Skip to Content

01.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

காலேஜ் நண்பர்கள் கேலி செய்வார்கள்:

  • பல்வேறு ஊர்களிலிருந்து மாணவர்கள் சேர்வதாலும், இளைஞர்கள் என்பதாலும், பண்பு வேறுபாடு எளிமையாக வெளிவரும். மாணவர்கள் ஓரளவுக்கு அதைச் சுட்டிக்காட்டுவார்கள்.
  • ஒரே குழந்தையாகப் பிறந்தால், வளர்ந்தபிறகு மற்றவர்களுடன் கலந்து பழகத் தெரியாது.
  • காலேஜ், ஹாஸ்டலில் இருந்தால், பலத்தரப்பட்ட மாணவர்களுடன் பழகுவதால் நம்முடைய குறைபாடுகள் குறையும் சந்தர்ப்பம் அதிகம்.
  • பெரியவனுடைய நண்பன் ஒரு வாரம் வீட்டில் வந்து தங்கியபொழுது,அவனுக்குப் பார்ட்னரைப் பற்றியும், கம்பனியைப் பற்றியும், குறிப்பாகப் பெரியவனைப் பற்றியும் அதிகமாகத் தெரிகிறது. நண்பன் என்பதால் உரிமையுடன் பேசுகிறான்; பெரியவன் ஏற்கிறான். பெரியவனுக்குத் தேவையான புத்திமதியைக் கூறுகிறான். அதையே தாயார் சொன்னால் பெரியவன் ஏற்கமாட்டான். நண்பன் கூறும்பொழுது யோசனை பிறக்கிறது; ஏற்கிறான்.
  • நண்பன் கூறியது காலேஜில் கேலி செய்ததை நினைவுபடுத்துகிறது.
  • பழைய நண்பன் மரியாதையாகப் பழகவில்லை எனக் கோபப்பட்ட பெரியவன், இந்த நண்பன் கூறுவதை ஏற்பது அருள். இவனுடனும் முன்போல் சண்டை போட்டிருந்தால், அது அருளை விலக்குவதாகும்.
  • இந்த நண்பன் கூறியதை ஏற்ற பெரியவன், பிறகு பழைய நண்பனுடன் கோபப்பட்டது, அருளை முதலில் ஏற்றாலும், பிறகு விலக்குவதாகும்.
  • பெரியவன் ஏற்பதும், விலக்குவதும் நண்பனின் நெருக்கத்தையும், அந்தஸ்தையும் பொருத்தது. அவன் கூறும் உண்மையைப் பொருத்ததில்லை.
  • பெரியவனுக்கு acid test சரியான சோதனைக்குரிய இடங்கள்:
    • சிறியவனைக் கேலிசெய்யாமலிருப்பது.
    • காரியம், நியாயத்தைவிட முக்கியம்என்று நினைக்காமலிருப்பது.
    • திறமைக்கேற்ற அறிவு பெறுவது.
    • சின்னபுத்தியைப் போற்றாதது.
    • பார்ட்னர் தன்னைச் சமமாக நடத்துவதால், தான் நண்பனைச் சமமாக நடத்தவேண்டும் என்று அறிய முடியாமல், நண்பனும் தன்னை உயர்வாக நடத்தவேண்டும் என்ற மனப்பான்மை தவறு என அறிவது.
    • தனக்குத் தெரியும் என்ற மனப்பான்மை.
    • அவசரபுத்தி.
    • முன்கோபம்.
    • பிறர் குறையைச் சுட்டிக்காட்டுவதை ஏற்கும் மனப்பான்மை.
    • சொல்வது சரியாஎனக் கருதவேண்டும், சொல்பவர் யார் என்பது முக்கியமில்லை.
    • கவர்னர் பார்ட்டிக்கு அழைப்பு, டிரஸ்ஸை விட முக்கியம்.
    • பார்ட்னரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை.
    • தம்மைவிடச் சிறியவனைக் கேலிசெய்வது தவறு என்ற உணர்வு.
    • தமக்கு வந்த வாய்ப்புக்குரிய குணத்தைப் பெறும் தன்மை.
    • ஆதாயமனப்பான்மையைவிட முன்வருவது.

எங்கள் ஆபீசில் போன் 3 மணியடித்தால், மெமோ கொடுப்பார்கள்:

  • சட்டம் போட்டால், தண்டனை கொடுத்தால் வேலை நடக்கும்.
  • மனிதன் அவசியத்திற்காக வேலை செய்வான், கடமைக்காக வேலை செய்யமாட்டான்.
  • தானே எடுத்துக்கொண்ட வேலைக்கு - தன் வேலைக்கு self-employment - மனிதன் ஆர்வம் காட்டுவான். சம்பளத்திற்கு வேலை செய்தால் ஆர்வம் வேலையிலிருக்காது; சம்பளத்திலிருக்கும்.
  • ஆர்வமில்லாத மனிதனுக்கு ஆர்வத்தை உற்பத்தி செய்ய முடியாது.
  • அவனிடம் வேலை வாங்கமுடியாது.
  • தண்டனைக்கு மட்டும் வேலை செய்வான்.
  • மறைந்து மறந்த பிரம்மம் அருளால் நினைவுபடுத்தப்படுவது, வாழ்வில் ஆர்வமில்லாதவனைத் தண்டித்து வேலை செய்யச் சொல்வதாகும்.
  • நினைவு படுத்தும் அருளை மனிதன் புறக்கணிக்கிறான்.
  • தண்டனை கொடுக்கும் அதிகாரியை சிப்பந்தி எதிர்க்கிறான்.
  • பெரியவன் ஆபீசில் memoகொடுப்பார்கள்; கணவர் ஆபீசில் அதுவுமில்லை.
  • Memoவும் கொடுக்காத ஆபீசில் ஆபீசர் கணவர் என்பதும், தண்டித்து வேலை வாங்கும் ஆபீசில் பெரியவன் இன்ஜீனியர் என்பதும் குடும்பத்தின் ஆன்மீகநிலையைக் காட்டுகிறது.
  • அதிர்ஷ்டம் பெற memo கொடுக்கமுடியாது.
  • கணவரும், பெரியவனும் அவர்கள் மனநிலையைவிட்டு வந்து, மாறி அதிர்ஷ்டத்தைத் தாங்களே வரவேற்கும்வரை தாயாருக்கு வேலை.
  • அது என்ன வேலை? அதை எப்படிச் செய்வது?
  • அருள் என்ன செய்கிறது?
  • அன்னை என்ன செய்கிறார்?
  • தாயார் என்ன செய்யமுடியும்?
  • கணவரும், பிள்ளைகளும் என்ன செய்யலாம்?என நாம் சிந்திப்பது நம் வீட்டில் அதிர்ஷ்டம் வரப் பயன்படும்.
  • இந்தச் சிந்தனை சிறக்கும்.
  • இந்தச் சிந்தனையையும் சமர்ப்பணம் செய்வது மேல்.
  • சமர்ப்பணத்தால் காரியம் முடிந்தபின் எந்த அஞ்ஞானம், எந்த ஞானமாயிற்று எனத் தெரியும்.

இது பிரார்த்தனைக்கு அசையாது:

