Skip to Content

06. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(பிப்ரவரி 2006 இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

869) சமூகவாழ்வு மலர்வதை உணர்வின் குறிக்கோளாகக் கொண்டு, அதை தம் வாழ்வு வெளிப்படுத்தும்வகையில் வாழ்பவருக்கு அது முடியும்.

சமூகவாழ்வை தம் வாழ்வாக்கியவருக்கு அது முடியும்.

  • ஜீவன் மலரும்.
  • ஜீவனற்றது வாடும்.
  • ஒருவர் சமூகத்தை ஏற்றால், சமூகத்தின் ஜீவனை அவர் தொடுவார்.
  • சமூகத்தின் குறிக்கோளில் சமூகத்தின் ஜீவனுள்ளது.
  • அவருடைய ஜீவன் அவருடைய குறிக்கோளில் உள்ளது.
  • சமூகத்தின் குறிக்கோளை தம் குறிக்கோளாக ஏற்றால் ஜீவன் ஜீவனோடு கலக்கும்.
  • அரசியல் இயக்கங்கள் ஆரம்பக்காலத்தில் நசுக்கப்படும்.
  • புரட்சிக்காரர்கள் இரகஸ்யமாகக் கூடுவார்கள்.
  • ஆரம்பத்தில் புரட்சிக்காரர்களுக்குக் கூட்டம் வாராது.
  • அதனால் வீடுகளில் 30, 40 பேரைச் சந்தித்துப் பேசுவார்கள்.
  • அன்றாடம் சந்திப்பவர்கள் அனைவருக்கும் புரட்சிச்செய்தி அன்று மாலை போய்விடும்.
  • கேட்டது 40 பேரானாலும், அறிந்தது 1000 பேராகும்.
  • அது பரவுவது வாய்மொழியால்.
  • ஜீவனுள்ள இடத்தில் வாய்மொழி பரவும்.
  • புரட்சிக்காரர்கள் பிறகு ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள்.
  • ஆட்சியைப் பிடிக்க ஜீவன் வேண்டும்.
  • மகாத்மா காந்தியைப் பற்றி பேப்பரில் படித்தது நாட்டில் 10,000 பேர்.
  • அதை அன்றே தெரிந்துகொண்டவர்கள் 10 இலட்சம் பேர்.
  • வாய்மொழிக்கு எத்தனை தூரம், எத்தனை பேர் என்ற கணக்கில்லை.
  • தமிழ்நாட்டில் அன்னையை 1980க்குமுன் அறிந்தவரை விரல்விட்டு எண்ணலாம்.
  • அறிந்தவர்கள் அமுதசுரபி மூலம் அறிந்தவர்கள்.
  • அமுதசுரபி வாரப்பத்திரிகையோ இலட்சக்கணக்காக விற்கும் த்திரிகையோயில்லை.
  • 1986இல் "அன்னை தரிசனம்" 1000 பிரதிகள் வெளியிட்டோம்.
  • 1990இல் தமிழ்நாட்டில் அன்னையை அறியாதவரில்லை.
  • அன்னை படமில்லாத வீடு, கடையில்லை.
  • 1992இல் பெட்ரோல் பங்க்குக்கு வருபவர் அன்னை படம் இல்லாவிட்டால் அடுத்த இடம் போய்விடுவார்.
  • 1000 பிரதிகள் அனைத்து தமிழகத்திற்கும் தெரிவிக்கமுடியுமா?
  • தெரிவித்தது வாய்மொழி.

****

870) வாய்மொழி பரவும் நிபந்தனைகள்:

  1. அவ்வளர்ச்சியை உன் உணர்வுப்பெருக்கு நாட வேண்டும்.
  2. அவருடைய வாழ்வும், தொழிலும் அவ்வலை யோசையோடு இணைந்திருக்க வேண்டும்.
  3. சமூக வளர்ச்சியார்வமும், அவன் செய்யும் நடைமுறையில் இணைக்கப்படவேண்டும்.
  4. அவர் தொழில் அல்லது product சரக்கு அந்தச் சமூக வளர்ச்சியையும், அவரது இலட்சிய ஆர்வத்தையும் பிரதிபலிக்க வேண்டும்.

இந்த நான்கு அம்சமும் இசைந்திணைந்த பூரண முழுமையாகவேண்டும்.

