Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

     நாங்கள் அன்னையிடம் வந்ததில் இருந்து இன்றுவரை எங்களிடம் ஏற்பட்ட மகிழ்ச்சி, உயர்வு என்னஎன்பது பற்றி நான் இப்போது தெரிவிக்கப் போகிறேன்.

     1999ஆம் ஆண்டு மே மாதம் தியான மையம் இருக்கின்ற தெருவிற்கு வாடகை வீட்டிற்கு வந்துசேர்ந்தோம். அதன்பிறகு தியான மையத்துடன் எங்களுக்கு நல்ல ஒரு தொடர்பு கிடைத்ததுமாதத்தின் முதல் தேதியில்,அதாவது சுபிட்ச தினத்தில் நடைபெறும் இசைத் தியானத்தில் கலந்து கொள்வோம்ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு தியான மையத்திற்கு வந்திருந்து, சுமார் 30 நிமிடம் தியானம் செய்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிவிடுவோம். நாட்கள் செல்லச்செல்ல, ஸ்ரீ அன்னை, ஸ்ரீ பகவான் மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டதுதியான மையப் பொறுப்பாளர் அவ்வப்பொழுது எங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார்கள்; தொடர்ந்து எங்களுக்கு நல்ல வழிகாட்டியும் வருகின்றார்கள். இதில் எனக்கு/எங்களுக்குக் கிடைத்த பல அனுபவங்களில் ஒன்றை மட்டும் இவ்விடம் தெரிவிக்கின்றேன்.

     சில ஆண்டுகட்குமுன் (5. 6. 97) என்னை தற்காலிகப் பணிநீக்கம் செய்தார்கள். என்மீது குற்றம் உள்ளதா என்று பார்ப்பதற்கு வேண்டுமென்றே தாமதப்படுத்தி 3 வருடம் ஆனதுஎன் மீது குற்றம் இல்லை என்று நிரூபணம் ஆனபிறகும் எனக்குப் பணி ஆற்ற வாய்ப்பு வழங்கவில்லைபல முறை முறையிட்டும் பலன் இல்லை. எங்களது நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரைச் சந்திக்க சென்னை அலுவலகம் சென்றேன்என்னை சந்திக்க நிர்வாக இயக்குனர் மறுத்துவிட்டார்இந்த நிலையில் என்னை சந்திக்க மறுத்த நிர்வாக இயக்குனரும், அதற்குப் பிறகு வந்த நிர்வாக இயக்குனரும் மாற்றலாகி சென்றுவிட்டார்கள்ஏப்ரல் 2003இல் புதிய நிர்வாக இயக்குனர் பணியில் சேர்ந்தார்சென்னைக்குச் சென்று புதிய நிர்வாக இயக்குனரைச் சந்திக்கும்படி எனது அலுவலக நண்பர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது சென்றுவரலாம்என்று இருந்தேன். இந்த நேரத்தில் தான் அன்னைக்கு சர்வீஸ் டிவோட்டியாகச் சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்ததுசுமார் ஒரு வார காலத்தில் நிர்வாக இயக்குனர் அவர்களிடமிருந்து எனக்குக் கடிதம் வந்ததுஏதேனும் கோரிக்கை (grievance) இருந்தால் உடனே மனுக் கொடுக்கும்படி கடிதம் வந்ததுஇந்த விசயத்தை தியானமையப் பொறுப்பாளர் அவர்களிடம் தெரிவித்தேன்.  "கடிதம் எழுதி,அன்னையிடம் சமர்ப்பணம் செய்து, நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வையுங்கள். நல்லது நடக்கும்'' என்று சொன்னார்கள்அதன்படி கடிதம் அனுப்பிவைத்தேன்தியான மையத்திற்கு வந்திருந்து எனது கடிதத்தை மூன்று முறை படித்துவிட்டு தியானம் செய்து கடிதத்தை அனுப்பினேன்.சுமார் 10 நாட்கள் வரை எந்தத் தகவலும் இல்லைஇந்த நேரத்தில்தான் 3 நாள் இடையறாத பிரார்த்தனை செய்தேன். தியான மையத்தில் காலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை பிரார்த்தனை செய்தேன்.மறுநாளே எனது அலுவலக நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்தார். "உங்கள் கடிதத்தை நிர்வாக இயக்குனர் படித்துவிட்டு, வேண்டிய ரெக்கார்டுகளையும் பார்த்துவிட்டார்உங்களைப் பார்க்க விரும்புகிறார். அவசியம் நாளை நிர்வாக இயக்குனரை சந்தியுங்கள்'' என்று வற்புறுத்தினார்இதற்கு மேலும் தாமதப்படுத்தக் கூடாதுஎன்று தியான மையப் பொறுப்பாளர் அவர்களிடம் இந்த விவரங்களைத் தெரிவித்தபோது, மிக்க மகிழ்ச்சி அடைந்து, "உடனே சென்னை சென்று உங்கள் நிர்வாக இயக்குனரைச் சந்தியுங்கள்'' என்றார்அதன்படி சென்னைக்குப் புறப்பட்டேன். சென்னைக்குச் சென்ற பயணமே மிகஎளிதாக இருந்ததுசென்னை அலுவலகம் சென்ற உடனேயே நிர்வாக இயக்குனரைச் சந்தித்தேன்என்னுடைய கோரிக்கையை மிக்க கனிவுடன் கேட்டார்நான் சொல்லவேண்டிய பல விசயங்களைச் சக அலுவலர்கள் நிர்வாக இயக்குனருக்குப் பரிந்துரை செய்தார்கள்இதுவே மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்ததுநீங்கள் ஊருக்குத் திரும்புங்கள்ஆர்டர் அனுப்புகிறேன். உடனே பணியில் சேருங்கள்'' என்று நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்அதன்படி எனக்குப் பணி உத்தரவு கிடைத்ததுமறுநாளே  ( 1 . 7 . 2003) பணியில் சேர்ந்தேன்இது எனது வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய ஆச்சரியம். ஸ்ரீ பகவானுக்கும், ஸ்ரீ அன்னைக்கும் நன்றி!!

****


 



book | by Dr. Radut