Skip to Content

08.லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

A new consciousness of intuition or overmind begins to form in place of the mental consciousness.

மனத்தில் ஞானம் உதயமாகி, தெய்வஜீவியம் சேரும் நிலை எழுகிறது.

  • சத்தியஜீவியம் புவிக்கு வந்தபொழுது முதலில் மனத்தைத் தீண்டுகிறது. ஏனெனில், மனமே அதிக விழிப்புடையது. உடல் இருண்டிருப்பதால் உடலோ, உணர்வோ சத்தியஜீவியத்தை ஏற்க முடிவதில்லை.
  • யோகி மேலே சென்று (ascent) சத்தியஜீவியத்தைத் தொட்டபின், அது புவிக்கு வரும் (descent). அப்படி வரும்பொழுது மனத்தைத் தீண்டி, மனத்தைவிட உயர்ந்த ஜீவியத்தை - யோகி, தெய்வத்திற்குரியவற்றை - ஏற்படுத்தும்.
  • Overmind என்பது தெய்வங்கள் - விஷ்ணு, சிவன், இந்திரன், காளி, சரஸ்வதி - வாழும் இடம். Intuition ஞானம் என்பது யோகிக்குரிய நிலை.
  • உடலால் உழைப்பவன் படித்தால், மனம் தெளிவடைகிறது; உடலில் உள்ள அணுக்களில் மனம் உதயமாகும். அதுபோல் சத்திய ஜீவியத்தை நோக்கி மனம் உயர்ந்தால், மனத்தில் சத்தியஜீவியம் உதயமாகும். அதன்முன் தெய்வஜீவியமும், ஞானமும் உதயமாகும்.
  • மனித நிலை,
    • ஒரு பிரச்சினை வந்தவுடன் மனம் யோசனை செய்வது மனித நிலை.
    • ஆசையோ, கோபமோ எழுவது விலங்கு நிலை.
    • ஆசை, கோபம் போன்ற உணர்வுகள் எழாமல், யோசனையும் பிறக்காவிட்டால், அது ஜடத்திற்குரிய நிலை.
    • மௌனம் தானே குடிகொள்வது முனிவர் நிலை.
    • பிரச்சினை மனத்தில் காட்சியாக எழுவது ரிஷியின் நிலை.
    • உடனே யோசனையுமின்றி, பிரச்சினை முழுவதும் புரிவது யோகி நிலை.
    • புரியும் அவசியமுமில்லாமல் தெரிவது தெய்வ நிலை.
    • புரியாமல், தெரியாமல் பிரச்சினையுடன் இரண்டறக் கலந்து திளைப்பது சத்தியஜீவிய நிலை.
  • சத்தியஜீவியத்தைக் கடந்த நிலைகள் ஆனந்தம், ஜீவியம், சத், பிரம்மமாகும்.
  • எந்த உயர்ந்த நிலையையும் நிஷ்டையில் ஒரு க்ஷணம் எட்ட மனிதனால் முடியும்.
  • பெற்றதை நிரந்தரமாக அனுபவிக்க அனுபவம் (experience) சித்தியாக மாறவேண்டும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

உள்ளே போவதைவிட உள்ளே அன்னையைத் தேடுவது நன்று. ஆன்மா அன்னையை உள்ளே தேடுவது ஆனந்தம் (bliss). அறிவாலும், செயலாலும் அன்னையை புறத்தில் தேடுவது சிருஷ்டியின் ஆனந்தமாகும் (delight).

சிருஷ்டியின் ஆனந்தம்.

***** 

Comments

08. லைப் டிவைன் - கருத்து

08. லைப் டிவைன் - கருத்து

 

 Point 5 - Sub Point 6  - . ‘‘உடனே -  உடனே

 

 

08. லைப் டிவைன் - கருத்து

08. லைப் டிவைன் - கருத்து

 
Point 2  -   Line 2 - தெய்வத்திற் குரியவற்றை - தெய்வத்திற்குரியவற்றை 
Point 3  -   Line 1 - ஒய்ற்ன்ண்ற்ண்ர்ய்                 - intuition
Point 5  -   Please indent all the sub-points under this point and remove the quotes
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
Line 3 - deலிght   -  delight



book | by Dr. Radut