Skip to Content

10.ஆன்றவிந்தடங்கிய சான்றோர்

ஆன்றவிந்தடங்கிய சான்றோர்

     Gentleman என்பவன் நியாயமானவன், நாணயஸ்தன், பிறர் மனம் புண்பட நடக்காதவன், சிறியன சிந்தியான்இது ஆங்கிலச் சொல்.  இதற்குரிய நேரான தமிழ்ச் சொல் இல்லைசான்றோர் என்பது பெரிய கருத்து. ஆத்ம விளக்கம் பெற்று, அதனால் பதவி வந்து, ஆண்டு, அவிந்து, அடங்கிய சான்றோர் என்பது இலக்கியச் சொல்.

     இங்கிலாந்தில் சொத்திற்கு வாரிசு இருந்தால் வாரிசுக்குப் போகும்.இல்லாவிட்டால், அதை ஒருவருக்குக் கொடுக்கப் பிரியப்பட்டால் பொதுவாக எவரும் ஏற்கமாட்டார்கள். தகப்பனாரிடமிருந்தும் பிள்ளைகள் அவர்கட்கு உரிமையில்லாத பணத்தை ஏற்கமாட்டார்கள்.

     Vanity Fair என்பது உலகப் பிரசித்திப் பெற்ற நாவல். வீண் பெருமையின் சந்தைஎனப் பொருள்படும்அமீலியா என்ற அழகான பெண், உத்தமிபார்த்தவர் அனைவரும் பிரியப்படுகிறார்கள். அவளுக்கு ஜார்ஜ் மீது பிரியம்ஜார்ஜ் சாதாரண பையன்; நிலையற்றவன்; மனம் சபலமடைந்தவன்அவனை அவன் பெற்றோர் அமீலியாவைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னார்கள்அவன் அழகன். சம்மதித்தான்அவன் மனம் சூது, டிரஸ், பணம், பெண்களிலிருந்ததுடாபின் என்பவன் ஜார்ஜ்வுடன் கேப்டனாக இருப்பவன். அவன் உயர்ந்த மனமுடையவன்; உத்தமன்; சில்லரையாக இருக்கமாட்டான்; நாணயமானவன்; gentleman.  அமீலியாவைப் பார்த்தவுடன் விரும்புகிறான்அவளுக்கு அது தெரியாதுஜார்ஜ்க்கு அமீலியாவைத் திருமணம் செய்வது அவசியமில்லைஅந்த நேரம் அமீலியாவின் தகப்பனார் திவாலானார்ஜார்ஜ் அவளை மறுத்துவிட்டான். அவள் அவனை நினைத்து உருகுகிறாள்அவனுடைய பெற்றோர், பணமில்லை என்பதால் மனம் மாறி, திருமணத்தை எதிர்க்கின்றார்கள்.

     டாபின் பிரியம் உயர்ந்தது; உன்னதமான காதல். அவளை நினைக்காத நேரமில்லைஅவளுக்கு டாபின் தன்னை விரும்புகிறான் எனவும் தெரியாதுதிவாலாகி, வீட்டுப் பொருள்கள் ஏலம் போட்டார்கள்.அமீலியாவின் பியானோவை டாபின் ஏலத்தில் வாங்குகிறான்ஜார்ஜ் வாங்கியதாகச் சொல்லிஅமீலியாவிடம் தருகிறான். அமீலியாவுக்கு ஜார்ஜ் மேலிருந்த அபிப்பிராயம் மேலும் உயர்ந்ததுபெண் ஜார்ஜை விரும்புகிறாள் என அறிந்தபின் டாபின் மனம், "அவள் சந்தோஷப்படுவதே முக்கியம்' எனக் கருதி ஜார்ஜுடன் வாதாடி, அவன் பெற்றோரை எதிர்த்து, தானே முன்வந்து திருமணத்தை நடத்திவைக்கிறான்.

