Skip to Content

09.லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

The whole concentration will be shifted from below upwards and from without inwards.

மனிதவாழ்வின் மையம் கீழிருந்து மேலேயும், வெளியிலிருந்து உள்ளேயும் மாற்றப்படும்.

  • இது புதுப்பரிணாமம் என்கிறார் பகவான்.
  • இதுவரை பூமியில் நடந்தது உடலின் அடிப்படையில்.
  • மனத்திற்கு உடல் என்பது மூளை. இது ஜடமானது, இதன் சிந்தனையும் ஜடம்.
  • விஞ்ஞானம் அறிவுக்குரியதன்று, மூளைக்குரியது.
  • உடலின் அடிப்படையில் நடந்த பரிணாமம் முடிந்து, இயற்கையின் அடிப்படையில் புதுப் பரிணாமம் எழ வேண்டும். உடல் இயற்கையின் பகுதி. இயற்கை முழுமையானது.
  • பகுதியான பரிணாமம், முழுமையான பரிணாமமாகவேண்டும்.
  • அதற்கு மூளையைவிட்டகன்று, மனத்தை - புத்தியை - அடைய வேண்டும்.
  • தற்சமயம் நம் வாழ்வின் மையம் வெளியில் - புறத்தில் - உள்ளது.
  • அத்துடன் வாழ்வின் மற்றொரு மையம் ஜடமான உடலில் அமைந்துள்ளது.
  • புதிய பரிணாமம் ஏற்பட:
    • வாழ்வுமையம் உடலினின்று உள்ளத்துக்கு வருதல் அவசியம்.
    • அப்பொழுது புறத்தில் உள்ள மையம், அகத்தை வந்தடையும். உலகம் அகத்துள் தெரியும்.
    • மூளையைவிட்டு மனத்தை அடையவேண்டும்.
    • மேல்மனத்தைவிட்டு உள்மனத்தை அடையவேண்டும்.
  • நண்பர் உறவு மேலெழுந்தவாரியானது. குடும்பத்தார் உறவு ஆழ்ந்த உறவு.
    • குடும்பத்து உறவு நட்பு தலைகீழே மாறியதுபோலாகும்.
    • நட்பு உறவானால் இதுவரை தெரியாதது தெரியும்.
    • இத்தனை நாட்கள் கேட்டுப்பெற்றது, இனி கேளாமல் பெற முடியும்.
    • சந்தேகம் நம்பிக்கையாக மாறும்.
    • வேண்டாதது என விலக்கியது அவசியமானதாகும்.
    • இரகஸ்யமான செய்தியைத் தவறாது கூறுவோம்.
    • இதுவரை இருண்டிருந்த உறவு ஒளிபெறும்.
  • இம்மாற்றம் நம் அடிப்படையை உடலிலிருந்து மேலே எடுத்துச் செல்லும்.
  • மேலிருந்து ஒளி, சக்தி பிரவாகமாக உள்ளே வரும்.
  • பரிணாம வேகம் அதிகரிக்கும்.
  • ஜடம் இனி அடிப்படையாக இருக்கமுடியாது.
  • இருளான ஜடம் ஒளிமயமாக மாறும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சமூகத்தின் உண்மையான அங்கமாக ஏராளமான பேர் மாறிவிட்டனர். மொத்தத்தில் அவர்கள் சிறுபான்மையினரே. மீதி பேர் அனைவரும் சமூகக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். மனவளர்ச்சியால் தெளிவு பெற்றவர்கள் ஆயிரத்திலொருவர். பரிணாமவளர்ச்சியை ஏற்றுக்கொண்டவர் இருவர் மட்டுமே.

*****

Comments

08. லைப் டிவைன் - கருத்து   

08. லைப் டிவைன் - கருத்து
    Point starting with   புதிய பரிணாமம் ஏற்பட:
       Please indent next 4 sub points by few spaces
    Point starting with  நண்பர் உறவு மேலெழுந்தவாரியானது
      Please indent next 7 sub points by few spaces



book | by Dr. Radut