Skip to Content

11.தரிசன போட்டோ

தரிசன போட்டோ

ஸ்ரீ அரவிந்தர் மாடியில் அவரறை, அடுத்து வராண்டா உண்டு. அதற்குமுன் ஒரு ஹால் உண்டு. இந்த ஹாலின் கிழக்குப்பகுதியில் ஒரு சோபா மீது அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் உள்ள ஒரு போட்டோ உண்டு. அவர்கள் தரிசனம் தரும் பொழுது எடுத்த போட்டோ என்பதால், இது தரிசன போட்டோவாக வழங்குகிறது. 1950-ஆம் ஆண்டு பிரான்சிலிருந்து அமெரிக்கப் பத்திரிக்கை lifeக்காக வேலை செய்யும் போட்டோகிராபர் வந்திருந்தார். அவர் ஆசிரமப்பகுதிகள் அனைத்தையும் போட்டோ எடுத்தார். தரிசனச் சமயம் போட்டோ எடுக்க விரும்பினார். அந்த அறையில் போதுமான வெளிச்சமில்லாததால், உள்ள வெளிச்சத்திலேயே போட்டோ எடுக்கவேண்டும் என்ற நிபந்தனை மீது எடுத்ததால், போட்டோ பளிச்சென இல்லை.

  • இந்த போட்டோவில் அன்னை, பகவான் வலப்புறம் வீற்றிருக்கிறார்.
  • பகவான் நம் நாட்டு மரபுகளை அறியாதவர்; தெரிந்த இடங்களிலும் பின்பற்றாதவர்.
  • வெளிநாட்டில் படித்ததால் அந்த நாட்டு மரபையும் பின்பற்றாதவர்.
  • எந்த மரபையும் விலக்கியது ஸ்ரீ அரவிந்தம்.
  • இந்திய மரபுப்படி கணவன்- மனைவி உட்கார சாஸ்த்திரம் உண்டு.
  • இடப்பக்கம் பெண் அமர்ந்தால் அவள் குடும்பம் செய்யும் மனைவி. வலப்பக்கம் உட்கார அவள் ஈஸ்வரனுக்குரிய சக்தியாகவேண்டும்.
  • "அன்னையின் வலக்கை தடையின்றி செயல்பட அவர் வலப்பக்கம் உட்காரவேண்டும்" என பகவான் ஒருமுறை கூறினார். சாதகர்களை ஆசீர்வதிக்க, அவர் காணிக்கையைப் பெற அன்னை கை நீட்டி செயல்படவேண்டியிருக்கும். பகவான் நடைமுறை விளக்கம் இது. இது நம் மரபுப்படி அன்னைக்கு சக்தியின் ஸ்தானத்தை அளிக்கிறது.

இளைஞர்கள் தங்கள் திருமணத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்வது இந்நாளில் ஓரளவுண்டு. அப்படி நடந்து முடிந்த திருமணங்கள், நடக்கத் தவறியவைகளில் முக்கியமான முடிவை எடுக்க அவர்கள் சந்தித்தது மறக்காது. அது மறக்கமுடியாத நேரம். மறக்க முடியாத நிகழ்ச்சி. பெண்ணின் சம்மதம் பெற இளைஞன் விழையும் நேரம், மனத்தை அழகாகத் தொட்ட நேரம். அவர்கள் அந்நேரத்தை நினைவு கூர்ந்தால், பெண் உட்கார்ந்த இடம் அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயித்திருக்கும். பெண் இடப்பக்கமிருந்த பொழுது வந்த பதில் திருமணம் முடிய உதவும். வலப்பக்கமிருந்து கொடுத்த பதில் திருமணத்தில் முடிந்திருக்காது.

 

*******

Comments

11. தரிசன போட்டோ  Para 1  - 

11. தரிசன போட்டோ
 
Para 1  -  Line 4  -  லிfeக்காக   -  lifeக்காக



book | by Dr. Radut