதாகிவிட்டது, வீட்டில் அனைவரும் எதிரி, கல்யாணம் எப்படி நடக்கும்?

தாயார் : பிரபலமான சர்க்கார் வேலையிலிருப்பவர் தாமே வந்து ஏற்றுக்கொண்டது அதிர்ஷ்டமில்லையா? அதிர்ஷ்டத்திற்குக் குறைவில்லை. நம்பிக்கை வருவது இல்லை.

கணவர் : என்ன வித்தியாசம்?

தாயார் : பலனை மட்டும் கருதினால் நம்பிக்கை வாராது.

கணவர் : என்ன செய்யவேண்டும்?

தாயார் : நன்றியிருந்தால் நம்பிக்கை வரும்.

பார்ட்னர் : நம்பிக்கையிருந்தால் நன்றி வருமா, நன்றியால் நம்பிக்கை வருமா?

தாயார் : நன்றி நம்பிக்கையைவிடப் பெரியது.

பார்ட்னர் : எப்படி?

தாயார் : நம்பிக்கை ஆத்ம ஞானம். நன்றி உடல் வளரும் ஆத்ம விழிப்பு.

கணவர் : நமக்கில்லையே, என்ன செய்வது?

தாயார் : இல்லை என்பதை உணர்வதே நல்லது. நன்றி மனிதனில் சமீபத்தில் பிறந்தது என்கிறார் அன்னை.

பார்ட்னர் : தேவதைகள் நடனமாடிய கதைதானே. வெண்மையான இளம் தேவதை சமீபத்தில் பிறந்தது என்பதுதானே.

தாயார் : நன்றி தேவதை தம்மை எவரும் அழைப்பதில்லை என்று கூறுகிறது.

கம்பெனியிலிருந்து சிமெண்ட் திருடு போனதாகச் செய்தி வந்தது. அனைவரும் மனம் ஒடிந்தனர்.

தாயார் : திருடு போகக்கூடாது.

கணவர் : போய்விட்டதே, என்ன செய்ய?

பார்ட்னர் : ஏன் போயிற்று என அறிந்து மாற்றினால் திரும்பக் கிடைக்குமா?

கணவர் : தத்துவம் வேறே. முதல் அதைக் கண்டுபிடிப்போம். போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுப்போம். நான் போறேன்.

பார்ட்னர் : நீங்கள் போய்ப் புகார் எழுதிக் கொடுங்கள். (தாயாரைப் பார்த்து) ஏன் திருடு போயிற்று?

தாயார் : கவனக்குறைவு, அவநம்பிக்கை, நன்றியில்லாதது காரணம்.

பார்ட்னர் : நம்மிடம் எல்லாமிருக்கிறது. நான் பூஜை அறைக்குப் போகிறேன்.

வேலைக்கும் அன்னைக்கும் ஏதோ ஓரிடத்தில் சிறு தொடர்பிருக்கிறது. ஜீவனுள்ள தொடர்பில்லை என்பதால் ஏதாவது சிரமம் வந்தபடியிருக்கிறது என்று தாயார் கவலைப்பட்டார். வீட்டார் மனதில் பாக்டரியிலிருக்கிறது, அன்னையில்லை. பார்ட்னர் அன்னையை ஏற்க முயல்கிறார். போதாது என்பது நிலை. கம்பெனியிலிருந்து ஆள் வந்தான். சிமெண்ட் எப்படித் திருடு போயிற்று என்று விசாரித்தால் அவனுக்குத் தெரியவில்லை. திருடு போனதே தெரியவில்லை என்றால் நிலைமை மோசமாக இருக்கிறது என்று விசாரப்பட்டார் தாயார். கணவர் போலீஸில் புகார் கொடுத்துவிட்டு வந்தார். பார்ட்னர் தியானம் முடிந்து எழுந்துவந்து கம்பெனிக்குப் போய் நடந்ததைக் காணவேண்டும் எனப் புறப்பட்டார். எப்படித் திருடு போனது அங்குள்ள ஆட்களுக்குத் தெரியாமற் போகும் என மனம் துவண்டு போனார். வேறோர் ஆள், வந்தவரை அழைத்துக்கொண்டு கம்பெனிக்குப் புறப்பட்டார். அவன் தாயாரிடம்



book | by Dr. Radut