Skip to Content

03.உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்

உலகம்-மோட்சம்-ஸ்ரீ அரவிந்தம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)     

  கர்மயோகி

முடிவுரை

     The Life Divine இல் உள்ள முக்கிய கருத்துகளை பகவான் கூறும் புதிய முக்கிய அம்சம் புலப்படும்படி இதுவரை கட்டுரையை எழுதினேன்.  வாசகர்கள் அன்பர்கள் . அன்னையைப் பற்றி அமுதசுரபி, அன்னை தரிசனம் மூலமாகக் கேள்விப்பட்டவர்கள் அன்பர்களானார்கள் . தமிழ் மக்கள் அன்னயை அறிந்தனர். அறிந்தவர் ஏற்றனர். அதன் பலன்,

  • இதுவரை பலிக்காத பிரார்த்தனை பலித்தது.
  • அன்னை ஜீவியம் சூழலாக அவர் வாழ்வைத் தழுவியது.

     அன்னையை அறிவது ஆயிரம் கட்டங்கள், குறைந்தபட்சம் நூறு எனலாம்இது அவற்றுள் முதற் கட்டம்அடுத்த கட்டம் வர மனம் மாற வேண்டும் என்று அறிபவர் மனம் மாற முடியாமல் தவிக்கின்றனர். தாமுள்ள நிலையில் அன்னையை ஏற்றது முதலில் எனில், நம் நிலையை அன்னைக்கேற்றவாறு மாற்றி அன்னையை ஏற்பது அடுத்ததுஇது இரண்டாம் நிலைஅதனால் மனித வாழ்வு எல்லையைக் கடந்து தெய்வீக வாழ்வாக மாறும்நிலை ஏற்பட்டது. முடிவு மிக உயர்ந்தது, தெய்வங்களைக் கடந்தது. அதை 100ஆம் நிலை எனலாம். அன்னையின் வரலாறு, கோட்பாடுகளை அறிந்தவர், அவர் வாழ்வில் பரிச்சயமுள்ளவர் இக் கட்டுரையைப் படித்து, ஊன்றிப் படிப்பதால் புரிவதாகக் கருதினால், மனமாற்றம் ஏற்பட்டால் பெரும்பலனைப் பெறுவர். அப்பெரும்பலன் உள்ள நிலைகள் பல.

1) சத்தியஜீவியத்தில் அது ascent ஆக அல்லது ஆரம்ப descentஆகத் தெரியும். Ascent என்பது சத்தியஜீவியத்தை எட்டித்தொடுவது.  Descent என்பது தொட்டபின் சத்தியஜீவியம் அதனிடத்திலிருந்து நகர்ந்து நம்மை நோக்கி வருவதுஇதை நாம் யோகசித்தியாகப் புரிந்துகொள்ளக்கூடாதுநாம் இன்றுள்ள நிலைக்குரிய சத்தியஜீவிய அம்சமாக அறிய வேண்டும்எந்த நிலையிலும் எல்லா நிலைகளும் ஓரளவு உண்டு என்பது தத்துவம். உதாரணமாக கல் ஜடம். அதற்கு அறிவில்லைஎன நாம் அறிவோம்தத்துவரீதியாக கல்லுக்கும் அறிவுண்டுஒரு சிறுவன் விஷமமாக ஆற்றங்கரையில் நாம் உட்கார்ந்திருக்கும் பொழுது ஒரு கல்லை எடுத்து பின்புறமாக நம் முதுகை நோக்கி அடித்தால் அக்கல் அவன் கைதவறி நம்மீது படவில்லை என்றால், 1 வாரம் முன் நாம் அதே இடத்தில் அதே கல்லை எடுத்து அன்புடன் விளையாடியதால் அக்கல் நன்றியறிதலால் நம் மீது பட மறுக்கிறதுஎன்பது தத்துவ விளக்கம்கல்லுக்கும் அறிவுண்டு. அது இப்படிச் செயல்படுகிறது. அதேபோல் சத்தியஜீவியம் நாமுள் ள நிலையில் இதுபோல் செயல்படுகிறது என அறிய வேண்டும். இதன் முக்கிய vibration சுபாவம் சுமுகம்.

படிப்பதால் சத்தியஜீவிய சுமுகம் நம்முள் சிறப்பாகச் செயல்படும். பரம எதிரியானவர் சிரித்த முகமாகப் பேசுவார். இச் சுமுகம் ஓரளவு தெரியும்.

2) சத்தியஜீவியத்திற்கு அடுத்தது தெய்வீக மனம் (Overmind) இது கடவுள்கள் வாழும் லோகம்இந்த லோகத்திற்கு ஞானம் உண்டுஅத்துடன் உறையும் அஞ்ஞானமும் ஓரளவுண்டு. இருந்தாலும் அஞ்ஞானத்தால் சிரமமில்லாமல் ஞானம் செயல்படும் திறன் உண்டு. இக்கட்டுரையைப் படிப்பதால் தெய்வீக மனத்தின் திறனும் நமக்குச் சிறிதளவு வரும். நடைமுறையில் நமக்குத் தொடர்ந்து தொந்தரவு செய்யும் உறவினர், உடன் வேலை செய்பவர் நமக்கு வந்த இத்திறனால் அவர்கள் தொந்தரவு பலிக்கவில்லைஎனக் காண்பர்.

3) அடுத்த நிலை யோகியின் மனம். இது நேரடியாக விஷயத்தை அறிய வல்லது. ஐன்ஸ்டீன், பெர்னாட்ஷா, ராமானுஜம் இந்நிலையைச் சேர்ந்தவர்கள். The Life Divine சாரத்தை இக்கட்டுரை தருவதால், intuition நேரடி ஞானமும் நமக்கு மின்னல்போல் தோன்றும்.  M.A.. படித்து 8 வருஷம் வேலையில்லாமல் இப்பொழுது ரூ.4000/-த்திற்கு வேலை செய்பவர் இதைப் படித்தால் intuitive mind யோகியின் மனம் செயல்பட்டு அவர் மனத்தில் intuition மின்னலாகத் தோன்றும்.  அவர் மனம் வேலையிலிருப்பதால் அவருக்குத் தகுந்த வேலை அமெரிக்காவில் மாதச் சம்பளம் ரூபாய் 1 லட்சத்திற்கு காத்திருப்பது சூழல் மூலம் அவர் கண்ணில் பட்டு வேலை பெற்று அமெரிக்கா செல்வார்.

4) அடுத்தது ஞானதிருஷ்டியுள்ள ரிஷி மனம். இக்கட்டுரையைப் படிப்பவருக்கு ஞான திருஷ்டி ஆன்மீகமாக இருக்காது.  IASபரீட்சை 1962இல் எழுதியவர் கண்முன் 8 கேள்விகள் தோன்றின. அவை இரண்டு நாள் கழித்து பரீட்சையில் வந்தன. அதன் சூட்சுமமறிந்து அவர் தயாரானதால் IASஇல் அந்த பேப்பரில் முதலாக வந்தார்.

5) முனிவர் மனம் மௌனம் நிறைந்தது அடுத்த நிலைபல நாள் யோசனை செய்து புரியாதவை யோசனையில்லாமல் - மௌனத்தில் - இப்பொழுது புரியும்.

6) மனித மனம், கட்டுரை முகத்தைப் பிரகாசமாக்கும். அறிவு தீட்சண்யம் பெற்றது தெரியும்.

7)  உயிர் அடுத்ததுஉடல் முடிவானதுஉயிர் சந்தோஷமாக இருக்கும்உடலில் உள் ள வியாதி போய், ஆரோக்கியம் பெருகும்.

