Skip to Content

06. சாவித்ரி

சாவித்ரி

P.65 He thinks her thoughts, with her trouble his bosom heaves.

அவள் மனதால் அவன் சிந்திக்கிறான், அவள் கவலையால் அவன் நெஞ்சு குமுறுகிறது.

. அவனது தோற்றம் அவளெண்ணப்படி எழுந்த தோற்றம்.

. அவன் என்ற சித்திரத்தை அவள் எழுதினாள்.

. அவள் விருப்பமெனும் பாதையில் அவனை விரைந்து அவள் செலுத்துகிறாள்.

. அடிமையான குழவியாக அவனை ஆட்டுவிக்கிறாள்.

. யுகாந்தகால அடிமைக்குரிய முடிவான சுதந்திரம்.

. உலகைக் கடந்த அழியா வரம்.

. சூத்திரதாரியான அவளுக்கு ஆடும் பொம்மை அவன்.

. அழியும் உடலெனும் அவையெனும் அரங்கு.

. பிறப்பு இறப்பிடையே உழலும் வழிப்போக்கன்.

. நீர்க்குமிழியின் சாகாவரம் பெறும் கனவு.

. ஆட்சியை நோக்கி விரட்டுகிறாள். அவன் பெறும் அவள் அதிகாரம்.

. அவள் சட்டத்தின் சக்திக்கு உட்பட அவன் நீட்டிய கழுத்து.

. மண்ணுலக மனிதன் பெற்ற மகுடம்.

. அவளுக்கு அவன் அடங்கினான். அவள் குதர்க்கம் அவன் கொடுப்பினை.

. தனக்கு அவள் அடங்க அவன் செய்யும் யோசனை.

. நாழிகை ஒன்றானாலும் நடப்பதை அவள் நிர்ணயிக்கிறாள்.

. க்ஷணத்தில் எழும் வேகத்திற்கு அவளை உட்படுத்துகிறான்.

. அடிமையாக நடிக்கிறாள், அவன் ஆணைக்குப் பணிகிறாள்.

. அவனுக்காக அவள் பிறந்தாள், அவன் பயனுக்காக வாழ்கிறாள்.

. அவளை வென்றபின் தன்னடிமை வளர்ந்ததைக் காண்கிறான்.

. அவளை நம்பி வாழ்பவன் அவன், அவன் உடைமைகளெல்லாம் அவளுடையன.

. அவளின்றி அணுவும் அசையாது, அவன் வென்றபின்னும் ஆட்சி செய்வது அவளே.

. முடிவாக ஆத்மா அவனுக்கு நினைவு வருகிறது.

. தெய்வத்தின் திருமுகத்தை உள்ளே காண்கிறான்.

. மனித அச்சை தெய்வ ஜோதி தகர்த்தெறிகிறது.

. தன் சிகரத்தின் உச்சியை திரை விலக்கிக் காட்டுகிறாள், அங்கு அவள் அவன் தோழன்.

. அதுவரை அவள் கையில் அவன் சொக்கட்டான் காய்.

. தோற்றத்தில் தலைவன், நடைமுறையில் அவள் கருவி.

. அவள் எண்ணத்தால் அசையும் எழுதப்பட்ட சித்திரம்.

. கனவுலகில் அசையும் காற்றென செயல்படுகிறான்.

. விதியின் பிடியுள் விரும்பி நடக்கும் ஜீவனற்ற சிலை.

. அவள் சாட்டையால் நடத்தப்படும் தடுக்கி விழும் ஜீவன்.

. எண்ணம் தடுமாறுகிறது, காலமெனும் நிலத்தில் காளை எனும் மனிதன்.

. தன் நினைவு என அவன் நினைப்பது அவள் பட்டறையில் தீட்டியது.

. இயற்கையின் இயல்பான சட்டத்தை ஏற்கும் மனிதன்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜடம் தெய்வத்தை நாடும் பொழுது துன்பம் என்ற பாதை வழியே செல்கிறது. ஜடம் தெய்வத்தை ஏற்றுக் கொண்டு சத்திய ஜீவியத்தை நாடினால் துன்பத்தின் வழியே செல்லத் தேவை இல்லை. அதன் பாதை ஆனந்தமாகும். அதுவே அன்னையின் அவதார நோக்கம்.அன்னையை ஏற்றுக்கொண்டால் துன்பத்தை ஆனந்தமாக மாற்றலாம்.

துன்பம் இன்பமாகும் அன்னை முறை.


 


 


 


 



book | by Dr. Radut