Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

நல்லவனாக இருந்தால், எல்லாம் சரியாக நடக்கும் என எவரும் இதுவரை கூறவில்லை.

Volume 8, page 123

  • நல்ல குணம் வேறு, வலிமை வேறு.
  • எல்லாம் நல்லபடியாக நடக்க இரண்டு வேண்டும்.
    1) பலம், 2) செயலில் தெளிவு.
  • நல்லவர் பட்ட கஷ்டத்தை நினைத்துப் பார்த்தால் புரியும்.
  • நல்லவன் வல்லவனாக இருந்தால் தவறு நடக்காது, சரியாக நடக்க உத்தரவாதமில்லை.
  • காரியம் கெடுவதற்குண்டான காரணங்கள்
    1) செய்யும் திறனற்ற நிலை, 2) பிறர் பொறாமை,
    3) எளியவனை அழிக்கும் ஆசையின் வேகம்.
  • இவை மனிதனுடைய குறைகள்.
  • எந்தக் குறையுமில்லாத சூழலில் வாழ்வுக்குச் சில அடிப்படையான சட்டங்கள் உண்டு. அவை குறையானால் காரியம் பலிக்காது.
  • அன்பர்கள் இந்த இரண்டு குறைகளையும் மீறி அவர்கள் வாழ்வில் நல்லது, பெரிய நல்லதைப் பல முறை கண்டுள்ளார்கள். அதைப் புரிந்து கொள்ள முயலவில்லை.
  • 300 பேர் பெரிய பட்டதாரிகள் வேலை செய்யும் அகில இந்திய ஸ்தாபனத்தில் Junior most மிக இளைஞரானவர் ஓர் ஆண்டில் தலைவருக்குச் சமமாக சட்ட பூர்வமாக உயர்ந்தபொழுது அவர் அதை அறியவில்லை.
  • எந்தத் தவறுமில்லாத பொழுது காரியம் கெட்டு விட்டால் நேரம் வரவில்லை என நாம் கூறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் உடையவர் செயலைக் கணக்கில் எடுத்துக் கொண்டது போல் வாழ்வைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையெனப் பொருள்.
  • வாழ்வு மக்கள் மூலம் பெரும்பாலும் செயல்படும்.
  • மக்களைக் கடந்தும் வாழ்வு செயல்படும்.
  • பெரும் பரிசை முக்கிய எதிரி வீடு தேடி வந்து வாழ்த்திக் கொடுத்தபொழுது பெறுபவர் கொடுப்பவரைவிட 20 வயது இளைஞராக இருந்தும் பெற்றதற்கு அடையாளமான பண்பில்லாததால் அந்த வெகுமதி முழுவதும் உடனே அவர் கைவிட்டுப் போய் தன் செலவில் எதிரியைக் கொண்டாட வேண்டி வந்ததை அறிய முடியாதவர் ஒருவர்.
  • உற்ற நண்பன், வயதிலும், படிப்பிலும், வேலையிலும், ஆன்மீகத்திலும் அளவு கடந்து உயர்ந்தவனை நண்பனாகப் பெற்றும் அவனுக்குத் துரோகம் செய்து, துரோகத்தின் பெருமையைக் கொண்டாடி மனத்துள் செய்த ஆர்ப்பாட்டம் அம்மனத்துள் தெய்வமாக உறையும் மனைவியின் உயிருக்கு அது ஆபத்து எனத் தெரியாதவர், வாழ்வின் சட்டத்தை அறியாதவர். அந்த மனைவி அந்த நண்பர் கொடுத்த அருமையான பரிசு. கொடுப்பவர் கொடுத்தாலும் பெறுபவர் பெற்றாலும் அது பூர்த்தியாக 1) வாழ்வு அனுமதிக்க வேண்டும், 2) Nature இயற்கை இடம் தர வேண்டும். எல்லாம் தானே நல்லவனாக இருப்பதால் மட்டும் நடக்காது.
  • இது உலகமறியாதவர் உற்சாகமாக நம்பும் பெரிய மூடநம்பிக்கை.

*******

ஜீவிய மணி

பாரம் பழைய நினைவு.
புது நினைவு புத்துணர்ச்சி.
நினைவற்ற நிலை அளவற்ற அமிர்த உணர்ச்சி.
குதர்க்கம் திருவுருமாறுவது குதூகலம்.

********



book | by Dr. Radut