Skip to Content

13.கம்பளம் பேசுகிறது

கம்பளம் பேசுகிறது

      எகிப்து அரசன் சாலமன் விலங்குகள் பாஷையை அறிவார்.  தேங்காய் மட்டையும், புதுக்கம்பளமும் அன்னையுடன் பேசினநாம் வாக்கியமாகப் பேசுகிறோம்நாகரீகம் வருமுன் மனிதன் சொல்லால் பேசினான். "வா', "போ' என்பதே பேச்சுதலையை ஆட்டுவது பேச்சு. பேச்சு சப்தமாக எழுமுன் உணர்ச்சியாக இருந்தது. மரம் சூரிய ஒளியை நாடி வளைகிறதுவேர் நீரூற்றைத் தேடிப் போகிறது.  வேருக்குச் செய்தி சொல்லாகவோ, ஒலியாகவோ போவதில்லை; உணர்ச்சியாகப் போகிறதுஉணர்ச்சியான செய்தி விலங்குகளிடம் பரவுவதுபோல் தெய்வங்களிடமும் பரவுகின்றதுவிலங்கு உணர்ச்சி உடலுணர்ச்சி. உடலுக்கும் உயிருக்கும் உள்ள உணர்ச்சி ஆத்மாவுக்கும் உண்டு. விலங்கு உடலால் செய்வதை, தெய்வம் ஆத்மாவால் சாதிக்கிறது.

- அசைவு செயலாகிறது; சொல்லாகிறது.

-உள்ளே அசைவு தெரியுமானால், ஆத்மாவின் அசைவு தெரியும்.

- உள்ளே தெரியும் ஆத்மாவின் அசைவுக்கு கம்பளத்தின் கண்ணுக்குத் தெரியாத அசைவு தெரியும்.

- தேங்காய் முற்றியுள்ளதை மரத்தைத் தட்டிப்பார்த்துச் சொல்பவர் உண்டு. முற்றிய தேங்காயின் குரல் மரத்தில் வெண்கலமாக ஒலிக்கும்.

- ஜடப்பொருளுக்கும் குரல் உண்டு.

- ஆத்மா விழிப்பானால், கம்பளத்துடன் ஒன்றிய நேரம் கம்பளத்தின் குரல் கேட்கும். காததூரம் தள்ளியும் கேட்கும்.

****



book | by Dr. Radut