Skip to Content

07. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • ரொம்ப நல்லவர்
    (Perfect gentleman)
    • இந்த நண்பருக்கு ரொம்ப நல்லவர் எனப் பெயர்.

      நான் இலவசமாகச் சிலருக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதைப் பணம் தரும் மாணவர்கள் தங்களை ஏமாற்றுவதாகக் கூறுகின்றனர் என்று என்னிடம் இவர் குறை சொன்னார்.

      இதைவிடக் கேவலமான எண்ணமில்லை.

      இவரே ஒருவனுக்கு இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சொன்னார்.

      (அவர் ஒரு மாணவனைக் கொண்டு வந்து இலவசமாகச் சொல்லிக் கொடுக்கச் சொன்னார்.)

      சீட்டு எடுத்த பிறகு கட்ட எரிச்சலாக இருக்கும் - இதுவும் இவரே சொல்லியது.

      வாட்ச்மேன் முனுசாமி ஒரு கம்பியை விழுங்கிவிட்டான்.

      டாக்டர் இவர் நண்பர். ரூ.5/- பீஸ் 1959இல்.

      அன்று MBBS சங்கரராமனுக்கு 3 விசிட்டுக்கு ரூ. 1/-.

      முனுசாமியை ENT ஸ்பெஷலிஸ்டிடம் அழைத்துப் போனேன்.

      ரூ. 5 கொடுத்துச் சோதனை செய்தேன்.

      நண்பர் கூட வந்தார்.

      "முனுசாமி இவருக்கு முக்கியமானவன்'' என்று அறிமுகப்படுத்தினார்.

      நான் செய்த சேவைக்கு இவர் மட்டமான காரணம் கற்பிக்கிறார்.

      இதுபோல் 4, 5 நிகழ்ச்சிகள் உண்டு.

      மனிதன் மட்டமானவன், சந்தேகப் பிராணி, குப்பையைச் சேர்ந்தவர்.

      இவருக்கு ரொம்ப நல்லவர் perfect gentleman எனப் பெயர்.

      இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுப்பது பொறுக்காமல் மட்டமாகப் பேசுகிறார்.

      ஹாஸ்டலில் நான் காலையில் பாடம் சொல்லிக் கொடுக்கப் போவதால் மத்தியானம் குளிப்பேன் - செக்ரடரி என்பதால் தவறு செய்கிறீர்கள் என்றார் மற்றொரு நண்பர்.

      நான் வாட்ச்மேனுக்கு ரூ.1/- பணம் தருவேன், சமயத்தில் 2/- ரூபாயும் தருவேன்.

      அவனுக்கு ரூ. 20 சம்பளம்.

      நண்பர் கயவர்.

      பிறர் செய்யும் நல்லதை யோசனை செய்து குறையாகப் பேச மனம் மட்டமாக இருந்தால் போதாது, குதர்க்கமாகவுமிருக்க வேண்டும்.

      இது குதர்க்கமான கயமை.

      இன்னொரு நண்பர், "எந்த விஷயத்தையும் எப்படித் திரித்துக் கூறலாம் என நான் நினைப்பேன்'' என்பது அது போன்றது.

    • மனம் பெருந்தன்மையாக இருக்க வேண்டும், மட்டமாக இருக்கக்கூடாது.

      நண்பர் மட்டமானவர் என நான் கடுமையாகக் கண்டித்தால் உள்ளே ஆழத்திலிருக்கிறது அது எனப் பொருள்.

      அப்படியிருப்பது என்னை உறுத்துவதால் அவரைப் பற்றிப் பேசச் சொல்கிறது - இது உண்மை.

      ஆனால் பெரிய கஷ்டமான discipline கட்டுப்பாடு.

      இந்த நண்பர் திறமையுள்ள எவரையும் பாராட்டியதில்லை.

      அவருக்கு எந்தத் திறமையுமில்லை; திறமையுள்ளவர் மீது எரிச்சல்.

      அவர் அளவு கடந்த பிரபலமானவர்.

      பிரபலம் ஒரு மூட நம்பிக்கை.