     இவை பெரிய பேறுகள் என்றாலும் மனதைத் தொடாஸ்ரீ அரவிந்தத்தின் மகிமையை நம் மனத்திற்கு உணர்த்தாஅது பிரமோஷன், எலக்ஷன் வெற்றி, சொத்து, பணம், பரிசு, பதவி இவற்றில் வெளிப்பட்டால்தான் தெரியும். The Life Divine பகவானுடைய Magnum Opus பெரு நூல். அதன் சாரம் மனதில் பதிவதால் செல்வம் பெருகும்அது அனைவருக்கும் புரியும். செல்வம் என்பது மனத்தின் திறமை. குணத்தின் சிறப்புஇந்நூலில் 30 பெரிய சிக்கல்களும் 770 பெரிய கருத்துகளும் மொத்தமாக 1452 இதர இனிய கருத்துகளும் உண்டுஅவற்றுள் முக்கியமானவை அறிவுக்குப் புரியுமாறு கட்டுரையில் எழுதப்பட்டுள்ளதால் அது புரிந்தால் குணத்தில் அக்குறை நீங்கி முடிச்சு அவிழும். அதனால் செல்வம் பெருகும். அதன் அளவுக்குக் குறைந்த பட்சம், அதிகபட்சம் உண்டுஅமெரிக்காவிலும் இன்று 1 மில்லியன் டாலர் பணம் பெரியது. அது குறைந்தபட்சம். அதிகபட்சம் 100 மடங்குஇந்நூல் இக் கட்டுரையால் புரியும். கட்டுரையை நிதானமாகப் படித்து மனம் சிறந்தால் 1 முதல் 100 வரை எந்தக் கட்டத்திலும் இச்செல்வம் பலிக்கும்எந்த அளவு பலிக்கும் என்பது படிப்பவர் Personality பர்சனாலிட்டியைப் பொருத்ததுபொதுவாக இந்நூல் போன்ற நூல்களை Scriptures படிப்பவர் சத்தியசீலர்களாகவும், நல்ல மனமுடையவர்களாகவுமிருப்பார்கள்நிபந்தனை என்றால் அவையிரண்டுமே நிபந்தனைகள்.

  • சொல், எண்ணம், உணர்ச்சி, செயல், ஜீவியம் தூய்மையான சத்தியத்தால் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். எளிய பாஷையில் ஒரு பொய் சொல்லக் கூடாது.
  • சொல், எண்ணம், உணர்ச்சி, செயல், ஜீவியம் Goodness நல்லெண்ணத்தால் மட்டும் நிரம்ப வேண்டும். கெட்ட எண்ணம் அறவே கூடாது.

     என் கட்டுரைகளில் போர் முதலியார், வால்டர் என்ற அமெரிக்கர், 12,000 மார்க்கட் விலையுள்ள நிலத்தை 27,000 ரூபாய்க்கு 10 வருஷமாக விற்க முடியாமல் 81,000க்கு விற்றவர் நிகழ்ச்சிகளை நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். 30 ஆண்டு வருமானம் முதலியாருக்கு ஒரு ஆண்டில் வந்தது. பெற்றுக் கொடுத்த அன்பரை தூஷித்துப் பேசினார் முதலியார்.  1 கோடி வியாபாரம் 800 கோடியான பொழுது வால்டர் காணிக்கை கொடுக்க மறுத்தார். 81,000 ரூபாய்க்கு நிலத்தை விற்றவர் உதவிய அன்பர் மனம் நோகப் பேசினார்இவை மனிதச் சுபாவம்உதவியவருக்கு உபத்திரவம் செய்வதுஇந்தச் சுபாவம் அந்த அருளைத் தடுக்கும்நன்றியறிதல் பொருத்தமான பரிகாரம். இம்மூவரும் அன்பர்களில்லை. பக்தியுள்ள குருக்கள் மகள்ள் திருமணம் ஆச்சரியமாக நிறைவேறியதுலாட்டரி பரிசைக் கையால் தொட மாட்டேன் என்ற சாஸ்திரி போன்றவர் மனம் தூய்மையானது. அப்படிப்பட்டவருக்கு உடனே பலிக்கும்.

     ஆன்மீகம், சத்தியஜீவியம், சரணாகதி, திருவுருமாற்றம் ஆகியவை உயர்ந்த இலட்சியச் சிகரங்கள் . இது போன்ற உன்னத குறிக்கோள்களை பணம், செல்வம் போன்ற லௌகீக முறைகளால் அடைய முயல்வது அறிவுக்குப் பொருந்துமா என்பது கேள்வி. இவை உன்னதமான யோக லட்சியங்கள் . செல்வம் யோக வாழ்வில் யோக இலட்சியம். உலகம் புறக்கணிப்பது செல்வமில்லை. செல்வம் மகாலட்சுமிஉலகம் செல்வத்தைப் புறக்கணிக்கவில்லை. உலகம் புறக்கணிப்பது தவறான முறையில் பெற்ற செல்வம். துறவி செல்வத்தைப் புறக்கணிக்கிறான்நமது இலட்சியம் துறவறமன்று, மோட்சமன்றுமோட்சம்பெற செல்வம் புறக்கணிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை நான் எழுப்பவில்லைவேண்டாம் என்பது உண்மை. சத்திய ஜீவியத்தையடைய செல்வம் இன்றியமையாத கருவிஎன்பது பகவான் வாக்கு.

  • செல்வம் ஆன்மீகமயமானது.
  • தவறு செல்வத்திலில்லை.
  • செல்வத்தை ஈட்டும் மனம் தவறாக இருக்கலாம். அது தவறு.
  • நல்ல முறையில் ஈட்டிய செல்வம் ஆன்மீக இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும் கருவி.

     மேற்கூறிய காரணங்களால் பலன் பணமாக வரும்என நான் கூறினேன்இது அனைவருக்கும் புரியும் பாஷை என்பதால் நான் அதை மேற்கொண்டேன்.

1920இல் எழுதி முடித்த The Life Divine 1940 இல்தான் முதலில் புத்தகமாக வெளிவந்ததுபகவானுடைய கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் அன்னை இரு எண்ணங்களைக் கைக்கொண்டார். அவையிரண்டும் நேர்எதிரானவை. இக்கொள்கைகள் பரப்பக் கூடியவையன்றுஅடுத்தது இவற்றைத் தெளிவாக எடுத்துக் கூறுவது நல்லதுஅர்த்தமற்றவர் பலர் செய்த முயற்சிகளை அன்னை விரும்பவில்லைபல ஆண்டுகளாக சத்பிரேம் என்பவரை The Adventure of Consciousnessஎன்ற நூலை எழுதத் தூண்டினார்பல ஆயிரக்கணக்கான மேல்நாட்டார் ஆசிரமம்வர உதவிய நூல் அதுஇரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. செய்பவரின் நோக்கம் முக்கியமானதுஆதரவு சேர்க்க விரும்புவது நல்ல நோக்கமன்றுஅது பிரச்சாரத்திற்குரியது என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது. கடுமையான கருத்துகளை எளிமையாக எடுத்துக் கூறும் அவசியத்தை அன்னை உணர்ந்து மேற்கூறிய நூலை எழுதத் தூண்டினார்.

  • சிக்கலான கருத்தை, சிக்கலின்றிக் கூறுவது நல்ல முயற்சி.
  • ஆர்வமுள்ள இதயங்களை அணுகும் எண்ணம் உயர்ந்தது.

     இவ்விரு நோக்கங்களும் பூர்த்தியாகும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை என்பதால், இக் கட்டுரை அன்னையின் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன்.

