Skip to Content

07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டானால் முகத்தில் அழகு உண்டாகும்.
    • ஆத்மாவில் அதிர்ஷ்டம் உண்டானால் மனத்தில் அன்னை நினைவு எழும்.
  2. ஓடும் ஆற்று நீருக்கும் தொடக்கமாக ஓர் ஊற்று இருக்கும்.
    • அன்பர்கள் மட்டும் வாழும் ஊரில் ஓடும் ஆறு ஜீவநதியாகும்.
  3. சினம் தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளும்.
    • சினத்திற்கும் தண்டனையில்லை என்பது அன்னைச் சூழல்.
  4. கோபத்திற்கு கண்ணில்லை.
    • கோபமும் பிரியமாகும் அன்னைநினைவு.
  5. கேடு தானாகவே தேடி வரும்.
    • அன்னையை நோக்கிச் சென்றால் கேடு தானாக வெளியேறும்.

தொடரும்....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தீர்ந்தபின், ஆர்வத்தை உற்பத்தி செய்வது பெரும்பாடு. மனம் மறந்துவிடும். வற்புறுத்தினால், "வற்புறுத்துவது தவறு'' என்று மனம் பதில் சொல்லும். அல்லது "புரியவில்லை'' என்று சொல்லும்.
 
ஆர்வம் தீர்ந்தால் செய்வதொன்றில்லை.
மனம் வற்புறுத்த அனுமதிக்காது.

*****



book | by Dr. Radut