Skip to Content

13. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

ஏகன் அநேகனுக்கு முந்தியவனில்லை

முந்தையது, பிந்தையது என்பது காலத்திற்குரிய கணக்கு. காபினட் கூட்டத்திற்கு மந்திரிகள் ஒருவர்பின் ஒருவராக வந்தால், முன்வருபவர்கள் சீனியர் எனவும், பின்வருபவர்கள் ஜூனியர் எனவும் எடுத்துக் கொள்வதில்லை. நமது பாஸ் புக்கில் மேலே 10,000 ரூபாயும், கீழே 50,000 ரூபாயும் வரவு வைத்திருந்தால் முந்தையது பெரியது, பிந்தையது சிறியது என நாம் கொள்வதில்லை. ஏகன் அநேகனாக மாறினான் என்றால், ஏகன் முதலும், அநேகன் பிறகும் வந்ததாகத் தோன்றுகிறது. பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் டெல்லியில் நடந்தது. சாஸ்திரியை பிரதமராக்க வேண்டும் என்றார் தலைவர். எங்கே சாஸ்திரி? முதல் வரிசையில்லை, எங்குமில்லை. வாயிற்படிக்கு வெளியே நாலு பேருடன் உட்கார்ந்திருந்தார். கடைசியில் உட்கார்ந்து இருப்பதால் அவருக்கு முதலிடம் இல்லாமலில்லை.

  • புதியனவற்றை நாம் நாமறிந்த கணக்குப்படி ஏற்கிறோம்.
    அது எல்லாச் சமயங்களிலும் சரியாக இருக்காது.

ஏகனும், அநேகனும் காலம் உற்பத்தியாவதற்குமுன் எழுந்தவர்கள். அவர்களைக் காலத்திற்கு உட்படுத்த முடியாது. பாண்டி மகாராஜா கார் வைத்திருக்கவில்லை, பேப்பரில் பேனாவால் எழுதவில்லை, உலக பூகோளம் அறியாதவர் என நாம் அவரை நினைப்பதில்லை. பேனா, பேப்பர், கார், பூகோளம் ஆகியவை இக்காலத்து விஷயங்கள். இவற்றைக்கொண்டு 10 நூற்றாண்டு முன்னிருந்தவரை நாம் கணிக்க முடியாது.

  • பிரம்மத்தை எதைக் கொண்டும் கணிக்க முடியாது.
  • இந்திய ஆன்மீகத்தில் மோட்சம் உயர்ந்த இடம் பெற்றது.

மாயாவாதத்தை இந்தியா முழுவதும் ஏற்றது. கர்மத்தை இந்தியர் ஏற்றனர்.

ஆன்மாவை மனத்தால் அறிய முயன்றதால் விளைந்த விளைவுகள் இவை.

சத்தியஜீவியத்தால் ஆன்மாவைப் புரிந்து கொண்டால்,

  • மோட்சம் திருவுள்ளமில்லை.
  • திருவுருமாற்றமே திருவுள்ளம்.
  • உலகம் அற்புதம்.
  • சத்தியஜீவன் பிறப்பான்.
  • வாழ்வில் தீமையோ, தோல்வியோ இல்லை.
  • மனிதன் பிரம்மம் என்பது விளங்கும்.

******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஏழாம் நிலையிலுள்ள உடல் மனம் (subconscious skill) ஆழ்மனத் திறனை அடைய உதவும். மனத்தில் - 3ஆம் நிலை - உள்ள மனம் திறமையை அறிவதில் முதல் நிலையிலுள்ளது. ஏழாம்நிலைத் திறனை அறிகிறது. ஏழாம் நிலை விரும்பி 3ஆம்நிலை மனத்தை ஏற்பது வளர்ச்சி. விரும்பி ஏற்பது விரும்பிப் பணிவதனால் பலன் அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சியாகும். ஒன்பதாம் நிலைக்குப் பின்னாலுள்ள ஆன்மா கிளம்பி ஜீவனை நடத்துமானால், அது பரிணாம வளர்ச்சியாகும்.
 
எழும் மூன்றும் ஏற்பது வளர்ச்சி. விரும்பி ஏற்பது பரிணாமம்.

*****



book | by Dr. Radut