Skip to Content

09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுக்கமாட்டானா?

    இலை அறுப்பவனுக்குக் குலையைக் கொடுக்கும் மனம்.

  2. கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

    கூத்தாடியும், கூலிக்காரனும் கூடி மகிழும் வாழ்வு.

  3. பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்குக் களவிலே சாவு.

    பாம்பாட்டிக்கும், கள்ளனுக்கும் வாழ்வளிக்கும் பாம்பும், களவும்.

  4. சீலை இல்லையென சித்தி வீட்டுக்குப் போனாளாம், அவள் ஈச்சம் பாயைக் கட்டிக் கொண்டு எதிரே வந்தாளாம்.

    சித்தி வீட்டு ஈச்சம் பாயும் எதிரில் வரும் சீலையாகும்.

  5. பள்ளத்திலே இருந்தா பெண்டாட்டி, மேட்டிலே இருந்தா அக்கா.

    பள்ளமும், மேடும் பாக்கியம் தரும் நிலைகள்.

தொடரும்....

******



book | by Dr. Radut