Skip to Content

08. சாவித்ரி

சாவித்ரி

P.124 An inspiration and a lyric cry

         உற்சாகம் உணர்வாகும் குரல்

  • பிரம்மத்தைத் தாங்கி வரும் க்ஷணம் கொணரும் பூரிப்பு;
  • கற்பனைக்கெட்டாத அழகு சொர்க்கத்தின் கையை ஒடித்தது
  • வளரும் கனவு அழிக்கும் எல்லை;
  • வானமெனும் அற்புதம் எழுப்பும் பறவையின் கானம்
  • ஒளிமயமான கரையின் மரணமிலா மக்கள்.
  • இறைவனின் இரு கரம் உருவாக்கும் சிருஷ்டியலைகள்;
  • அற்புதமும், ஆனந்த பூரிப்பும் வழி தவறி எதிர்கொள்ளும் வகை.
  • பூவுலக ஆனந்தம் கடந்த சச்சிதானந்தம்,
  • இதயத்தின் பிரம்மம் எழுப்பும் இடியோசையான சிரிப்பு
  • மகிழ்வெனும் மன்னன் பெற்ற அன்பெனும் அமைச்சர்.
  • ஆன்ம ஜோதி ஏற்ற அழகெனும் உடல்.
  • முரண்பாடு எனும் முற்பிறவி நண்பர்கள்
  • எதிர்ப்பின் எல்லையான சுமுகத்தின் அரவணைப்பு:
  • மென்மையான தூய்மை தரும் தண்மையான இங்கிதம்
  • தாயின் முலையில் தவழும் தெய்வம்:
  • இயலாமையை இழந்த லோகத்தில் பொய்த்த பொய்மை;
  • கவசமான அறியாமை அறிவின் அணிகலன்,
  • சத்தியம் பெற்ற சுதந்தரமெனும் கற்பனை,
  • மோட்சத்தின் நெருப்பில் தழலென எழும் இன்பம்;
  • அழகை வணங்கும் அறிவின் ஆர்வம்,
  • அமைதியான ஆன்மீக சட்டத்தின் அடிமையெனும் பெருவலிமை,
  • ஆனந்தத்தின் மார்பில் பதித்த தலையுடைய சக்தி.
  • கற்பனைக்கெட்டாத பெருமையின் சிகரம்,
  • சுதந்தரமான சுயராஜ்யம் பெற்ற விவேகத் திடல்கள்
  • கன்னியான சூரியன் கருதி விரும்பும் ஆதரவு,
  • திருஷ்டியுள்ள ஆத்மாவின் ஜோதிமயமான சாஸ்திரம்
  • கதிரான பிரம்மம் வீற்றிருக்கும் பதவியெனும் அரியாசனம்.
  • பெருமையின் உயர்வான தோற்றம் அளவுகடந்த கனவுலக அமைப்பு
  • சூரிய ராஜ்யம் அறியும் ராஜநடை:
  • தெய்வத் திருச்சபை குழுமிய பெருமக்கள்
  • பளிங்கு உறுதியை ஆளும் வாழ்வின் திறமை,
  • எதேச்சாதிகாரம் எழுப்பிய அதிகாரக்குரல்
  • வாகை சூடிய தோள்கள் வலிமைமிக்க கரங்கள்.
  • அழகும் உயர்வும் அபரிமிதமான அனைத்துப் பொருள்கள்,
  • அரச பதவியின் அந்தஸ்து பெற்ற ஆத்மாவெனும் ஜீவன்கள்.

******



book | by Dr. Radut