Skip to Content

09.கம்ப்யூட்டர்

"அன்னை சுபிட்சம்"

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டரை அனைவரும் அறிவர். ஆனால் அது நம் தொழிலை இரு மடங்காக்கும் என எவரும் அறியவில்லை. அப்படிச் சொன்னால் நம்பமாட்டார்கள். அத்துடன் கேலிசெய்வார்கள். ஒரு கம்பனியில் கணக்கு முடிக்க, வருஷம் முடிந்தபின் பல மாதங்களாகும். கம்ப்யூட்டர் வருஷம் முடிந்தவுடன் கணக்கை முடித்துவிடும். கம்பனியில் எங்கு, என்ன நடக்கிறது எனத் தெரிய நாளாகும். பல சமயம் தெரியாது. தூர நடக்கும் விஷயங்களை நாம் மறந்துவிடுவோம். அங்கு நஷ்டம் ஏற்பட்டு சுமையாகி பிரச்சினையாகும். கம்ப்யூட்டர் எங்கு நடப்பதையும் உடன் தன் ஸ்கிரீனில் காட்டும். எந்தக் கம்பனியிலும் ஸ்டோரில் இருப்பதை முதலாளி அறியார். வேண்டிய பொருள்களை வாங்கிக்கொண்டிருப்பார். அவை ஸ்டோரில் இருப்பதை அவர் மறந்துபோயிருப்பார். ஸ்டோருக்குப் போனால் ஒரு கோடி கம்பனிக்கு ஸ்டோரில் 12 இலட்சம் சரக்கு இருக்கவேண்டுமானால் 15 இலட்சமிருக்கும். சில சமயங்களில் 40 இலட்சமுமிருக்கும். பணம் ஸ்டோரில் முடங்கியிருக்கும். அப்பணத்தை முதலாளி வெளியில் கடன் வாங்கி வட்டி கொடுப்பார். அந்த வட்டி நிர்வாகம் சரியில்லாத கம்பனிகளில் முழு இலாபத்திற்குச் சமமாக இருக்கும். ஒரு சிறு கம்பனியில் EB பில் 10 மாதத்திற்குரியது ஒரு மாதத்திற்குத் தவறாக வந்தது. மானேஜர் கட்டிவிட்டார். அதுமுதலாளிக்குத் தெரியாது. எந்தக் கம்பனியிலும் EBபில் மாதத்திற்கு எவ்வளவு வரவேண்டுமென்று தெரியாது. அதிகமாகக் கட்டுவது வழக்கம். கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு உஷாராக இருக்கும் முதலாளிகள் தவிர மற்றவர் அனுபவிக்கும் சிரமங்கள் ஆயிரம். கம்ப்யூட்டர் எவ்வளவு கட்டவேண்டும் என்று சொல்லும். என்று 1 ரூபாய் அதிகமாகக் கரண்ட் செலவானாலும் காட்டும். கம்ப்யூட்டர் பணத்தைப் பலவகைகளிலும் சேகரம் செய்யும்.

கம்பனியில் நேரம் பணம். டெலக்ஸ் இருந்தபொழுது 100 கோடி கம்பனியில் ஒரு டிபார்ட்மெண்டிலிருந்து அடுத்த டிபார்ட்மெண்டிற்குச் செய்தி போய் பதில்வர 5 மணி முதல் 5 நாட்கள்வரை தாமதமாகும்.100 கோடி செலவானால் அக்கம்பனி time 1 நாளைக்கு 30 இலட்சம்பெறும். 8 மணி நேரம் வேலை செய்வதால் அக்கம்பனியில் 1 மணி நேரம் என்பது சுமார் 4 இலட்ச ரூபாயாகும். செய்தி தாமதமாவது சராசரியில் 30 மணி நேரமாகிறது. தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4 இலட்சம் நஷ்டமாகிறது. கம்ப்யூட்டர் இந்தத் தாமதத்தை அடியோடு விலக்கும். இந்தக் கம்பனி நஷ்டத்தில் நடக்கிறது. கம்ப்யூட்டரை இந்த ஒரு காரியத்திற்கு முழுவதும் - perfectஆக - பயன்படுத்தினால் கம்பனி நஷ்டத்திலிருந்து இலாபகரமாக மாறும்.

