Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....) 

                                                                                                                                                     கர்மயோகி
 

XV.The Supreme Truth-Consciousness

  Page No.141,

Para No.18

15. உயர்ந்த சத்தியஜீவியம்

This is a new status.

இது ஒரு புது அந்தஸ்து.

It is of the all-pervading Supermind.

எல்லாவற்றையும் ஊடுருவும் சத்தியஜீவியம்.

We can speak of this.

நாம் இதைப் பற்றிப் பேசலாம்.

It is a further departure.

இது மேலும் விலகுகிறது.

It departs from the unitarian truth of things.

ஐக்கியமான சத்தியத்திலிருந்து இது மாறுபடும்.

It also departs from the indivisible consciousness.

பகுக்க முடியாத ஜீவியத்தினின்று இது மாறுபடும்.

The cosmos exists.

பிரபஞ்சம் உண்டு.

Unity is essential to its existence.

அது இருக்க ஐக்கியம் அவசியம்.

It is an inalienable unity.

அந்த ஐக்கியம் என்றும் அழியாதது.

The consciousness constitues that unity.

ஜீவியம் அந்த ஐக்கியத்தை நிறுவுகிறது

We can pursue it a little further.

நாம் அதைச் சிறிது மேலும் தொடரலாம்.

We see it can become truly Avidya.

அப்படித் தொடர்ந்தால் அது அவித்தையாவதைக் காணலாம்.

It is the great ignorance.

அது பெரிய அஞ்ஞானம்.

It starts from multiplicity.

பகுக்கப்பட்ட பலவற்றிலிருந்து அது எழுகிறது.

It is the fundamental reality.

அதுவே அடிப்படை சத்தியம்.

It has to travel back to real unity.

அது மீண்டும் உண்மையான ஐக்கியத்திற்குச் செல்ல வேண்டும்.

One has to start from the false unity.

அதற்குப் பொய்யான ஐக்கியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

Ego has that false unity.

அகந்தை அந்தப் பொய்யான ஐக்கியம்.

The individual centre can be accepted.

ஜீவனின் மையத்தை ஏற்கலாம்.

It can be accepted as teh determining standpoint.

முடிவு செய்யும் கொள்கையாக அதை ஏற்கலாம்.

It is the knower.

அது அறிபவன்.

It has a consequence.

அதற்குப் பலன் உண்டு.

All the consequences of mind will set in.

மனத்தின் எல்லாப் பலன்களும் தொடரும்.

They cannot fail to come in.

அது வரத் தவறுவதில்லை.

They are sensation, intelligence, action of the mental will.

உணர்ச்சி, அறிவு, செயல், திறன் ஆகியவை அவை.

We see one more thing.

மேலும் ஒன்றைக் காண்கிறோம்.

The Soul acts in the Supermind.

ஆத்மா சத்தியஜீவியத்தில் செயல்படுகிறது.

Then there is no ignorance.

அப்படியானால் அறியாமையில்லை.

Truth-Consciousness is the field of knowledge.

சத்தியஜீவியம் ஞானத்திடல்.

It is also the field of action.

அத்துடன் அது செயல்படும் அரங்கமும் அதுவே.

The basis is still unity.

அடிப்படை ஐக்கியமாகவே இருக்கிறது.

Page No.141,

Para No.19


 

The Self is one in all.

பிரம்மம் எங்கும் ஒன்றே.

All things are becoming in itself and of itself.

அனைத்தும் பிரம்மத்தின் வெளிப்பாடுகள்; அதனுள் வெளிப்படும்.

The Self regards itself thus.

பிரம்மம் தன்னை அப்படிக் கருதுகிறது.

The Lord still knows his Force.

ஈஸ்வரன் அவன் சக்தியை அறிவான்.

The Force is himself.

சக்தி அவனே.

It is so in act.

செயலும் அப்படியே.

It is such in every being as himself in soul.

எல்லா ஜீவன்களிலும் அவனே ஆத்மாவில் உறைகிறான்.

And it is so himself in form.

எல்லா ரூபங்களிலும் அதுவே உண்மை.