  • லைசென்ஸ் கையெழுத்தாகிவிட்டது; காசு கொடுத்தால் லைசென்ஸ் கிடைக்கும் என்பதைக் கணவர் வந்து கூறியபொழுது, பிரார்த்தனை செய்யட்டுமா? 3 நாட்கள் பிரார்த்தனை செய்யட்டுமா எனக் கணவர் கேட்டபொழுது, தாயார் இது பிரார்த்தனைக்கு அசையாது என்கிறார்.
  • எது பிரார்த்தனைக்கு அசையாது? ஏன்?
  • மனிதன் தெய்வம்; தெய்வத்தின் ஓர் அம்சம். அவன் வேலையை அவன் முடித்தபின் காரியம் நகரவில்லை எனில் தெய்வத்திடம் கூறுவது பிரார்த்தனை.
  • மனிதனே தெய்வம்; அவனுக்குக் கூடிவாராத காரியமில்லை. அவனே தெய்வமென்பதால், அவனால் எதையும் செய்யமுடியும். அவனால் முடிந்ததை முடித்தபிறகு, அவனுடைய மற்ற அம்சங்களை அழைப்பது பிரார்த்தனை.
  • அவனால் முடிந்தவற்றை அவனே செய்யவேண்டும்.
  • கணவர் செய்யக்கூடியது ஒன்றுண்டு. அவர் இலஞ்சத்தை ஆமோதிக்கக் கூடாது; நம்பக்கூடாது.
  • அவர் அதைச் செய்யாமல் பிரார்த்தனை செய்தால் பலனிருக்காது.
  • அப்படிப் பலன் என இருந்தால், தன் மனம் மாறவேண்டும் என அவருக்குத் தோன்றும்.
    • பிரார்த்தனை உடனே பலிக்கும்.
    • பிரார்த்தனை பலிக்கவே பலிக்காது.
      இவையிரண்டும் உண்மை..
    • நம்மால் முடிந்தவற்றைச் செய்தபின் பிரார்த்தனை உடனே பலிக்கும்.
    • அது குறையானால் பிரார்த்தனைக்கு விஷயம் அசையாது.
  • அன்னையை ஏற்பவர்கள், ஏற்காதவர்களுடைய மூடநம்பிக்கை உள்ளவரானால், எதையும் பிரார்த்தனையால் சாதிக்கலாம் என நினைப்பார்கள்.
  • பிரார்த்தனை என்றால் என்ன? யார் பிரார்த்திக்கிறார்கள்? எப்படிப் பலிக்கிறது?என அறியாதவர் பேச்சு இது.
  • மூடநம்பிக்கைகளில் பிரதானமானது பிரார்த்தனை பலிக்கும் என்பது.
  • அன்னையை நம்பாதவன் இதைப்பார்த்து சிரிப்பது சரி.
  • கணவர் கணக்கில் சேராதவர்.
  • குணமிருந்தால் பிரார்த்தனை செய்கிறேன் என்பார்; இல்லாவிட்டால் எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்பார்.
    • அன்னையை ஏற்றது மெய்.
    • இலஞ்சமில்லாமல் in-charge ஆபீசர் ஆர்டர் கொடுத்தார்.
    • எப்பொழுதும் என்னைக் கைவிட்டதில்லை.
  • கணவர் 3 நாட்கள் பிரார்த்தனை செய்ய முன்வந்து, மனைவி, "பிரார்த்தனைக்கு லைசென்ஸ் அசையாது" என்ற பின் சற்று விவாதித்து, இந்தப் பிராஜெக்ட்வரை பொய் சொல்லாமலிருக்கக் கணவர் ஏற்றார். பார்ட்னர் அவரைக் கூப்பிட்டு லைசென்ஸ் கிடைத்ததைக் கூறினார்.
  • எவர் அன்னையை ஏற்றாலும், அன்னையை ஏற்ற அளவில் பொய் அவரை விட்டகலும்.
  • பொய்யை அறவே கைவிடாமல் அன்னையை முழுவதும் ஏற்க முடியாது.
  • மனைவி ஸ்தானத்தில் கணவனுக்கு அந்த எல்லாம் கொடுக்கும் நிலையில்லை என்பதால் பிராஜெக்ட்வரை பொய் சொல்லக் கூடாதுஎனக் கேட்டதைக் கணவர் ஏற்றுக்கொண்டார். முடிவு மனதில் உதித்தவுடன் ஆர்டர் - லைசென்ஸ் - கிடைத்து விட்டது. இந்தச் சட்டம் கணவருக்கு, மனைவிக்கில்லை.
  • இதே ஆர்டர் பெற மனைவி பொய்யைக் கைவிட, பிராஜெக்ட்வரை பொய்யில்லாமலிருந்தால் கிடைக்காது. குடும்பம் சம்பந்தப்பட்டவரை பொய் சொல்லாமலிருந்தால் ஆர்டர் கிடைக்கும்.
  • காசு வாங்குபவர் லீவில் போனது; ஆர்டரில் கையெழுத்திட்டது; காசு வாங்காதவர் ஆக வந்தது; ஆர்டர் கிடைத்தது கவனிக்கத்தக்கது. காசு கேட்க ஆர்டரில் கையெழுத்திட்டுக் காட்டியது, காசில்லாமல் ஆர்டர் பெற உதவியது.
  • பார்ட்னர் சத்தியசந்தன்; காசு கொடுப்பவரில்லை. தெய்வம் அவரைக் கைவிட்டதில்லை என்றாலும், அவருடைய சத்தியம் எளிய மனிதனுடையது. அது ஓரளவு பலிக்கும். இவ்வளவு பெரிய பிராஜெக்ட்டில் பலிக்காது. அன்பர் என்பதால் பலித்தது.
  • என்னை எப்பொழுதுமே சத்தியம் கைவிட்டதில்லை என்பவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர்கள். அதற்கு லிமிட் உண்டு. அது அவர்களுடைய வாழ்வின் லிமிட்.
  • அன்னை சத்தியத்திற்கு லிமிட் இல்லை என்றாலும், அது அன்பரின் பர்சனாலிட்டிக்குட்பட்டுச் செயல்படும். லிமிட் நாம் ஏற்படுத்துவது.
  • சத்தியம் பொது; அளவு வாழ்வும், நமது பர்சனாலிட்டியும் ஏற்படுத்துவது.
  • அன்னையை முதன்மையாக ஏற்பவருக்கு அந்த லிமிட் இல்லை.
  • வாழ்வில் சத்தியத்தை ஒரு சிலரே கடைப்பிடிக்க முடியும்.
  • அன்பர்கள் அனைவரும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கலாம்.
  • வாழ்வில் ஒரு சிலருக்கு ஓரளவு உரிய சத்தியம் அன்பரில் அனைவருக்கும் அளவின்றி உரியது.
  • நாம் சத்தியத்தை நோக்கிப்போனால், ஆர்டர் சத்திய சந்தனை நோக்கிப் போகும்.
  • அன்னையை ஏற்றபின் மனத்தளவிலும் பொய்க்கு இடம் தரக்கூடாது.
  • பொய் சொல்லாதவர் இலஞ்சம் தரவேண்டியதில்லை.
  • எப்பொழுதும், எவரையும், எந்த விஷயத்திலும் அன்னை கைவிட்டது இல்லை.

பெண்ணின் சிநேகிதியின் அக்கா பிரச்சினை தானே தீர்ந்தது:

  • நட்பு, பக்திக்குச் சமம்.
  • உயர்ந்த நட்பு தெய்வம் வரம் தருவதுபோல் செயல்படும்.
  • நட்பில் பலன் கலந்திருப்பது வழக்கமில்லை.
  • பெண்பிள்ளைகளைப் போல் கிறுக்காக இல்லை.
  • அடக்கமானவள்; ஆனால் ஆதாயமனப்பான்மையுள்ளவள்.
  • தோழியின் அக்கா வாழ்க்கையில் எல்லாச் சிக்கல்களும் உண்டு.
  • திருமணத்திற்குமுன் வேறொரு பெண் இருக்கிறாள்என்பது முடிவான சிக்கல்.
  • அத்துடன் பணத்தகராறு.
  • எந்தத் தகராறு இருந்தாலும் கணவனுடன் வாழ்ந்தால்போதும் எனப் பெண் நினைப்பது பகுத்தறிவுக்கு ஏற்ற நினைவு. பிறர் எடுத்துச் சொல்ல வேண்டியதை அவளே ஏற்றுக்கொள்வது மனம் அவளுக்குப் பக்குவப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பக்குவப்பட்ட மனத்திற்குப் பரமன் அருள் உண்டு.
  • இந்தக் குடும்பத்தில் அருள் வெள்ளமாகப் பாய்கிறது.
  • இதனுடன் தொடர்புள்ள குடும்பங்கட்கு - நல்லெண்ணத்தால் தொடர்புள்ள - இவ்வருள் கிடைக்கும்.
  • பெண்ணின் அக்கறை, நட்புணர்வு, நல்லுணர்வு அவர்கட்கு அருளைப் பெற்றுத்தருகிறது.
  • பெரியவனுக்கும், சிறியவனுக்கும் அக்கறையில்லை. சுயநலம் அக்கறை கொள்ளாது.
  • சிறியவன் அக்காவும், அம்மாவும் வேட்டுவைப்பதாக நினைக்கிறான்.
  • பெண் சிநேகிதிக்குச் செய்யும் உதவி, சிறியவனுக்கு வேட்டு வைப்பதாகப்படுகிறது.
  • ஒருவர் மற்றவர்க்குச் செய்யும் உதவி சுயநலத்திற்கு ஆபத்து. தனக்கு அதனால் எந்த நஷ்டமில்லாவிட்டாலும், சுயநலம் அச்செயலை, தன்னை அழிக்கும் செயலாகக் கருதும்.
  • சுயநலமான குடும்பம் பெண்ணிற்கு உதவி செய்யும் மனப்பான்மை தோன்றினால், அது சக்திவாய்ந்ததாக இருக்கும்.
  • பெண்ணுக்கு ஆதாயமனப்பான்மை. அதையும்மீறி எழும் உதவி மனப்பான்மை பெரியதுஎன்பதால், நினைத்தமாத்திரம் காரியம் நடக்கிறது.
  • இந்த நிகழ்ச்சியை எல்லோர் கோணங்களிலும் ஆராய்வது, ஏன் இப்பலன் இப்படி வருகிறதுஎனத் தெரியும்.
  • பெண் தானே உதவி செய்ய நினைப்பதால், மாப்பிள்ளை தானே வந்து அடக்கமாகப் பேசி பிரச்சினையைத் தீர்க்கிறார். அதை உடனே வந்து சொல்லவேண்டும்என்பது நன்றி. நன்றியுள்ள இடத்தில் நல்லது உடனே நடக்கும்.

பலனில்லாவிட்டால் ஏன் அன்னையை நாடவேண்டும் என்று பெண் அப்பாவியாகக் கேட்கிறாள்:

  • மாமா வீட்டில் திருடக்கூடாது என்றால் ஏன் மாமா வீட்டிற்குப் போகவேண்டும் எனக் கேட்பதில்லை.
  • ஆதாயமனப்பான்மை திருட்டுமனப்பான்மைக்குச் சமம் என எவரும் நினைப்பதில்லை.
  • இந்த நல்லபெண் ஆதாயமனப்பான்மைக்கு வெட்கப்படவில்லை.
  • ஆதாய மனப்பான்மையிருந்தாலும் அதைத் தெய்வத்திடம் காட்டக் கூடாதுஎன்ற பக்குவமில்லாத பெண்.
  • ஆதாயமனப்பான்மை, அதற்காக வெட்கப்படாத மனம் எப்படி வருகிறது?
    • வறுமை.
    • சிறுமை.
    • பற்றாக்குறை.
    • உயர்ந்த பழக்கங்களைப் பார்க்காதது.
    • இயலாமை.
    • எப்படியாவது பிழைத்தால்போதும்என்ற வாழ்வு.
    • எவ்வளவு கீழ்த்தரமாக நடந்தாலும், அனைவரும் அது போலிருப்பதால், அதை மற்றவர்கள் மட்டமாக நினைக்காதது.
    • பண்பு பிறக்கும்முன் வாழ்ந்த சமுதாயங்களின் வாழ்வு.
  • கல்கத்தா மாணவர்கள் காப்பியடிக்க உரிமை கேட்டு ஸ்டிரைக் செய்தனர்.
  • இலஞ்சம் வாங்க உரிமை கேட்பது போலிருக்கிறது ஆதாய மனப்பான்மை.
  • மாணவர்கள் காப்பியடித்து டிகிரி பெற்றால், வேலை அந்த டிகிரிக்கு வாராது; வந்தால் நிலைக்காது. அடுத்த தலைமுறையில் காப்பியடிப்பது பலனில்லை எனத் தெரியும்.
  • அடுத்த ஜன்மத்தில் ஆதாயமனப்பான்மை பலனில்லை எனப் புரியும்.
  • சைத்தியப்புருஷன் வெளிவருவது புனர்ஜென்மம்.
  • ஒரு முறை சைத்தியப்புருஷன் வெளிவருவது ஓராண்டு ஆயுள் நீடிப்பதாகும்.
  • ஆதாய மனப்பான்மை மட்டம் என்று சைத்தியப்புருஷனுக்குப் புரியும். அது ஒரு ஜென்மப்பலன். அந்த அளவுக்கு ஆயுள் நீளும்.
  • காவல்காரன் வேலையை விட்டு விலகிய பின் ஆட்களையும், வண்டியையும் கொண்டு வந்து பல சாமான்களை எடுத்ததைத் தடுத்தபோது, "4 காசு கிடைக்கும் என்றுதானே வந்தேன். ஏன் தடுக்கிறீர்கள்?" என அப்பாவியாகக் கேட்டான்.
  • கொள்ளையடிப்பவர் எப்படிச் சுகமாக வாழ்கிறார்கள் என்ற கேள்வியைப் பலரும் கேட்கின்றனர். அவர்கள் கொள்ளைக்காரராக வாழ்கிறார்கள். நல்லவர்கள் அவ்வாழ்வை நாடமாட்டார்கள் என அறியாமல் பேசுகிறார்கள்.

