Skip to Content

12.ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15

     ஆகஸ்ட் 15, பிப்ரவரி 21 ஆகிய தேதிகள் அன்பர்கட்குப் புனிதமானவை. பகவான் பிறப்பதற்கு 100 அல்லது 200 ஆண்டுகட்கு முன் அத்தேதியில் நடந்த நிகழ்ச்சிகள், பின் வரப்போகும் புனிதத்தின் முத்திரையைத் தாங்கி வருவதைக் காணலாம்சர். வால்டர் ஸ்காட் ஆகஸ்ட் 15, 1771இல் பிறந்தவர்தலைசிறந்த நாவலாசிரியரானார். எவரும் எழுத்துமூலம் சம்பாதிக்காத பெரும் தொகைகளை ஈட்டினார். பகவான் யோகம் உலகத்திற்குப் பொறுப்பேற்கிறது; பிரபஞ்சத்தையும் தன் பொறுப்பில் கொண்டுவருகிறதுசர்க்காரில் ஓர் இலாக்காவில் எந்த ஊழியர் தவறு இழைத்தாலும் அப்பொறுப்பை மந்திரி ஏற்கிறார். லால் பகதூர் சாஸ்திரி இரயில்வே மந்திரியானபொழுது அரியலூரில் இரயில் ஆற்றில் விழுந்ததால், இராஜினாமா செய்தார்இதை சட்டப் பொறுப்பு constitutional responsibility என்பர்நம்மைச் சார்ந்தவர் எவர் செய்த தவற்றுக்கும் பொறுப்பேற்று குறையை நிறையாக்குவது பூரணயோகம். அதை நான் ஜீவியத்தின் பொறுப்பு conscious responsibility என்பதுண்டு. சர். வால்டர் ஸ்காட் தன்னுடனிருந்த publishersபதிப்பகத்தார் சிலர் ஏற்படுத்திய கடன்கட்குப் பொறுப்பேற்று தம் பெருஞ் செல்வத்தை இழந்தார்.  55ஆம் வயதில் இரவு பகலாக உழைத்து அந்த ஸ்தாபனங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டு இலாபத்திற்குக் கொண்டுவந்தார். அவர் ஏற்ற கடன் பாரம் பெரியதுஅவர் மரணத்திற்குப்பின் அவருடைய இன்ஷூரன்ஸ்மூலம் மீதி கடன்களை - அவர் பெறாத கடன்களை - வக்கீல்கள் அடைத்தனர். அவருடைய நாணயம் காப்பாற்றப்பட்டது.

- கடவுள்கள் பெயரை ஏற்றவர்கட்கு கடவுள்கள் அம்சம் அந்த அளவில் தவறாது வரும்.

- ஒருவர் மோட்சம் பெற்றால் முந்தைய 21 தலைமுறைகள் அந்த ஆன்மீகப் பலன் பெறுவர் என்பது மரபு.

****



book | by Dr. Radut