வாழ்வும், தொழிலும் சமூக அலையோசையுடன் ஒன்றியிருக்கவேண்டும்.

  • எவனொருவன் சமூக அபிலாஷையைப் பிரதிபலிக்கின்றானோ அவனைப்பற்றி வாய்மொழி பரவும். அவன் முன்னோடி.
  • முன்னோடி சமூகத்தின் பிரதிநிதி.
  • அவன் எழுத்தாளனானால், அவன் எழுத்து சமூகத்தின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும்.
  • அவன் தலைவனானால், அவன் செயல் மக்களின் ஆர்வத்தைச் சாதிக்க முயலும்.
  • அவன் விளையாட்டு வீரனானால், சமூகம் தன் உடலைப் போற்றிப் பேணுவதை அவன் செயலில் காணலாம்.
  • அவை எழுச்சியாகவுமிருக்கும்; எழுச்சிக்கு எதிரானதாகவுமிருக்கும்.
  • நாட்டில் தேசபக்தி வளரும்பொழுது, தேசபக்தனுடைய பாடல் பரவும்.
  • நாட்டில் நாத்திகம் வளரும்பொழுது, நாட்டின் அடிமனத்தில் பக்தி வளரும். எவனொருவன் அப்பக்தியைப் பிரதிநிதியாகப் பிரதிபலிக்கிறானோ அவனைப்பற்றி வாய்மொழி செய்தியைப் பரப்பும்.
  • நாடு என்பது சமூகம்.
  • சமூகம் நல்லது, கெட்டதைப் பிரித்துணர நாளாகும்.
  • ரம்பத்தில் நல்லதோ, கெட்டதோ காரியம் கூடி வரவேண்டும் என நாடு முனையும்.
  • காரியம் பெருமளவில் கைகூடிவந்தபின் - செல்வம் பெருகியபின்
  • நல்லது வேண்டும், கெட்டது வேண்டாம் எனச் சமுதாயம் நினைக்கும்.
  • வளர ஆரம்பிக்கும்பொழுது சமூகம் சாதிப்பவனைத் தலைவனாக ஏற்கும். அவன் புகழ்பாடும். வாய்மொழி அவனுக்கேயுரியது.
  • பிரபலமடைவது திறமையன்று, நாணயமன்று, சிறப்பன்று, நாட்டுக்குத் தேவையானது (evolutionary necessity) பிரபலமடையும்.

வாய்மொழி அதையே கருதும்.

  • நாட்டுக்குத் தேவையானது நிலையான சர்க்கார் எனில் நாடு மக்களாட்சியைக் கருதாது. மக்களாட்சியோ, எதேச்சாதிகாரமோ ஆட்சியிருந்தால் போதும் என எழும் தலைவனை ஏற்கும்.
  • வாய்மொழி என்பது ஜீவனுள்ளது.
  • ஜீவன் நாட்டின் தேவையை, அந்த நேரமுள்ள தேவையை, முழுவதும் பூர்த்தி செய்யும். வாய்மொழி அதன் கருவி.

தொடரும்.....

****

ஜீவிய மணி

எதிரியை ஏற்றவனுக்கே ஏற்றம் உண்டு.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

அளவோடு சாதிக்க அகந்தை ஏற்பட்டது. தன்னை மட்டும் அறியும் திறனுடையது. அளவிறந்து சாதிக்கும் திறன் பெற்றால் அகந்தையைத் தாண்டலாம். அளவிறந்த நல்ல (பிராண) சக்தியாலும், திறனுடைய விசாலப் புத்தியாலும், அகந்தையை வெல்லமுடியும்.

அளவு அளவைக் கடந்தால், அளவுக்கான அகந்தை அழியும்.

******

Comments

06. யோக வாழ்க்கை விளக்கம்

06. யோக வாழ்க்கை விளக்கம் V
870)
In the line after the point 4, please move the following line to a new line
    வாழ்வும், தொழிலும் சமூக அலையோசையுடன் ஒன்றியிருக்கவேண்டும்
For points after the above line
       Point 8        -     பிரதிபலிக்- கிறானோ   -    பிரதிபலிக்கிறானோ
       Point 12      -     Please remove extra blank line



book | by Dr. Radut