Skip to Content

05. அஜெண்டா

அஜெண்டா

அன்னைக்குச் செயல் எனில் மனிதனுடன் பேசுவது

  • கவிஞனுக்கோ, எழுத்தாளனுக்கோ அவன் மனதில் எழுவதில் ஒரு பகுதியைக் கூட வெளியிட முடியாது.
  • செய்யுளாக எழும் உணர்ச்சியை உரைநடையாகக் கூறுவது கடினம். கொச்சை பாஷையில் சொல்ல முடியுமா? எவ்வளவு சொல்லலாம்? அதைச் செய்ய மனம் எப்படிக் கூசும்?
  • நேரு கேம்பிரிட்ஜில் படித்தவர், அறிவாளி, பெரிய குடும்பத்தில் பிறந்தவர், தலைவர், பெரும் சிந்தனையாளர், அடிக்கடி கிராம விவசாயிகளுடன் பேசுவார். என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?
  • பாரத மாதாவுக்கு "ஜே" எனக் கோஷம் போட்ட கூட்டத்தை நோக்கி, "யார் பாரத மாதா? எங்கிருக்கிறார்?'' எனக் கேட்டார்.
  • பாரத மாதா யார் எனக் கூறவே அன்றைய சொற்பொழிவு முழுவதும் செலவாயிற்று.
  • உயர்ந்த நிலையிலுள்ள மனம் எளிமையான மக்களைச் சந்தித்துப் பேசக் கூசும்.
  • பரம்பரையின்றி படிப்பால் உயர்ந்தவனைப் பண்புள்ள பெரிய குடும்பத்துப் பெண் மணந்தால், எதைக் காதால் கேட்க அவள் கூச்சப்படுவாளோ அதை உரிமையாகக் கேட்கும்படி கணவன் வற்புறுத்தினால் அவளுக்கு உடம்பெல்லாம் கூசும்.
    லோபஸ் என்பவன் அப்படி மேரியை மணந்தான்.
  • அங்கு உரிமையற்றதைக் கொடுத்தால் பரிசு பெரியதானாலும் பெற்றுக் கொள்ளமாட்டார்கள். வற்புறுத்தினால் வருத்தம் எழும்.
  • லோபஸ் மனைவியை அவள் தகப்பனாரைப் பணம் கேட்கச் சொல்கிறான். அவள் உடலெல்லாம் எரிகிறது.
  • தலைவர் பொய் மட்டும் சொல்பவரானால், தொண்டன் பொய்யே சொல்லாதவனெனில் தொண்டன் நிலை தர்ம சங்கடம்.
  • அன்னை நம்மிடம் பேசும் பொழுது அவர்கள் ஜீவியத்திற்கும், நம் ஜீவியத்திற்கும் உள்ள இடைவெளி உடலில் கூச்சமாக எழுகிறது என்கிறார்.
  • சூட்சும உலக சட்டப்படி ஒருவருக்குப் பெரிய சொத்து வர இருக்கும் பொழுது தரித்திரமான ஒருவர் காரில் லிப்ட் கொடுத்தால், இந்த லிப்டில் அந்த பெரிய அதிர்ஷ்டம் தவறி விடும் என்பது சட்டம்.
  • இரண்டாம் கணவன் தன் ஏழை நண்பன் பாதிரியாருக்கு உதவ £50 பவுன் கொடுத்த பொழுது பணக்கார மனைவி நல்லெண்ணத்தால் £20 கவருள் வைத்தாள். அப்பணம் அவள் முதல் கணவர் கம்பனியிலிருந்து வந்தது. முதற்கணவர் தங்கமான மனம் உடையவர். இறந்தபின் அவள் மறுமணம் செய்து கொண்டாள். பெண்ணின் தகப்பனார் £800 பவுன் சம்பாதித்தது அவள் முதல் கணவனால், அவர் சீர்திருத்தத்தால், £200 பவுனாயிற்று. ஏழைப் பாதிரியார்  £20 செக்கை திருடியதாக அவர் மீது வாரண்ட் வந்து அவதிப்பட்டார்.

    எண்ணம் நல்லதானால் ராசியும் நல்லதாக இல்லாவிட்டால் பரிசு வாரண்ட் கொண்டு வரும்.
    இது தெரிந்தால் பாதிரியார் அதைப் பெற்றிருப்பாரா?

  • அன்னை தெரிந்து பெற்றுக் கொள்கிறார், நம்மிடம் பேசினார், அவர் பட்ட அவதி பெரியது.

*******



book | by Dr. Radut