Skip to Content

10.மலரும் மணமும்

"அன்னை இலக்கியம்"

மலரும் மணமும்                                                                                                                                

(சென்ற இதழின் தொடர்ச்சி....)     

மகேஸ்வரி

அணுவில் அமைதி:

     "முல்லை, நீ மட்டும் நேற்று பணம் கட்டாவிட்டால் என் நிலைமை என்னவாகியிருக்கும்?'' என்றாள் செண்பகம்.

     நேற்று நடந்த விஷயங்களை, செண்பகத்திடம் முழுவதுமாகச் சொன்ன முல்லை,

     "இந்தா, இந்தப் பூவை தினமும் எப்பாடுபட்டாவது கொண்டுவந்து உன் முன்னால் வைத்துகொள்இல்லையென்றால் தலையில் வைத்துக் கொள்இதன் பெயர் விருட்சிப்பூஇட்லி போல் உள்ளதால் இட்லிப்பூ என்றும் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Ixora என்பார்கள்உனக்கு வீட்டில் இருக்கும் டென்சனுக்கு இது ஒன்றுதான் மருந்துஇதைவிட சிறந்ததை வேறு யாராலும் தர முடியாதுஇதை வைத்துப் பார்வீட்டிலுள்ள மாமியார் பிரச்சினை தீருகிறதோ இல்லையோ, ஆனால் உன் மனதில் அமைதி பிறக்கும்அப்பொழுது அவர்கள் ஏதாவது சொன்னால்கூட பெரியதாக உனக்கு ஒன்றும் தோன்றாதுஅதையே மனதில் வைத்துக்கொண்டு வேலையில் கவனத்தைச் செலுத்த முடியாமல் தடுமாறவும் தேவை இருக்காது''.

     "இந்தப் பூவிற்கு இவ்வளவு மகிமையா?''

     "அனுபவித்ததைத்தான் சொல்கிறேன். உன் அறிவைக் கொண்டு கணக்கு போடாதே. சில நேரங்களில் மட்டும்தான் அது வழிகாட்டும்ஆனால் அது காட்டும் வழியும் அரைகுறையாகத்தான் இருக்கும்ஏனெனில் அதற்கு ஒரு பக்கம் தான் பார்க்கத் தெரியும்அறிவிற்கு மேற்பட்டது ஒன்றுண்டு. அதற்கு என்ன பெயர்என்று தெரியாமல் இருக்கலாம்சிலர் ஆன்மா என்பார்கள்உள்ளுணர்வு எனலாம்நான் சைத்தியப்புருஷன் என்பேன். அது காட்டும் வழியில் போகக் கற்றுக்கொண்டால், சிக்கல் ஏதும் வாராதுநீரோட்டத்துடன் போகும் படகைப்போலச் சுகமாகக் கரை சேர்ந்துவிடலாம்''.

     "செண்பகம், எனக்கு ஒரே தலைவலியாக இருக்கிறது. வருகிறாயா காபி சாப்பிட்டுவிட்டு வரலாம்?''

     "இந்தா இதுதான் காபி'' என்று தன் முன்னால் நீட்டப்பட்ட சிறிய பந்துபோன்ற அழகிய வெள்ளைநிற மலர்ச்செண்டை கையில் வாங்கிய லில்லி,  "இதுவா காபி!''

     "இதைக் கையில் வைத்துக்கொள். காபி சாப்பிட்டால் எப்படி தலைவலி தீருமோ அதைவிடச் சீக்கிரமாக உன் தலைவலியை நீக்கிவிடும்''.

     "ஓகே மேடம்'', என்று கையில் வாங்கிய மலரைத் திருப்பி, திருப்பி பார்த்துக்கொண்டே சென்ற லில்லி, பத்து நிமிடங்களுக்குப் பின்னால், "முல்லை, முல்லை! அதிசயம்! ஆனால் உண்மை! என் தலைவலி போய்விட்டது. காபி + டிஸ்பிரினுக்கு மட்டுமே அசையும் என் தலைவலி இந்தப் பூவால் போய்விட்டது. என்னால் நம்பவே முடியவில்லையே! எனக்கு இந்தப் பூ தினமும் வேண்டுமே''.

     "ஆமாம், தலைவலி மட்டும் தான் போகுமா, இல்லை எந்த வலி என்றாலும் போய்விடுமா?''

     "எனக்குத் தெரிந்தவரையில் உடலின் அணுக்களில் ஏற்படும் அமைதிக் குறைவினால்தான் வலி ஏற்படுகிறது. அதனால் எந்த வலியாக இருந்தாலும் இந்தப் பூ அதை நீக்கிவிடும்''.

     "காது வலியைக் கூடவா?''

     "ஏன் சார், காதில் வைத்துப் பார்த்தால் தெரிந்துவிடுமே''.

