Skip to Content

10. அஜெண்டா

"Agenda"

Mind does not understand as it dramatises.

Even material suffering is illusory

You don't know what is consciousness

till you know That.

நடிப்பதால் மனம் புரிந்துகொள்ளும் திறனை இழந்துவிட்டது.

உடலின் வேதனையும் வேதனை இல்லை.

பிரம்மத்தை அறியும் வரை ஜீவியத்தை அறியமுடியாது.

நாடகத்தில் எந்த வேடம் போட்டாலும், இறந்துவிட்டாலும், அது நாடகமே; உண்மையில்லை. துன்பம் படைக்கப்படாத உலகில் எதைத் துன்பம் என ஜோடித்தாலும் அது துன்பமாகாது. மனம் ஆதியிலிருந்து பிரிந்து, உள்ளதை உள்ளபடிக் காணாமல் தன் மனம்போலக் காண்பதில் வலி, நோய், துன்பம், வேதனை, தீமை நமக்குத் தெரிகிறது. மாற்றலாகிப் போகும்பொழுது சிறுகுழந்தை தெருவில் சுற்றும் நாயுடன் பிரியமாகப் பழகியதால் அதைவிட்டுப் பிரிய மனமில்லாமல் அழுதால், நாம்,

  • இரண்டு நாளானால் சரியாகிவிடும் என்கிறோம்.
  • வேறொரு நாயைப் பார்த்தால் இதை மறந்துவிடுவான் என நினைக்கிறோம்.
  • 10 நாட்கள் கழித்து வேறொரு நாயுடன் விளையாடும் அதே குழந்தைக்குப் பழைய நாய் மறந்துபோகிறது, நினைவூட்ட முடிய வில்லை என்று காண்கிறோம்.

நாயின் மீதுள்ள பாசம் அந்த நேரத்திற்குரியது. அந்த நேரத்திலில்லாத பெரியவர்க்கு நாய் வேதனை தருவதில்லை. உடல் வேதனைப்படுகிறது என்பது உடல் ஓர் அனுபவம் பெறுகிறது. உடல் படாத வேதனையை மனம் அதற்கு வேதனை என ஜோடித்துக் காட்டுகிறது.

வேதனை உடலுக்கன்று; மனத்திற்கு.

மனத்திற்கும் வேதனையில்லை; மனப்பான்மைக்கு.

மனப்பான்மை மாறினால், மனம் வேதனைப்படாது.

போரில் கை ஒடிந்தால் வீரனுக்கு வலி தெரிவதில்லை. நமக்குத் தெரிகிறது. வலி உண்மையானால், எப்படி வீரனுக்கு வலிக்கவில்லை?

வீரனுடைய மனப்பான்மை வலியை உணரவில்லை. உண்மை வலியில் இல்லை என்பதே.

    • கோர்ட்டில் ஒரு கட்சி தோற்கிறது. நியாயம் ஜெயிக்கிறது.
    • நியாயத்திற்குத் தோல்வியில்லை.
    • தோல்வி உலகில்லை என்பதை நியாயம் அறியும். அநியாயம் அறியாது.

ஒரு விஷயத்தை அறிய நாம் அதைவிட உயர்ந்திருக்கவேண்டும். சிறுகுழந்தைக்கு விளையாட்டுப் பொருள்கள் தெரியும். அதன் விலை புரியாது. தான் சம்பாதிக்க ஆரம்பித்த பின் தான் விலை புரியும். எட்டு லோகங்களில் - பிரம்மம், ஜீவன், ஜீவியம், ஆனந்தம், சத்தியஜீவியம், மனம், வாழ்வு, ஜடம் - ஜீவியம் ஜீவனுக்கும் கீழேயுள்ளது. நாம் மனத்தில் இருக்கிறோம். மனம் ஜீவியத்திற்குக் கீழேயுள்ளது. ஜீவியம் புரிய ஜீவனை அடையவேண்டும். பிரம்மத்தையடைந்தால் நிச்சயமாகப் புரியும்.

*******

Comments

10. அஜெண்டா Points in Para  1

10. அஜெண்டா

 Points in Para  1 -  Please indent all the sub-points and remove the quotes

 Para 4                - ஓடிந்தால்        -    ஒடிந்தால்

 Points after the line starting with 'வீரனுடைய மனப்பான்மை ...'       - 

          Please indent all the sub- points and remove the quotes



book | by Dr. Radut