Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

XXVIII. Supermind, Mind and the Overmind Maya
Page 271
Para 1
28. சத்திய ஜீவியம், மனம், தெய்வீக மனத்தின் மாயை
We must clear one point which we have till now left in obscurity.
நாம் இங்கு விளக்கம் கூறாமல் விடப்பட்டுள்ள ஒரு விஷயத்தைத் தெளிவாக்க வேண்டியுள்ளது.
What is the process of the lapse into the Ignorance?
பிரம்மம் அறியாமையில் தன்னை எப்படி இழக்கிறது?
In the original nature of Mind, Life or Matter nothing necessitates a fall from Knowledge.
மனம், வாழ்வு மற்றும் ஜடத்தின் மூலத் தன்மையில் எதுவும் அறிவிலிருந்து வழுவும் அவசியத்தை ஏற்படுத்தவில்லை
It has been shown that division of consciousness is the basis of the Ignorance.
ஜீவியத்தின் பிரிவினை அறியாமையின் அடிப்படையாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
It is a division of individual consciousness from the cosmic and the transcendent.
இது பிரபஞ்சம் மற்றும் கடந்த நிலையிலிருந்து தனிப்பட்ட ஜீவியம் பிரிந்த நிலை.
The individual consciousness is still an intimate part of them.
பிரிந்தாலும், தனிப்பட்ட ஜீவியம் அவற்றின் நெருங்கிய பகுதியே ஆகும்.
In essence it is inseparable from them.
அதன் சாரத்தில் அது அவற்றிலிருந்து பிரிய முடியாத நிலையிலுள்ளது.
It is a division of Mind from the supramental Truth.
மனம் சத்திய ஜீவியத்திலிருந்து பிரிந்த நிலை அது.
It should be a subordinate action of that Truth.
அச்சத்தியத்தின் கீழ்நிலைச் செயலாக அது இருக்க வேண்டும்.
It is a division of Life from the original Force.
மூலமான சக்தியிலிருந்து வாழ்வு பிரிந்தது அது.
Life is one energism of that Force.
வாழ்வு அச்சக்தியின் ஒரு சக்தித்துகள் ஆகும்
It is a division of Matter from the original Existence .
மூலமான சத்திலிருந்து ஜடம் பிரிந்த நிலை அது.
Matter is one form of substance.
ஜடம் என்பது பொருளின் ஒரு ரூபம்
But how did this division come about in the Indivisible.
இருப்பினும், பிரிய முடியாததிலிருந்து பிரிவினை ஏற்பட்டது எங்ஙனம்?
By what self-diminishing has it come about?
எப்படிப்பட்ட சுயக் குறைபாடு இதை ஏற்படுத்தியது?
By what self-eff acing action of Consciousness-Force in the Being has it come about?
ஜீவனிலுள்ள ஜீவியச் சக்தியின் தன்னை அழிப்பதான எத்தகைய செயல் மூலம் இப்பிரிவினை ஏற்பட்டது?
All is a movement of that Force.
அனைத்தும் அச்சக்தியின் சலனமே
Therefore only by some such acti on can there have arisen the dynamic phenomenon of the Ignorance.
எனவே, அத்தகைய ஏதாவது ஒரு செயலின் மூலம் அறியாமை உயிர் பெற்று எழுந்ததாக இருக்க வேண்டும்
That action must have obscured its own plenary light and power.
அச்செயல் அதன் முழு ஒளி மற்றும் சக்தியை மங்கச் செய்திருக்க வேண்டும்.
But this problem can be more closely examined.
இப்பிரச்சனையை இன்னும் நெருக்கமாக நாம் ஆராய்ச்சி செய்ய முடியும்.
In treati ng the dual phenomenon of Knowledge-Ignorance, we can examine it.
இரட்டைகளான அறிவு-அறியாமை இவற்றைக் கொண்டு நாம் இதை ஆய்வு செய்யலாம்
Our consciousness is a blend of light and darkness.
நம் ஜீவியம், ஒளி மற்றும் இருளின் கலவையாகும்
It is a half-light between the full day of the supramental Truth and the night of the material Inconscience.
அது பகலான சத்திய ஜீவியத்தின் சத்தியத்திற்கும், இரவான
ஜட இருளிற்கும் இடையே உள்ள குறையொளி கொண்டது.
All we must note at present is its essential character.
தற்போது நாம் கவனிக்க வேண்டியது அதன் அத்தியாவசியமான குணத்தையே ஆகும்
It is an exclusive concentration on one movement and status of Conscious Being.
சத் ஜீவன் பெற்று தன் ஒரு இயக்கம் மற்றும் ஒரு நிலையில் மீது அதற்கு ஏற்படும் பிரத்தியேக நிஷ்டை அது.
That puts all the rest of consciousness and being behind.
