Skip to Content

08.முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

             N. அசோகன்

ENDURANCE - விடாமுயற்சி:

     நாம் ஒரு செயலில் இறங்கிவிட்டோம் என்றால், அது முடியும் வரை, அதில் வெற்றி கிடைக்கும்வரை நிதானம், பொறுமை, விடாமுயற்சி அவசியம்சாதாரணமாக மனிதர்கள் ஆரம்பத்தில் துணிச்சலுடனும், தைரியத்துடனும் எந்தத் தடங்கலையும் எதிர்நோக்கி சமாளிக்கும் மனநிலையுடன் காரியத்தை ஆரம்பிக்கின்றார்கள்அதில் பலர் ஆரம்பக் கட்டத்தில் ஏற்படுகின்ற பெருந்தடங்கல், தோல்வியைக் கண்டு பயந்து, முயற்சியைக் கைவிட்டுவிடுகின்றனர். அப்படிப் பட்டவர்களுக்கு நாம் சொல்லக்கூடியது ஒன்றும் இல்லைமுன்னேறக் கூடிய வாய்ப்பையும், சாதனை படைக்கக்கூடிய வாய்ப்பையும் இழக்கின்றனர். நம் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பெருந்தலைவர்கள் காந்திஜீ, நேருஜீ, சர்தார் படேல் போன்றவர்கள் தாங்கள் முதல் முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஆங்கிலேயர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதைக் கண்டு பயந்து, சுதந்திரப் போராட்டத்தைக் கைவிட்டு இருந்தால், நம் நாடு என்னவாகி இருக்கும்? அவர்கள் இவற்றிற்கெல்லாம் பயப்படாமல் சிறைவாசத்தையும், மிரட்டல்களையும், துன்புறுத்தல்களையும் துணிச்சலாக, நிதானமாக, பொறுமையாக எதிர்கொண்டு, தங்கள் இலக்கிருந்து ஒரு சிறிதும் வழுவாமல் விடாமுயற்சியுடன் போராட்டம் நடத்தியது இந்தியாவிற்குச் சுதந்திரத்தை 1947இல் பெற்றுத் தந்தது. அப்படிப்பட்ட பெருந் தலைவர்கள் தங்களுக்கிழைத்த கொடுமையையும், ஹிம்சையையும் சகித்துக்கொண்டதால்தான் இந்தியாவிற்கு அவர்களால் விடுதலை பெற்றுத்தர முடிந்தது.

     விடாமுயற்சி என்பது எல்லா நிலைக்கும் அவசியம். தேச விடுதலைக்கு மட்டும் அல்லாமல் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும், ஒரு தனி மனிதனுடைய வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமான ஒன்று ஆகும்வாழ்வில் சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்பவர்களுடைய பாதை கரடுமுரடாகத்தான் இருக்கும்அவர்கள் பல இடையூறுகளையும், கஷ்டங்களையும் சந்திக்கத்தான் வேண்டி இருக்கும். ஒரு புது முயற்சிஎன்பது மலை ஏறுவது போலாகும். மலை ஏறும்பொழுது நமக்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகின்றதோ, எவ்வளவு உறுதி தேவைப்படுகின்றதோ, அந்த அளவிற்குச் சாதிக்க விரும்புபவன் தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும்திரு. P.C.Reddy அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைஎன்ற ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பித்தபொழுது பலர் கேலியும், கிண்டலும் செய்தனர்நம்முடைய நாட்டிற்கு அந்தக் காலகட்டத்தில் ஒரு Corporate Hospital என்ற ஒரு concept ஒத்து வாராது. அதில் வெற்றி பெற முடியாதுஎன்று பலவிதமான கருத்துகளை வெளியிட்டனர்இதைக் கண்டெல்லாம் திரு. P.C.Reddy அவர்கள் மனம் தளர்ந்துவிடவில்லைதம் முயற்சியைக் கைவிடவில்லை.  தொடர்ந்து தம் விடாமுயற்சியால் அந்த அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார்இன்று அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் ஒரு ஸ்டார் ஹாஸ்பிடலாக ரூ.590 கோடி turnover உடைய ஒரு சேவை நிறுவனமாகச் செயல்படுகின்றதுஅப்பல்லோ ஹாஸ்பிடலில் சிகிச்சை எடுத்துக்கொள்வதுஎன்பது ஒரு prestige and status symbolஆக இன்று இருக்கின்றது. அவருடைய வெற்றியைத் தொடர்ந்து இன்று பல corporate hospitals இந்தியா முழுவதும் துவங்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமில்லைஎன்று மட்டுமல்லாமல், நம் நாட்டிலுள்ள Speciality Hospitalஐ நாடி வெளிநாட்டவர் வரும் நிலைக்கு உயர்ந்துள்ளன. Indian Express நிறுவனம் emergency நிலவிய காலத்திலும், Bofors ஊழல் விவகாரத்தைப் பற்றித் தங்கள் பத்திரிகையில் முக்கியத்துவம் கொடுத்து, investigate செய்து, விமர்சனம் செய்தபொழுது, அப்பொழுது இருந்த ஆட்சி அவர்களுக்குக் கொடுத்த துன்புறுத்தல்கள் - hostile behaviour of the Government - அவர்களை அந்த investigationஐ கைவிடும்படிச் செய்ய முடியவில்லைதொடர்ந்து அவர்கள் தாங்கள் உண்மை என நம்பியதைப் பல கஷ்டங்கள், கெடுபிடிகளுக்கிடையே வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்இன்றும் அங்கே வேலை செய்பவர்களிடம் கேட்டால், "அந்தக் காலகட்டம் (period) எங்களுக்கு ஒரு பொன்னான காலமாகும்எங்களுடைய சகிப்புத்தன்மைக்கும், விடா முயற்சிக்கும், பத்திரிகையின் சுதந்திரத்திற்கும் ஏற்பட்ட ஒரு பெரும் challenge and ultimate success'' என்று கூறுவார்கள்.