It is his own being the Enjoyer enjoys.

அவன் அனுபவிப்பது அவனுடைய ஜீவன்.

It is so, though it is multiplicity.

பலவாகப் பிரிந்தாலும், இது உண்மை.

There is one real change.

ஓர் உண்மையான மாற்றம் உண்டு.

It is the unequal concentration of consciousness.

ஜீவியம் மாறுபட்ட செறிவை நாடுவது இது.

But there is no essential difference of consciousness

ஜீவியத்தில் அடிப்படையான வேறுபாடில்லை.

There is no true division in its vision of itself.

ஜீவன் தன்னைத் தன் திருஷ்டியில் காண்பதில் பிரிவினையில்லை.

The Truth-consciousness has arrived at a position.

சத்தியஜீவியம் ஒரு நிலைக்கு வந்துள்ளது.

It prepares our mentality.

அது நம் மனப்போக்கை நிர்ணயிக்கிறது.

It is not yet that of our mentality.

இன்னும் அது நம் மனப்போக்காகவில்லை.

This we must study.

இதை நாம் ஆராயவேண்டும்.

Thus we can seize Mind at its origin.

இவ்விதம் நாம் மனத்தையும், அதன் ஆதியையும் பற்றலாம்.

It is here a great lapse is made.

இங்கு ஒரு பெரிய குறை ஏற்படுகிறது.

It is a lapse from high and vast wideness to the ignorance.

உயர்ந்து பரந்த விசாலம் அறியாமையாகிறது.

The wideness is of the Truth – Consciousness.

விசாலம் சத்தியஜீவியத்துடையது.

The ignorance is of the division.

அறியாமை பிரிவினைக்குரியது.

This is the apprehending Truth-Consciousness.

இதுவே பிரக்ஞா.

It is much more facile to our grasp.

நமக்கு எளிதில் பிடிபடக்கூடியது இது.

It is so because of its nearness to us.

நமக்கு அருகிலிருப்பதால் அது பிடிபடுகிறது.

It foreshadows our mental operations.

நம் மனம் செயல்படுவதை அது முன்கூட்டி அறிவிக்கும்.

We were struggling to express a remoter realisation.

இதுவரை சிரமமான சித்தியை விளக்க முயன்றோம்.

We attempted it in our intellectual language.

நம் பகுத்தறிவின் மொழியால் அதைப் பற்ற முயன்றோம்.

It is a barrier.

அது தடை.

We have to cross it.

நாம் அதைக் கடக்கவேண்டும்.

It is less formidable.

தடையின் சிரமம் இங்கு குறையும்.

The End.

முற்றும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

பண்புகள்மூலமே பிரபஞ்சத்தை நாம் அறிகிறோம் என்கிறார் பகவான். இன்று நம் உலகம்என நாம் அறிவது, நம் பண்புகளால் நிர்ணயிக்கப்படுபவை. முழுப்பிரபஞ்சத்தை அறிய, அதற்குரிய பண்புகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். முதற்படியாக இன்றுள்ள பண்புகளுக்கு அடுத்தநிலை பண்புகளை ஏற்றுக்கொண்டால், நம் உலகம் சற்று விரிவடையும்.

உயரும் பண்பு விரியும் பிரபஞ்சம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

எண்ணம் - சிந்தனை - சிருஷ்டி - ஞானம் - சத்தியஜீவியம் உயர்நிலைகள். மனிதன், அறிவு உணர்வின் அனுபவம் -உடலின் திறன். ஜடத்தின் ஐக்கிய ஞானம் அறியாமை தன்னை அறிவாகக் காண்பது. எல்லாம் உணர்ந்த ஜடம் என்பது அடுத்த வகையில் சொல்லப்படுவதுஅவை சந்திக்குமிடத்தில் ஆன்மீகப் பரிணாமம் ஆரம்பிக்கிறது.

பரிணாமமும் சிருஷ்டியும் சந்தித்தால்

வளராத ஆன்மா வளர ஆரம்பிக்கும்.


 book | by Dr. Radut