அது மற்ற ஜீவியத்தையும் ஜீவனையும் பின்னணியில் வைக்கிறது.
It veils it from that one movement’s now partial knowledge.
Page 272
Para 2
அந்த ஒரு இயக்கத்தின் தற்போதைய குறையான அறிவிலிருந்து மற்றதை மறைத்து வைக்கிறது.
Sti ll one aspect of this problem must be immediately considered.
ஆனாலும், இந்தப் பிரச்சனையின் ஒரு அம்சத்தை நாம் உடனடியாகக் கருத வேண்டும்
It is the gulf created between Mind and the supramental Truth-Consciousness.
அது மனம் மற்றும் சத்திய ஜீவியத்தின் இடையே உருவாக்கப்பட்டுள்ள பெரும் பிளவைப் பற்றியது.
We have found Mind in its origin to be a subordinate process of this Truth-Consciousness.
மனம் அதன் ஆதியில் சத்திய ஜீவியத்தின் கீழ்நிலைப்பட்ட செயல்பாடு என்று பார்த்தோம்
For this gulf is considerable.
இவைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவு மிகப் பெரியதாகும்
There are two levels of consciousness.
இரு கட்டங்களாக ஜீவியம் உள்ளது.
A transiti on from one to the other can be in the descending involuti on of Spirit into Matter.
ஒன்றிலிருந்து மற்றதற்கு நிலை மாற்றம் பெறுவதன் மூலம் ஆன்மா ஜடமாக சிருஷ்டியில் கீழிறங்குவதாக இருக்க முடியும்
Or it can be the corresponding evoluti on in Matter of concealed grades leading back to the Spirit.
அல்லது ஜடத்தில் மறைந்துள்ள நிலைகள் பரிணாமம் பெற்று மீண்டும் ஆன்மாவை அடைவதாக இருக்க முடியும்
If there are no gradati ons between these two levels, a transition seems highly improbable.
இவற்றிற்கிடையே பல நிலைகள் இல்லையென்றால், மாற்ற
ஏற்படுவது இயலாதது போல் தெரிகிறது.
It may seem impossible.
அது சாத்தியமற்றதாகவும் தோன்றலாம்
For Mind as we know it is a power of the Ignorance seeking for Truth.
மனம் சத்தியத்தை விழையும் அறியாமையின் சக்தி என்பதாக நாம் அறிந்துள்ளோம்.
It gropes with diffi culty to find it.
அது சத்தியத்தைக் கண்டுகொள்ளத் தடுமாறுகிறது.
It reaches only mental constructions and representations of it in word and idea.
அது வார்த்தைகள் மற்றும் கருத்துகளால் மனத்தின்  கருத்தமைப்பு மற்றும் கருத்துருக்களை மட்டுமே அடைகின்றது.
It reaches only mind formati ons, sense formations.
மனம், உணர்வு இவற்றின் உருவாக்கங்களை மட்டுமே அது எட்டுகிறது.
It is as if bright or shadowy photographs of a distant Reality were all that it could achieve.
இது, தொலைவாக உள்ள சத்தியத்தின் பிரகாசமான புகைப்படத்தை அல்லது நிழற்படத்தை மட்டுமே அது பெறுவது போன்றது.
Supermind, on the contrary, is in actual and natural possession of the Truth.
ஆனால், சத்திய ஜீவியம் உண்மையான இயல்பான சத்தியத்தைப் பெற்றுள்ளது.
Its formati ons are forms of the Reality, not constructi ons, representati ons or indicative figures.
அதன் உருவாக்கம் சத்தியத்தின் உருவத்தால் ஆனது, புனைந்த, பாவித்த அல்லது சுட்டிக்காட்டும் விவரங்கள் அல்ல
No doubt, the evolving Mind in us is hampered.
சந்தேகமில்லாமல், இப்பரிணாமத்திற்குரிய மனம் நமக்குள் தடுக்கப்பட்டுள்ளது.
It is encased in the obscurity of this life and body.
வாழ்வு மற்றும் உடலின் இருண்ட நிலைக்குள் அது உறையிடப்பட்டுள்ளது.
The original Mind principle in the involutionary descent is a thing of greater power.
சிருஷ்டிக்குள் இறங்கும் ஆரம்ப நிலைக்குரிய மனம் எனும் தத்துவம் சிறப்பான சக்தி வாய்ந்தது.
We have not fully reached it.
நாம் அதை முழுமையாக அடையவில்லை
It is able to act with freedom in its own sphere or province.
அது தன் துறை அல்லது எல்லையில் சுதந்திரமாகச் செயல்படக் கூடியது.
It is able to build constructi ons, more minutely inspired formations.
அது அமைப்புகளை எழுப்பக்கூடியது. மேலும் அதிக நுட்பமான ஊக்கம் அளிக்கக்கூடிய உருவாக்கங்களையும் ஏற்படுத்தக் கூடியது.