     நாம் காலத்தில் வாழ்கிறோம். ரிஷி காலத்தைக் கடந்து வாழ்கிறார். சத்தியஜீவிய வாழ்வு இவையிரண்டும் சந்திக்கும் இடத்தில் உள்ளதுஇன்று அது உலகிலில்லை. உலகிலில்லாத ஒரு லோகத்தை உலகிலுள்ள மக்களுக்கு உணர்த்தும் எழுத்து உண்டா? அப்படி ஒரு எழுத்திருந்தால், அது The Life Divineஐ விளக்கும். The Life Divine அப்படி எழுதப்பட்டது. . இறைவனின் லீலை இப்புதிய லோகத்திலிருப்பதாலும், அதற்குரிய கருவி மனிதனிடம் இல்லை என்பதாலும் ரிஷிகள் Process of Creation சிருஷ்டி ஏற்பட்ட வகையை அறிய முடியவில்லைபகவான் 1910இல் அந்த லோகத்தை நாராயண தரிசனமாகக் கண்டார். 1950 இல் உடலை விட்டு நீங்கி சூட்சும லோகத்தில் செய்த தவப்பயனால் 1956 இல் அந்த லோகத்தை பூமிக்குக் கொண்டு வந்தார். அதனால் சிறிதளவு நம் முயற்சி பலன் தரும் என்று நான் இக் கட்டுரையை ‘உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்’ எழுத முற்பட்டேன். இதன் சாரம்

· அவனே ஆட்டம், அவனே ஆடுபவன் 

  அவனே அரங்கம்

என்பதுஇக்கருத்தை சிறிதளவாவது நாம் நம் அனுபவத்தில் காண முடியுமா? அப்படிக் கண்டால் எழுத்தால் விளக்க முடியுமா? வரலாறு, இலக்கியம் நமக்குத் துணை செய்யுமா? என்று கருதிய பொழுது தோன்றியவற்றை இக் கட்டுரை கூறுகின்றது.

     ஒரு மனிதன் ஒரு குடும்பத்தை ஸ்தாபிக்கிறான். கம்பனி, ள்ளி, கல்லூரி போன்ற ஸ்தாபனத்தை நிறுவுகிறான்அந்த ஸ்தாபனத்திற்கு அவனே சிருஷ்டிகர்த்தாஅந்த ஸ்தாபனம் அவனுடைய அரங்கம். அது செயல்படுவது அவன் செயல் எனினும் அதுவும் அவனேஅவனே ஸ்தாபன நிர்வாகம், அவனே அதை நிறுவியவன், அவனே அந்த ஸ்தாபனம் என்பது ஓரளவு இக்கொள்கைகளை விளக்கும்இக்கருத்தை மனம் அறியும், உயிர் உணரும், உடல் செயல்படுத்தும். சிறிதளவு உணர முடிந்தாலும், மயிரிழை செயல்படுத்த முடிந்தாலும் இந்த ஞானம் நம் வாழ்விலிருந்து அஞ்ஞானத்தை அகற்றும். அதாவது தோல்வி குறையும்.  குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை இதைச் செயல்படுத்த முடிந்தால் அச்சோதனை வாழ்விலிருந்து இச்சக்தி தோல்வியை விலக்க வல்லது எனக் காட்டும்காலை நேரங்களில் செல்போனில் நம்பர் கிடைக்க 5 அல்லது 6 முறை அல்லது 10 முறை முயல வேண்டும்ஒரு குறிப்பிட்ட நெம்பர் தேவை எனில் அந்த நம்பரைக் கூப்பிடுமுன் மேற்கூறிய தத்துவத்தை இச்செயலில் உணர முயன்றால், அதாவது அதை நினைத்து நெம்பரைக் கூப்பிட்டால் நம்பர் கிடைப்பதைக் காணலாம்சிறிய செயலுக்கும் பெரிய செயலுக்கும் இச்சக்தியைப் பொருத்தவரை வித்தியாசமில்லை. டெலிபோனுக்கு அடுத்த கட்டிட நம்பருக்கும், அடுத்த நாட்டு நம்பருக்கும் வித்தியாசமில்லையல்லவா? அதுபோல் பெரிய காரியம் இதற்குப் பெரியதன்று. அதையும் சோதனை செய்து பார்க்கலாம். எந்தச் சோதனை செய்தாலும் ஒரு முறைக்கு மேல் செய்யக் கூடாது. எலக்ஷனில் M.L.A, M.P. பதவிகட்கு நிற்பவர் “நானே எலக்ஷன், நானே இப்பதவி, நானே பதவிகட்கு நிற்பவர் இவற்றை உற்பத்தி செய்தவன்” என்று பிரம்ம ஞானத்தை அறிவாலும், உணர்வாலும், செயலாலும் ஓரளவு அனுபவிக்க முடியுமானால் அவர் வெற்றி பெறுவது உறுதி. இந்த எண்ணம் பொதுவாக மேலிட்டபடி ஒருவர் தம் வாழ்வை அமைத்துக் கொண்டால் சூழலினின்று தோல்வி அகலும், வெற்றி நிலைபெறும்.

     வேதம் ஞான காண்டம், கர்ம காண்டங்களையுடையது. ஞானமும், கர்மமும் பிரிந்தனஞானத்தை ரிஷியும், கர்மத்தை சாஸ்திரியும் ஏற்றனர்ஐக்கியம் சக்தி வாய்ந்தது. பிரிவினை பலஹீனமானதுஇப்பலவீனம் சாஸ்திரிகளை ஏழ்மைக்கு உட்படுத்தியது. அதனால் “ஏழைப் பிராமணன்” என்ற பதம் உயிர் பெற்றது. ஏழ்மையை மீறி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்தணர் கர்மகாண்டப் பயிற்சியைக் கைவிட மறுத்தனர்.  இது இமாலய உறுதிஇது இந்திய நாட்டு ஆன்மீகம் பெற்ற கிரீடம்.  ஞானமும், கர்மமும் இணைவது ஸ்ரீ அரவிந்தம். அங்கு ஏழ்மையோ, தோல்வியோ இல்லைபகவானுடைய தத்துவங்களில் தலைகீழ் மாற்றம் பெரியதுஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டம் போகும் பொழுது செயல் மாறும்அதுவும் தலைகீழ் மாறும். அம்மாற்றம் பெரிய சக்தியை மனிதனுக்கு அளிக்கும். விவசாயம், பாக்டரி உற்பத்தி, வியாபாரம், நகரவாழ்வு, பணம், கல்வி ஆகியவற்றில் நாம் அம்மாற்றங்களைக் காண்கிறோம்.

     அது போன்ற ஆயிரம் மாற்றங்களால் சமூகம் உயர்ந்துள்ளது. இப்பொழுது ஸ்ரீ அரவிந்தம் ஆன்மீக மாற்றத்தைத் தருகிறது.

  • அதை மனிதகுலம் ஏற்றால் கர்மம் கரையும்.
  • காலத்தின் ஆட்சி முடியும்.
  • மனம் விரிந்து தோல்வியை இழக்கும்.
  • தீமை முழுவதும் கரைந்து மறையும்.
  • சத்தியஜீவிய அற்புதம் அன்றாட நிகழ்ச்சியாகும்.
  • யுகம் க்ஷணமாகும்.
  • புறம் அகத்தின் பகுதியாகும்.
  • ஜீவாத்மா பிரபஞ்ச ஆத்மாவாகி தானே பரமாத்மா என விளங்கும்.

