Skip to Content

10.லைப் டிவைன் - கருத்து

"Life Divine" - கருத்து

It is here we see another alternative.

It is that we are looking for.

நாம் தேடும் வாயில் இங்குள்ளது.

தவம், யோகம் நம் நாட்டின் பிறப்புரிமை. ஏகபோக உரிமை இல்லாவிட்டாலும் பிறப்புரிமை, சிறப்புரிமையான இடம் தவம். இன்று உலகத்தில் யோகம் என்று குறிப்பிடப்படுவது ஹடயோகம். ஒரு துறையை சாஸ்திரமாக்குவது விஞ்ஞானம் எனப்படும். ஹடயோகம் இன்றுவரை அன்றுபோல் பயன்பட்டு வருகிறது. அதை improve அபிவிருத்தி செய்ய முடியவில்லை. உடலின் ஆசன அமைப்பு உயிரையும், உள்ளத்தையும் கட்டுப்படுத்தி, ஆன்ம விடுதலை தரும் பயிற்சி இது. பிராணயாமம் என்பது சக்திவாய்ந்தது. இதை 5 ஆண்டுகள் பயின்றவர் எந்த வியாதியையும் குணப்படுத்தக்கூடியவர். ஞானயோகம் வெளியுலகை தம் எண்ணத்தால் அசைக்கும் சக்தியைத் தரும். பசியோடு இருந்த விவேகானந்தரின் எண்ணம் படுத்திருந்த பக்ஷணக்கடை முதலாளியை எழுப்பி பசியாறியதை பல முறை பலரும் படித்திருக்கலாம்.

பூரணயோகம் உலகில் தீமை, மரணத்தைக் கரைக்கவல்லது. ஒரு சிறு குழுவினர் செய்யும் தவத்தால் உலகம் மாறும். ஹடயோகம்,கர்மயோகம், ஞானயோகம் மேல்மனத்தில் செய்யப்படுவது. அவற்றிற்கு மூலம் அக்ஷரப்பிரம்மம். அதைக் கடந்தது முழுப்பிரம்மம், நாம் சத்புருஷன் எனக் கூறுவது. அதைக் கடந்த நிலையுண்டு. அந்நிலைக்குப் பூரணம் உண்டு. அதை உலகில் காண முயல்வது பூரணயோகம். மேல்மனத்தின் கீழ் உள்ளது உள்மனம். அடிமனம் அதையும் கடந்தது. மேல்மனம் நாம் மட்டும் அறிவது; காலத்தில் செயல்படுவது. உள்மனம் ரிஷி அறியக் கூடியது; காலத்தைக் கடந்தது. அடிமனம் அதையும் கடந்து ஆழ்மனம் தொடும் பாதாளத்தையும் பரமாத்மாவையும் இணைப்பது. அது பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பூரணயோகத்தை அங்கிருந்து செய்ய வேண்டும். இதுவரை செய்த யோகங்கள் மேல்மனத்திற்குரியவை. எப்படி அடிமனத்தை அடைவதுஎன பகவான் அறியவில்லை. எந்த தவசியும் நிஷ்டையில் உள்மனத்தைத் தொட்டு மனோமயப்புருஷனைக் கண்டு,அவன் மூலமாக ஜீவாத்மாவை அடைந்து, ஜீவன்முக்தனாகிறான்.பூரணயோகம் அதை நாடவில்லை. என்ன செய்வது என பகவான் 10ஆண்டுகள் முயன்ற பொழுது, மனோமயப்புருஷன் உள்ள உள்மனத்தில் மேலும் இரு வாயில்களிருப்பதைக் கண்டார். அவற்றுள் ஒன்று அடிமனத்தின் சைத்தியப்புருஷனை அடையும் வாயில். விவேகானந்தர் இலட்சியத்தைக் காட்டினார்; பாதையைக் குறிப்பிடவில்லை. நிஷ்டையைக் கைவிட்டு, சரணாகதியை மேற்கொண்டால் அவ்வாயில் தெரியும் என அறிய பகவானுக்குப் 10 ஆண்டுகளாயிற்று.

. நாம் செய்யும் பிரார்த்தனை நிஷ்டை போன்றது. "நான் கேட்டதைக் கொடுத்து விட்டால், மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்பது அது. அது நம் திறமையை நம்புவது. இதுவரை எவருக்கும் பயன்படவில்லை என கருமி மைதாஸ் கதை கூறுகிறது.

. சரணாகதி அன்னையை நம் வாழ்வில் செயல்பட அழைப்பது. அது நம் வாழ்வை உலகில் அதிர்ஷ்டமாகவும், மேல் உலகில் அமிர்தமாகவும் மாற்றும்.

. மேற்கூறிய கருத்து இக்கருத்துகளின் தத்துவம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

உடல் படும் துன்பம் உண்மையானதன்று.


 


 


 


 



book | by Dr. Radut