Skip to Content

13. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அருளுக்கு சமுதாயமும், வாழ்வும், காலமும் கட்டுப்பட்டு நிற்கும் என்ற அப்பாவின் கருத்தை கொண்டு எழுதிய வரிகளை கீழே பதிவு செய்கிறேன்.

வாழ்க்கை என்னும் மைதானத்தில்,
ஆண்டவன் என்னும் அம்பயரின் முன்னிலையில்,
சமுதாயம் பல சோதனை பந்துகளை தொடர்ந்து வீசுகிறது,
சுற்றிலும் பல பிரச்சனை பீல்டர்கள் வியூகம் அமைத்திருக்க,
சீறிவரும் பந்துகளில் மனிதர்களின் வாழ்நாள்.
வாழ்வின் எல்லைக்குள் அடைபட்டிருப்பவர் விக்கெட்டுகள் வரிசையாய் சரியும்போது,
அன்னை அன்பர்களாகிய நாங்கள் மட்டும் நம்பிக்கை மட்டையுடன்,
அருளின் பாதுகாப்பிலிருந்து விலகாமல் இருந்து கொண்டு, அனுதினமும் சதம் போடுகிறோம்.

-- பிரியா மகேஷ், ஷார்ஜா.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஜோதி தன்னை விழுங்குவதால் இருளாகிறது.
ஜீவியம் அதேபோல் ஜடமாகிறது.
இறைவன் பிரிவினையால் திசை மாறி அசுரனாகிறான்.
 

*****



book | by Dr. Radut