Skip to Content

12.Agenda

Agenda

பவித்ரா என்ற பிரெஞ்சு சாதகர் ஆசிரமம் ஆரம்பிக்கு முன் வந்தவர். புத்தபிக்ஷுக்களைத் தேடி திபேத் போகும் வழியில் இங்கு வந்தார். தினமும் ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்துப் பேசுவார். "இங்கேயே தங்கினால் யோகம் பலிக்கும்'' என்று பகவான் கூறியதை ஏற்று, இறுதிவரை இங்கு இருந்தார். Sri Aurobindo or The Adventure of Consciousness என்ற நூலை Satprem வெளியிட்டபொழுது, "நான் இந்நூலிருந்து பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்'' என்றார்.

"1914இல் நான் இங்கு வந்தபொழுது நானறியாத யோக இரகஸ்யங்கள் இந்நூலில் ஏராளமாக உள்ளன''

என அன்னை கூறியுள்ளார்.

Sri Aurobindo எழுதியவை யாருக்கும் விளங்கவில்லை என்பதால், அதன் முக்கியக் கருத்துகளை எளிமையாக எழுதும்படி அன்னை நெடுநாள் கேட்டுக்கொண்டதன் பேரில் சத்பிரேம் எழுதிய நூல் இது. வெளிநாடுகளிலிருந்து ஆசிரமம் வந்த எவரையும், எப்படி உங்களுக்கு ஆசிரமம் தெரியும் என்று கேட்டால், Sri Aurobindo or The Adventure of Consciousnessமூலம் தெரியும் என்பார்கள். இந்தச் செய்தியை அன்னை Agendaவில் கூறியுள்ளார்.

****

Comments

12. Agenda Para 1  -  Line 3 

12. Agenda
 Para 1  -  Line 3    -  பliக்கும்                            -     பலிக்கும்
 Para 1  -  Line 5    -  இந்நூliliருந்து                  -   இந்நூலிலிருந்து
 Para  2 -  Line 1    -  இந்நூliல்                        -    இந்நூலில்   
 Para 3  - Line 3     - வெளிநாடுகளிliருந்து     -   வெளிநாடுகளிலிருந்து
 
 
 



book | by Dr. Radut