     "நம்பிக்கையுடன் வைத்தால் உடலிலுள்ள எந்த வலியும் போகும்ஏனென்றால் நம் உடம்பு பல அணுக்களால் ஆனதுஅவ்வணுக்களில் ஏற்படும் சுமுகக் குறைவினால் தான் வலி ஏற்படுகிறதுஅதனால் விருட்சிப் பூவுடன் கொடி ரோஸையும் சேர்த்து வைத்தால் சுமுகம் ஏற்பட்டவுடன் அமைதியும் சேருவதால் உடனடியாக வலி நீங்கிவிடும்''.

     "எனக்கு ஏதாவது சொல்லேன் முல்லை. இந்தப் பணம் கிடைத்ததற்கு ஆயிரம் தடவை உனக்கு நன்றி சொல்லலாம்என் பிரச்சினைக்கு ஏதாவது வழி இருக்குமாவீட்டை நினைத்தாலே வயிற்றை யாரோ பிசைகிறாற்போல இருக்கிறது. சாயந்திரம் நெருங்க நெருங்க வீட்டிற்குப் போகவேண்டுமே என்று இருக்கிறதுநீ பரவாயில்லை. உன்னைப்போல் நானும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அதுவும் என்னிடம் கிடையாதுஅம்மா வீட்டிற்குப் போய் இருக்கலாம் என்றால் அதுவும் முடியாதுஏதோ என்னை விட்டுப் பிரிய மனமில்லாதவர்போல என் வீட்டுக்காரர் வந்துவிடுவார்அவரைப் பொருத்தவரையில் சாப்பாட்டுச் செலவு மிச்சம்; அதை பேங்கில் சேமித்து வைக்கலாமேஎன்ற ஆசைஅவரிடம் அவர் அம்மாவைப் பற்றிச் சொன்னாலும் சின்ன வயதில் தன்னைப் படிக்க வைப்பதற்காகப் பட்ட சிரமங்களைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார். வயதானவர்கள்; நான் அனுசரித்துப் போகலாம் என்றால், நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம், நான் மருமகளாக இருப்பதே குற்றம் என்று பழகுகிறவர்களிடம் நான் எப்படித்தான் இருப்பது? உன் மதர் எனக்கு ஏதாவது வழிகாட்டுவார்களா?

     "அதென்ன உன் மதர், என் மதர் என்று சொல்கிறாய்நம் எல்லோருக்கும் அவர்கள் மதர். பிரச்சினையை உன் கண்ணோட்டத்தில் பார்க்கின்றாய். அதனால் உனக்கு அது பெரியதாக இருக்கிறதுஉன் மாமியார் கண்ணோட்டத்தில் என்றாவது நீ யோசித்துப் பார்த்திருக்கிறாயா?''

     "நீ சொல்வாய்; உனக்கென்ன தெரியும் என் பிரச்சினையைப் பற்றி? உன்னிடம் கொஞ்சம்தான் சொன்னேன். எனக்குத் திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகின்றனஎன்று உனக்குத் தெரியுமா? குழந்தை இல்லை என்றும் தெரியுமல்லவா? ஆனால் உனக்கொரு முக்கிய விஷயம் தெரியாது. அவர் தம் அம்மாவுடன்தான் படுத்துக்கொள்கிறார்அவர் அம்மாவிற்கு பயம்எனக்கொரு குழந்தை பிறந்தால் தன் பையனுக்கு தன் பிள்ளைமீது பாசம் வந்துவிடும்தன்னை விட்டு ஒதுங்கிவிடுவான் என்பதற்காகச் செய்கின்ற வேலையிதுஇது அந்த மனிதனுக்கு சொன்னாலும் புரியாதுஎதற்காக கல்யாணம் செய்துவைத்தார்கள்என்று பல தடவை யோசனை செய்திருக்கிறேன்பிறகுதான் புரிந்தது "சம்பளம் கொடுக்கின்ற' வேலைக்காரி தேவைப்பட்டிருக்கிறதென்று''.

     "இப்பொழுது நீயே உன் மாமியார் பிரச்சினையைச் சொல்லிவிட்டாய்அவருக்கு பயம்அந்த பயம் தான் உன்னிடம் வேறுவிதமாக வருகின்றது.

****

     "மல்லிகை, இன்றைக்கு ரோஜாக்கா வீட்டில் தைரியத்தை வைத்து இருக்கின்றார்களா?''

     "உனக்கெப்படி முல்லை தெரியும். போனில் ஏதும் சொன்னார்களா?''