கணவர் மனம் மாறியவுடன் ஆபீஸ் சண்டைக்காரன் மன்னிப்புக் கேட்கிறான்:

  • அன்பரில் அருள் செயல்பட ஆரம்பித்தால், பொதுவாக அவருக்கு charm கவர்ச்சி அதிகரிக்கும்.
  • கவர்ச்சியால் அதிகம் பேர் அருகே வருவார்கள்.
  • அப்படி வருபவர் தங்கள் ஜீவியத்திற்கேற்ப பழகுவர்.
  • அன்பர் அதனால் உள்ளே கிளறப்படுவார் (will be disturbed).
  • ஏன் பலர் நெருங்கி வருகிறார்கள் என்பதே தெரியாததால், அவர்களால் ஏன் உள்ளே தொந்தரவு எழுகிறது எனப் புரியாது.
  • புரிந்தால் பொறுத்துக்கொள்ள அதிகப் பொறுமை வேண்டும்.
  • பொறுமையிருந்தால் வருபவர் கூட்டம் பெருகும்.
  • அவர்களை அன்பர்களாகமட்டும் நடத்தினால் பிரச்சினை வாராது.
  • நண்பர்களாக, உறவினர்களாகக் கருதினால் சமாளிக்க முடியாத பிரச்சினைகள் எழும்.
  • கணவர் அன்பரில்லை; அன்பரின் கணவர்.
  • ஆபீசில் சண்டைக்கு வந்தவன் அப்படி வந்தவன் என அவர் அறியவில்லை.
  • பெரியவன் நண்பன் விஷயத்தில் சொல்லியது சரி என்றவர், மனைவி சொல்வதைக் கேட்டுப் பெரியவன் சரியில்லைஎன்றார்.
  • மனம் பொய்யை நாடியபொழுது, மனைவியின் மெய்யை ஏற்று மனம் மாறிற்று.
  • இது சொற்பஅளவில் திருவுருமாற்றம் - அன்னையின் அருட்செயல். மனம் மெய்யை நாடியவுடன் சண்டை சுமுகமாயிற்று.
  • வீட்டுச்சூழலில் கணவரும் இயல்பான பொய்யைவிட்டு இறைவனின் மெய்யை ஏற்க முடிகிறது.
  • அதனால் சண்டை சமாதானமான செய்தி வீட்டிற்குச் - சூழல் உள்ள இடத்திற்கு - வருகிறது.
  • பொய் மெய்யாக மாறுவது வறுமை வளமாக மாறுவதாகும்.
  • பெரியவனுக்கு அதுவும் தெரியவில்லை.
  • நண்பன் எடுத்துச்சொல்லியபின்னும், பெரியவனுக்குத் தான் நண்பனுடன் கோபப்பட்டது தவறு எனப் புரியவில்லை.
  • கணவர் சூழலால் மாறுகிறார், பெரியவன் அதுவும் மாறவில்லை.
  • கம்பனி கண்ணுக்குத் தெரிகிறது; அன்னையும், அருளும் தெரியவில்லை.

கணவர் சிறிது மனம் மாறுவதால் பெண்ணும், சிறியவனும் அம்மாவிடம் விபரம் கேட்கிறார்கள் :

அண்ணனை மடக்க வழி சொல்லுங்கள் :

ரைட்டர் துரோகம் செய்கிறார் - வலிய செய்த உதவி :

  • எந்தக் காரியமும் அத்துடன் முடியாது, தொடரும். அதனால் கணவர் செய்த நல்ல காரியம் இரு பிள்ளைகளில் தொடர்கிறது.
  • காரியம் என்பது infinite அனந்தம்.
  • காலம் உற்பத்தியானபொழுது ஆரம்பித்தது காரியம். காலம் முடியும் பொழுது தான் அது முடியும். அதுவரை எந்தக் காரியமும் வளர்ந்த படியிருக்கும்.

வளராதது காரியமில்லை.

  • அப்படி வளரும்பொழுது, அவ்வளர்ச்சியின் அளவு, தன்மை, குணம் காரியத்தைப்பொருத்தது.
  • கணவர் கேட்கும் மனப்பான்மை சற்று, பிள்ளைகளில் அதிகமாக இருக்கும்.
  • மற்றவை கணவர் மனப்பான்மை போலவேயிருக்கும்.
  • அவர் கேட்டுவிட்டு மறப்பாரானால், பிள்ளைகளும் கேட்டுவிட்டு மறக்கும். ஆனால், மறப்பது சற்றுத் தள்ளிப்போகும்.
  • சிறியவன் அண்ணனை மடக்க வழி சொல்லுங்கள் என்கிறான்.
  • அது கணவர் மனத்திலும், தாயார் மனத்திலும் வேறு ரூபமாக உள்ளது.
  • கணவர் தம் அந்தஸ்து உயர - மற்றவரை மடக்க - நினைக்கிறார். தாயார் குடும்பம் முன்னுக்கு வரவேண்டும் எனக் கருதுவது தமக்குக் கட்டுப்படாத வாழ்வு கட்டுப்படவேண்டும்என நினைக்கிறார்.
  • வலிய உதவி செய்தால் துரோகம் செய்யவேண்டும் என்பது சட்டம்.
  • உதவி பெற்றவர் உதவியைப் போற்றினாலும், உதவி செய்யும் உயர்ந்த நிலையிலுள்ள நண்பரை மன்னிக்க முடிவதில்லை.
  • அடித்தால் திரும்பி அடி விழும் என்பது போல் உதவி துரோகமாக மாறும்.
  • சேவை என்பது மாயை.
  • இறைவனுக்கே சேவை செய்யலாம்.
  • மனிதனுக்குச் சேவை பாம்புக்குப் பால்வார்ப்பது.
  • எவர் வாழ்விலும் உதவி துரோகமாக மாறியதைக் காணலாம்.
  • நாம் பெற்ற உதவிக்குத் துரோகம் செய்யவில்லை என்றால் நாம் அன்னைக்குரியவராவோம்.
  • இதுவரை நமக்குக் கிடைத்த உதவிகளை நினைத்துப் பார்த்து மனத்தைச் சுத்தம் செய்வது யோகம்.

இந்தச் சட்டத்திற்கு மாற்றுண்டா?

ஒருவரை அவர் சட்டத்தினின்று திருப்ப அவர்தவிர மற்றவரால் முடியாது. செய்தால் தவறு வரும். அது ஆபத்தாகவுமிருக்கும்.

  • ஒருவர் என்பது ஒரு ஜீவன்.
  • நாம் ஒருவரை ஏழையாகப்பார்க்கலாம்; அவருக்கு வசதி வரவேண்டும் என விரும்பலாம்; அது தூயநல்லெண்ணம். ஆனால்,அறியாமையின் நல்லெண்ணம். கொச்சைமொழியில் மடத்தனம் எனப்படும்.
  • ஓர் உதாரணத்தைக் கருதுவோம். ஒரு மாணவனுக்கு நல்ல புத்திமதிகள் கூற இராமகிருஷ்ண உபநிஷதம் படிக்கச்சொல்வது, ஒரு புண்ணியம். அதைவிட நல்ல காரியமில்லை. அவன் ஒரு மாணவன் என்றறியாமல் அவனை வரச்சொல்லி, படிக்கச்சொன்னால், அவன் பள்ளிக்கூடம் போகாமல் வந்திருக்கிறான் எனத் தெரியா விட்டால், நாம் செய்யும் அவ்வளவு உயர்ந்த நல்லதும் அர்த்தமற்றதாகப்போவதுடன், ஓராபத்தை விளைவிக்கும். அவன் படிப்புக் கெடுவதால், அவன் பெற்றோர் சண்டைக்கு வருவர். பரீட்சையில் தவறியபொழுது, அவனே மனம் கசந்து, "நீங்கள் என் வாழ்வைக் கெடுத்துவிட்டீர்கள்"என்பான்.
  • ஒருவர் வாழ்வில் அடுத்தவர் புகுந்து நல்லது செய்ய முனைவது தவறா? பாவமா?
  • அவரே அதைப் பிரியப்பட்டு நாடினால், அவர் சூட்சுமவாழ்வு நமக்குப் புரிந்து, இதனால் அவருக்கு நல்லது நடக்கும் என அறியும் திறன் நமக்கிருந்தால், அவர் விரும்பிப் பலமுறை கேட்டால் செய்யலாம்.நாமே அதை வலிய அவருக்குச் செய்வது முதலில் நமக்குத் தீங்கு விளைவிக்கும்; அவருக்குப் பயன் தாராது. இவையிரண்டையும்மீறி நல்லது நடந்தால், அது அவரது ஆத்மாவுக்கு ஏற்படும். அவருடைய கண்ணுக்கோ, நம் கண்ணுக்கோ புலப்படாது.
  • ஒருவன் தன் கர்மத்தைமீறப் பிரியப்பட்டு, அதற்குரிய முயற்சியை எடுக்க உதவியை நாடினால், இந்தச் சட்டத்திற்கு மாற்றுண்டு.
  • நாம் விபரம் சொல்லலாம்; முடிவு அவருடையதாக இருக்கவேண்டும்.
  • வாழ்வில் மனிதன் செல்வது ஓடும் இரயிலில் பிரயாணம் செய்வது போன்றது. அவனை இறங்கச்சொன்னால் உயிர் போகும். இரயில் நிற்கும்பொழுது இறங்கச்சொன்னால், அவன் போகும் காரியம் கெடும்.
  • பிறருக்கு உபதேசம் தவறா? சேவை பாவமா?என்றால் அவர் உன்னுடைய பொறுப்பில் மகன், மாணவன், கட்சிக்காரன்,நோயாளி, உன்னைப் பின்பற்றுபவன் என்றிருந்தால், அந்தப் பொறுப்பின் எல்லைக்குள் செயல்படுவது சரி. வெளியே போவது ஆபத்து.
  • "நான் என் வாழ்நாள் முழுவதும் அதையே பலமுறை செய்திருக்கிறேன். அவர்கள் பெரும்பலன் பெற்றுள்ளனர்"என ஒருவர் கூறினால் அவரை, "உங்களுக்கு வாழ்வில் தொந்தரவு வந்திருக்கிறதா?" என்று கேட்டால், "ஒருவர் தவறாமல் என் உயிரை எடுக்கத் தவறியதில்லை; ஒருவர் என் திருமணத்தைத் தடை செய்தார்; அடுத்தவர் என் வேலைக்கு வேட்டுவைத்தார்; இனியவர் ஒருவர் புரளியை எழுப்பி மானத்தைவாங்கினார்; மற்றொருவர் சூன்யம்வைத்தார்"என்ற பதில் தவறாமல் வரும். ஒரு ஜீவனை அதன் கர்மத்திலிருந்து காப்பாற்றும் கடமை அவரை சிஷ்யனாக ஏற்றுக் கொண்ட குருவுக்கு உண்டு. அதற்கும் அவருடைய பூர்வஜென்ம உத்தரவு வேண்டும்.

