Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XIV. The Supermind – As Creator

Page No.126, Para No.10

14. சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா

There is the other side.

அதற்கு மறுபுறம் உண்டு.

Division is real to Mind.

மனம் பகுக்கும்.

It can conceive of it precisely.

பகுதியை மனம் தெளிவாக அறியும்.

It can conceive of a totality.

மனம் முழுமையை அறியும்.

It will be synthetic.

பகுதி சேர்ந்த முழுமையாகும்.

It can think of a boundless finite.

முடிவற்ற பகுதியை மனம் ஏற்கும்.

The divided parts can aggregrate.

பகுதி சேரும்.

Mind can grasp them.

மனம் அதைப் புரிந்துகொள்ளும்.

The divided parts are the same.

பிரிந்த பகுதிகள் ஒன்று போலானவை.

The sameness underlies them.

அவற்றின் அடிப்படை ஒருமை.

Mind can know them.

மனம் அதையறியும்.

But there is an ultimate unity.

முடிவான ஐக்கியம் உண்டு.

It is an absolute infinity.

அது பிரம்மத்தின் அனந்தம்.

To the mind they are abstract notions.

இவை மனத்திற்குப் பிடிபடா.

They are unseizable quantities

மனத்தின் கையில் பிடிபடாதவை இவை.

They are not real to its grasp.

பிடித்தால் பிடியுள் அவை கிடைக்கா.

It cannot take them to be the only reality.

அதை மட்டும் உண்மையென மனம் கொள்ளாது.

This is the very opposite of the One.

ஏகனின் ஒருமைக்கு இவை எதிரானவை.

The One is a unitarian consciousness.

ஏகன் ஐக்கிய ஜீவியம்.

We have an essential multiplicity.

உலகம் அடிப்படையில் பலவானது.

It cannot arrive at Unity.

உலகம் ஒருமையை அறியாது.

If it does, it will abolish itself.

ஒருமையை ஏற்றால் உலகம் தன்னையழிக்கும்.

Really we are confronting the essential unity.

அடிப்படை ஒருமையுடன் நாம் இப்படி மோதுகிறோம்.

It is an indivisible unity.

அது பகுக்கவொண்ணாதது.

The multiplicity has a confession to make.

பல தம் உண்மைகளை வெளியிடுகின்றன.

It says it could have never existed.

தான் பிறந்திருக்க முடியாது எனக் கூறும்.

Yet it was.

இருப்பினும், உலகம் நித்தியம்.

It is this that has found unity.

இதுவே ஒற்றுமையைக் கண்டது.

Thus, it abolioshed itself.

உலகம், இவ்விதம் தன்னை அழித்துக்கொள்கிறது.

Again, a reductio ad absurdum.

மீண்டும், நாம் ஓர் அபத்தத்தைக் காண்கிறோம்.

It is a violent paradox.

இது கடுமையான முரண்பாடு.

It is a repetition.

மீண்டும் நாம் அதைக் கூறுகிறோம்.

It stuns thought to convince it.

மனத்தை திகைக்கவைத்துத் தெளிவுபடுத்தும் முறையிது.

This is an irreconciled antithesis.

இது ஒத்துவரமுடியாத முரண்பாடு.

It is a irreconcilable antithesis.

இணையமுடியாத எதிர்ப்பு இது.

It seeks to convince thought.

இது மனத்தைத் தெளிவுபடுத்த முயல்கிறது.

Page No.127, Para No.11


 

There is a difficulty in the lower term.

சிறிய தத்துவத்தில் சிக்கல் உண்டு.

Mind is a form of our consciousness.

மனம் நம் ஜீவியத்தின் ரூபம்.

And it is a preparatory form.

அது ஆரம்பம்.

When we realise this, the difficulty disappears.

இதை நாம் அறிந்தால், சிரமம் விலகும்.

Mind is an instrument.

மனம் ஒரு கருவி.

It analyses.

அது ஆராயும்.

It synthesises.

அது சேர்த்துப் பிடிக்கும்.

It is not an instrument of essential knowledge.

அடிப்படை ஞானத்தின் கருவியன்று மனம்.

It cuts out something vaguely.

விவரமற்றதை அது வெட்டிப்பிரிக்கிறது.

It does so from the unknown thing in itself.

அறியமுடியாததினின்று அப்படி எடுக்கிறது.

It is a measurement.

அது ஓர் அளவுகோல்.

It is a delimitation.

அது ஒரு வரையறை.

Mind calls this the whole.

மனம் இதை முழுமையெனக்கொள்ளும்.

Again it continues the analysis into its parts.

மீண்டும் மனம் தன் ஆராய்ச்சியைத் தொடரும்.

To it they are separate mental objects.

மனத்திற்கு அவை தனித்தனிப் பொருள்களாகும்.

They are only parts.

அவை பகுதிகள்.

They are mere accidents.

அவை தற்செயலாய் எழுந்தவை.

Mind can see only them definitely.

மனம் அவற்றை மட்டும் காணமுடியும்.

It does so after a fashion.

ஏதோ அது கண்டது அது.

It knows them thus.

மனம் அவற்றை அப்படி அறிகிறது.

There is the assemblage of parts.

பகுதிகள் சேர்ந்த முழுமையுண்டு.

Or there is a totality of properties.

அல்லது குணச்சேர்க்கையுண்டு.