     வேட்டையாடியவன் விவசாயம் செய்ய முற்பட்ட பொழுதும், தான்யத்தை விளைவித்துத் தானே சாப்பிட்டவன், பிறருக்கு விற்று வியாபாரத்தை ஏற்படுத்திய பொழுதும், பண்ட மாற்றுக்குரிய பணம், சமூக சக்தியாகி உலகை ஆண்ட பொழுதும், பேச, கூட்டல், கழித்தல் போட ஏற்பட்ட கல்வி அறிவால் அரசபதவியை அறிஞனுக்கு அளித்த பொழுதும் இன்னும் ஆயிரம் செயல்களில் மனித முன்னேற்றம் ஏற்பட பொழுதும் இன்னும் தலைகீழ் மாற்றத்தைக் கருவியாக்கியது. அவை அனைத்தும் பகுதியான மாற்றங்கள் . ஸ்ரீ அரவிந்தம் அனைத்துப் பகுதிகளும் கொண்ட முழுமையான பரிணாம ஆன்மீக மாற்றம்.

     காய்கனியை உண்டு வாழ்ந்தவன் பயிரிடப் பயின்றான். ஓரிடத்தில் காய் தீர்ந்துவிட்டால் அடுத்த இடம் சென்றான். மனிதன் நாடோடியாய் வாழ்ந்தான். இயற்கை கொடுத்த உணவை உண்டான். அறிவு வளர்ந்தது. தானே பயிரிட ஆரம்பித்தான்இயற்கை அது வரை உற்பத்தி செய்ததை அவனே விவசாயியாகி உற்பத்தி செய்தான். அதன் விளைவாக நாடோடி மனிதன் ஊரும், குடியுமாக ஓரிடத்தில் நிலைத்தான். அடுத்த கட்டத்தில் சுத்தி, சக்கரம், பலகை, வீடு, பாத்திரம் என ஆயிரம் பொருள்களை கற்பனையால் உருவாக்கினான். இவை இயற்கை உற்பத்தி செய்தவையில்லை. அவற்றை உற்பத்தி செய்ய பாக்டரியை ஏற்படுத்தினான். நாடோடி இயற்கை உற்பத்தி செய்த தான்யத்தை இவனே உற்பத்தி செய்தான். இயற்கையிலில்லாத பொருள்களை மனதால் இவனே உற்பத்தி செய்து, அவற்றை உற்பத்தி செய்இயற்கையிலில்லாத பாக்டரியை ஏற்படுத்தினான். இவை மாற்றம். செயலின் போக்கு தலைகீழ் மாறுகிறதுஉடல் விடுதலை பெற்றது. க டுமையான உடலுழைப்பு கடுமையிழந்ததுதனக்காக உற்பத்தி செய்தவன் பிறருக்காக உற்பத்தி செய்து, இல்லாத வியாபாரம் என்ற பழக்கத்தை ஏற்படுத்தினான்வாழ்வு கடுமையிழந்து ஓரளவு சௌகரியம் பெற்றதுகல்வி, பணம், விஞ்ஞானம் போன்றவை எழுந்தனபுதியன மாற்றத்தை ஏற்படுத்தினமனிதன் இயற்கையினின்று விடுபட்டான்வனவிலங்குகளினின்று பெரு விடுதலை பெற்றான். குளிர், புயல், பஞ்சம், பூகம்பம் ஆகியவற்றிலிருந்து பெரும்பாலும் விடுதலையடைந்தான்அவன் பெற்ற வசதிகள் விடுதலைகளாகும். அவை ஆயிரம், பதினாயிரம். அதுவே நாகரீகம்.

     1900இல் இப்பெரும் சாதனைக்குப்பின் மனிதன் தான் பெற வேண்டிய விடுதலைகள் மேலும் ஏராளம் என அறியாத நிலையில் பகவான் செயல்பட ஆரம்பித்தார். அச்சமயம் மனிதன்

· காலத்திற்குக் கட்டுப்பட்டவன்.

·தோல்வியை விலக்க முடியாத நிலையிலுள்ளவன்.

· அறியாமையிலிருந்து தப்பிக்க முடியாதவன்.

· கர்மம் ஆட்சி செலுத்தியது.

· தீமை புவியெங்கும் பவனி வந்தது.

·அகந்தை ஆர்ப்பாட்டம் செய்து, ஆக்ரமித்துக் கொண்டிருந்தது .

    அதுவரை மனிதன் ஜடமான உடலிலிருந்தும், உயிரிலிருந்தும், மனத்திலிருந்தும் தலைகீழ் மாற்றத்தால் அனுதினமும் விடுதலை பெற்றவாறிருந்தான். பகவான் ஆன்மீக மாற்றம் உண்டுஎனக் கண்டார்ஆன்மாவுக்குப் பரிணாம வளர்ச்சியுண்டு எனக் கண்டார். கண்டது நாராயண தரிசனமாயிற்றுஉலகம் கர்மத்திலிருந்தும், காலத்திலிருந்தும், மனத்திலிருந்தும், தீமையிலிருந்தும், வேதனையினின்றும், மரணத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் தலைகீழ் மாற்றத்தால் விடுதலை பெறலாம் எனக் கண்டார்.

·அவர் கண்ட தத்துவம் ஆன்மீகப் பரிணாமம்.

· அதுவே ஸ்ரீ அரவிந்தம்.

·அதை ஆன்மீகத் தலைகீழ் மாற்றம் எனலாம்.

     இக்கருத்து வாசகர் மனத்தை சிறிதளவேனும் தொட்டால், The Life Divine புரியும், மனமாற்றப் பலன் பெறலாம், அமெரிக்க கோடீஸ்வரனாக இந்திய மக்கள் சுபிட்சம் பெறலாம்.

     எதையும் நம்பாத ஜடமனம் வளர்ந்து பிராணனில் (vital mind) மனமாகச் செயல்பட்டால் இல்லாத மாயையை உற்பத்தி செய்து அதில் திளைக்கிறது. மேலும் பரிணாமத்தால் சிந்தனை மனமானால் அது பிரம்மத்தை இலட்சியமாகக் கொண்டு, பகுதியான பிரம்மத்தை முடிவாகக் கொள்கிறது. தொடர்ந்த வளர்ச்சி மௌனம், திருஷ்டி, நேரடி ஞானம், ஞானம் ஆகியவற்றைக் கடந்து சத்தியஜீவியத்திற்குக் கொண்டு வரும் பொழுது பூரண பிரம்மம் பொலிவு பெறும் சிருஷ்டி பிரம்மத்தின் முன்னிலையில் பிரபஞ்ச முழுவதும் மூன்றாம் நிலைக் காலத்தில் எழுந்து அற்புதத்தை அவனியில் வாழ்வாக நிலை நிறுத்தும்.

     ஜடத்தில் உள்ள உயிர் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஜடம் தாவரமானால்,

--தானுள்ள இடத்தில் உள்ள உணவால் உருவம் உயிர் பெறுகிறது.

--மிருகம் இடம் விட்டு இடம் சென்று இயற்கையில் உள்ளதை உண்டு உயிர் வாழ்கிறது.

--மனிதனும் விலங்காக வாழ்க்கையை ஆரம்பித்தான்.

--விலங்கில் செயல்படாத மனம் மனிதனில் செயல்படுவதால்,

--விவசாயத்தால் இயற்கையின் உற்பத்தித் திறனை தானே மேற்கொண்டான்.

--தொழில் (industry, manufacturing) என்பது மனம் ஜடத்தில் செயல்பட்டுப் பொருளை உருவாக்கி உற்பத்தி செய்வது. அது இயற்கையிலில்லாத பொருள். அப்பொருளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் இயற்கையிலும், உலகிலும் இல்லாதது.