      பெரிய ஊழல் அரசியல்வாதி பணம் வாங்கவில்லை என மக்கள் நம்புகிறார்கள்.

      நம்மிடம் அப்படி நிறைய மூட நம்பிக்கைகளுண்டு.

      மூட நம்பிக்கையற்றவர் மிகச்சிலரே.

  • வீட்டு வேலை
    • உலகம் வெறுத்து ஒதுக்குவதற்குச் சிகரம் வேலை செய்ய ஆள் வர மறுப்பது - Domestic servants are a real social index.

      1950இல் அமெரிக்காவில் கல்லூரி ஆசிரியருக்கு $ 12,000 கொடுக்கும்பொழுது குப்பை வாருவதற்கு $ 17,000 கொடுத்தார்கள். Ph.D. பெற்றவரும் வேலைக்கு வந்தனர்.

      • 150 வருஷத்திற்கு முன் விவசாயத்தில் மெஷின்கள் அமெரிக்காவில் வந்துவிட்டன. அங்குக் கூலிஐரோப்பாவைப் போல் அப்பொழுது 10 மடங்கு. அப்படியிருந்தும் ஆள் கிடைக்கவில்லை. அதனால் வேலையைச் சுருக்கும் மெஷின்கள் (labour saving machines) கண்டுபிடிக்கப்பட்டன.
      • சம்பளம் அதிகமாகக் கொடுத்தால் வேலைக்கு ஆள் கிடைக்கும். எந்தச் சம்பளம் கொடுத்தாலும் இந்த வேலைக்கு - மட்டமான வேலைக்கு - வரமாட்டேன் என்பது நாகரிகம்.

        பெர்னாட்ஷா சவுக்கடியைப் பற்றிப் பேசும்பொழுது எந்தக் கூலிக்கும் இந்த வேலையைச் செய்யமாட்டேன் என்று மனிதன் வளரும்வரை சவுக்கடியை ஒழிக்க முடியாது என்றார்.

      • "என்னால் ஒட்டு கேட்க முடியாது, என்னால் கோள் சொல்ல முடியாது, பொய் சொல்ல முடியாது, பிடியை விடாமலிருக்க முடியாது, என்னால் குறை சொல்ல முடியாது, பொறாமைப்பட முடியாது, அழிபவனைப் பார்த்து கை தட்டிச் சிரிக்க முடியாது'' என்று சொல்லும்வரை ஒருவர் devotee அன்பராக முடியாது.
      • அதிகாரம் செய்ய வெட்கப்பட வேண்டும்.

        ஆசைப்படும்வரை அன்னையில்லை. மனித குருவைத் தெய்வம் Divine என்பவர் தான் ஒரு நாள் தெய்வமாகி Divine அனைவரையும் மட்டமாக நடத்த ஆசைப்படுபவர் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

