Skip to Content

06."சாவித்ரி"

"சாவித்ரி"

இறைவனும் சாவித்திரியும்

. சாவித்ரி சூரிய புத்திரி.

. சத்தியவான் பூமியின் ஜீவன்.

. உலகை உய்விக்க அவதாரம் எடுத்தவள் சாவித்திரி.

. காயத்திரி மந்திரம் சூரியனை வணங்கும் மந்திரம்.

. சூரியன் என்பது ஜோதி.

. ஜோதி என்பது சத்தியம்.

. காயத்திரி மந்திரத்தை ஆத்மாவிலிருந்து ஜபம் செய்தால் பிரவாகமான ஜோதி ஜீவனில் பரவி ஆட்கொள்ளும்.

. ஆன்மீக ஜோதி ஜடத்தில் பிரதிபலிப்பது சூரிய ஒளி.

. ஸ்ரீ அரவிந்தர் எழுதிய காயத்திரி மந்திரம் ஆன்மீக ஜோதியை உள்ளே எழுப்பும்.

. சத்தியவான் காட்டில் இறந்தபின் காலன் வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போகிறான். சத்தியவான் எமனைத் தொடர்கிறான். சாவித்திரி சத்தியவானைத் தொடர்கிறாள்.

. எமனுடைய வாதங்களை வென்று, அவனை ஜோதிமயமாக்கிக் கரைத்தபின் சாவித்திரி வெற்றி பெறுகிறாள்.

. இறைவன் சாவித்திரியை நோக்கி, "சத்தியவானை ஏற்று சொர்க்கத்திற்குப் போ'' என்கிறார்.

. சாவித்திரி, "நானும், சத்தியவானும் உலகை உய்விக்கப் பிறந்தவர்கள். சொர்க்கத்தை நாங்கள் மட்டும் ஏற்றால் உலகம் இருளிலிருக்கும்.உலகம் நான் பெற்றதைப் பெறவேண்டும்'' என்று இறைவனுடன் பேசுகிறாள்.

. காலனை வென்ற சாவித்திரியிடம் இறைவன் காலன் கூறியதையே வேறு பாணியில் கூறுகிறார். "எனக்கு நீங்கள் ஆசை காட்டுவது வீண்'' என சாவித்திரி இறைவனிடம் கூறும் அளவுக்கு இறைவன்

சாவித்திரியின் எண்ணம் பலிக்காது என வாதாடுகிறார்.

. முடிவாக சாவித்திரி அறியாமல் பேசவில்லை, தெரிந்துதான் பேசுகிறாள் என இறைவன் கண்டபின் இறைவன் அதை ஏற்கிறார்.

. இறைவனுடைய உத்தரவு இல்லாமல் எமனை வென்ற சாவித்திரியும் உலகுக்குச் சேவை செய்ய இயலாது என்பதை இப்பகுதி எடுத்துக்காட்டி, விளக்கி, வலியுறுத்துகிறது.

. சேவை மனிதனுக்குரியதன்று, இறைவனுக்குரியது; இறைவன் உத்தரவின் பேரில் செய்யக்கூடியது. நாமாக விரும்பிச் செய்யும் சேவை சேவையன்று. பரோபகாரம் என நாம் கருதுவது அகந்தையின் வெளிப்பாடு.

*******


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் திறந்து பேசுவது பல நிலைகளில் அமையும்.

. செய்திகளைப் பகிர்ந்து கொள்வது.

. நாமறிந்ததை மற்றவர்க்குச் சொல்வது.

. நம் நோக்கங்களை வெளியிடுவது.

. சூட்சுமமான செய்திகள், எண்ணங்கள், நோக்கங்களைச் சொல்வது.

மனம் திறந்து பேசுவது மனம் மகிழ்ந்து இணைவதாகும்.


 


 



book | by Dr. Radut