Skip to Content

12. 'அன்னையும் என்னை கைவிட்டு விட்டார்'

"அன்னையும் என்னை கைவிட்டு விட்டார்"

கஷ்டம் வந்த காலத்தில் மேற்சொன்ன வார்த்தைகளை கூறாத அன்பரில்லை. அன்பன் பெரிய இடத்துப் பிள்ளை. அவன் இப்படிச் சொல்லலாமா?

லிடியா ஓடிப்போன செய்தி கேட்டு எலிஸபெத் செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பொழுது தற்செயலாக டார்சி வருகிறான். அவனிடம் விஷயத்தைக் கூறி அழுகிறாள். நடந்ததைக் கேள்வியுற்று மறு பேச்சில்லாமல் டார்சி அங்கிருந்து போகிறான். இவன் இனி என்னோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டான், இவனைப் பார்ப்பது இதுவே கடைசி முறை என்று எலிஸபெத் நினைக்கிறாள். ஆனால் அவனோ இப்பேராபத்திலிருந்து எலிஸபெத்தை எப்படிக் காப்பாற்றலாம் என்று நினைத்து அதைச் செயல்படுத்தி வாழ்விழந்த லிடியாவிற்குத் தன் எதிரியை கணவனாக்கி வாழ்வு தருகிறான். பேராபத்தை அதிர்ஷ்டமாக மாற்றுகிறான்.

டார்சியை தவறாக எண்ணிய எலிஸபெத் போல அன்பன் அன்னையை நினைக்கலாமா? உண்மையில் நடப்பது என்ன? பிரச்சனை ஆழத்திற்குரியது. பிரச்சனை ஏற்பட்டவுடன் நம் ஆழத்தில் இருக்கும் அன்னைக்குக் குரல் கேட்டு உடனே செயல்பட்டு பிரச்சனை தீர்வதற்கான அனைத்தையும் அன்னை செய்கிறார். பிரச்சனையைத் தீர்க்கிறார். விஷயம் தலை கீழே மாறுகிறது. பொறுமையில்லாமல் நாம் "அன்னையும் என்னைக் கைவிட்டு விட்டார்' என்று கதறுகிறோம். அதை விடுத்து அன்பன் இச்சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டியது என்ன?

  • அன்னைக்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பதும்,
  • பொறுமையாக அன்னை மீது நம்பிக்கையுடன் காத்திருப்பதும் மட்டுமே ஆகும். 

உண்மையில் கஷ்டம் பேரதிர்ஷ்டம்.

*******



book | by Dr. Radut