Skip to Content

05. சாவித்ரி

சாவித்ரி

P.61 He gives to his timeless thoughts a form in Time.

காலத்தைக் கடந்த எண்ணத்திற்குக் காலத்தின் ரூபம் தருகிறான்.

. அவனே பிரம்மம், அவனே சிருஷ்டி.

. திறனும், வலுவும் உள்ள அவள் வேலையை அவள் அவனில் செய்கிறாள்.

. தம் போக்கு என்ற மாயத்துள் அவனை அவள் சூழ்ந்துள்ளாள்.

. தன் எண்ணிலடங்கா கனவுகளை அவனது எல்லையில்லாச் சத்தியத்துள் உருவாக்குகிறாள்.

. ஆத்மாவின் தலைவன் அவளை அணுகி நிற்கிறான்.

. க்ஷணத்தில் மறையும் நேரத்துள் மரணமிலா மகவு பிறக்கிறது.

. பொருள் பெறும் உருவம், மனிதன் பெறும் கருத்து.

. அவன் நினைவை அவள் கனவாகத் தொடர்கிறாள்.

. இங்குமங்குமாய் அவனது சாயல் கண்ணில்படும்.

. முடிவில்லாத பிறப்புகள் முடிவில்லாமல் அவனால் முகம் பெறுகின்றன. .

. சிருஷ்டியும், சிருஷ்டிகர்த்தாவும் அவனே.

.அவனே திருஷ்டி, அவனே ரிஷி.

. நடிப்பவனும், நடிப்பும் அவனே.

. மனமும், பொருளும் அவனே.

. கனவும் அவனே, காண்பவனும் அவனே.

. பலவாகும் ஏகன் அவனே, பல லோக லீலையும் அவனே.

. ஞானமாய், அறியாமையாய் அவர்கள் சந்தித்தனர், கலந்தனர்.

. இருளும், ஒளியும் அவர் பார்வை கலப்பது.

. மகிழ்ச்சியும், மனவேதனையும் அவர் மல்யுத்தமும், மார்புறத் தழுவுவதும்.

. நம் செயலும், நினைவும் அவர் உள்ளக்கிடக்கைக்குள் அடக்கம்.

. நம் வாழ்வின் எண்ணத்துள் அவை இரண்டறக் கலந்தன.

. பிரபஞ்சம் பிரபலமான திரைக்குப்பின் உருவம்.

. காண்பது எதுவும் கண்ணுக்குத் தெரிவதன்று.

. அது சத்தியத்தின் கனவுலகக் கருத்து.

. கனவில்லாமல் அக்கருத்தில்லை.

. தோற்றம் பொருட்டாய் எழுந்தது.

. காலத்தைக்கடந்த புகைமண்டலச் சூழல்.

. எதிர்கொள்வதை ஏற்கிறோம், கூறுவதைக் கேட்கிறோம்.

. பகுதியை முழுமையாக ஏற்கிறோம்.

. நம் வாழ்வை அவர் லீலையாக்கினார்.

. கவியாகவும், நடிகனாகவும், திரையாகவுமான அவன்.

. ஆத்மாவாக அவனும், பிரகிருதியாக அவளும் உள்ளனர்.


 

**** 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எண்ணம் - சிந்தனை - திருஷ்டி - ஞானம் - சத்தியஜீவியம் - ஜீவியம் - சத்தியம் - பிரம்மம் என்பது அடுத்தடுத்த உயர்நிலைகள். மனிதன், அறிவுஉணர்வின் அனுபவம் - உடலின் திறன் - ஜடத்தின் ஐக்கிய ஞானம் அறியாமை தன்னை அறிவாகக் காண்பது - எல்லாம் உணர்ந்த ஜடம் என்பது அடுத்தவகையில் சொல்லப்படுவது. அவை சந்திக்கும் இடத்தில் ஆன்மீகப்பரிணாமம் ஆரம்பிக்கிறது.

பரிணாமமும், சிருஷ்டியும் சந்தித்தால் வளராத ஆத்மா வளர

ஆரம்பிக்கும்.


 


 


 


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut