Skip to Content

07.அஜெண்டா

Agenda

The diamond light melts the hostile forces.

வைரஒளி தீயசக்திகளை அழிக்கவல்லது.

  • இதுவரை 7 முறை சிருஷ்டி ஏற்பட்டு, முதல் 6 சிருஷ்டி பிரளயத்தால் அழிக்கப்பட்டது.
  • இது ஏழாவது சிருஷ்டி.
  • இறைவன் திருவுள்ளம் இப்பொழுது பூர்த்தியாகும்.
  • முதல் சிருஷ்டியில் உற்பத்தியான 4 கடவுள்கள் இறைவனுக்கு எதிராக மாறினர். அவர்களே தீயசக்திகள் என்பவை.
  • வெண்மையான ஒளி சத்புருஷனுடையது.
  • தங்கநிறம் சத்தியஜீவிய ஒளி.
  • வெண்மை கலந்த நீல ஒளி தெய்வலோகத்திற்குரியது.
  • ஒளி என்பது ஞானம். அது சக்தி பெற்று, உயர்ந்து வைரஒளி ஆகிறது.
  • சிவந்த நிறம் உடலுக்குரியது.
  • ஊதா நிறம் உயிருக்குரியது.
  • மஞ்சள் நிறம் மனத்திற்குரியது.
  • இறைவனுக்கு எதிரான 4 அசுரர்கள்:

 

1

Lord of Death

எமதர்மன்.

2

Lord of Falsehood

பொய்யின் தெய்வம்.

3

Lord of Darkness

இருளின் தேவதை.

4

Lord of Suffering

வேதனையின் தெய்வம்.

  • அன்னையின் குருவான தியோன் என்பவரை அன்னை Lord of Death என்கிறார்.
  • இவை 4 எனில் ஒவ்வொரு தேவதைக்கும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான பிரதிநிதிகள் உலகில் உண்டு. அவை நம்மில் பலரிடம் காணப்படும்.
  • அன்னை கூறும் நால்வர் தலைவர்கள்.
  • ஒளி ஞானம் தரும். அந்த ஞானத்தின் மூலம் சக்திபெற்று இவர்களையோ, இவர்கள் பிரதிநிதிகளையோ அழிக்கலாம்.
  • ஒளி சிறப்புப்பெற்றால் அத்துடன் வலிமையும் வரும்.
  • வைர ஒளி அங்ஙனம் வலிமை பெற்றது.
  • சிலசமயங்களில் எதிரி எத்தனைத் தவறுகள் செய்தாலும், எவ்வளவு வலுவாக நாம் தாக்கினாலும், அவனை முறியடிக்க முடிவதில்லை.
  • அப்படிப்பட்டவன் இதுபோன்ற தேவதையின் பிரதிநிதியாக இருப்பான்.
  • இந்த சக்தி நம்மிடம் இருப்பதுண்டு.
  • அதை நாம் அறிந்து, அன்னைக்குச் சரணடைந்தால், அவர் அதைக் கரைத்துவிடுவார்.
  • அப்படிப்பட்டவர் அன்னைமுன் வந்தபொழுது, அவர் உடல் முழுவதும் கரைந்து, ஒளிமயமாகி, உலகம் முழுவதும் பரவியது. முடிவாக ஒரு கறுப்புப் புள்ளி மிச்சமாக இருந்தது. அதைச் சரணம் செய்வதோ, உயிர்ப்பிப்பதோ அவர் முடிவு.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிரம்மமும், சிருஷ்டியும் ஒன்றே. நம் பார்வையில்தான் மாறுகிறது என்றறியும் நேரம் வாழ்வு பூரணம்பெறுகிறது.

சிருஷ்டியில் பிரம்மத்தைக் கண்டால் வாழ்வு பூரணமாகும்.

****** 

Comments

06.அஜெண்டாPoint 19 starting

06.அஜெண்டா
Point 19 starting with சிலசமயங்களில் எதிரி எத்தனைத் ....
      Please remove the extra blank line



book | by Dr. Radut