Skip to Content

05.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

847) நம் சரணாகதியின் முழுப்பொறுப்பை ஏற்பது, அகந்தையை முழுமையாக அழிக்க முன்வந்து, யோக முயற்சியில் முதிர்ச்சி அடைவதாகும்.

முழுமையின் பொறுப்பு, முழுப்பொறுப்பு.

  • யோகத்தை ஏற்றவர்க்குச் சரணாகதி நினைவுவருவதில்லை.
  • இந்த ஜன்மத்தில் யோகத்தை ஏற்றால், அடுத்த ஜன்மத்தில் சரணாகதி நினைவுவரும்.
  • மனிதன் 500 ஆண்டுகளாகச் சாதித்ததை, தொடர்ந்து சாதிப்பதை அறியவோ, நினைவுகூரவோ முன்வருவதில்லை. அடுத்த 30,000 ஆண்டுகளில் நடக்கப்போவது இப்பொழுது எப்படி நினைவுவரும்?
  • அரும்பாடுபட்டு, அதுவே இலட்சியமாக இரவும், பகலும் வாழ்ந்தால் நமக்குச் சரணாகதி நினைவுவரவில்லை என 10, 20 வருஷங்கள் கழித்துத் தோன்றும்.
  • எந்தச் செயலும் சரணாகதியை நினைவூட்டவேண்டும் என இடைவிடாது முயன்றாலும், சரணாகதி மறந்துபோகும்.
  • சரணாகதி நினைவுவந்தால், எண்ணம் அதை விலக்க வெளிப்படும்.
  • எண்ணத்தையும், உணர்வையும், செயலையும், ஜீவனையும் விலக்கிச் செயல்பட்டால் சரணாகதி பலிக்கும்.
  • சரணாகதி பலித்தால் அவன் பிரம்மமாவான்; பிரம்மமாக சிருஷ்டியில் ஜனிப்பான்.
  • அது பகவானும், அன்னையும் எய்திய யோகநிலைகள்.
  • ரிஷிகள் அப்படியொரு நிலையுண்டுஎன நினைக்காத யோகநிலை.
  • பகவானை நம்மால் அறியமுடியவில்லை.
  • அவர் எழுதியது புரியவில்லை.
  • எப்படி நாம் அவர் பெற்ற யோகசித்தியை அடையமுடியும்?
  • அதுவும் முடியும் என்கிறார் அன்னை.
  • நம்மை மறந்து பகவானை மட்டும் நம்பினால் முடியும் என்கிறார்.
  • நம்மை விடவேண்டும் என்ற நிபந்தனை நமக்கு முடியவில்லை.
  • அதை taste of ignoranceஎன்கிறார்.
  • அஞ்ஞானம் ருசிக்காமல், ஞானத்தின்மீது எண்ணம் செல்வது நடக்காததை நடத்திவைக்கும்.
  • சரணாகதிக்குமுன் சமர்ப்பணம் பலிக்கவேண்டும்.

*******

848. நல்லது, கெட்டதான புறநிகழ்ச்சிகளை அகவுணர்வால் புரிந்துகொள்வது ஞானம். நல்லவை உள்ளுணர்வை நேரடியாகவும், கெட்டவை தலைகீழேயும் பிரதி பலிக்கின்றன.

உள்ளுணர்வைப் பிரதிபலிக்கும் புறநிகழ்ச்சிகள்.

  • புறம் அகத்தைப் பிரதிபலிப்பது வாழ்வில் யோகத்திற்குரிய உண்மை.
  • கோபமாக மனைவியைத் திட்டிவிட்டு ஆபீஸுக்குப் போனால், மானேஜர் கோபமாகத் திட்டுவது நேரடி பிரதிபலிப்பு.
  • மனைவி மீது கோபமாக வெளியில் போனவன், வழியில் சந்திப்பவர் மீது தன் கோபத்தைக் காட்டுவது இயற்கை.
  • மனைவி கணவனைத் திட்டி, ஆபீஸுக்கு அனுப்பினால், ஆபீஸுக்குப் போன கணவனை அங்கு உடன் வேலை செய்பவர் திட்டுவதும் பிரதிபலிப்பு. பலஹீனமானவன் இரண்டு இடங்களிலும் திட்டு வாங்குகிறான். பலமானவன் இரண்டு இடங்களிலும் திட்டுகிறான். நிலைமை மாறினால் திட்டுவது, திட்டுவாங்குவதாக மாறுகிறது.
  • நல்ல உணர்வு, புறத்தில் நல்ல செயலாகவும்,
  • நல்ல உணர்வு, புறத்தில் கெட்ட செயலாகவும்,
  • கெட்ட உணர்வு, புறத்தில் கெட்ட செயலாகவும்,
  • கெட்ட உணர்வு, புறத்தில் நல்ல செயலாகவும், பிரதிபலிப்பது சட்டம்.
  • சட்டத்தை இயக்குவது நமது பலம், அந்தஸ்து, மனத்தெளிவு, ஆன்மவிழிப்பு.
  • ரூ.10/- பக்கத்து வீட்டுக்காரருக்குத் தரவேண்டியது பாக்கியானால் நமக்கு வரவேண்டிய பத்தாயிரம் பாக்கியாகும். 10 ரூபாயைக் கொடுத்தவுடன் 10,000 வருகிறது. ஏனெனில், பக்கத்து வீட்டுக்காரருக்கு 10 ரூபாய், அடுத்தவருக்கு 10,000 ரூபாய்க்குச் சமம்.
  • ஒருவருக்கு நம்மீது பிரியம் வந்தால் திட்டுகிறார். அவருக்குப் பிரியத்தை அப்படித்தான் காட்டமுடிகிறது. இது அடிமனத்திற்குரிய உண்மை. நடைமுறையில் நம்பமுடியாதது.
  • நமக்குப் பெருந்தொகை இழக்கும் சந்தர்ப்பம் சூழலில் வந்துவிட்டால்,அந்த நேரம் நமக்குத் தோன்றும் விஷயங்கள்:
    • ஓர் அயோக்கியனுக்குச் சிறு தொகை உதவத் தோன்றும்.
    • ஒரு நல்லவன் செய்த நல்ல காரியத்தைத் தவறு எனப் பேசத் தோன்றும்.
    • ஓர் அரசியல்வாதி செய்த பெரிய மோசடியைச் சரி என வாதிக்கும் சந்தர்ப்பம் எழும்.
    • ஒரு நல்ல குழந்தையின் நல்ல ஆசையை மறுக்கத் தோன்றும்.
    • விஷயமே இல்லை என்றாலும், மனம் அப்படியெல்லாம் நினைக்கும்.

தொடரும்.....


 

*******

ஜீவிய மணி

பட்டதிற்குரியது படபடப்பு;

கண்ணில்படாதது சேவைசெய்யும்.

*****

Comments

05.யோக வாழ்க்கை விளக்கம்

05.யோக வாழ்க்கை விளக்கம் V
 
848)
Point 12 -  Indent all the sub-points under this point and remove the quotes



book | by Dr. Radut