      • இந்த நாகரிகம் எல்லாம் 1000 ஆண்டிற்கு முன் நம் நாட்டில் பெயரெடுத்தது. மேல்நாட்டில் பெருவாரியான (majority) மக்கள் பின்பற்றுகின்றனர். அவர்கள் வெட்கப்படுவதைச் செய்ய நாம் பெருமைப்படுகிறோம். அமெரிக்காவில் கம்ப்யூட்டர் (software) சாப்ட்வேர் வேலைக்கு எந்தச் சம்பளம் கொடுத்தாலும் ஆள் 20%க்குத்தான் கிடைக்கும். அது ஜீவனற்ற வேலை routine work என்பதால் அறிவுள்ளவர் above average people வரமாட்டார்கள். நமக்கு அது வரப்பிரசாதம். இன்ஜீனியர்கள் (engineers) சென்ற ஆண்டு 60,000 பேர் அமெரிக்காவில் பட்டம் பெற்றனர். அவர்களில் அமெரிக்கர் 30,000. இந்தியாவில் 2 இலட்சம் இன்ஜீனியர் அந்த வருஷம் பட்டம் பெற்றனர். மட்டமானவர்கள் (below average, physical people) தான் இன்ஜீனியரிங் அமெரிக்காவில் படிப்பார்கள். நமக்கு B.E.. பெரியது. 10 அல்லது 20 ஆண்டிற்குப் பின் B.L., M.B.B.S.க்கும் அமெரிக்காவில் கெட்டிக்காரப் பிள்ளைகள் வரமாட்டார்கள்.
        • பழைய சாஸ்திரப்படி குருக்கள், சாஸ்திரி அய்யர், அந்த வேலை இன்று பிரபலமில்லை.
          வைத்தியன், தச்சன், கருமான், சூத்திரன்.
          பழைய கருமான் புதிய இன்ஜீனியர்.
          சர்க்கார் உத்தியோகம் செய்பவன் வைஸ்யன்.
          இன்று அனைவரும் அதற்காகப் பெருமைப்படுகிறார்கள்.
        • சாப்பாடுக்கு உழைக்க வேண்டும் என்றவரை professions தொழில் இருக்கும். அது சரியில்லை என Mother அனைவருக்கும் சாப்பாடு போட்டார்.
        • ஐம்பது வருஷத்திற்குள் 80% மக்கள் சாப்பாட்டிற்கு உழைக்கும் அவசியமிராது.
        • அன்பன், சாதகன், "இருக்குமிடம் தேடி என் பசிக்கு அன்னம் உருக்கமுடன் வரும்''.
        • வேலைக்குப் போக வேண்டிய அவசியம் அறிவு வளர்ந்தவனுக்கு எதிர்காலத்தில் இராது.
  • உறவு
    • பணம், பதவி, பெண் என்பவை பொருட்டில்லை எனில் உறவு freeஆக இருக்கும்.
      • அனைத்தையும் பிறருக்குக் கொடுப்பவன், அனைத்தையும் கொடுக்கக் காத்திருப்பவன், நல்ல உறவைப் பெறலாம். கொடுப்பது நஷ்டமில்லையென அவன் அறிவான்.

        கொடுப்பது பெருகும்.

      • திருட ஒன்றுமில்லை என்றால் பூட்டி வைக்க வேண்டியதில்லை.

        திருடுபவர் எவருமில்லை என்றாலும் பூட்டி வைக்க வேண்டாம்.

      • சொத்துக்கு முழு மரியாதையுண்டு.

        பதவிக்கு அதைவிட மரியாதையுண்டு.

        பெண்ணுக்கு ஏங்காத ஆணும், ஆண் தேடாத பெண்ணுமில்லை.

      • கல்வி, வைத்திய செலவு, வீடு, கார் சர்க்கார் முழுவதும் கொடுக்கும் நிலை உருவாகிறது. அதன்பின் சாப்பாடுதான் பாக்கி.

        சமூகத்தில் மனிதனாய்ப் பிறந்தவனைச் சமூகம் பாதுகாக்கும் என இளங்கோ நகரில் இருந்தபொழுது அமெரிக்க நண்பரிடம் சொன்னேன்.

        ஒரு பெரிய - மிகப்பெரிய - உயர்ந்த நல்ல பண்புள்ள குடும்பத்தைக் கவனி.

        • அங்கு எவருக்கும் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்பது மனதில் எழாது.
        • அதிகாரம் செய்ய அசிங்கப்படுவார்.
        • பிறருக்குப் பணிய ஆசையாக இருக்கும்.
          அதுவே அன்பின் வெளிப்பாடு.
        • கொடுப்பது இயல்பு.
        • அடுத்தவரைச் சந்தேகப்பட மனம் கூசும்.
        • பெண் விஷயத்தில் தவறு ஏற்படும் என நினைக்க முடியாது.

          இவை 1000 ஆண்டிற்கு முன் நம் நாடு பெற்றுப் போற்றியது.

          வளமான பகுதிகளில் இன்றும் ஏராளமாகக் காணலாம்.

          ஏன், அன்பர்கள் குடும்பங்கள் அப்படியிருக்கக் கூடாது?

          நாம் முனைந்து கங்கணம் கட்டிக்கொண்டால் அது ஏற்படும்.

          அத்துடன் அன்னை சேர்ந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.