--மனம் பிராணனில் - சமூகத்தில் - செயல்படுவதால் வியாபாரம், பேச்சு, போக்குவரத்து, நகரம், மனித உறவு, கலைஎன உற்பத்தியாகி ஜடமான மனிதனின் விலங்கு வாழ்வை மனித வாழ்வாக மாற்றி ஆன்மா வாழ்வில் சட்டம், பண்பை உற்பத்தி செய்வது நாகரீகம்.

· அவற்றிற்கு அடிப்படையான ஆதாரமாக மனம் சமூகத்தில் சிருஷ்டித்தது கல்வி, சாஸ்திரம் என்றனர் முன்னோர்.

·ஆன்மா தன்னில் செயல்படுவது (Concentration that dwells on itself) தவம், யோகம். இவற்றின் கருவி மனம்.

· The partial Spirit acts through its own aspects of Silence, Light, Intuition and Knowledge. பகுதியான ஆன்மா தன் அம்சங்களான மௌனம், ஜோதி, ஞானம் செயல்பட்டு தன்னைக் கடந்து முழுமையான ஆன்மா ஆவது சத்தியஜீவியம்.

சத்தியஜீவியம் பிரம்மம் தேடும் ஆனந்தத்தைச் சிருஷ்டிக்கிறது

     விவசாயம் உயிரை வளர்க்கும் உணவை உற்பத்தி செய்கிறது. இதில் மனம் இயற்கையின் செயலை ஏற்றுச் செயல்படுகிறது.  In agriculture mind organises the activity of Nature to produce food that sustains life.

     தொழிலில்(industry) மனம் ஜடத்தில் அறிவை வளர்க்கும் பொருள்களைச் சிருஷ்டித்து, அவற்றை உற்பத்தி செய்யும் பாக்டரியையும், விநியோகம் செய்யும் வியாபாரத்தையும், விளக்கம் தரும் கல்வியையும், அவை அனைத்திலிருந்து விடுதலை தரும் மோட்சத்தையும் சிருஷ்டிக்க அடிகோலிற்று.

      விடுதலை பெற்ற ஆன்மா தன்னையறியவில்லை. It is an unconscious accomplishment.

     விடுதலையைத் துறந்த ஆன்மா தன்னையறிந்து பிரம்மம் தேடிய ஆனந்தத்தை சிருஷ்டிக்க சத்தியஜீவியத்தை பிரபஞ்சத்தில் எட்டியது.

     மனம் அறியாமையில் சிருஷ்டித்தது. தன்னையறிந்தபின் ஞானத்தில் மனம் சிருஷ்டிக்க முயலும்பொழுது தானே சத்தியஜீவியமாகப் பரிணாம வளர்ச்சி பெறுகிறது.

     The human soul mistakenly taken to be the desire soul, comes out of ignorance to become the psychic which by further evolution discovers itself as Ishwara, the Supramental Being, the Psychic Being in Material Substance thus covering the entire gamut of the play from the Self-Conscious Being to its inversion Matter where Mind serves as the formal object to initiate knowledge, action and delight of existence.

நமது அன்றாட வாழ்வில் சத்தியஜீவியம்:

· எப்படி பரமாத்மா ஜீவாத்மாயிற்று என்பது சிருஷ்டி ஏற்பட்ட வழி.

· அதைச் செய்தது சத்தியஜீவியம்.

· Page No.129, The Life Divineஇல் இந்த விளக்கமிருக்கிறது.                       அதை முடிவில் சுருக்கிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

--சிருஷ்டிஎன்பது பிரகிருதி எனும் இயற்கை.

--புருஷன் ஜீவன், பிரகிருதி இயற்கை எனும் சிருஷ்டி.                  புருஷன் பிரகிருதியாவது சிருஷ்டி.

--பிரகிருதிஎன்பது முழுமையாக புருஷனுடைய ஞானதிருஷ்டி.

புருஷன் தன் திருஷ்டியால் சிருஷ்டித்தான். (Seer will)

அது அவன் இச்சை.

--தன்னிச்சையால் சிருஷ்டிக்கும் கருவி சித்-சக்தி.

--சித்-சக்தி சத் புருஷனுடைய (Conscious Being) இச்சை(Will).

--சத்புருஷன் பரிணாமம்எனும் வேலையில் ஈடுபட்டு உள்ளான்.

--வேலைஎன்பது சத்தியத்தை சக்தியின் ரூபமாக்குவது.

--சத்தியம் என்பது புருஷன் நிர்ணயித்த சத்தியம்.

--புருஷன் தான் ஏற்கனவே சிந்தனையால் சிருஷ்டித்த சத்தியத்திற்கு ரூபமும் சக்தியும் தருவது சிருஷ்டிஎன்ற பிரகிருதி.

     சத்புருஷன் தானே விரும்பி நிர்ணயித்த சத்தியத்திற்குத் தன் இச்சையால் ரூபமும் சக்தியும் தருவது சிருஷ்டிஎன்பது பகவான் விளக்கம்எதை நமக்குக் கேட்க உரிமையில்லை என ரிஷிகள் கூறினார்களோ அதை இச்சொற்களால் பகவான் விளக்குகிறார்.

     நம் வாழ்வில் நாமே நமக்கு பிரம்மம் - அதாவது புருஷன் - சத் புருஷன்.

நாமே நம் வாழ்வின் சிற்பி.

     நமது வாழ்வு நமது சத்தியத்தை வெளிப்படுத்துகிறது.

     எது நமக்கு சத்தியம் என நாம் (Self-conception) நிர்ணயிக்கிறோம்.

     சிந்தனையால் நிர்ணயித்ததைச் செயல்படுத்துவது நமது செயல் (will) உறுதி, இச்சை.

    நாம் நிர்ணயிக்கிறோம், நாமே செயல்படுத்துகிறோம்.

    செயல்படுத்துவதுஎனில் எண்ணம் ரூபம் பெறுகிறது.

    ரூபம் பெறும் எண்ணம் தான் பெற்ற சக்தியின் அளவு திறன் பெறுகிறது.

(நமக்கு அக்கறையுள்ள அளவு நாம் சாதிக்கிறோம்).

     பிரம்மம் உலகை சிருஷ்டித்ததும், நாம் நம் வாழ்வை உருவாக்குவதும் ஒன்றே - முறை ஒன்று, நிலை வேறு.

     பிரம்மம் தெரிந்து, விரும்பிச் செயல்படுகிறது. நாம் தெரியாமல் ஆசையால் உந்தப்பட்டுக் கண்மூடியாகச் செயல்படுகிறோம். கண்மூடியாகச் செயல்படும் பொழுதும் பிரம்மத்தின் முறையைக் கடைப்பிடிக்கிறோம். பிரம்மம் சத்தியத்தால் செயல்படுகிறது. நம் சத்தியம் துளி, பொய் அதிகம். பொய் குறைந்து மெய் அதிகமாவது ஆன்மீக முன்னேற்றம். எந்த அளவு முன்னேற்றம் தேவையோ, அந்த அளவு மெய் வேண்டும்.

· மனிதன், எந்த அளவு உயர விரும்புகிறானோ அந்த அளவு சத்தியத்தை மேற்கொண்டால், அவன் தன் பர்சனாலிட்டிக்கு ஏற்றவாறு சாதிப்பான்.

·அன்பன் அதை அன்னையை ஏற்கும் அளவில் விரைவாக, முழுமையாகச் சாதிப்பான்.


 

பிரம்மம் தேடும் ஆனந்தம்

     பிரம்மமே ஆனந்தம். ஏன் பிரம்மம் ஆனந்தத்தைத் தேடுகிறது? There are grades and variations in ananda as in anyother thing. மாற்றம் நாம் நாடுவது. ஏற்றம் விரும்பத்தக்கது.அனந்தமான பிரம்மம், தான் பெற்றுள்ள ஆனந்தத்தை அனந்தமாக மாற்றவல்லது.