It can build more subtle and significant embodiments.
அது சூட்சுமமான மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த வடிவங்களை நிர்மாணிக்கக் கூடியது.
In those, the light of Truth is present and palpable.
அவற்றுள் சத்தியம் உறைகிறது, அச்சத்தியத்தை நாம் உணர முடியும்.
But sti ll that too is not likely to be essentially different in its characteristic action.
இருந்தாலும் அதுவும் தன் இயல்பான செயலில்
அடிப்படையாக வேறுபடாது.
For it too is a movement into the Ignorance.
அதுவும் அறியாமைக்குள் செலுத்தும் ஒரு இயக்கமே
 
It is not a sti ll unseparated porti on of the Truth-Consciousness.
அது இன்னும் சத்திய ஜீவியத்திலிருந்து பிரிக்கப்படாத பகுதியாக இல்லை.
There must be somewhere an intermediate power and plane of consciousness.
இடைநிலைக்குரிய சக்தியும் ஜீவியத்தின் நிலையும் எங்காவது இருக்க வேண்டும்.
Perhaps it would be something more than that.
ஒருவேளை அதைவிட அதிகமானதாக இருக்கலாம்
It would be in the descending and ascending scale of Being.
சத்தின் சிருஷ்டி மற்றும் பரிணாமத்திற்கான நிலைகளில் அது இருக்கலாம்.
It might be something with an original creative force.
ஆரம்ப நிலைக்குரிய சிருஷ்டிக்கும் சக்தியாக அது இருக்கலாம்
Through that force the involutionary transition took place.
அந்த சக்தியின் வழியாக சிருஷ்டிக்குள் இறங்கும் மாற்ற நடைபெற்றது.
It was from Mind in the Knowledge to Mind in the Ignorance.
அது மனத்தின் ஞானத்திலிருந்து மனத்தின் அறியாமைக்கு இறங்குவதாகும்.
Through that again the evolutionary reverse transition becomes intelligible and possible.
அதன் வழியாக மீண்டும் பரிணாமத்திற்குத் திரும்பும் மாற்றம் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் நடக்கக் கூடியதாகவும் ஆகிறது.
For the involutionary transition, this intervention is a logical imperati ve.
சிருஷ்டிக்குள் இறங்கும் மாற்றத்திற்கு இந்த இடையீடு ஒரு தர்க்க ரீதியான கட்டாயமாகும்
For the evolutionary transition, it is a practical necessity.
பரிணாமத்தின் மாறுதலுக்கு, அது ஒரு நடைமுறையான அவசியம்.
For in the evolution there are indeed radical transitions.
பரிணாமத்தில் தீவிரமான மாறுதல்கள் உண்டு.
They are from indeterminate Energy to organised Matter.
அவை வரையறுக்க முடியாத சக்தியிலிருந்து முறைப்படுத்தப்பட்ட ஜடம்வரை உள்ளன.
They are from inanimate Matter to Life.
அவை உயிரற்ற ஜடத்திலிருந்து வாழ்வுவரை உள்ளன.
They are from a subconscious to a perceptive, feeling and acting Life.
அவை ஆழ்மனத்திலிருந்து, புரிந்து, உணர்ந்து, செயல்படக்கூடிய வாழ்வுவரை உள்ளன.
They are from primitive animal mentality to conceptive reasoning Mind.
அவை ஆதிகால விலங்கு மனநிலையிலிருந்து பகுத்தறியும் மனம்வரை உள்ளன.
Mind observes and governs Life and observes itself also.
மனம் வாழ்வை கவனித்து ஆள்கிறது மற்றும் தன்னையும் கண்காணிக்கிறது.
It is able to act as an independent entity.
அது ஒரு சுதந்திரமான அமைப்பாக செயல்படக்கூடியது.
It can even seek consciously for self-transcendence.
விழிப்பு பெற்று தன்னைக் கடப்பதையும் அது நாட முடியும்
These leaps may be considerable.
இத்தகைய உயர் நிலைகள் ஏராளம்
But they are to some extent prepared by slow gradations.
ஆனால் அவை நிதானமான அடுக்குகளால் ஓரளவிற்கு உருவாக்கப்படுகின்றன.
That makes them conceivable and feasible with no immense hiatus in between.
இதனால் இந்நிலைகள் பிளவு ஏற்பட்டு பிரிந்து தோன்றாமல் நாம் அவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.
Between supramental Truth-Consciousness and Mind in the Ignorance, there is such an immense hiatus.
சத்திய ஜீவியத்திற்கும் மனத்திற்கும் இடையே இத்தகைய பெரிய பிளவு உள்ளது.
Contd...
தொடரும்…
*******
*******



book | by Dr. Radut