நன்றியறிதல் என்றால் என்ன?: 

  • ஒருவர் செய்த நல்லதைப் பெற்றவர் thank you என்பதை நன்றி என அறிகிறோம்.
  • ஓர் ஆபீசில் புதியதாய் வந்தவர் அளவுகடந்த பிரபலமாகி, அளவுகடந்து சம்பாதிக்கும்பொழுது, அளவுகடந்த பொறாமையை எழுப்பி, அவரில்லாத நேரம் அவரைப்பற்றிமட்டும் பேசுவது வழக்கமாகிவிட்டது. அப்படிப் பேசுபவர்களில் ஒருவர் அவரால் தீராத வியாதியினின்று காப்பாற்றப்பட்டவர்; அடுத்தவர் தானிழந்த சொத்தை அவரால் திரும்பப் பெற்றவர்; மற்றொருவர் ஆத்மவிளக்கம் பெற்றதுடன் 20 ஆண்டுகளாக TBயிலிருந்த தம்பிக்கு TB குணமானவர்; மற்ற நால்வர் அவருடைய உற்சாகத்தால் அடுத்த பெரிய பட்டம் பெற்றவர்; மற்றொருவர் தகப்பனார் மரணப் படுக்கையிருக்கும்பொழுது, "இன்னும் இரண்டாண்டிருந்தால் தகப்பனார் எனது வீட்டில் 2 திருமணங்கள் முடிப்பார்"எனக் கேட்டு தகப்பனாருக்கு ஆயுளை நீடித்தவர்; வேறொருவர் தம்பி, வீட்டை விட்டு ஓடிப்போனவனை, அவரால் திரும்பப்பெற்றவர்; அவர்மூலம் மறைமுகமாக நல்லது பெறாதவர் அங்கில்லை. ஒருவர் வருமானம் அவரால் இருமடங்காயிற்று. அவரும் அதைவிட்டுப்போய் பல ஆண்டுகளாய்விட்டன. அவரைப்பற்றிய பேச்சு ஓயவில்லை.அவரைப்பற்றி மட்டுமே விவாதிப்பார்கள்; குறை கூறுவார்கள்; பொறாமைப்படுவார்கள். தகப்பனார் ஆயுள் நீண்டவர் மட்டும் அதில் கலந்து கொள்ளவில்லைஎன வற்புறுத்தியபோது, "என்னால் அதுமட்டும் முடியாது"என்றார்; அது நன்றியறிதல்.
  • பெற்ற பலனுக்கு நேரடியாகத் துரோகம் செய்வது உலகம்.
  • துரோகம் செய்ய முடியாதது நன்றியறிதல்.
  • இவர் மனம் தமக்கு உதவியவரை எதிர்த்துப்பேச மறுக்கிறது.
  • எதிர்த்துப்பேச மறுக்கும் மனம் அவரை நினைத்துப் பூரித்துப்போக வெகுதூரம் செல்லவேண்டும்.
  • தானிழந்த வேலையை மீண்டும் பெற ஒருவர் உணர்ச்சிபூர்வமாக நெகிழ்ந்தார் எனில், வேலையிழந்தவர் உணர்வால் நன்றியை வெளிப்படுத்தினால், அதே பெயருள்ள எவரும் இவருக்கு நன்றியுள்ளவராக இருப்பார்கள்.
  • எந்த மனிதரால், எந்த டாக்டரால், ஒருவர் உயிர்பிழைத்தாரோ,அவர் பெயர் உள்ளவருக்கு மறந்தும் எதிராகச் செயல்படமுடியாத உடல் நன்றியை உணர்வது.
  • எவர் நம்மீது பிரியம்கொண்டாரோ, அவர் சம்பந்தப்பட்ட அத்தனை நிகழ்ச்சிகளும் - நாம் மறந்துபோனாலும் - நமக்கு மீண்டும் வரும் நேரம் மனம் மலரும், உணர்வு நெகிழும், உடல் புல்லரிக்கும். அது நன்றியறிதலுக்குரிய குணம்.
  • எந்தப் பெயர், உத்தியோகம், குணம், உறவுள்ளவர் நம்மிடம் பிரியமாக இருந்தாரோ, அதே சூழ்நிலை மீண்டும் வரும்பொழுது,அது நமக்குக் கூடிவருவது, நாம் அவருக்கு நன்றியுணர்வோடு இருப்பதைக்காட்டும்.
  • மனிதர்கள், செயல்கள், நிகழ்ச்சிகள், தேதி, நம்பர், பெயர், குணம்,நினைவு, ஆதரவு, அன்புபோன்ற அனைத்திற்கும் ஜீவன் உண்டு.மனிதரில்லாவிட்டால், அவர் பிறந்த தேதி, அல்லது அவருடன் நாம் தொடர்புகொண்ட நிகழ்ச்சிகள் நமக்கு இராசியாக நடப்பது பொதுவாக நன்றியின் குறிப்பான குணம்.

மனத்தில் பலனில்லை எனில், வெளியில் பலன் வருகிறது, எல்லைவரை வருவது கடினம், கடப்பது மேலும் கடினம். எரிச்சல் படக்கூடாது என்ற எண்ணம் சமர்ப்பணமாயிற்று:

  • புரியாமல் மனப்பாடம் செய்பவன் அதிக மார்க் வாங்குவதுண்டு.சட்டம் தெரியாத வக்கீல் சாமர்த்தியமாகக் கேஸை ஜெயிப்பதுண்டு.விஷயமில்லாவிட்டாலும், அனுபவம், ஆர்வம், கவனம், சாமர்த்தியம் ஜெயிக்கும்.
  • தாயாருக்கு வரவேண்டிய பலன் உள்ளே. அது வாராதபொழுதும் வெளியில் பெரும்பலன் வருவது அன்னைசக்திக்குரிய விசேஷம்.
  • கம்பவுண்டர் டாக்டரைவிடப் பிரபலமாகி அதிகமாகச் சம்பாதித்தாலும், டாக்டர்பட்டம் பெறாமல் டாக்டராக முடியாது. வக்கீல் குமாஸ்தாவை வக்கீல் ஆலோசனை கேட்கும் அளவுக்குத் திறமையிருந்தாலும் பட்டம் பெறாமல் வக்கீலாக முடியாது.

ஊரில் நாட்டாண்மைக்காரனுக்கு MLA, MP யைவிட செல்வாக்கு இருந்தால், அவரால MLAஆகவோ, MPஆகவோ சில சமயங்களில் முடிவதில்லை. நாட்டாண்மைக்காரனுடைய செல்வாக்கு கிராமத்து அந்தஸ்து. அதற்கு அரசியல் பலன் எதிர்பார்க்க முடியாது.