  • இந்த சிருஷ்டியில் ஒளிந்து கண்டுபிடிக்கும் ஆனந்தத்தைப் பிரம்மம் தேடுகிறது.

     ஒரு கேள்வி, இதுவரை சிருஷ்டியிலில்லாத ஆனந்தத்தை இனிப் பரிணாமம் மூலமாக மனிதன் பெறுவதை பிரம்மம் அனுபவிக்கப் போகிறதுஎன நாம் அறியலாம்அது உண்மை, முழு உண்மையில்லை. உண்மை கீழ்க்கண்டவாறுள்ளது.

  • பிரம்மம் என்றுமே முழுமையானது.

நம் ரிஷிகள் அதன் ஓர் அம்சமான அசையாத பிரம்மத்தைக் கண்டு அதுவே முடிவானது என்றனர்.

பகவான் முதலில் முழுப் பிரம்மத்தைக் கண்டார்.

--இது முழு ஆனந்தமுடையது.

--இது என்றும் அது போலவே இருந்து வருகிறது.

--மனிதன் இதை இனிக்கண்டு சச்சிதானந்தத்தின் முழுமையை அறிந்து யோக முன்னேற்றம் பெற வேண்டும். அதுவே பூரணயோகம்.

·மனிதன் பரிணாமத்தால் முழுப் பிரம்மத்தையும், அதன் முழு ஆனந்தத்தையும் கண்டால் முழுமையான பிரம்மானந்தத்தை அனுபவிப்பது, மனிதன் மட்டுமன்று, இறைவனான மனிதன் என்ற பிரம்மமும் அப்புதிய ஆனந்தத்தை அனுபவிக்கும்.

·அதனால் நாம் காணப் போவது இனி ஏற்பட வேண்டும் என்பதால் முழுப் பிரம்மமும், அதன் பூரண பிரம்மானந்தமும் இனிமேல்தான் மனிதனால் சிருஷ்டிக்கப்பட வேண்டும் என நாம் நினைக்கத் தோன்றும். அதை விளக்க,

--முழுப் பிரம்மமே முழுமுதற் கடவுள். ரிஷிகள் அதை அறியவில்லை. பகவான் ஸ்ரீ அரவிந்தர் அதைக் கண்டார்.

--அதில் அகந்தை, தீமை, மனம், காலம், மரணம் சிறுமையில்லை.

--பரிணாமத்தால் அந்த முழுப் பிரம்மமும் வளர்ந்து அது இதுவரையறியாத ஆனந்தத்தை மனிதன் இறைவன் ஆவதால் அறிய முற்படுகிறது.

·இதைச் சாதிக்க பிரம்மம் ஜடமாகி, தாவரம், மிருகமாகி, மனிதனாகி, சத்தியஜீவனாக முயல்கிறது.

--மனித முன்னேற்றம் மனத்தின் முன்னேற்றம்.

--இதை நாம் சமூக முன்னேற்றமாகக் காண்கிறோம்.

--இது மேல்நிலை அம்சங்கள் கீழுள்ள அம்சங்களில் வெளிப்படுவதாக அமைகிறது.

--வேட்டையாடியவன், விவசாயம், வியாபாரம், தொழில், நகர வாழ்வு, கல்வி, விஞ்ஞானம், ஆன்மீகம் மூலம் இதையடைய முயல்கிறான்.

·சாதகனுக்கு இரு பாதைகள் எதிர்கொள்கின்றன.

1) இன்றைய சமூக முன்னேற்றத்திற்குப் பரிணாம சக்தியைப் பயன்படுத்துவது.

2) பரிணாம வளர்ச்சியை மனிதனைக் கடந்து எடுத்துச் செல்லுதல்.

     முதலாவது வாழ்வு ஆன்மாவால் வாழ்ந்து வளர்வது. அடுத்தது ஆன்மா வாழ்வில் வளர்ந்து அதுவே புவி வாழ்வாவது.

முத்து, வைரம்

     முத்தையும், வைரத்தையும் அறிய முடியாத நிலையில் மனிதன் வாழ்ந்தான்சமூகம் வளர்ந்த பின், அவற்றின் மதிப்பு தெரிந்து போற்றிப் பயன்படுத்தி பெருமைப்பட்டான்விஞ்ஞான அறிவு அதிகமாக வளர்ந்த பொழுது, முத்தும், வைரமும் இயற்கையில் எப்படி உருவாகின ((Process of making them) என அறிந்து, அதன் மூலம் அவனே அவற்றைச் செய்தான்முத்தும், வைரமும் பிரம்மம் என்ற ஞானம் சித்தித்த ரிஷி முத்தைக் கையில் எடுத்து வைரமாக மாற்ற முடியும்அது இரஸவாதம்.  இது The Life Divine இல் உள்ள உதாரணம், விளக்கம்.

     தனித்தன்மை, பொதுத்தன்மை, சாரம்என்பதை அறிவதால் அவற்றைப் பயன்படுத்தவும், செய்யவும், மாற்றவும் முடிகிறது. பயன்படுத்த சமூகஅறிவும், செய்வதற்கு விஞ்ஞானஅறிவும், மாற்ற ஆன்மீக ஞானமும் தேவை. விஞ்ஞானஅறிவு ஆன்மீக அறிவாக மாற insight, intuition, integral experience உள்ளுணர்வு, ஞானம், பூரண அனுபவம் தேவைபூரண ஞானம் இரண்டறக் கலப்பதால் வருவது. ஞானம் ரிஷியைக் கடந்த யோகியுடையதுள்ளுணர்வு அறிவைக் கடந்து ஞானத்தையடையும் வழியில் உள்ளதுஅறிவு ஞானமாகு முன் உள்ளுணர்வு insight எழும் வாயில்களை 88ஆகக் கீழே எழுதியுள்ளேன்கீழேயுள்The Life Divine கருத்து எது முழுமையாகப் புரிந்தாலும் insight மின்னலாகத் தெறிக்கும்.

1) சங்கரர் எப்படி மாயையை நம்பினார்?

2) புத்தர் ஏன் பாதியில் விசாரத்தை நிறுத்தினார்?

3) அஞ்ஞான மாயைக்கும், தெய்வீக மாயைக்கும் எண்ணத்திலுள்ள தொடர்பு எது?

4) கணிதம் அறியாத அனந்தமெது?

5) தெய்வீகமனம் சிருஷ்டிக்கும் சத்தியம் ஏன் தனித்துத் துவங்குகிறது?

6) பிராணமயப் புருஷனிலிருந்து மனோமயப் புருஷனுக்கு மாறுவது எப்படி? மனோமயப் புருஷனிலிருந்து சத்தியஜீவனுக்கு மாறுவது எப்படி?

7) மாயை, சத்தியஜீவியம், அகமும்-புறமும், ஜீவியம், இயற்கை இவற்றிற்குள்ள தொடர்பு.

8) ஜடம் பிரபஞ்ச வாழ்வின் ஆனந்தம். தன் ஜீவியத்திற்குத் தன்னைப் புலன் உணர்வு அறியும் பொருளாகச் சமர்ப்பிக்கிறது.

9) மனம் உலகை சிருஷ்டித்ததுஎன்ற முடிவுக்கு ரிஷிகள் எப்படி வந்தனர்?

10) ஜீவாத்மாவுக்கு அமரத்துவம் உண்டுஎன ஏன் ரிஷிகளால் அறிய முடியவில்லை? (அவர் மனம் ஜடமனம். அதனால் அறிய முடியாது).

