Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

P.149 A thought was there that planned, a will that strove

திட்டமிடும் எண்ணம், முயலும் உறுதி

  • குறுகிய வட்டத்துள் சிறு இலட்சியங்கள்
  • அளவு கடந்த அவதிப்பட்டு, அரை நிமிஷப் பலன் பெற
  • தான் மண்ணில் பிறந்த மக்கியப் புழுவென அறியும்
  • பெரிய சட்டமோ, பெரும் அரங்கமோ அது நாடவில்லை
  • அகத்துள் பார்வை செல்லவில்லை, மேல் நோக்குமில்லை
  • கடினமான தர்க்கத்தைப் பயிலும் மந்தமான மாணவன்
  • தவறான உணர்வு தலையெடுத்து ஆள்கிறது
  • தோற்றத்தைக் கடவுளின் திருமுகம் எனக்கொண்டு
  • சிறு ஜோதியை பெருஞாயிறாகக் கொண்டு
  • நீல ஆடையை நீல வானமாக நினைத்து
  • பகுதிகளை முழுமையென நினைவால் கருதி
  • வேகமாக உரையாடும் குரலொன்றெழுந்தது
  • அர்த்தமற்ற செயல்களும், எண்ணங்களும் சந்தையாகக் கூடி
  • ஜீவனற்ற வாழ்வு, உடலுக்கு உட்பட்ட மனம்
  • இதுவே இயற்கையின் பளபளக்கும் கிரீடம்
  • சிறு அகந்தை முழு உலகை அரங்கமாக ஏற்றது
  • அரை நிமிஷ ஆசைகளும், குறுகிய காமமும் திருப்திப்பட
  • மரணத்தில் முடியும் பாதையில் எழுந்து பூர்த்தியாகும் வாழ்வு
  • சுவரில் முடியும் வீதியை சுவர்க்கத்தின் வாயிலாகக் கருதி
  • அதற்காக ஆத்மா பிறவியை நாடியதாக
  • சுயமான சிருஷ்டி லோகத்தின் அற்புத அம்சங்கள்
  • பிரபஞ்ச இடத்தில் பிரபலமான வாய்ப்புகள்
  • உணர்ச்சி வேகம் கொண்ட உயிர் பிழைக்க முயன்று
  • கடுகளவு கருத்து விலங்கென விளங்கும் விசாலமற்ற வீதி
  • உடலின் வேதனைகட்கும், தேவையான மகிழ்ச்சிக்கும்
  • கட்டை எரிந்து சாம்பலாகி வளரும் நெருப்பு
  • ஏற்பதால் வளர்ந்து, ஏற்றதை உரிமையாக்கி
  • சேர்ந்து வளர்ந்து எவருக்கும் எதுவும் அளிக்காமல்
  • தன் குகையில் தனக்குப் பெருமையை நாடும்
  • சிறு காரியங்களில் மகிழ்ந்து வென்று
  • தனக்கும் தமருக்கும் வாழ வழி தேடி
  • மேயுமிடத்தில் அதை நம்பி வாழும் விலங்கு போல்
  • வீட்டுக்குள்ளேயுள்ள விண்ணவரை அறியாமல்
  • பெரிய ஆழ்ந்த இலட்சியம் எதுவுமின்றி
  • அளவோடு செயல்பட்டு வெற்றி கண்டு

******

ஜீவிய மணி
 
முழுமையின்றி முழு உயர்வில்லை.
 

******



book | by Dr. Radut