  • ஒவ்வொரு வகுப்பும் இரண்டு வருஷம் படித்தவன் MA பாஸ் செய்த பொழுது, "இதுதான் நான் முதல்முறை பரீட்சை எழுதிப் பாஸ் செய்தது. என்னை 7ஆம் வகுப்பில் இன்று உட்காரவைத்தாலும்,முதல் மார்க் கெட்டிக்காரப்பையனுக்குப் போகும். எனக்கு வாராது"என்றான். முதல்மார்க் வர புத்தி வேண்டும். எவ்வளவோ பேர் மந்திரியானாலும், முதல் மந்திரி பதவி அனைவருக்குமில்லை. அவை வாழ்வில் எல்லைக்கோடுகள். கடப்பது கடினம்.
  • அன்பருக்கு எல்லாப் பிரார்த்தனைகளும் பலிக்கலாம். அன்னை எழுதியவை அனைத்தும் தெரியலாம். வாழ்வு பலமடங்கு உயர்ந்து இருக்கலாம். "எனக்கு என்னைவிட அன்னை முக்கியம்"என்ற இடத்திற்கு வருவதோ, அதற்குரிய மனமாற்றத்தைப் பெறுவதோ,சமர்ப்பணம் பலித்து, சரணாகதியாவதோ எளிதன்று. ஆத்மா மலர்ந்து அன்னையை நாடினால் அவை கிட்டும்.
  • எரிச்சல்படாமலிருக்கலாம். எரிச்சலை அடக்கிக்கொள்ளலாம். எரிச்சல் சமர்ப்பணமாவது பெரியது.
  • சமர்ப்பணம் எந்த விஷயத்தில் பலித்தாலும், அவர் அன்பரில் சிறந்தவர்.
  • சரணாகதியை ஆத்மா ஆர்வமாக நாடினால், மனத்தில் சமர்ப்பணம் பலிக்கும்.
  • வாழ்வை அன்னை மூலம் அணுகுவது சாதகர் நிலை. வாழ்வை அன்னைமூலம் செவ்வனே நடத்துவது அன்பர் வழி.
  • அன்பராக ஆகலாம்; சாதகராவது கடினம். அன்னையின் குழந்தையாக ஆத்மா ஆர்வம்கொள்வது அகில உலகத்திற்கும் அதிர்ஷ்டம்.
  • எரிச்சல், கேலி சமர்ப்பணமாவதும், நல்லெண்ணம் சமர்ப்பணமாவதும் சமர்ப்பணத்தைப் பொருத்து ஒன்றேயாகும்.
    "எங்கள் குடும்பம்
    " புத்தகம் பக்கம் 57இல் உள்ள 7 விஷயங்கள்:
    • கேஸ் தயாராக வந்தது.
    • போன் உடனே ரிப்பேரானது.
    • டி.வி தகராறு செய்யாதது.
    • சிறியவன் எதையும் தொலைக்காதது.
    • கரண்ட் நிற்காதது.
    • மாத்திரை தேடாதது.
    • நல்ல செய்திகள் வருவது.
  • சரிவர சாப்பாடில்லாதவர்க்குத் தலைவலி, வயிற்றுவலி, கழுத்துக் குடைச்சல், இடறிவிழுவது, மயக்கம் வருவது, முகம் இருண்டு போவது ஆகியவை சகஜம். ஒவ்வொன்றிற்கும் உரிய மருந்துண்டு.அடிப்படையில் நல்ல சாப்பாடில்லாததால், இவை வருகின்றன.அவருக்கு நல்ல சாப்பாடு வேளைக்குத் தவறாமல் கொடுத்தால், ஒரு மாதத்திற்குள் முகம் இருள் நீங்கி தெளியும். மயக்கம் இனி வாராது.தலைவலி, வயிற்றுவலி, கழுத்துக்குடைச்சல் பெரும்பாலும் குறையும். இனி இடறிவிழுவது இல்லை. வியாதி என்றிருந்தால் மருந்து சாப்பிடுவது அவசியம், நல்லது. நல்ல சாப்பாடு, பெரும்பாலும் வியாதியுட்பட, குணப்படுத்தும் என்பதுபோல் அன்னை நினைவு ஆத்மாவுக்கு போஷாக்குத் தரும்.
  • பொருள்கள் வீட்டினுள் வரவேண்டுமானால் அதற்கு energy சக்தி தேவை. காய்கறி வாங்கப் பணம் தேவை என்பதுபோல், energy இல்லாமல் ஒரு பொருள் உள்ளே வரமுடியாது. இருந்த கேஸை சரிவரப் பயன்படுத்தினால் கேஸ் தீரும்பொழுது தயாராக புது சிலிண்டர் வரும். ஆபீஸுக்கு லீவு போடாமல் ஒழுங்காக வேலை செய்தால் சம்பளம் தடையின்றி வரும். சம்பளம் முதலாளி கொடுப்பதன்று, நம் வேலை பெறுவது சம்பளம். அதில் குறையிருந்தாலும், சூழல் மிகையாக இருந்தால் காஸ் நம்மைத் தேடிவரும்.
  • போன் என்பது நம் நாட்டிற்கும், பொதுவாக நம்மைப் போன்றவர் வீட்டிற்கும் உரியதன்று. வேலை அதிக அளவில் நடக்கும் பொழுது, நேரடியாகப் போக நேரம் ஆவதைத் தடுக்க ஏற்பட்டது போன். அந்த நிலை நம் நாட்டில் 1960, 1970வரையில்லை. அதனால்போன் பரவவில்லை. தற்சமயம் போன் பெரும்பாலோர் சௌகரியத்திற்கும், அந்தஸ்திற்கும் வைத்திருக்கிறார்கள். வேலைக்காகப் போன் வைப்பது ஆபீஸ்களில்தான். வேலை இல்லாமல் போனில் பேசினால், நெடுநேரம் பேசினால்,போனுக்குரிய முறையை நாம் புறக்கணிக்கிறோம். புறக்கணித்தால் ரிப்பேராகும். ரிப்பேரானால் சுலபத்தில் மீண்டும் வேலை செய்யாது.
    • டி.வி.க்குரிய முறையும் அதே போன்றது.
    • பையன் தொலைக்கிறான் எனில், அவனுக்குப் பொருள்களை அனுபவிக்கும் உரிமை, திறமையில்லைஎனப் பொருள்.
    • கரண்ட் மிகவும் சூட்சுமமானது. டி.வி., போன், மாத்திரை, பொருள்களைவிட சூட்சுமமானது. மனத்தில் ஒரு சரியில்லாத எண்ணம் தோன்றினால் உடனே கரண்ட் நின்றுவிடும்.
    • நல்லெண்ணம், நல்லவேலை, நல்லதைப்பற்றிப் பேசுவது, நல்ல செய்தியைக் கொண்டுவரும். சாதாரணக்குடும்பங்களில் நல்ல செய்தி எளிதில் வாராது.
    • அன்னைச் சூழல் இக்குறைகளை மீறிச் செயல்படும். குறைகள் இல்லாவிட்டால் சூழல் ஜீவியமாக மாறும்.

தானே கேட்கக்கூடாது எனத் தாயார் முடிவு செய்தபொழுது பெரியவனும், கணவரும், பார்ட்னர் விஷயங்களைப் பேசுவதைத் தவிர்த்தனர்.

காதரீனுடைய அனுபவம்:

  • நாமே கேட்கக்கூடாது. தானே விஷயம் நம்மைத் தேடி வரவேண்டும் என்பது காரியம் முடிவதற்கு மிகச்சிறந்த உபாயம் (silent will).
  • இப்பகுதியில் காரியம் எப்படி முடிந்தது என நாம் ஆராய்ந்தாலும், இங்கு நமது குறிக்கோள் காரியத்தை முடிப்பது அன்று. என்ன நடந்தது, எப்படி நடந்தது (process) என அறிவதாகும்.
  • Process என்பது விஞ்ஞானத்திற்கு அடிப்படை. மரம் எப்படி வளர்கிறது என விஞ்ஞானம் அறிவதால், மரத்தை நாம் நம் இஷ்டப்படி வளர்க்க முடிகிறது. வியாதி என்பது என்ன, எப்படி ஏற்படுகிறதுஎனத் தெரிவதால், வியாதியைக் குணப்படுத்த முடிகிறது.
  • பணத்திற்கு உலகில் முதலிடம், பெரிய இடம் அளிக்கிறோம். பணம் எப்படி உற்பத்தியாகிறது என்று தெரிந்தால், அவர் பணத்தை உற்பத்தி செய்யலாம். அது விஞ்ஞானத்திற்குரியது. அதை process என்கிறோம்.
  • Process என்பதைக் கடந்தது essence மூலம். ஒரு ரிஷிக்கு எலியும்,குழந்தையும் பிரம்மத்தாலானவர் எனத் தெரிந்தால், அவரால் எலியைக் குழந்தையாகவும், குழந்தையை எலியாகவும் மாற்றமுடியும்.
  • நம்மளவில் ஓர் உதாரணம் கூறலாம். வீடு எப்படிக் கட்டலாம் எனத் தெரிந்தால் வீடு கட்டலாம். நகை எப்படிச் செய்வது எனத் தெரிந்தால் நகை செய்யலாம். இங்கு வீடு, நகையிரண்டிற்கும் மூலம் பணம். நம்மிடம் வீடிருந்தால் பணத்தின்மூலம் அதை நகையாக்கலாம்.நகையை விற்று வீடு கட்டலாம்.
  • Processஐ அறிவது விஞ்ஞானம். மூலத்தை அறிவது ஆன்மீகம்.
  • நாம் கேட்காவிட்டால், நாம் வெளியிட மறுக்கும் எண்ணத்தை அடுத்தவர் வெளியிடுவது silent will. ஏன் அதை நமக்குரியவர் வெளியிடவேண்டும்? மூன்றாம் நபர் செய்யக்கூடாதா? ஏன் அது நமக்குச் சாதகமாக இருக்கவேண்டும்? என்பவை எண்ணம், அதன் தன்மை, திறன், போக்கு, நோக்கம் ஆகியவற்றைப்பொருத்தது. நாம் வெளியிடாத எண்ணத்திற்கு வலிமையுண்டு. வலிமையிருப்பதால், அந்த வலிமை அடுத்தவர் எண்ணத்தைத் தன்னை நோக்கி இழுக்கிறது. தன்னை நோக்கி இழுக்கும் வலிமைக்கு ஆளுகை உண்டுஎன்பதால், எதிராளி சொல்வது நமக்குச் சாதகமாகயிருக்கும். தாயார் பெண்என்பதால் அவர் வலிமை பெண் அம்சத்தால் குறைந்து போகும். அதனால் பெரியவனும், கணவரும் பேசுவதை நிறுத்தி விட்டனர்.
  • காதரீன் silent willயை மேற்கொண்டதால் நிலைமை அவருக்குச் சாதகமாக மாறி, அவரே டிஸ்மிஸ் செய்யவேண்டிய பெண், தானே வேலையைவிட்டுப் போகிறேன் என்றார். கம்பனியே அனுப்பினால் ஏராளமான பணம் தரவேண்டும். ஊழியரே, தாமே போக விருப்பப்பட்டால், பல சலுகைகள் இருக்கா. கொஞ்சம் பணம் கொடுத்தால்போதும். மானேஜ்மெண்ட்டில் silent will க்கு ஏராளமான சக்தியுண்டு; பெருங்காரியங்களைச் சாதிக்கும். அமெரிக்காவில் காதரீன் செய்தது ஓர் அதிசயம்.