          முதற் கடமை:

          சொல்லெல்லாம் நல்லதாக, பாஸிட்டிவ்வாக இருக்க வேண்டும்.

          நயமான, நளினமாக இருக்கும்.

          மனம் நெகிழ்ந்து, துரியோதனன் மனைவி பானுவும் கர்ணனும் பழகியதைப் போலிருக்கும்.

          அது 15 நாளைக்கு.

          இது நிரந்தரம்.

          அதுவே சுபாவமாக இருக்க வேண்டும்.

          ஒருவர் அடுத்தவருக்கு அதைத் தர முன் வந்தால், அடுத்தவர் ஏற்க வேண்டும்.

          அது எங்கள் குடும்பமாகும்.

          "100 ரூபாய்'' சொத்தாகாது, வருமானமாகும்.

          மனம் மகிழ்ந்து, நெகிழ்ந்து, பரந்து, மலர்ந்து, விரிந்து இனிக்கும்.

          அது மனம் வீசும் மணம். அது போன்ற மனம் இணைவது நறுமணம் - திருமணம் எனப்படும்.

          இனிய ரோஜா மலராகி, நறுமணம் பரப்ப வேண்டும்.

          குரலினிக்கப் பேசி, குழலினிமை எழுப்ப முடியுமா?

  • மகசூலுக்கு விலை
    • "என் மகசூலுக்கு விலை கிடைப்பதில்லை".
      • வேலையைச் சிறப்பாகச் செய்தால் விலை பெரியதாகக் கிடைக்கும்.

        1969இல் மணிலா மூட்டை ரூ.60இல் ஆரம்பித்து ரூ.90 வரை போயிற்று. 1970இல் கிராமத்திற்கு பாங்க் பணம் கொடுத்தது. நல்ல மழை, மணிலாவில் பூச்சி விழவில்லை. அபரிமிதமான விளைச்சல். விளைச்சல் அதிகமானால் விலை குறையும். மார்க்கட் ரூ.90இல் ஆரம்பித்தது ரூ.190 வரை உயர்ந்தது. கிராமத்து மக்கள் அயராத உழைப்பாளிகள். பாங்க் பணத்தைத் திருப்பித் தரும் நல்லெண்ணம், மழை பெய்து விலை கிடைத்தது.

        வால்டருக்கு அப்படி வந்தது.

        விவசாயிக்கு எத்தனை மூட்டை காய்க்க வேண்டும், என்ன விலை வேண்டும் என்பதை எந்த வருஷமும் செய்யலாம்.

        இதுவரை protection, மழை, விவசாயிக்கு மன நிம்மதி அப்படித்தான் நடக்கிறது. அவற்றுள் அவன் எதிராக அதிகமாக வேலை செய்வதில்லை.

        அதனால் ஓரளவு பலிக்கிறது.

    • ஒரு பெரிய சோதனை experiment செய்தால் மௌனமாக silentஆக அடுத்த வருஷம் கம்பனி பெரும்தொகை சம்பாதிக்க வேலை செய்யலாம். அதுவும் ஒரு முறைதான் நடக்கும். அவன் மாற வேண்டும் என்றால் அவனே மாறப் பிரியப்பட வேண்டும். தாயார், தகப்பனார் மாறினால் அது நடக்க வழியுண்டு.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பலஹீனமானவரை நியாயமாக நடத்தினால், அவரைத் தமக்குப் பணிய வைக்க அல்லது அழிக்க அவருடைய உதவியைக் கேட்பார்கள்.  
  • உதவுபவரை அழிப்பது உதவி பெறுபவர் தர்மம்.
  • அழிப்பதற்காக உதவி கேட்பார்கள்.
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
யாருடைய தொடர்பு அர்த்த நாசம் தருமோ அவரிடமிருந்து விலகுவது அறிவுடைமை. அவனே போகும்வரை காத்திருக்கும் பொறுமை யோகத்திற்குத் தேவை. விலக்குவது "ஆரம்ப''மாகும்.
 
அர்த்தநாசம் தருபவனும் தானே போகும்வரை காத்திருக்க வேண்டும்.
 
******

 



book | by Dr. Radut