கம்பனிகளில் வதந்தி ஏராளம். நிர்வாகத்தைப்பற்றி பணம், ஊழல், இலஞ்சம், பாரபட்சம் ஆகியவற்றில் சந்தேகம் ஏராளம். எதையும் ஊழியர்கள் சந்தேகப்படுவார்கள். எந்தப் பிரச்சினையுமில்லாத பொழுது இந்த வதந்தியும், சந்தேகமும் சேர்ந்து ஸ்டிரைக் வந்து, அவற்றைப் போக்கிச் சமரசம் செய்வதற்குள் பல கோடி நஷ்டமாகும். கம்ப்யூட்டரில் (இண்டர்நெட்) இவ்விவரங்களைக் குறித்துவிட்டால், எந்த ஊழியரும் உண்மையை தம் மேஜையில் காண்பார். பெரிய தலைவலி விலகும்.

  • கம்ப்யூட்டர் இலாபத்தை இருமடங்காக்கும் எனக் கூறினோம் - எப்படி?
    • கம்ப்யூட்டர் நேரத்தை மிச்சப்படுத்தும்; நேரம் பணம்.
    • பண முடக்கத்தைக் கம்ப்யூட்டர் விலக்கும்; வட்டி மிச்சம்.
    • வதந்தியை விலக்குவதால் சந்தேகம் நம்பிக்கையாகும்.
    • ஊழியர்கள் தங்கள் சம்பளம்,P.F லோன் விவரங்களை அறிய ஆபீசுக்கு நடையாக நடக்கவேண்டும். அதனால் சண்டை, சச்சரவு வரும். சந்தேகம் எழும். அவை அதிகப்பட்டால் ஸ்டிரைக் வரும். கம்ப்யூட்டர் அவற்றை விலக்குவதால் சுமுகம் ஏற்பட்டு பணவரவு வளரும்.
    • கம்பனிக்கு வாடிக்கைக்காரர்கள், "நான் கூறியபடி ஆர்டர் வரவில்லை, நீங்கள் அனுப்பிய 15 பொருள்களில் 3 காணோம்'' என்பன போன்ற குறைகள் ஏராளம். இதனால் கம்பனியில் உற்பத்தி செய்வதை விட கம்ப்ளெயிண்டுக்குப் பதில் சொல்வதே சரியாக இருக்கும். அதிருப்தியால் வாடிக்கைக்காரர்கள் வேறு கம்பனிக்குப் போவார்கள். கம்ப்யூட்டர் அவற்றை எல்லாம் விலக்கும்.வாடிக்கைக்காரர் திருப்திப்பட்டு அதிக ஆர்டர் கொடுப்பார். அவர் மூலம் புதிய வாடிக்கைக்காரர்கள் வருவார்கள்.

கம்ப்யூட்டர் வரப்பிரசாதம். நம்மைச் சிந்திக்கவைக்கிறது. நாம் மறந்ததை நினைவூட்டுகிறது. நேரம் விரயமாவதைத் தடுக்கிறது. பொருள்கள் முடங்குவதை விலக்குகிறது. அனாவசியமாகக் கடன் பெறுவதை நிறுத்துகிறது. கம்பனியின் இலாபத்தை இருமடங்காக்கும் கருவி கம்ப்யூட்டர். குடும்பவாழ்விலும் அதுவே உண்மை. கம்ப்யூட்டரை வீட்டு நிர்வாகத்திற்குச் சிறப்பாகப் பயன்படுத்துவோர் வருமானம் இரு மடங்காகும். கம்பனியில் சொல்வதைப்போல் எளிதாகச் சொல்ல முடியாது. கூர்ந்து புரிந்துகொள்பவருக்குப் பலிக்கும்.


 

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

அகந்தையைச் சரணம் செய்வது பெரிதன்று. அகந்தை தானே தன்னைச் சரணம் செய்ய முன்வருவது பெரியது.

*****  

Comments

"அன்னை

"அன்னை சுபிட்சம்"

கம்ப்யூட்டர்

Para 4 - Point starting with கம்ப்யூட்டர் இலாபத்தை -  Please indent all the sub-points under this point and remove the quotes

Sub point 5 - செய்வதை விடகம்ப்ளெயிண்டுக்குப் -  செய்வதைவிட 



book | by Dr. Radut