ஜனாதிபதி வருகை;

கணவர் விளக்கம் கேட்கிறார்;  கணவருக்கும், பெரியவனுக்கும் பெரிய ஆபீசர்கள் கொடுத்த அழைப்பு:

  • ஜனாதிபதி எல்லா ஊர்கட்கும் போகிறார். அதில் என்ன விசேஷம் என்று கேட்கலாம்.
  • ஒரு விசேஷமில்லாமல் ஒரு காரியம் நடக்காது என்பதால், ஆன்மீக சூட்சுமம் உள்ளவர்க்குமட்டும் என்ன விசேஷம்என்று தெரியும்.
  • அவ்வருகை ஊரில் எவருக்கு என்ன அர்த்தம் என்று தெரிய வேண்டும். அனைவருக்கும் ஓர் அர்த்தமில்லாமலில்லை.
  • இதுபோன்ற நிகழ்ச்சிகள் பிற்காலத்தில் தங்கள் சிறப்பை வெளியிடும்.
  • ஒருவர் ஜனாதிபதியாகும் வாய்ப்பிலிருந்து, அனைவரும் சுபீட்சம் பெறும் வாய்ப்புவரை இதற்குண்டு. எவை பலிக்கும் என்பது பின்னால் தெரியும்.
  • "நான் கல்லூரியில் படித்தபொழுது பிரதமர் அங்கு வந்தார். வேறொரு கல்லூரியில் படித்தபொழுது, அதே பிரதமர் அந்த ஊருக்கு வந்தார்.அதன் அர்த்தம் என்ன என்று தெரியவில்லை" என்பவருக்குப் பிற்காலத்தில் பிரதமரை அவர் சார்பாக மற்றவர் சந்தித்தபொழுதும், பிரதமரே அவரைச் சந்தித்தபொழுதும் புரியும்.
  • வாய்ப்புக்கு அகண்ட அர்த்தமுண்டு. அது செயல்படுவது ஆயிரம் விஷயங்களைப் பொருத்தது.
  • பெரிய ஆபீசர்கள் "நீங்கள் பம்பாய் வந்தால், என்னை வந்து பாருங்கள்"என்பது பெரியவனைப்பொருத்தவரை ஜனாதிபதியே அழைத்ததைப் போன்றது.
  • ஜனாதிபதி வருவது நமக்கென்ன அர்த்தம்என்று கணவர் கேட்டதே அவருக்கு ஏதோ புரிகிறதுஎன்று தெரிகிறது.
  • ஊர் அதிர்ஷ்டம் நமக்கு வருகிறதா? நம் அதிர்ஷ்டம் ஊருக்கு வருகிறதா? என்று கணவர் கேட்டது அவருக்கு அன்னை புரிய ஆரம்பிக்கிறது எனத் தெரிகிறது.
  • ஜனாதிபதி வந்தால் அதற்கு ஊருக்குள்ள அதிர்ஷ்டம் முழுவதும் திரண்டு நமக்கு வருகிறதுஎன்றாவது, நம் அதிர்ஷ்டத்தை ஊர் பகிர்ந்து கொள்கிறது என்றாவது அர்த்தம்.
  • நமக்கு ஊர்மீது நல்லெண்ணமிருந்தாலும், ஊருக்கு நம்மீது நல்லெண்ணமிருந்தாலும் இவை நடக்கும்.
  • ஜனாதிபதி வருகை சாதாரணமானது என்றாலும், நாட்டின் அதிகாரம் முழுவதும் திரண்டு இந்த ஊரையும், ஊர்வாசிகளையும் நாடுகிறது என்பது ஆன்மீக அர்த்தம்.
  • ஒருவர் உள்ள ஊருக்கு ஜனாதிபதி வந்தார். அடுத்த மாதம் அவர் வேறு ஓர் ஊருக்குப் போனார். அங்கும் ஜனாதிபதி வந்தார் என்பதை அவர் கவனிக்காவிட்டால், அருளைக் கவனிக்கவில்லை என்று பொருள்.

சிறிய கடைக்காரனை மந்திரி பெரிய மனிதனாக்கினார்; குறுக்கே பேசுவதைத் தடுக்க அன்னை வேறொருவரை அனுப்புகிறார்;

பெரியவனிடம் பேசாதே, அன்னையிடம் கூறு:

  • அலமாரி செய்து விற்றவன் நொந்துபோன பின் நண்பனை உதவி கேட்டான்.
  • நண்பன் "பேசாமல் சமாதிக்குப்போய் தினமும் அரைமணி உட்கார்" என்றான்.
  • நண்பன் அதைச் செய்தான். பணம் வந்தது.
  • வட்டிக்குக் கொடுத்து ஏராளமாகச் சம்பாதித்தான்.
  • அரசியல் கட்சியின் கவனம் இவன் பக்கம் திரும்பியது.
  • கமிட்டி மெம்பரானான்.
  • மந்திரி கவனித்தார்.
  • மந்திரிக்கு அந்தரங்க நண்பனானான்.
  • அனைவரையும் கொட்ட ஆரம்பித்தான்.
  • அத்தனையும் போய்விட்டது.
  • இது நடக்காதவரில்லை.
  • அப்படிப் போனபின் சமாதிக்கு வருமுன் இருந்ததைப்போல் இரு மடங்குக்கும் மேலாக இருந்தது.
  • அதையும் வீராப்பைத் தொடர்ந்து அழிப்பவருண்டு.
  • குறுக்கே பேசுவது நாகரீகமில்லை; தன்னடக்கம் வேண்டும்.
  • அன்பனுக்கு அவ்வடக்கமில்லாவிட்டால், பேசக்கூடாது என அவன் முயன்றால், அவன் பேசுமுன் அன்னை அங்கு வேறொருவரை அனுப்பிப் பேச்சைத் தடுக்கிறார்.
  • பெரியவனால் கம்பனி கெட்டுப்போகும்என்றால் அப்பா, அம்மா கண்டிக்கக்கூடாதா?
  • கண்டித்தால் தன்னால் முடியாத காரியத்தைப் பெரியவன் எப்படிச் செய்வான்?
  • அவனிடம் சொன்னால் அவனை நம்புவதாக அர்த்தம். அவனிடம் சொல்வதற்குப்பதிலாக அன்னையிடம் சொன்னால் அவன் செய்யாததை அன்னை நிறைவேற்றுவார்.
  • எதையும் யாரிடமும் சொல்வதற்குப் பதிலாக, அன்னையிடம் மட்டும் சொல்லக் கற்றுக்கொள்வது நல்லது. "சரி, நான் அன்னையிடம் சொல்கிறேன்"எனவும் எவரிடமும் சொல்லாமலிருப்பது நன்று.
    • மனத்தில் அது ஓர் எண்ணமாக இல்லாமல் செயலாய் இயல்பாய் இருப்பது சமர்ப்பணத்தில் பாதி.
    • சமர்ப்பணம் அதையும்விடப் பெரியது.
    • சமர்ப்பணம், சரணாகதியில் முடியும்.
    • அன்னையிடம் சொல்ல ஆரம்பித்தால், அது சரணாகதிக்குக் கொண்டுபோகும்.

ஆசை, அதிர்ஷ்டம், அருள், பேரருள்:

  • நாம் விரும்புவது ஆசை.
  • ஆசை அபரிமிதமாகப் பூர்த்தியாவது அதிர்ஷ்டம்.
  • நாம் நினைக்காதது, நினைக்கமுடியாதது நடப்பது அருள்.
  • நம்மை அறியாமல் வரும் அருள் நம் முயற்சியின்றி பூர்த்தியாவது பேரருள்.
  • அருளின் கருவி சமர்ப்பணம், பேரருளின் கருவி சரணாகதி.
  • உயிருக்கு ஆசை; உடலுக்குத் தேவை.
  • ஆசை எழுவது தெரியும். தேவை எழுவது தெரியாது.
  • தெரியாமல் எழுவதைத் தெரிந்துகொள்வது powerசக்தி.
  • தெரிந்துகொள்வது விழிப்பு.
  • தேவை எழுவதற்கு முன்னுள்ள விழிப்பு, தெய்வத்தின் விழிப்பு psychic opening.
  • எண்ணம் எழுவது வெளியிட்டபின்தான் தெரியும்.
  • எண்ணம் எழும்பொழுது தெரிவது மனத்தின் விழிப்பு.
  • மனத்தில் எண்ணம் உணர்வாகவும், (physical sensational) உடலுணர்வாகவும் எழும்பொழுது தெரிவது மனத்தில் சைத்தியப் புருஷனின் விழிப்பு. அது நன்றியுணர்வு.
  • உயிரில் எண்ணமும், உணர்வும், உடலுணர்வாக எழும்பொழுது தெரிவது vital psychic சைத்தியப்புருஷன் உயிரில் உதிப்பது. நன்றி உணர்வு செறிந்து உடலையடைவது.
  • உடலில் எண்ணமும், உணர்வும், உடலுணர்வும் அதன் அசைவாக எழுவது தெரிவது physical psychic உடலுக்குரிய சைத்தியப் புருஷன். உடலில் புல்லரிப்பாக எழும் நன்றி.
  • மனம், உயிர், உடல், எண்ணம், உணர்வு, உடலுணர்வு 9 நிலைகளில் ("எங்கள் குடும்பம்" புத்தகம் பக்கம் 407) உற்பத்தியாகின்றன.
  • மனத்தில் உணர்வும், உடலுணர்வும் உற்பத்தியாவதைப்போல், உணர்வில் எண்ணமும், உடலுணர்வும் உற்பத்தியாகும். உடல் எண்ணமும், உணர்வும் உற்பத்தியாகும். இவ்ஒன்பதும் எத்தனை ஆயிரம் வகையாகவும் கலந்துவரும்.
  • தேவை ஆசையாவதும், ஆசை தேவையாவதும் உண்டு.
  • ஆசை அதிர்ஷ்டமாகவோ, அருளாகவோ, பேரருளாகவோ வரும். எப்படி வந்தாலும் அது ஆசையே.
  • பேரருள், அருள், அதிர்ஷ்டம் ஆகியவை ஆசை, தேவையாகவும் வரும்.
  • சிறியது பெரியதாக வரும்.
  • பெரியது சிறியதாக வரும்.
  • அவற்றின் ஆரம்பம், ஆரம்பத்திற்குரிய இடம்.
  • ஆரம்பத்தில் விழிப்பு வளரும் ஆன்மாவின் விழிப்பு.
  • அவ்விழிப்பை மனத்திலோ, உயிரிலோ, உடலோ காணலாம்.
  • விழிப்பு செயல்படுவது சமர்ப்பணம்.
  • விழிப்பு வாழ்வாவது சரணாகதி.
  • ஆசை பேரருளானாலும் ஆசையின் சுவடிருக்கும்.
  • பேரருள் ஆசையானாலும் பேரருளின் சுவடிருக்கும்.
  • எது உள்ளது, எதன் சுவடு தெரிகிறது என்பதே அறிவு.
  • அறிவு முதிர்வது ஞானம்.
  • ஞானம் உறுதிபெறுவது செயல்.
  • செயல் பூரணம்பெறுவது சித்தி.
  • பூரணச்சித்தி பூரணயோக சித்தி.

