Skip to Content

11. எதை நம்பலாம்.....

எதை நம்பலாம்.....

நம்பிக்கை பல விதத்தின. முழுவதும் பliக்கும்பொழுதும் நமக்கு நம்பிக்கை அன்னையிடமிருப்பதில்லை. மருந்து, டாக்டர், சட்டம்,சிபாரிசு, நம் நாணயம், திறமை, நண்பர் மீது நம்பிக்கையிருப்பது வழக்கம். அப்படியிருந்தாலும் அன்னை அந்த நம்பிக்கை மூலம் செயல்படுவார். அவற்றைக் கடந்து அன்னை மீதிருப்பது உயர்ந்த நம்பிக்கை.

நெடுநாட்களுக்கு முன்னால் பாங்க் உதவியை ஊராருக்குப் பெற்றுத் தர அன்பர் முயன்ற பொழுது அத்தனை காரியங்களையும் நண்பர் மூலம் செய்தார். அது விஷப்பரிட்சையென அனைவரும் கருதிய பொழுது அன்பர் உற்சாகமாகச் செய்ய நண்பர் முக்கியக் காரணமானார்.

- பணம் பட்டுவாடா செய்யும் முதல் நாள் நண்பர் அன்பரைச் சந்தித்துத் தமக்கு இவ்விஷயத்தில் அபிப்பிராயமில்லை எனவும், பணம் கொடுத்தபின் வசூல் செய்ய முடியாது எனவும் கூறினார்.

-அன்னையை மட்டும் நம்பவேண்டிய அன்பர் முழுவதும் நண்பரை நம்பியது தவறு. கடைசி நேரம் இப்படித் தலைகீழாகப் பேசினால்,ஆரம்பிக்கவே முடியாது என்ற நேரம் "நான் அன்னையை மட்டும் நம்பவேண்டும் என அன்னை கூறுவதாக இதை எடுத்துக் கொள்கிறேன்'' எனப் புரிந்து, நண்பர் மறுப்பை ஏற்றார். பணத்தை அனைவருக்கும் கொடுத்தார்.

- தேதி தவறாமல் பணம் வந்துவிட்டது. அப்பொழுது அன்பர்,"நண்பர் மூலம் இவ்வளவு முழுமையாகக் காரியம் நடந்திருக்காது.நண்பர் விலகியதால் இது நடந்தது'' என அறிந்தார்.

....... அன்னையை மட்டும் நம்பலாம்


 



book | by Dr. Radut