     உலகச் சரித்திரத்தைப் பார்க்கும்பொழுதும், தனி மனிதனுடைய சரித்திரத்தைப் பார்க்கும்பொழுதும், உதாரணமாக காந்திஜீ, நேருஜீ, சர்ச்சில், லெனின் போன்ற தேசியவாதிகளின் வாழ்க்கை வரலாறு ஆகட்டும், அல்லது Edison, Darwin, Galileo போன்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறாகட்டும், அல்லது Martin Luther, Jesus Christ, Buddha, Shankararபோன்ற great religious figures ஆகட்டும், அவரவர்களுடைய வாழ்க்கையில் பல இடையூறுகளையும், கஷ்டங்களையும் சந்தித்து, சமாளித்து, வெற்றி கொண்டபிறகே, அவர்கள் லட்சியத்தை அவர்களால் எட்ட முடிந்தது. அவ்வாறு அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படாமல் இருந்தால், அவர்கள் வெற்றி அடைந்திருப்பார்களா என்பது ஒரு கேள்விக்குறிதான்.

     அன்னையும், பகவான் ஸ்ரீ அரவிந்தரும் தங்களுடைய ஆன்மீகப் பயணத்திலே, பூரண யோக லட்சியத்தை அடைவதற்காக எடுத்த முயற்சிகளிலே, பல கஷ்டங்களையும், சவாலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் எதிர்கொண்டது எல்லாமே physical challenge என்பதைவிட inner challenge and endurance என்று கூறலாம். அன்னை, "உடலின் செல்களை திருவுருமாற்றம் செய்யும்பொழுது, அது மிகுந்த வேதனையைக் கொடுத்ததாகவும், ஆனால் பகவான் ஸ்ரீ அரவிந்தர் தம்மிடம் ஒரு வார்த்தை மட்டும் அல்லாமல், உணர்ச்சிகளிலும், முகபாவத்திலும்கூட அதைக் காட்டியதில்லை' என்று Agendaவில் கூறியிருக்கிறார். பகவான் சூட்சும உலகிற்குச் சென்றபொழுது, தீயசக்திகள் அன்னையிடம், "உங்களால் இனி தனியாக பகவான் விட்டுச் சென்ற பூரண யோகத்தைத் தொடர முடியாதுஉங்களுக்கு அதற்குரிய சக்தியில்லை. நிச்சயமாக உங்களுக்கு வெற்றி கிடைக்காது'' என்று தொடர்ந்து அவரைத் துன்புறுத்தி, அவருடைய இலட்சியத்தைக் கை விட்டுவிடுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்தன. அன்னை இந்தத் தீயசக்திகளின் தாக்குதலைச் சகித்து, சமாளித்து, வெற்றியும் கண்டார்அதன் பலனாக 1956ஆம் ஆண்டு சத்தியஜீவிய ஒளி முதலாவதாக இப்பூவுலகத்தில் இறங்கியது.

     "உலகத்தைத் துன்பத்திலிருந்து விடுவிக்க வந்த அவதாரங்களும் அத்துன்பத்திலிருந்து தப்ப முடியாது'' என்று நாரதர் கூறினாலும், "தன்னுடைய விதியையும், அதன்மூலம் உலகத்தின் துன்பத்தையும் மாற்றும் சக்தி சாவித்திரிக்கு உண்டு'' என்றும் கூறுகிறார்எமன் சாவித்திரியிடம், "உலகம் அழியக்கூடியது. அழியாத உன் மனத்தை அழியும் உலகிற்கு அளிக்காதே. பிரம்மத்தின் பெரிய பாதையை மறந்து, அதன் சுதந்திரத்தை இழந்து, உலகின் சிறுமையிலும், சிறு சந்தோஷத்திலும் உன்னை இழக்காதே. பிரபஞ்சம் சிறியது; மாற்றக்கூடியது அன்று'' என்று கூறுகிறான்ஆனால் சாவித்திரி அதை ஏற்காமல், "உலகை மாற்ற முடியாவிட்டால், சத்தியத்திற்கும், ஞானத்திற்கும் அர்த்தமில்லை'' என்று கூறி, காலனையும் தன் ஒளியால் கரைத்து, வெற்றி பெறுகிறாள். இது, அன்னை பூவுலகில் சத்தியஜீவிய ஒளியைக் கொண்டுவரச் செய்த யோகம். இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது விடாமுயற்சி, நிதானம் என்பது சாதனையாளர்களிடம் மிகவும் அவசியமாக இருக்க வேண்டிய ஒரு பண்பாக அமைகிறது.

தொடரும்...

****.
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எந்தக் கட்டுப்பாடும் அதனளவில் நிறைவு பெறாவிட்டால் பலன் தாராது.

"யோகம்" என்பது உயர்ந்த வாழ்வு. கட்டுப்பாடு அதன் ஆரம்பம்.


 



book | by Dr. Radut