Or they can be accidents.

அவையும் தற்செயலாய் எழுந்தவை.

To the mind these are the wholes.

மனம் அவற்றை முழுமையாக ஏற்கிறது.

This is its definite idea of the whole.

மனம் முழுமையென நிச்சயமாகக் கருதுவது இது.

The whole is a part of something to the mind.

முழுமையென்பது மனத்திற்கு முழுமையின் பகுதி.

The whole can reveal itself in its parts.

முழுமை பகுதியில் தன்னை வெளிப்படுத்தமுடியும்.

Or it can be seen in its properties or accidents.

முழுமை அதன் குணங்களிலோ, தற்செயலாய் எழுந்தவற்றிலோ காணமுடியும்.

Anything else is a vague perception to the mind.

மற்றவை மனத்திற்குத் தெளிவற்றவை.

Mind understands analysis.

மனம் ஆராய்ச்சியை அறியும்.

The object must be a totality in a larger totality.

முழுமை என்பது பெரிய முழுமையின் பகுதி.

It must be so constituted.

அது அப்படி ஏற்பட்டிருக்க வேண்டும்.

Then the mind can know it.

அப்படியெனில் மனம் புரிந்து கொள்ளும்.

Really mind does not know.

உண்மையில் மனம் அறியாது.

It knows only its analysis.

மனம் தன் ஆராய்ச்சியை அறியும்.

It analyses the object or the idea.

தன் எண்ணம் குறிக்கும் பொருளை அது ஆராயும்.

It forms an idea by a synthesis.

ஆராய்ச்சியைச் சேர்த்து ஓர் எண்ணமாக்கும்.

It is a synthesis of seperate parts.

பகுதிகள் சேர்ந்த முழுமையிது.

Or it is a synthesis of properties.

அல்லது குணங்கள் சேர்ந்த முழுமையிது.

It is a mind's characteristic power.

இதுவே மனத்தின் முத்திரை.

It is its sure function.

இது மனத்தின் நிச்சயமான அஸ்திவாரம்.

They cease there.

அத்துடன் அது முடியும்.

We would have a greater knowledge.

நமக்குப் பெரிய ஞானம் உண்டு.

It would be real and profound.

அது உண்மையானது, உயர்வானது.

(There are deep parts of us.

They are inarticulate.

They are of our mentality.

A sentiment arises from these.

It is formless.

It is intense.

It is not knowledge.)

(நம்முள் ஆழ்ந்த பகுதிகள் உண்டு.

அவை சொல்லற்றவை.

அது நம் மனம்.

அதனினின்று ஓர் உணர்ச்சி எழுகிறது.

அதற்கு ரூபமில்லை.

அது தீவிரமானது.

அது ஞானமில்லை.)

To achieve it mind must move away.

 அதையடைய, மனம் தன்னை விட்டகலவேண்டும்

Another consciousness must come in.

 வேறொரு ஜீவியம் எழவேண்டும்.

It will fulfill mind.

அது மனத்தைப் பூர்த்தி செய்யும்.

It does so by rising above it.

மனத்தைக் கடந்து அது இதைச் சாதிக்கும்.

Or it does so by a reversal.

அல்லது தான் தலைகீழே மாறி அதைச் செய்யும்.

Thus its operations are rectified.

அவ்வகை மனம் தன் செயலின் குறையைப் போக்கும்.

It does so by leaping beyond it.

தன்னை வலியக் கடந்து மனம் அதைச் சாதிக்கும்.

That leap can be taken from the summit of Mind.

மனத்தின் சிகரத்திலிருந்து குதிக்கவேண்டும்.

It is a vaulting board.

தாவும் கட்டம் அது.

Mind has a great duty.

மனத்திற்குப் பெரிய கடமையுண்டு.

Our consciousness is obscure.

மனத்தின் ஜீவியம் இருளானது.

It can train it.

மனம் அதற்குப் பயிற்சியளிக்கும்.

Matter is a dark poison.

ஜடம் இருண்ட சிறை.

Consciousness emerged out of it.

ஜீவியம் அதிலிருந்து எழுந்தது.

Mind's instincts are blind.

மனத்தின் உணர்ச்சி குருடானது.

It can be enlightened.

அதைத் தெளிவுபடுத்தலாம்.

The intuitions are random.

அதன் ஞானம் முறையற்றது.

Its perceptions are vague.

அதன் ருசி விவரமற்றது.

It must be helped to ascend.

மனம் எழ நாம் உதவவேண்டும்.

It must be shown the higher light.

உயர்ந்த ஜோதியை நாம் அதற்குக் காட்டவேண்டும்.

Mind is a passage.

மனம் பாதை.

It is not an end.

மனம் முடிவன்று.

Contd.....

தொடரும்...

****

****


 

 

 


 


 

Comments

04.லைப் டிவைன் Page No.126,

04.லைப் டிவைன்
 Page No.126, Para No.10
      Line 16       -  ae       - are
 Page No.127, Para No.11
    Please align the following lines.  
       Another consciousness must come in.       வேறொரு ஜீவியம் எழவேண்டும்.     
    For Line starting with     Thus its operations are rectified.,       please change the following word
         செயlன்     -   செயலின்
    Please change the following
         It can be enlightened.,     -      It can be enlightened.



book | by Dr. Radut