     திருமணமான 15 நாள் தம்பதிகள் உடன் உறைகிறார்கள்டாபின், ஜார்ஜ்க்கு பால்ய நண்பன்இருவரும் எப்பொழுதும் ஒன்றாக இருப்பார்கள்போர் மூள்கிறதுஇருவரும் போர்க்களம் போகிறார்கள்ஜார்ஜ் இறந்து விடுகிறான்அமீலியா கருவுற்றிருக்கிறாள்அமீலியாவைத் திருமணம் செய்ததால் ஜார்ஜ் தகப்பனார் அவனை உயிலிலிருந்து விலக்கிவிடுகிறார். ஜார்ஜ் இறந்தபின் அமீலியாவிடம் பணமில்லைடாபின் அவள் மீது உயிரை வைத்திருக்கிறான்அவளுக்குச் சேவை செய்வதே இலட்சியம்; இரவு-பகலாக டாபினுக்கு அமீலியா நினைவு. நினைவில் நிழலாக அவனுக்கு அவள் அமைகிறாள். அவளுக்குப் பிரசவமாகிறதுபோர் முனையிலிருந்து இங்கிலாந்து திரும்ப வேண்டும்வந்த பிறகு வாழ்க்கை நடத்தப் பணமில்லைடாபின் தன் பணத்தை ஜார்ஜ் பணம்என நடித்து பல வகைகளில் அமீலியா குடும்பத்தை நடத்திவருகிறான். இறந்த கணவனை நினைத்து உருகுகிறாள்திருமணமான 15ஆம் நாள் வேறொருத்தியுடன் ஓடிப்போக ஜார்ஜ் முயன்றது டாபினுக்குத் தெரியும்அவள் மனம் ஜார்ஜில் லயித்திருப்பதைக் கண்டு, டாபின் இந்தியா போய் மேஜராக 12 ஆண்டு வேலை செய்கிறான்மனம் அவளில் மட்டுமிருக்கிறதுஅமீலியா மறுமணம் செய்து கொள்ளப்போவதாக தவறான செய்தி கேட்டு அலறிப்புடைத்துக் கொண்டு இங்கிலாந்து வருகிறான்.  18 ஆண்டுகளாக அவள் நினைவில் டாபின் தூய்மையாக வாழ்கிறான்அவளைப் பார்த்து, தன் மனத்தை அவளிடம் கூறுகிறான்அவள் இசையவில்லை. அத்துடன் தன் இருப்பிடம் வருகிறான்அமீலியாவின் தோழி அவளை, டாபினை மணக்க வேண்டும்; டாபின் உயர்ந்தவன்; ஜார்ஜ் தன்னுடன் ஓடிப்போக விரும்பி எழுதிய சீட்டைக் காட்டி, அவளைச் சம்மதிக்க வைக்கிறாள்அமீலியா டாபினை மணக்கிறாள்.

     "ஜார்ஜ் ஓடிப்போக நினைத்தது எனக்குத் தெரியும்அதை உன்னிடம் கூறி, அதனால் என்னை மணக்கும்படிக் கேட்க என் மனம் இடம் தரவில்லை'' என டாபின் அமீலியாவிடம் கூறுகிறான்.

. 18 ஆண்டுகளாக ஒருத்தியிடம் மனதை ஒப்படைத்தும், அவள் தகுதியற்ற கணவனை நாடியபொழுது அத்திருமணத்தை முடித்துவைத்ததும், அவனை நினைத்து அவள் உருகும்பொழுது, அவனைப் பற்றி குறைகூறி அதன் பலன்பெற மறுப்பதும் சான்றாண்மை Gentlemanliness எனப்படும்.  எவ்வளவு பெரிய இலாபம், ஆதாயம் எனக்கு வரும் என்றாலும் அடுத்தவர் மீது குறைகூறி, அதைப்பெற மனம் இசையாதது உத்தம குணம்.

 

****


 


 


 


 


 


 book | by Dr. Radut