11) எதையும் நம்ப மறுப்பவன், மாயாவாதி, பிரம்மம், பிரம்மத்தின் முழுமை.

12) மனம் சச்சிதானந்தத்தின் முறையான அடிப்படை. தன்னை மனம் மூலம் சச்சிதானந்தம் தனக்கே ஜடமாகக் காட்டுகிறது.

13) வாழ்வின் இரு புதிர்கள் - பிறப்பு, இறப்பு.  (நினைவுக்குட்பட்ட மனம் நினைவைக் கடந்ததை அறிய முடியாது.)

14) நினைவு, மேல் மனம் அடிமனம் தலை கீழே மாறியது.

15) சன்னியாசி ஆத்மாவை அறிந்ததைப்போல் விஞ்ஞானி ஜடத்தை அறியவில்லை.

16) விரயமில்லை.

17) நம் வாழ்வில் சிருஷ்டியின் முறை செயல்படும் வகை (Process of creation in our life)

18) ள்ளுணர்வு - ஞானம் - பூரண ஆத்மானுபவம்.

· அறிவு காலத்தினின்று மூன்றாம் நிலைக் காலத்தைக் காண்பது உள்ளுணர்வு.

· உணர்வு காலத்தைக் கடந்த நிலையினின்று மூன்றாம் நிலைக் காலத்தைக் காண்பது ஞானம்.

·உடல் மூன்றாம் நிலைக் காலத்தைத் தன்னுள் உணர்வது பூரண ஆத்மானுபவம்.

19) முனிவர் - தெய்வ லோகத்திற்குப் போக உள் மனத்தை அடைவது தவிர்க்க முடியாதது. (தலைகீழ் மாறிய சிருஷ்டியை, பரிணாம நிலைக்கு மாற தலைகீழ் மாறும் வகை இது.)

20) அனைத்தையும் தன்னுட் கொள்ளும் பரிணாம முக்கியத்துவம் வாய்ந்தது சரணாகதி.

21) ஜீவனைச் சரணம் செய்தபின் பொருளையும் வெல்ல சுபாவத்தையும் சரணம் செய்ய வேண்டும் என்பதை அறிய பொருளையும்,ஜீவியத்தையும் அறிய வேண்டும்.

22)ஏன் தெய்வீக ஆன்மா ஏற்பட்டது? அதன் அம்சங்கள் கடவுளையும், ஆத்மாக்களையும் அது அனுபவிக்கும் வகை.

23)ஜடம் எழுப்பும் எதிர்ப்பு - அஞ்ஞானம், தமஸ், பிரிவினை, அவற்றின் தத்துவம்.

24) யுகம் க்ஷணமாவது எங்ஙனம்? (புறம் அகமாவது யுகம் க்ஷணமாகும் காரணம்).

25)இலட்சியம் உலகை முந்தியது.

26)அகந்தையின் ஆரம்பம். அதன் அமைப்பு, செயல்.

27)முடிவுவரை முயற்சியை முடிக்கக் கூடாது.  (பூரண யோகத்திற்குப் பூரண முயற்சி தேவை).

28) அற்புதம் மனிதனால் பரிணாமத்தால் சிருஷ்டிக்கப்படப் போவதில்லை. அற்புதம் ஆதி காலம் தொட்டுள்ளது. மனிதன் சத்தியஜீவியத்திற்கு உயர்ந்து அதைக் காண வேண்டும்.

29) பிரம்மம் ஆனந்தத்தைப் பரிணாமத்தில் தேடுவதுபோல் சிருஷ்டியிலும் பெறுகிறது.

30) மேலெழும் பொழுது, ஒவ்வொரு நிலையிலும் ஒரு திறனை நாம் இழக்கிறோம். கீழே வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் ஒரு திறனைப் பெறுகிறோம்.

31) பிரம்மம் தனக்குப் புதிய ஆனந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வல்லது.

32)சிருஷ்டியில் சூட்சும வாய்ப்பு, கண்ணுக்குத் தெரியாத நிர்ப்பந்தம், பலன்என மூன்று நிலைகள் ள்ளன. வாய்ப்பை உள்ளுணர்வால் அறிவது நல்லது. குறைந்தபட்சம் அது சிந்தனைக்காவது எட்ட வேண்டும்.

33)பிறருக்கு எதையும் சொல்ல முடியாதுஎன்ற கருத்தில் பொதிந்துள்ள ஆன்மீகச் சாரத்தை அறிய வேண்டும். அதைக் கடந்து சென்று சிந்தித்து, ள்ளேயுணர்ந்து, உடலிலும் உணர்ந்து அணு தன்னையறிந்து பரிணாமத்தால் மலரும்படிச் செய்வது ஞானத்தைக் கடந்து செல்ல முயல்வதாகும்.

34) சத்தியஜீவியத் திருவுருமாற்றம் தவிர்க்க முடியாதது.

35)பூரணம் பெற்ற தெளிவான கூர்மை பூரணம் சிறப்பெய்ய உதவும்.அந்நிலையில் பகுதிகள் முழுமையை முழுவதுமாக உணரும்.

36)விதி பெற்ற சுதந்திரம்.

37) சுதந்திரம் தன்னை இழக்கும் சுதந்திரத்தால் பேரானந்தம் பெறுவது.

38)மனமும் ஆத்மாவும் ஜடத்தில் செயல்படும் வேகம் அதிகம். அது செயலற்ற நிலையை எழுப்பும். அதனால் செயலற்ற நிலையே சிறந்த செயல் என்றேபடும்.

39) சர்வம் பிரம்மம் என்பதும், ள் ளது ஒன்றேஎன்பதும் எப்படி ஒன்று சேர்கின்றன?

வேத காலத்து ஐக்கியத்தை - புருஷப் பிரகிருதி ஐக்கியத்தை - ஏன் வேதாந்த ரிஷிகள் பிரித்தனர்? விஞ்ஞானி ஜடத்தை அறிந்ததைவிட சன்னியாசி ஆன்மாவை அதிகமாக அறிந்தும், ஏன் பிரம்மத்தின் முழுமையை அறியவில்லை? விஞ்ஞானி ஏன் ஜடத்தின் முழுமையைத் தவற விட்டுவிட்டான்?

40) பிரபஞ்ச ஜீவியத்தினின்று எப்படி ஒருவர் பிரம்ம ஜீவியத்திற்குப் போக முடியும்?

எப்படி பிரபஞ்ச ஜீவியத்தை எட்டலாம்?

41) விசாரம் நடுவில் நிறுத்தப்பட்டால் பிரபஞ்சம் எப்படி அதை ஏற்கிறது. ஏன்?

42) பாதாளமும், பரமாத்மாவும் இணைதல் ஏன் அவசியம்?

43) ஜீவாத்மாவே பிரபஞ்ச ஆத்மாவும், பரமாத்மாவுமாகும் என்ற கொள்கை நம் வாழ்வில் பழுத்துப் பலன் தருவது எப்படி?

44) அடிபட்டால் உடல் வலியால் பதிலிறுப்பது அவசியமில்லை. மரணம் உடலைத் தீண்ட முடியாமல் உடல் உணர்வு பெற்றுள்ளது.

காலமும், இடமும் அனந்தம்.

காலத்தைக் கடந்த அனந்தமுண்டு.

ஸ்தாணுவே சத்தியம்.

பிரபஞ்ச வாழ்வு அனந்தம்.

ஜீவன் சத்தியம், ஜீவியம் உண்மை.

மனிதன் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவன். வாழ்வு அப்படிக் கட்டுப்பட்டதில்லை.

45) அறிவு புலனினின்று விடுபட்டால், ஞானமாகும்.

46) அளவும், தரமும் மாயை.