     "நீ நேற்று வழக்கம்போல் அந்திமல்யைப் பற்றி சொன்னாய்இன்று செண்பகம் தன் கதையைச் சொன்னாள்நான் அதை அன்னையிடம் சொன்னேன்இவர்கள் இருவருக்கும் "தைரியம்' தேவைநம் வீட்டை விட ரோஜாக்கா வீட்டில்தான் பூவிற்கு அதிகம் மதிப்பு கொடுப்பார்கள்அதனால் நம் வீட்டைத் தேடி தைரியம் வரப்போவதில்லைநிச்சயமாக இன்றைக்கு மாமா பூ தேடப் போகும்பொழுது அவருடைய கண்ணில் எருக்கம்பூவை அன்னை காட்டியிருப்பார்கள்அக்காவும் அதைப் பூத்தொட்டியில் வைத்து இருப்பார்கள்''.

     "எவ்வளவு நம்பிக்கையுடன் தீர்மானமாக நடந்ததைப் பார்த்ததைபோல் சொல்கின்றாய்?''

     "எனக்கு அன்னையைப் பற்றி இந்த விஷயத்தில் கொஞ்சம் தெரியுமே! நாம் நினைத்தவுடன் நமக்குத் தேவையான மலர்களை நம்மைத் தேடிவரச் செய்துவிடுவார்களே!'' என்று முல்லை கூறியவுடன் காலிங்பெல் அடித்தது.

     "மல்லிகை, இந்தா தைரியம். உன் அக்கா கொடுத்து வரச் சொன்னாள்நான் வரட்டுமா''.

     "பார்த்தாயா' என்று முல்லை தன் சகோதரியைப் பார்த்தாள்.

****

     அந்திமல்லி வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்முகத்தில் திருப்தியும்,சந்தோஷமும் பொங்கி பூரித்திருந்தது.  "இனிமேல் எனக்கு எந்தவொரு கவலையுமில்லை. அன்பான கணவர்அருகிலேயே மனம்விட்டுப் பேச தோழிஆபீசின் சூழ்நிலையும் நன்றாக இருக்கிறது'.

     "ஹப்பா, இனிமேல் பயப்பட எந்தவொரு காரணமும் இல்லை'' என்று கணவரிடம் மகிழ்ச்சியுடன் கூறினாள்.

     "நீயாக எதையாவது நினைத்து பயப்படுகின்றாய். பயம் என்பது தொத்துவியாதிபோன்றதுஒன்றை நினைத்தால் போதும், ஒன்றுக்குப் பின் ஒன்றாக ஏதாவது ஒன்றுடன் சேர்ந்து உன்னை பயமுறுத்தும்''.

     "மல்லிகை எனக்கு எருக்கம்பூ கொடுத்திருக்கின்றாள்அதற்கு "தைரியம்'என்று பெயர்என்றும், அதைக் கையில் வைத்திருந்தால் தைரியம் தானாகவே உற்பத்தியாகும்என்றும் கூறினாள்''.

     "உனக்கு தைரியம் வந்தால் சரி! எந்தப் பூவை வேண்டுமானாலும் வைத்துக்கொள்'' என்றான் சந்திரன்.

****

     விடிந்தும் விடியாதபொழுது சந்திரனின் மயக்கத்தில், சூரியனின் கதகதப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த சமயம்.....

சந்திரனின் செல்போன் சிணுங்கியது.

தூக்கக் கலக்கத்தில் messageஐப் பார்த்த சந்திரன்,

     "அந்திமல்லி, உடனடியாக நான் அப்போலாவிற்குச் செல்ல வேண்டும்.அவசரமாக 'A' Positive தேவைப்படுகின்றது. போய் கொடுத்துவிட்டு வந்துவிடுகின்றேன்''.

     திடுக்கிட்டெழுந்த அந்திமல்லி,

     "வேண்டாமே'' என்று தடுத்தாள். "எனக்கென்னவோ பயமாக இருக்கின்றது. மனது சரியில்லை'' என்றாள்.

     "ஓர் உயிர் காக்க என் இரத்தம் தேவைப்படுகின்றது. இந்த நேரத்தில் படித்த நீயே பயப்படலாமாஇரத்தம் கொடுப்பதில் எந்தவொரு கெடுதலும் வாராது. வீணாகப் பயப்படாதே!''

     கையிலிருந்த எருக்கம்பூவை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்உடல் நடுங்கியது.

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

வாழ்வு நிலைக்கு மேற்பட்ட முன்னேற்றம் பிரச்சினை அற்றிருக்கும். அல்லது நம் சக்திக்குட்பட்டு முயற்சி அமையும்.வாழ்வு நிலையை முன்னேற்றம் மீறினால் சக்திக்குட்பட்ட முயற்சியானாலும் பிரச்சினை எழும்.

நிலையை மீறிய முன்னேற்றம் பிரச்சினை தரும்.


 


 


 


 book | by Dr. Radut