Skip to Content

05.Agenda

Agenda  - Vol.I P.131

 Limitless abundance of Nature.

One year or one million years cannot make

any difference to Nature as eternity is before her.

Nature quite enjoys herself without hurry.


 

இயற்கையின் அபரிமிதம் வரையறையில்லாதது.

 யுகங்கள் காத்திருப்பதால் ஒரு வருஷம் அல்லது

ஓராயிரம் வருஷம் இயற்கைக்கு வேறில்லை.

எந்தவிதமான அவசரமுமின்றி இயற்கை அன்னை

ஆனந்த அனுபவத்திலிருக்கிறாள்.

       சிறு குழந்தைக்கு நேரம் என்பதில்லை. அதன் விளையாட்டை அனுபவிப்பதே குழந்தைக்கு முக்கியம். குழந்தையின் மனதில் காலம் என்றொன்றில்லை.

       1958ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று அன்னை கொடுத்த புது வருஷச் செய்தியில்,

       • “இயற்கை அன்னையே என்னுடன் ஒத்துழைப்பதாகக் கூறினீர்களே, உங்கள் ஒத்துழைப்பு வரையறையில்லை அன்றோ?”

என்று குறிப்பிட்டார்.

       கடலோரம் நின்று அலைகள் எழுவதையும், கரையில் பட்டு அலைகள் உடைவதையும் நாம் காண்கிறோம். காட்டில் வளரும் பெரிய மரங்களைக் காணும்பொழுது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த மரமாகத் தெரிகின்றன. அவை இலையுதிருவதும், பழம் பழுப்பதும் இயற்கையின் செயல். இயற்கையன்னையின் ஒரு செயல் அது.

அதுபோல் எத்தனை ஆயிரம் செயல்கள் அவள் முன் நிற்கின்றன.

எதை முதலில் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உண்டா?

உடனே செய்ய வேண்டும் என்ற அவசரம் உண்டா?

இந்தச் சட்டப்படி நடக்க வேண்டும் என விதிப்பாருண்டா?

இயற்கை ஏற்றது சட்டம்.

செய்தது செயல்.

நடப்பது முறை.

மனிதனை ஸ்ரீ அரவிந்தர் பரிணாமத்திற்கு அழைக்கிறார்.

மனிதன் இயற்கையின் நியதிப்படி ஆற்றொழுக்காகப் போகிறான்.

அவன் மனம், அவனை இயற்கையினின்று பிரித்து செயற்கையாக வாழ வைக்கிறது.

இயற்கையின் முன் யுகங்கள் நிற்கின்றன -அது அபரிமிதம், நிதானமானது.

ஸ்ரீ அரவிந்தர் நம்மை அழைப்பது பரிணாமத்திற்கு -அது க்ஷணத்தில் நிறையும் அபரிமிதம்.

இயற்கைக்கும், பரிணாமத்திற்கும் இடையறாத அபரிமிதம் உண்டு.

மனிதன் வாழும் செயற்கை வாழ்வில் அபரிமிதமில்லை, வறட்சியுண்டு, வறுமையுண்டு.

       அன்னை இயற்கையன்னையை தான் மேற்கொண்ட பரிணாமத்தை ஏற்கும்படி கேட்டார். இயற்கையன்னை ஏற்றுக் கொண்டாள். அன்னையை ஏற்பவருக்கு இயற்கையின் நிதானமான அபரிமிதம் பரிணாமத்தின் க்ஷணத்தில் பூர்த்தியாகும் அபரிமிதமாக மாறி வரும்.

       இன்றைய மனித வாழ்வுக்கது இல்லை.

 

****

 

 

 

 



book | by Dr. Radut