Skip to Content

03. லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

                                         லைப் டிவைன்

                                               (சென்ற இதழின் தொடர்ச்சி....)                 கர்மயோகி

 

XII. Delight of Existence : The Solution

Page No.109 Para No.15

12. ஆனந்தம் - விளக்கம்

Suffering is a failure of consciousness.

வலி என்பது ஜீவியத்தின் தோல்வி.

It is a failure to meet the shocks of existence

வாழ்வின் மோதல்களைத் தாக்குப் பிடிக்க முடியாத தோல்வியது.

Consequently we shrink and contract.

எனவே நாம் சுருங்கி, அடங்குகிறோம்.

Its root is an inequality.

புறத்திற்கு அகம் சமமில்லாததால் இது வருகிறது.

It is due to self-limitation by egoism.

அகந்தை தனக்கு அளவு ஏற்படுத்துவதால் இது வருகிறது.

It is the inequality of the receptive and possessing force.

பெற்று, ஆளும் திறன் போதவில்லை என்பதால் வருவது இது.

Self-limitation is due to ignorance.

தன்னை அளவுக்குள் உட்படுத்துவது அறியாமை.

It is an ignorance of our true-Self.

நம் ஆத்மாவை அறியாததால் எழும் செயல்.

It is Sachchidananda.

அது சச்சிதானந்தம்.

Suffering can be eliminated.

வலியை விலக்கலாம்.

It is done by substitution.

அதற்கு, வலிக்குப் பதிலாக மாற்று செய்யவேண்டும்.

Jugupsa must be substituted by titiksa.

ஜுகூப்ஸாவை எடுத்துவிட்டு தீதிக்க்ஷாவை வைக்கவேண்டும்.

Jugupsa is shrinking and contracting.

ஜுகூப்ஸா சுருங்கும்.

Titiksa is facing, enduring and conquering.

எதிர்கொண்டு, பொறுத்து, வெல்வது தீதிக்க்ஷா.

It is a conquest of all shocks of existence.

எல்லா எதிர்ப்புகளையும், அதிர்ச்சிகளையும் அது வெல்லும்.

Endurance and conquest give us an equality.

பொறுமையும், வெற்றியும் சமத்துவம் தரும்.

It may be equal indifference to all contacts.

எல்லாத் தீண்டுதல்களையும் அது சமமாகக் கருதும்.

It may be equal gladness in all contacts.

எல்லா ஸ்பர்சங்களையும் அது சந்தோஷமாக ஏற்கும்.

This equality must again be substituted.

இந்தச் சமத்துவத்தையும் மாற்றவேண்டும்.

It must be substituted by Sachchidananda.

இதற்குப் பதிலாகச் சச்சிதானந்தத்தை வைக்கவேண்டும்.

Its consciousness is All-Bliss.

சச்சிதானந்தம் எல்லா ஜீவராசிகளிலும் ஆனந்தம் பெறுவது.

Ego-consciousness is replaced by All-Bliss.

அகந்தை போய் அனைவரும் ஆனந்தமயமாகின்றனர்.

Ego-consciousness enjoys and suffers.

அகந்தை வருத்தத்தையும் சந்தோஷத்தையும் மாறி, மாறி அனுபவிக்கும்.

Sachchidananda consciousness is transcendent.

சச்சிதானந்த ஜீவியம் கடந்தது.

It is transcendent of the universe.

அது பிரபஞ்சத்தைக் கடந்தது.

It is aloof from the universe.

அது பிரபஞ்சத்தினின்று விலகி நிற்பது.

This is distant Bliss.

அது தூரத்து ஆனந்தம்.

Equal indifference leads to this Bliss.

சமத்துவம் பராமுகமாக இருப்பது ஆனந்தம்.

It is the path of the ascetic.

அது துறவிக்குரியது.

Sachchidananda may be both at once.

சச்சிதானந்தம் இவ்விரு நிலைகளையும் உடையது.

It may be transcendent and universal.

அனைத்தையும் அரவணைக்கும் ஆனந்த நிலை அது.

It may be transcendent and universal.

அது கடந்தும், பிரபஞ்சமாகவுமிருக்கும்.

It is a state of all-embracing Bliss.

அது நிகழ்காலத்திற்குரியது.

The path is surrender.

அது சரணாகதிக்குரிய பாதை

Surrender is loss of the ego in the universal.

பிரபஞ்சத்தில் அகந்தையை இழப்பது சரணாகதி.

It can possess equal delight.

அதற்குச் சமத்துவானந்தம் உண்டு.

It is an all-pervading delight.

அவ்வானந்தம் அனைத்தையும் ஊடுருவும்.

It is the path of the Vedic sages.

அது வேத ரிஷிகளுடைய பாதை.

Pleasure touches man.

சந்தோஷம் மனிதனுக்குரியது.

Perverse pain too touches him.

குதர்க்கமான வலியும் அவனைத் தீண்டும்.

One must be neutral to these touches.

இந்தத் தீண்டுதல்கள் ஒருவரைத் தொடக்கூடாது.

These are imperfect touches.

இவை குறையுடையவை.

This is a self-discipline of the soul.

