Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

P.137 Asking for light she followed darkness' clue

ஒளியைத் தேடி இருளை நாடும்

  • விழிப்பை நோக்கித் தடமாடும் குருட்டு சக்தி
  • புலனில் விழித்த ஜடம் ஜடத்தைக் கவர்ந்தது
  • குருட்டுத் தொடர்பு, சிறு தொடர்பு எழுப்பும் தெறிக்கும் பொறிகள்
  • மூடிய அடிமனம் மூலத்தில் எழுப்பும் உணர்வு
  • பெருகி வரும் உணர்ச்சி வெள்ளம், எண்ணமாக நடிக்கும் ஊமைக் குமுறல்கள்
  • விழிக்கும் இயற்கை கொடுக்கும் அடிகளை ஏற்கும் உணர்வு
  • அதுவும் ஜீவனற்ற பதிலான செயலே
  • ஆட்டம், தாவித் தாண்டி இயற்கையின் கனவாயிற்று
  • பண்பற்ற வேகம் முரட்டுத்தனமாக உரசி ஓடிற்று
  • தன்னையறிந்து தமரையறியாமல் தன்னை மட்டும் கருதி
  • இருள் காரிருளுடன் மோதி
  • குழப்பத்தின் ஆட்சியில் செயல் பெற்ற சுதந்திரம்
  • வாழ்வது அவசியம், பிழைக்கும் வழி பிறிதொன்றில்லை
  • பதைக்கும் நிலையற்ற செயல் முனைந்து பெற்ற ஈடுபாடு
  • தெரியாத ஆசை தேடிய உணவு
  • இயற்கையின் எழுச்சியே இயல்பான சட்டம்
  • சக்தி சக்தி மீது மோதி கண்ட பலன் ஏதுமில்லை
  • இருளின் பிடியை ஏற்று ஓடியதே மிச்சம்
  • நெகிழ்ந்த உணர்வும் நெளியும் உணர்ச்சியும் அறியும் மூலமில்லை
  • சிற்றின்ப வெற்றியும் வேதனையும் எளிதாக எழுந்து அழிந்தன
  • எண்ணமற்ற வாழ்வின் முரட்டு செயல்கள்
  • தேவையற்ற உலகின் வீண் பெருமை
  • வருத்தம் தரும் எளிய பலனை வருந்தியழைக்கும் மனம்
  • அர்த்தமற்ற வேதனை, இருள் மண்டிய சங்கடம்
  • முயற்சிக்கு முழுமை தரும் எதுவும் எதிர்கொள்ளவில்லை
  • விழித்தெழுந்த ஆத்ம பார்வை அப்படிக் கருதவில்லை
  • தனியான நட்சத்திரம் பொலிவுற மிளிரும்
  • விலகி நிற்கும் தழல் ஜோதியின் தனித் துவாரபாலகன்
  • சிந்தனையற்ற இருள் செறிந்து நகரும் வேகம்
  • இலட்சியமற்ற லோகத்தின் தனிமனித சிந்தனையாளர்
  • இறைவனெனும் சூரியன் உதிக்கக் காத்திருக்கும்
  • காலம் செய்யும் பணியில் கடவுளின் நோக்கம் தெரிகிறது
  • இல்லாத நோக்கமும் எடுத்துத் தரும் பலன்
  • மந்திரப் பலனும் தெய்வீக மாற்றமும் கருவாக எழுந்தன

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னை எண்ணத்திற்குக் கட்டுப்பட்டவரிலர்.
 

*******



book | by Dr. Radut