100 கோடிக்குமேல் சம்பாதித்தவர் தம் உரிமையைக் கேட்காதவர்:

  • உடமையை விட்டுக்கொடுக்க முடியாது. கோர்ட், கேஸ், அடிதடி, சண்டை அவ்வளவும் உடமைக்காக நடப்பவை.
  • உடமையை விட்டுக்கொடுப்பவனாலும், உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது.
  • உரிமையை விட்டுக்கொடுப்பது சரித்திரத்தில்லை, புராணத்தில் காணலாம்.
  • பண்பு உருவாகப் பொறுப்பு உதவும்.
  • பிறர் பொறுப்பை ஏற்றால் நம் பொருளைக் - உடமையை - கொடுக்க வேண்டும்.
  • அது குடும்பத்திற்குரிய பண்பு.
  • குடும்பத்தைக் கடந்து உடமையை விட்டுக்கொடுப்பதுஎன்பது இல்லை.
  • இப்பண்பு எப்படி உருவாகிறது?
  • ஏராளமான தான்யம் - நெல் - பயிராகும்பொழுது, யார் சாப்பிடுகிறார்கள் என்பதைக் கவனிக்க முடிவதில்லை. அதனால் பலரும் நம் பொருளை அனுபவிப்பது நமக்குச் சந்தோஷம் தரும்.
  • நெடுநாளாக அனைவரும் நம் பொருளை அனுபவித்தால், நமக்கு அளவுகடந்த செல்வாக்கு, அதிகாரம் வரும்.
  • அதிகாரம் குறைந்த அளவிருக்கும்பொழுது, அதைச் செலுத்த ஆசை எழும்.
  • உபரியாக அதிகாரம் பொங்கிவழிந்தால், அனைவரும் அடிபணிந்து அவரைச் சூழ்ந்திருப்பர்.
  • அந்த நேரம் நம் செல்வாக்கைப் புறக்கணிப்பவர் - பிரியமானவர் -மீது மனம் பிரியப்படும்.
  • அதிகாரத்தைச் செலுத்துவதைவிட மனம் அதிகாரத்தை இழக்க -உரிமையை வலிய இழக்க - விழையும். அதற்குரிய சந்தர்ப்பம் எளிதில் கிடைக்காது.
  • அந்த அளவுகடந்த செல்வத்தையும், செல்வாக்கையும் பல தலைமுறைகளில் அனுபவித்தவருக்கு உரிமையைக் கேட்க முடியாது.
  • தன் உரிமையைக் கேட்க முடியாதவன் பிறர் உரிமையை அறிபவன்.
  • பிறர் உரிமை என்பது, நம்மைப்போல் பிறரும் பிரம்மம் என்பது.
  • அது பிரம்மஞானம்.
  • பிரம்மஞானம் எந்த ரூபத்திலிருந்தாலும் செல்வத்திற்குக் குறைவு இல்லை.
  • 100 கோடிக்குமேல் சம்பாதிக்க உரிமையைக் கேட்காத குணம் உதவும் என்பது உரிமையுள்ள பெருஞ்செல்வம் மறைந்துள்ளதுஎனப் பொருள்.
  • உரிமை செல்வம்; கேட்காவிட்டால், பெருஞ்செல்வம்.

தொழிலதிபரின் மனை, கண்பார்வை, எனக்கு மதர் வேண்டாம்:

  • தம் கம்பனி மனையில் வண்ணான் துணி காயப்போடுவது வழக்கமானதால், எல்லா வண்ணான்களும் அம்மனையை தங்களுக்கே சொந்தம், அங்கு கம்பனி கட்டிடம் கட்டக்கூடாது என்பதை, அரசுசார்பாக வந்த அதிகாரி ஆதரிப்பதால், முதலாளி நிர்கதியாய் நின்ற நேரம், பிரார்த்தனையால் அதிகாரியின் ஸ்தாபனச் சேர்மன் சாதகமாக ஆர்டர் போட்டு மனை காப்பாற்றப்பட்டது.
  • கண்ணின் உள்ளே இரத்தக்குழாய் வெடித்துப் பார்வை குறையும் பொழுது, பத்ரிநாத், "இது உங்களுக்கு அடுத்த கண்ணில் பல ஆண்டுகட்கு முன் வந்தபொழுது டெல்லிக்குப்போய் சிகிச்சை செய்து கொண்டீர்கள். இப்பொழுது அந்த மெஷின் என்னிடமே இருக்கிறது. ஆனால், இரண்டாம் முறை இரத்தம் வருவதாலும், வெடிப்பு கண்ணின் மையத்திற்கு அருகேயிருப்பதாலும், சிகிச்சை பலன் தாராது; தொந்தரவு தரும்"என்றபின் பிரார்த்தனை கண் பார்வையை மீட்டது.
  • அன்னையை அறிந்தபிறகு 3 ஆண்டுகளில் இவர் தொழில் 5 மடங்கு பெருகியது. 17 வருடங்களாகக் கையிலிருந்த வலி மறைந்தது.
  • எத்தனை முறை தெய்வம் செயல்படுவதைக் கண்டாலும், பலனாக அனுபவித்தாலும், நம்பிக்கையில்லாத மனத்தில் நம்பிக்கை பிறக்காது.
  • மனிதனுக்கு முக்கியமானது,
    • தான் மாறக்கூடாது.
    • தம்மை எவரும் மாறும்படிக் கூறக்கூடாது.
    • தாம் மாறும் சந்தர்ப்பம் வரக்கூடாது.
    • மாறுவதானால் தாமே விரும்பி மாறவேண்டும்.
    • தம்முடைய நிலையில் வரும் முன்னேற்றமே முன்னேற்றம்.
    • தன் குறைகளை நிறைவாகப் பாராட்டுபவனே மனிதன், நண்பன், நம்பிக்கைக்குரியவன்; மற்றவர்கள் அன்னியர், எதிரி, தீய சக்திகள், அழிக்கப்பட வேண்டியவர்கள்.
    • தம் இஷ்டப்படி நடப்பது சந்தோஷம்; அதுவே நியாயம், தர்மம், நேர்மை, ஒழுங்கு, உயர்வு, கட்டுப்பாடு.
    • மனிதன் மாறவேண்டும் என்பது கொடுமை, மன்னிக்க முடியாத செயல்.
    • அதே மாற்றம் தனக்கு ஆதாயம்என அவன் நினைத்துவிட்டால் அம்மாற்றத்தை அவனைப்போல் ஆர்வமாக எவரும் நாட மாட்டார்கள்.

இக்குடும்பத்தை இந்த நோக்கோடு கவனித்தால், அனைவரும் இந்த விதிக்கு விலக்கில்லாமல் செயல்படுவதைக் காணலாம்.

அடக்கம், பண்பு, எல்லாம் சத்தியத்தில் அடங்கும்;

நாம் சொல்லும் மெய் எல்லாம் பொய்;

எஸ்டேட் வாங்கியது, விற்றது;

பணத்தைவிட மனைவியின் அபிப்பிராயம் முக்கியம்:

  • த்தின் புறஉருவம் சத்தியம்.
  • சத்தியம் எல்லாச் செயல்களிலும் ஓரளவு வெளிப்படும். அவற்றுள் அடக்கம், பண்பு ஆகியவை அடக்கம்.
  • நமக்கு எதைச் சொல்லக்கூடாது, எதைச் சொல்லவேண்டும் என்ற பயிற்சியுண்டு. அது பொய், மெய்என்ற பாகுபாட்டில் ஏற்பட்டதன்று; அசௌகரியம், சௌகரியம் என்று பிரிக்கப்பட்டது. நமக்கு சௌகரியமானது பொய்.
  • "என் மனைவி என்னைப் பணக்காரன்" எனக் கூறவேண்டும் என்பது இலட்சியம். "நான் பணக்காரனாகவேண்டும்" என்பது கூட முக்கியம் இல்லை.
  • மனிதன் பணத்தையோ, மனைவியையோ நாடவில்லை; தன்னையே நாடுகிறான்.
  • இக்கதையில் கணவர் அதை மிகத் தெளிவுபடுத்துகிறார். கவனமாகப்பார்த்தால், 3 பிள்ளைகளும் அப்படியேயிருக்கிறார்கள்.
  • ஒருவர் வீட்டில் மெய் சொல்வது மற்றவர்களைப் பாதிக்கும் எனில் அனைவரும் அவரைச் சின்னாபின்னாப்படுத்திவிடுவார்கள்.
  • எஸ்டேட் காலி எஸ்டேட்டாக இருக்கலாம். "எஸ்டேட் முதலாளி" என்பது மனம் நிறைந்த சொல்.
  • அந்தச் சொல் மனைவிக்கு இனிக்கும் என்று எதிர்பார்த்தார்.
  • மனைவி படிப்பறிவில்லாதவள் என்பதால், எஸ்டேட் விபரம் புரியாது.
  • எஸ்டேட்டில் செலவுக்குள்ள பணத்தை அவளிடம் கொடுத்து விட்டால், அவள் மனம் நிறையும்எனக் கற்பனை செய்தார்.
  • கற்பனை பல ஆண்டுகள் பலித்தது; கடைசிவரைப் பலிக்கவில்லை.
  • விவரம் தெரிந்தவுடன் மனைவி வெறும் பெண்ணாகப் பேசினாள்.
  • நாம் சொல்லும் பொய்க்கு ஆயுள் உண்டு.
  • ஆயுள் முடிந்தபின் பொய்யை பொய் என உலகம் அறியும்.
  • பணம் முக்கியமா, மனைவி முக்கியமா என்பது பிரச்சினையில்லை.
  • இரண்டையும் விட சத்தியம் முக்கியம்.
  • இந்த வீட்டில் எவருக்கும் சத்தியம் தேவைப்படவில்லை.

