Skip to Content

02.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)   

கர்மயோகி
 

XIII. The Divine Maya

Page No.115, Para No.9

3. தெய்வீக மாயை

This power was known to the Vedic Seers.

வேத ரிஷிகள் இதை அறிவார்.

They knew it as Maya

அதை மாயை என்றனர்.

To them it had a meaning.

மாயையை அவர் விவரித்தனர்.

It is a power of infinite consciousness.

மாயை அனந்த ஜீவியத்தின் சக்தி.

It can comprehend.

அதற்கு விளங்கும்.

It contains in itself.

அது உலகைத் தன்னுட்கொண்டது.

It measures out.

அதனால் அளக்க முடியும்.

Measuring out is to form.

அளவு என்பது ரூபம்.

Form is a delimitation.

ரூபம் என்பது வரையறை.

It gives a Name.

அதற்கு நாமம் உண்டு.

It shapes.

அதனால் உருவகப்படுத்த முடியும்

It does so from a vast Truth.

பரந்த சத்தியத்தின் பகுதியது.

It is an illimitable Truth.

அச்சத்தியம் வரையறையற்றது.

It is of infinite existence.

அது அனந்தமான சத்.

The truth of essential being is static.

அடிப்படை ஜீவனின் சத்தியம் அசைவற்றது.

The truth of active being is ordered.

சலனமான ஜீவனின் சத்தியம் முறையானது.

It is Maya that changes the one into another.

இம்மாற்றத்தைச் செய்வது மாயை.

It can be put in metaphysical language.

இதைத் தத்துவமாகக் கூறலாம்.

All is all in the Supreme being.

ஆதியில் எல்லாம் எல்லாவற்றிலுமுள்ளது.

There is no barrier of seperative consciousness.

பிரிக்கும் ஜீவியம் அங்கில்லை.

All is in each and each is in all in the phenomenal being.

தோற்றத்தில் அனைத்தும் ஒன்றிலும், ஒன்றில் அனைத்தும் உள்ளன.

It is for the play.

அதுவே லீலை.

It is a play of existence with existence.

சத் சத்துடன் விளையாடுகிறது

It is so with consciousness too.

ஜீவியமும் அப்படியே.

Force also separates for the purpose of play.

சக்தியும் பிரிந்து விளையாடுகிறது.

Delight plays with delight.

அனந்தமும் விளையாட்டில் கலந்துகொள்கிறது.

The mental play conceals this whole.

மனம் இம்முழுமையைக் காண்பதைத் தடுக்கிறது.

It is an illusion.

அது மாயை.

Maya came to be known as illusion.

மாயை என்பது இல்லாதது என நாம் கொண்டோம்.

Maya persuades each he is in all.

அனைத்தும் தன்னுள் இருப்பதாக மட்டும் மாயை கூறுகிறது.

It does not permit him to see all is in each.

அனைத்தும் அனைத்தினுள்ளிருப்பதைப் பார்க்க மறுக்கிறது.

It gives the illusion that he is in all as a separate being.

எல்லாவற்றிலும் தான் தனித்திருப்பதாகத் தோன்றுகிறது.

Truly he is inseparable.

உண்மையில் அவற்றைப் பிரிக்க முடியாது.

He is one with all the rest of existence.

நாம் அனைத்துடனும் ஒன்றியவராவோம்.

We have to emerge from this error.

இத்தவற்றிலிருந்து நாம் வெளிவரவேண்டும்.

Emerging out of it, we come in to the supramental play.

வெளிவந்தால் சத்தியஜீவியம் உண்டு.

There we see the truth of Maya.

அங்கு மாயையின் உண்மை தெரியும்.

There 'each' and 'all' co-exist.

அங்கு நாமும், அனைத்தும் இணைந்துள்ளோம்.

There is an inseparable unity.

அது பிரிக்கமுடியாத ஐக்கியம்.

It is the unity of the one truth.

அது சத்தியத்தின் ஐக்கியம்.

It is the multiple symbol of that truth.

ஒன்று என்பது பலவாகத் தோன்றும் தோற்றம் அது.

The lower Maya is at present deluding.

உலகத்தில் மாயை கண்ணை மறைக்கிறது.

It is mental Maya.

இது மனத்தின் மாயை.

It has first to be embraced.

இதை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Then it must be overcome.

ஏற்றபின் அதைக் கடக்கவேண்டும்.

It is God's play with division and darkness.

பிரிவினையிலும், இருளிலும் இறைவன் லீலை அது.

It is a play with limitation, desire and strife.

ஆசை, சச்சரவு, அளவு, இந்த லீலைக்கு ஆதரவு.

It is a suffering in which He subjects Himself to the Force.

இறைவன் தன் சக்திக்குத் தானே கட்டுப்பட்டு கஷ்டப்படுகிறான்.

After all, the Force came out of Him.

சக்தி இறைவனுடையது.

By his obscure, He suffers Himself to be obscured.

இருளில் தான் உழலச் சம்மதிக்கிறான்

There is the other Maya.

வேறொரு மாயையுண்டு.

It is concealed by the mental play.

மனத்தால் அது மறைக்கப்படுகிறது.

It has to be overpassed and embraced.

அதை ஏற்று, கடக்கவேண்டும்.

It is God's play.

அது இறைவனின் லீலை.

It is His play with His infinite existence.

மனித வாழ்வில் இறைவனின் லீலை அது.

He plays with the splendours of knowledge.

ஞான விகாசம் அவன் திடல்.

He masters the glories of the Force.

சக்தியின் பெருமை அவன் கருவி.

He does so with the ecstasies of illimitable love.

அளவற்ற அன்பின் பெருக்கு அவனது அரங்கம்.

Thus He emerges out of His Force.

தன் சக்தியிலிருந்து தான் வெளிவரும் பாங்கு அது.

He holds her now.

தற்பொழுது சக்தி அவனுக்குட்பட்டது.

The Force went forth from Him at first for a purpose.

அக்காரணத்திற்காக சக்தி முதலில் அவனின்று எழுந்தது.

It is to illumine her by fulfillment.

ஜோதியால் தன்னைப் பூரிக்க சக்தி கையாண்ட உபாயம் அது.

Contd...

தொடரும்.....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதனுக்கோ, ஆன்மாவுக்கோ பரிணாம வளர்ச்சி தேவையில்லை. அதைத் துரிதப்படுத்தும் அவசியமும் இல்லை. இறைவனுக்கு அந்த அவசியம் ஏற்படலாம். தான் பெறும் ஆனந்தத்தின் நிலையை உயர்த்த இறைவன் நினைத்தால் ஆன்மீகப்பரிணாமத்தின்மூலம் ஒளிந்ததைக் காண முன்வந்து, அதைச் சாதிக்கலாம்.

ஒளிந்ததைக் காண ஓடிவருவது பரிணாமம்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆனந்தத்தை உடல் தலைகீழாக உணர்வது வலியாகும்.

*****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அக்ஷயப்பாத்திரத்தில் அனந்தன் ஜடமாக வெளிப்படுகிறான். எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வேண்டும் என்று கேட்டவனுக்குக் கொடுக்கும் வரம் உணர்வில் அனந்தமாகும்.

எல்லையற்ற பலம்.

******

Comments

02.லைப் டிவைன் Line 23  - 

02.லைப் டிவைன்
 
Line 23  -  existencew      -    existence
Line 38  -  There'each'     -     There 'each'
Line 42  -  aty                 -    atbook | by Dr. Radut