Skip to Content

12.ரமண மகரிஷி

ரமண மகரிஷி

தூக்கத்தில் மனிதன் சச்சிதானந்தத்தைத் தொட்டு தெம்பு பெறுகிறான். உழைப்பாளி மேலே போக முடியாவிட்டால், கீழே போகிறான். பாதாளம் என்பது இருண்ட சச்சிதானந்தம். அயர்ந்து தூங்குபவன் அதைத் தொடுவான்

ரமண மகரிஷி சிறு வயதில் தம்மை மறந்து தூங்குவார். அது அனைவருக்கும் கேலிக்குரிய விஷயம். சிறுவர்கள் அவரைத் தூக்கிக் கொண்டு போய் வேறிடத்தில் போடுவார்கள். அப்பொழுதும் அவர் விழிப்பதில்லை.

- பிற்காலத்து நிஷ்டை அவருக்கு சிறுவயதில் அயர்ந்த தூக்க- மாக வந்துள்ளது.

-அதனால் அயர்ந்து தூங்குபவர் அனைவரும் ரிஷி அம்சம் உடையவர் எனக் கூறமுடியாது.

ஆசனம் கற்றுக்கொண்ட மாணவன் சவாசனம் பயிலும் நேரம் தன்னை மறந்தான். அதனால் பயந்துவிட்டான். தன்னை மறக்கும் நிலை ஆத்மா வெளிவரும் நிலை. அனுபவமில்லாத பொழுது பயம் எழும்.

- அன்னையின் அழைப்பு தெரிவதில்லை என்பது போல் ஆத்மாவின் விழிப்பும் புரிவதில்லை.

இதனால் ஏற்படும் நிகழ்ச்சிகள் விபரீதமானவை, வேடிக்கை- யானவை, விளக்கமுடியாதவை. புவனேஸ்வரி என்ற வேலைக்காரப் பெண்ணை பெயர் என்ன என்று விசாரித்த பிரெஞ்சுக்காரர் இந்திய ஆன்மீகம் பயிலுபவர். புவனத்திற்கு அவள் ஈஸ்வரி என்ற விளக்கம் பெற்ற அவர், அப்பெயரை அவளுடைய அம்சம் என நினைத்து மணந்துகொண்டார்.

 

****


 


 


 


 



book | by Dr. Radut