மெய் காப்பாற்றும், பொய் மாட்டிவிடும் -

தம்பியைத் துரத்துபவரிடம் காட்டிக்கொடுப்பாயா?

இன்டர்வியூவில் சர்ட்டிபிகேட் பொய் எனக் கூறியது;

கணவருக்கு மாமனார்மீது கோபம் - என்னைக் கிளறுகிறார் -

பொறுத்துக்கொண்டேன்;

அப்பா பார்ட்னர் விஷயத்துடன் வந்தார் - பிரச்சினை வாய்ப்பானது:

  • ஒரு நேரம் என்று வந்துவிட்டால் மெய்யை நினைத்தால் பயம் எழும்.பொய் சுலபத்தில் காப்பாற்றும் எனத் தோன்றும். அது உண்மை இல்லை. மெய் மட்டுமே காப்பாற்றும். பொய் நிச்சயமாகச் சதிசெய்யும். தம்பியைக் கோபமாகத் துரத்துபவரிடம் மெய் சொல்கிறேன் எனக் காட்டிக்கொடுப்பாயா? பொய் சொன்னால், நம்பாமல் அவனைப் பிடித்துவிடுவார்கள். மெய்யை மனதில் ஏற்று, சொல்லமுடியாமல் தவித்தால், விஷயம் மாறும், தம்பியைக் காப்பாற்றலாம். இங்கும் தம்பியைக் காப்பாற்ற மெய்யை நாடுவதற்குப்பதிலாக, மெய்யைச் சத்தியம் என நம்பினால் பூரண ஆதரவுண்டு. அன்னை சத்தியம். அவரை மட்டும் அன்போடு நினைப்பது, நிகழ்ச்சியை நினைவிலிருந்து அகற்றும். ஆபத்து வந்து போகாது. ஆபத்து அணுகாது.
  • தன்சார்பில் பெரியப்பா தாம் apprenticeஆக வேலை செய்ததாக வாங்கிவந்த சர்டிபிகேட் பொய் என மாணவன் கூறிய பின்னும் அவனுக்கு B.E.இல் இடம் கொடுத்தார்கள். பையனின் மெய் அவனைக் காப்பாற்றியது.
  • கணவர் விவரம் தெரியாமல் - தவறான அபிப்பிராயத்தால் - மாமனார் தமக்கு மரியாதை தரவில்லை என நினைத்துக்கொண்டு, கோபத்தை மனைவிமீது காட்டுகிறார். மனைவிக்கு உண்மை தெரியும். பெண் என்பதால் அவர் பேச்சு எடுபடாது. மனைவி நியாயப்படி கணவர்மீது கோபப்படவேண்டும். அப்படியிருக்கக் கணவன் அநியாயமாக மனைவி மீது கோபப்படுகிறார். மேலும் அவளைக் கிளறுகிறார். இது பொறுக்க முடியாதது; பொறுக்கக் கூடாதது.
    • தவறு கணவர் மீது.
    • அவர் அபிப்பிராயம் தவறு. நடந்த விஷயம் எனக்குத் தெரியும். அவருக்குத் தெரியாது.
    • நான் கோபப்படவேண்டிய நேரம். அவர் என் மீது கோபப்படுகிறார்.
    • என் கோபத்தைக் கிளறுகிறார். பொறுத்துக்கொண்டால் ஏன் பதில் சொல்லவில்லை என மிரட்டுகிறார். அதிகாரம், ஆண்மை, கொடுமை செய்கிறது.
    • ஒரு கட்டம் தாங்க முடியாத இடத்தில் இரண்டாம் கட்டம் எப்படிப் பொறுப்பது? அவர் மூன்றாம் கட்டம் தாண்டி, நாலாம் கட்டத்திலிருக்கும் பொழுது, நான் இனி விஷயத்தை உடைத்துப் பேச முடிவுசெய்தேன். அன்று அப்பா ஊரிலில்லை. அதன்பின் படித்தவையெல்லாம் "தடை - சோதனை", "Difficulties are opportuntities", "பிரச்சினை வாய்ப்பு", "உள்ளே பார்", "உள்ளே மட்டும் பார்" என்று வந்ததால் சற்று மனம் மாறினேன்.
  • ஊரிலிருந்து வரும்பொழுது அப்பா
    • இதுபோன்ற நேரங்களில் தாயாரே பொறுமையிழக்காவிட்டால் கணவர் பொறுமையிழப்பார். அந்த நேரம் பொறுமையை இழக்காமல் விஷயத்தை உடைத்தால் வேகம் எழும். அது அன்னைக்குரிய வேகம். விஷயம் தீரும்.
    • மனைவி பெண் என்பதால் அவருக்குப் பணிந்துபோகும் சந்தர்ப்பம் வந்து பிரச்சினை வாய்ப்பாகிறது. ஆண்மை தவறு செய்தால், அதிகாரி கொடுமை செய்தால் அவர்கட்குத் தண்டனையில்லை. பலியானவருக்கு விடுதலை கிடைக்கும். ஜட்ஜ் தப்பு செய்தால் அப்பீல் ஜெயிக்கலாம். ஜட்ஜ்க்குத் தண்டனை பெற்றுத் தர முடியாது.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

கட்டுப்படாததை அடக்குவது; சக்தி (force) தன்னையறிவது; மேலிருந்து உள்ளே போவது; உள்மனம் விழிப்பது; பரமாத்மா முன்னிலையில் சமர்ப்பணம் செய்வது; பரந்த, ஆழ்ந்தகன்ற விழிப்பு; பூரண ஆத்மசமர்ப்பணம்; உடலின் சைத்தியப்புருஷன் செயல்படுதல்; அகந்தை அழிதல்; காலத்தைக் கடந்த பொறுமை; முரண்பாட்டில் உடன்பாட்டைக் காண்பது; நம் நித்தியத்தை அறிதல்; ஆன்மா ஜடத்தை ஆள்வது; சிருஷ்டியை அறிவது (process); சர்வம் பிரம்மம் என்பது; ஒன்று தவிர மற்றதில்லை என்பதுடன் இணைத்துப் புரிந்துகொள்வது; 'அது' தென்படுவது; அறிவு புலனிலிருந்து விடுபடுதல்; ஜகத்குரு ஆகியவை யோகத்தின் முதற்படிகளாகும்.

யோகத்தின் முதற்படிகள்.

****** 

Comments

Points under இது

Points under இது பிரார்த்தனைக்கு அசையாது
    Please indent the line இவையிரண்டும் உண்மை.
    Please remove quotes in the following sub points and indent the lines.
       ‘‘நம்மால் முடிந்தவற்றைச் செய்தபின் ...
       ‘‘அது குறையானால் பிரார்த்தனைக்கு விஷயம்...
Points under மனத்தில் பலனில்லை எனில், வெளியில் பலன் வருகிறது
    Point 11
   Please indent the line "எங்கள் குடும்பம்" புத்தகம் பக்கம் 57இல் உள்ள 7 விஷயங்கள்
   Please indent all the sub points under Point 11 and remove the quotes
 Points under தானே கேட்கக்கூடாதுஎனத் தாயார்
   Point 4  - முதடம்  -  முதலிடம்
 Points under ஜனாதிபதி வருகை;
    Point 3 -  அர்த்தமில்லாமல்லை  -  அர்த்தமில்லாமலில்லை
 Points under மெய் காப்பாற்றும், பொய் மாட்டிவிடும்
    Point 1 -  நினைவிருந்து  -  நினைவிலிருந்து
 
 ஸ்ரீ அரவிந்த சுடர்
 "அது'தென்படுவது   -   'அது' தென்படுவது
 

01.எங்கள் குடும்பம் II Points

01.எங்கள் குடும்பம் II
 
Points under  காலேஜ் நண்பர்கள் கேலி செய்வார்கள்
 
Point 8 - Please remove quotes for all the sub-points and indent all the sub-points by few spaces
 
Points under எங்கள் ஆபீசில் போன் 3 மணியடித்தால், மெமோ கொடுப்பார்கள்
 
Point 2 - Remove extra blank line
 
Points under இது பிரார்த்தனைக்கு அசையாது
 
Point 8, Point 14 -   Please remove the quotes and indent  all the sub-points
 
Point 14               -    Please remove extra blank line after sub-point 4
 
Points under  பலனில்லாவிட்டால் ஏன் அன்னையை நாடவேண்டும் .... 

Point 5                 -  Please remove the quotes and indent  all the sub-points

Points under   வளராதது காரியமில்லை

Point 6                 - Please remove the extra blank line and change it to
அது கணவர் மனத்திலும், தாயார் மனத்திலும் வேறு ரூபமாக உள்ளது
 



book | by Dr. Radut