Skip to Content

11.ஒன்று நடந்தால் எல்லாம் நடக்கும்

ஒன்று நடந்தால் எல்லாம் நடக்கும்

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது பழமொழி. இப்பழமொழியும் தலைப்பும் கூறுவது ஒன்றே. எது நடந்தாலும் ஒரே சமயத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் நடக்கும். The Life Divine என்ற நூலில் பகவான், "இயற்கையில் விரயமில்லை'' என எழுதுகிறார்.நாம் ஒரு சமயத்தில் ஒரு காரியம் செய்கிறோம். இயற்கை பல்வேறு காரியங்களை ஒரே சமயத்தில் ஆரம்பிக்கிறது. அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அத்தனைக் காரியங்களும் திரைமறைவில் வளர்கின்றன. ஒரு காரியம் முடிகிறது. ஆரம்பமோ, வளர்ச்சியோ தெரியாத நம் கண்ணுக்கு முடிவு தெரிகிறது. ஒரு காரியம் முடிகிறது எனில் எல்லாக் காரியங்களும் முடியும் நேரம் வந்துவிட்டது. அதனால் ஒன்றன்பின் ஒன்றாய் பல நல்ல, பெரிய காரியங்கள் நம்பமுடியாதபடி நடக்கின்றன. 1956வரை வாழ்வு இடக்காக இருந்தது. வாழ்வு இடக்காக இருந்தாலும், நன்றாக இருந்தாலும் அதன் சட்டங்கள் மாறுவதில்லை. இடக்காக இருந்தபொழுது கெட்ட காரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வெளிப்பட்டன. 1956இல் சத்திய ஜீவியம் சூட்சும உலகை நிரப்பியுள்ளது. ஆனால் அந்த சக்தி திரைமறைவிலிருக்கிறது.ஆத்மாவை அழைத்தால் - அன்னையை அழைத்தால் - மறைவிலுள்ள சக்தி வெளிவருகிறது. வெளிவரும் நேரம் பல காரியங்கள் ஒரே சமயத்தில் பெரியதாகக் கூடிவருவதைக் காண்கிறோம்.அவதிப்பட்டவர் பொறுமையாக அன்னையை அழைத்தால் மிகப் பெரிய ஆர்டர் வரும்பொழுது, மிகப் பெரிய பண உதவிகள் 3இடங்களிலிருந்து ஒரே சமயத்தில் வருவதைக் கண்டார்.

*******


 



book | by Dr. Radut