இது ஆத்மாவின் விரதம்.

It is a direct first result of the discipline.

இது விரதத்தின் நேரடியான முதற் பலன்.

It converts us to the equal delight later.

அடுத்த கட்டத்தின் சமத்துவ ஆனந்தம் வரும்.

The triple vibration can be directly transformed.

மூவகை ஸ்பர்சம் நேரடியாக ஆனந்தமாக மாறும்.

It is a transformation to Ananda.

அவற்றை ஆனந்தமாக மாற்றலாம்.

It is possible.

அது முடியும்.

It is not so easy to the human being.

மனிதனுக்கு அது சுலபமன்று.

Page No.109, Para No.16


 

This is Vedantic affirmation.

இது வேதாந்தத்தை உறுதிப்படுத்துவதாகும்.

It is integral.

இது பூரணமானது.

This view arises out of this affirmation.

இந்நோக்கம் இதிலிருந்து எழுகிறது.

Existence is infinite and indivisible.

சத் அனந்தம், அகண்டம்.

It is all-blissful.

இது ஆனந்தமயமானது.

Its self-consciousness is pure.

அதன் சுய-ஜீவியம் தூய்மையானது.

It moves out of its fundamental purity.

அதன் அடிப்படையான தூய்மையைவிட்டு அகல்கிறது.

It moves into varied play of Force.

சக்தியின் லீலைக்குள் அது வருகிறது.

That play of Force is consciousness.

அந்த லீலை ஜீவியம்.

It moves into Prakriti.

அது பிரகிருதியாகிறது.

Movement of Prakriti is the play of Maya.

பிரகிருதியின் இடப்பக்கம் மாயையின் லீலை.

It has a delight of existence.

அது சச்சிதானந்தம்.

First it is self-gathered, absorbed, sub-conscious.

அது ஆழ்ந்து, தன்னுள் மறைந்து சேர்ந்து நிற்கிறது.

It is in the basis of physical universe.

அதுவே ஜடஉலகின் அஸ்திவாரம்.

It emerges into the neutral movement.

சமத்துவ சலனத்தில் அது செயல்படும்.

It is a mass.

அது தொகுப்பு.

This movement is not yet sensation.

இச்சலனம் உணர்ச்சியில்லை.

It further emerges into mind.

அடுத்தாற்போல் அது மனத்தில் எழும்.

Mind and ego create the triple vibration.

மனமும் அகந்தையும் மூவகை ஸ்பர்சத்தை உற்பத்தி செய்யும்.

It is pain, pleasure and indifference.

வலி, சந்தோஷம், பராமுகம் அவை.

It originates from the limitation.

அவை வரையறையால் எழுகின்றன.

It is a limitation of force of consciousness in the form.

ரூபத்தில் ஜீவியசக்தி கட்டுப்படுவதால் அவை வருகின்றன.

It is from the shock of universal forces.

பிரபஞ்ச சக்திகளின் மோதலால் அவை உற்பத்தியாகின்றன.

Ego finds it alien to it.

அகந்தை அவற்றிற்குப் புறம்பானவை.

It is out of harmony with universal forces.

பிரபஞ்ச சக்தியுடன் அது சுமுகமாக இல்லை.

Its own measure and standard are different.

அதன் சட்டங்கள் வேறு.

The final emergence is into Sachchidananda.

முடிவாக அவை சச்சிதானந்தத்தில் வெளிப்படுகின்றன.

It is universal, equal and self-possessed.

அவை பிரபஞ்சத்திற்குரியவை, சமத்துவமானவை, சுய-ஆட்சிக்கு

உட்பட்டவை.

It conquers Nature.

அது இயற்கையை வெல்லும்.

This is the course and movement of the world.

இதுவே உலகின் பாதை, சலனம்.

Contd....

தொடரும்....

*****

*****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

லௌகீக வாழ்விலிருந்து ஆன்மீக வாழ்வுக்குப் போக பண்புகள் படிகளாக அமைகின்றன. எந்நிலைக்குரிய பண்பையும் ஏற்கும் திறன் நமக்குண்டு. பண்பை ஏற்பதால் காலம் சுருங்கும். முன்னேற்றத்தையும் முன்பாக முடிக்கலாம். பரிணாம இலட்சியத்தையும் சுருக்க முடியும்.

பண்பை ஏற்றால் காலம் சுருங்கி முன்னேற்றம் முதலில் வரும்.


ஸ்ரீ அரவிந்த சுடர்

குறி, ஜோஸ்யம், சகுனம் போன்றவை, அன்னை பக்தர்களுக்கு முடிவானவையில்லை. அவை ஓர் உண்மையைக் குறிக்கின்றன என்றாலும் நம்மை அவை கட்டுப்படுத்தாது. அன்னையை அழைத்தவுடன் நிலைமை மாறி,திரான சகுனம், குறி தோன்றுவதும் உண்டு. அவற்றை நம்புபவர்களையே அவை கட்டுப்படுத்தும். அன்னையை அறியாதவர்களுக்கும் அது உண்மை.

சகுனம் மாறி எதிரானது எழும்.

*****


 


 

 

 

 



book | by Dr. Radut