47) சக்தி ஜீவனின் செயல், தனிப்பட்டதில்லை.

48) சச்சிதானந்தம் சிருஷ்டிக்குமுன் ஏற்பட்ட நிலையற்ற சூட்சும ஆனந்தத்தை சிருஷ்டியில் ஜடப் பொருளில் நிலையாக வெளிப்படுத்த முயல்கிறது.

49) அசைவற்ற சாரமான ஆனந்தம் சலனத்தில் வெளிப்படும் முறைப்படுத்தப்பட்ட ஆனந்தமாகிறது.

50) சிருஷ்டியின் சாவியாக இரகஸ்யம், அதற்குரிய பூட்டான சிருஷ்டி.

மாயை பிரம்ம ஜீவியம்.

மாயை பிரிக்கும் கடனைத் திறமையாக மனம் எனும் கருவிக்கு அளித்தது.

51) தெய்வீக மாயை, சத்தியம்-ஜீவியம், சத்தியஜீவியம், ஜீவனுள்முழு எண்ணம், ஜீவனின் கதிரான அலை. இவற்றுள் பொதுவான அம்சங்கள் வேறுபாடு.

52)தெய்வீக ஜீவியத்தின் பொதுவான மனத்தின் உண்மை.

ஆன்மீகச் சட்டம் ஞானி, ஞானம், ஞானம் அறிவது எனப் பிரிக்கிறது. சமமான சக்தி, மூன்றாகப் பிரியும் வகை.

53)ஏன் சத்தியஜீவியம் மூன்று நிலைகளை - கடவுள், ஜீவாத்மா, மனிதன் - ஏற்கிறது?

54) சிருஷ்டியின் முடிவு மனம்.

வாழ்வும், ஜடமும் சிருஷ்டியில்லையா?

55)தெய்வீக ஆன்மாவுக்கும் மனித ஆன்மாவுக்கும் உள்ள மாறுபாடு.

56)பிரபஞ்சம் அழிந்தாலும், வாழ்வு இருக்கும்.

57) மரணம் வாழ்வை அமரத்வம் பெறச் செய்கிறது.

58)மனோமயப்புருஷன் நம் ஆன்மாயில்லை.

59) பிணக்கால் அன்பெழும்.

60) சக்தியும் ஜீவியமும் பிரபஞ்சத்தில்தான் இணையும்.

61) லோகங்கள் 7 அல்லது 8, 10 அல்லது 12 ஆகும் என்பது ஏன்?

62)சைத்தியப்புருஷனை வாழ்விற்கும், ஜடத்திற்கும் இடையில் ஏன் வைத்தார்? ஏன் மனத்திற்கும் வாழ்விற்கும் இடையில் வைக்கவில்லை?

63)மேலே போக உ ள்ளே போக வேண்டியதின் அவசியம்.

64) முக்கிய ரூபத்தை அனந்தம் தன்னிச்சையால் எழுப்புகிறது என்ற கொள்கையை பகவான் எப்படி நிரூபிக்கிறார்?

65) -பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயை, பிரகிருதி, சக்தி என்பவை ஒன்று.

--சுயச்சிந்தனை, சுய அளவீடு, சுயமாகக் கிரஹிப்பது என்பவற்றிற்கும் மாயை, பிரகிருதி, சக்திக்கும் என்பவற்றிற்கும் உள்ள தொடர்பு.

--புதிய பரிணாம இரகஸ்யம்

இரு வாயில்கள்.

--சிந்தனையால் சிருஷ்டிக்கும் மாயை, செயல் திறனால் சாதிக்கும் பிரகிருதி, ஆகியவை சக்தியில் இணைந்து இரண்டையும் செயல்படுத்துகின்றன.

--காலமும், கடந்ததும் இணைந்து மூன்றாம் நிலைக் காலம் எழுவது.

66)காலம் உலகை சிருஷ்டித்தது.

முரண்பாடு மூலம்வரை வாராது.

பிரம்மமே சிருஷ்டி, சிருஷ்டியே பிரம்மம்.

67) நன்மையை இழக்காமல் தீமையை விலக்க முடியாது.

வேண்டாததை முழுமையாக அறிவது வேண்டியதை முழுமையாஅறிய உதவும்.

68)சுயஜீவியம் அஞ்ஞானத்தில் பெறும் சுயஅனுபவம் அகந்தை.

ஆன்மாவுடன் நேரடித் தொடர்புஎன்பது ஆன்மாவையும், இயற்கையையும் ஆழத்திலும் மேலும் அறிவது.

69) அஞ்ஞானம் மேல்மனத்தில் பூரணம் பெறுகிறது.

மேல்மனம் அடிமனம் தலைகீழே மாறியது.

சைத்தியப்புருஷன் ஆழ்மனக் குகையில் வசிக்கிறான்.

70) எளிமையான மாறுபாடு சிக்கலான குதர்க்கமாகும்.

71) பரமாத்மாவோ, ஜீவாத்மாவோ முடிவான சத்தியமில்லை.

72) ஐக்கியமும், பிரிவினையுமிருப்பது அவையிரண்டையும் உட்கொண்ட முழுமையிருப்பதைக் காட்டுகிறது.

73) பூரண ஞானத்திற்கும் மனத்தின் அறிவுக்கும் உள்ள வேறுபாடு.

74) மனித வாழ்வுக்கும் பூரண வாழ்வுக்கும் உ ள்ள வேறுபாடு.

75) பாதாளத்தையும், பரமாத்மாவையும் இணைப்பது - அவை இணைவது - என்றால் என்ன?

76) பாதாளம் உயர்ந்து பரமாத்மாவுடன் இணைந்து உயர்ந்து, உருவம் பெற்று முழுமை பெறுவது.

77) பிறவியைக் கடந்த நிலை, பிரகிருதியைக் கடந்தநிலை என்பவற்றைச் சிந்தனையாலும், ள்ளுணர்வாலும், உடல் உணர்வாலும் அறிவது.

78) ஒவ்வொரு நிலையிலும் அஞ்ஞானம் கரைவதை ஓரளவு உணர்வது.

79) ஜடமனம் ஆத்மா சலனமற்றது என அறிந்தால், உயிர், மனம், ஆன்மீகமனம் நம்புபவை எவை?

80) இடைப்பட்ட நிலைகள்

--உடல் பரிணாமவளர்ச்சி பெறும்பொழுது.

--அதை அடுத்தவர்க்கு அளிக்கும் திறன் பெறும் பொழுது.

81) சைத்தியப்புருஷன் ஏக காலத்தில் மேலும், கீழும் போவதை அறிவது.

82) ள்ளே போவதால் யுகம் ஏன் க்ஷணமாகும்?

83)ஜீவன் பிரபஞ்சத்தில் பரவி, சக்தி பெற்று, தன்னையறிந்து, ஆனந்தம் பெறுவதை நமக்கே நாம் விளக்கலாம்.

84) திருவுருமாற்றத்திற்கு ஏன் சரணாகதி இன்றியமையாதது?

85)எப்படி எளிமையும், ஆடம்பரமும் ஒன்றாகும்?

86)அஞ்ஞானம் ருசிப்பதற்கும், ஞானம் ருசிப்பதற்கும் உ ள்ள வேறுபாடு.

87) பரிணாம வளர்ச்சியில் ஆன்மாவுக்குரிய அம்சங்களுண்டா?

88)அஞ்ஞானம் ருசிப்பது ஜடம்.

ஞானம் ருசிப்பது மனம்.

ஞானம் ஆத்மாவுக்கும், சத்தியஜீவியத்திற்கும் ருசிக்கும்.

முற்றும்.


 


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut