Skip to Content

06.அன்பர் கடிதம்

        அன்னையின் பக்தை எழுதுவது. என் வாழ்வில் அன்னையை ஏற்றுக் கொண்டதை மிகப் பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். எனக்கு எல்லாமே அன்னைதான், அன்னை மட்டும்தான் என்று என்னை ஒவ்வொரு நொடியும் சொல்ல வைத்த என் தெய்வம், என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை தங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

       நான் திருமணம் ஆவதற்கு முன் கும்பகோணத்தில் ஒரு தனியார் சீட்டுக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். அன்னையின் அருளால் என் வேலையை திறம்படச் செய்து வந்தேன். அதனால் managerக்கு என் மேல் அளவு கடந்த நம்பிக்கையுண்டு. Office stamps ரூ. 2000/-(சீட்டுக் கம்பெனி என்பதால் register office-க்கும் எங்களுக்கும் day to day dealings உண்டு.) என்னிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச் சொன்னார். நானும் அவ்வாறே வைத்திருந்தேன். திடீரென்று ஒரு நாள் உடனே stampsஎடுத்து வரச் சொன்னார். நானும் வந்து என் drawஇல் தேடினேன். கிடைக்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. (நான் ஒரு சராசரி வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள். என் அம்மாவின் pension மற்றும் என் salaryதான். இதை வைத்து மாதா மாதம் தள்ளியாக வேண்டும்) எங்கள் வீட்டில் என் சித்தி பெண் அன்னை படத்தை வைத்து மலர்களால் அலங்கரிப்பாள். நான் office செல்லும்போது அன்னையின் photo-வை ஒரு முறை பார்த்துவிட்டே செல்வேன். (அவ்வளவாக நம்பிக்கை அப்போது கிடையாது). Stamps தேடி கிடைக்கவில்லை என்றவுடன் எனக்கு பீதியாகிவிட்டது. Office bath roomஇல் போய் நின்று அழுதுவிட்டேன். பின்பு முகத்தை அலம்பிக் கொண்டு, ஒரு seatஇல் வந்து உட்கார்ந்து அவருடைய table drawஇல் இருக்கிறதா பார்ப்போம் என்று drawவைத் திறந்தேன். அதிசயமாக அதில் அன்னையின் photoஒன்று இருந்தது. கண்ணீர் மல்க அன்னையை பார்த்துக் கொண்டே நீங்கள்தான் காப்பாற்றவேண்டும் என்று வேண்டிய அடுத்த நிமிடம், எதிர் seat பெண் இங்கே இருக்கிறது பார் stamps எல்லாம்னு சொன்னதைக் கேட்டு அன்னைக்கு நன்றி சொல்லிக்கொண்டே, managerஐ கூப்பிட்டு அன்னையோட கருணையைப் பாருங்க sir, என்னைக் காப்பாத்திட்டாங்க பாருங்க sirனு சொல்லிப் புளங்காங்கிதம் அடைந்தேன். அன்று முதல் நானும் அன்னையின் பக்தையானேன். அன்னைக்கு என் மனமார்ந்த நன்றி.

       என் திருமணம் ஆனது குறித்து : நானும், என் கணவரும் காதலித்து, பெரியவர்கள் ஒப்புதலுடன் திருமணம் புரிந்தவர்கள். இதுவும் அன்னையின் அருளால் மட்டுமே. எங்கள் குடும்பத்தில் நாங்கள் 4 பெண்கள், ஒரு பையன். முதல் இரண்டு அக்காக்களுக்கு என் அப்பா உயிருடன் இருந்தபோதே திருமணம் செய்துவிட்டார். அடுத்த அக்காவுக்கு வரன் தேடும் போதே அப்பா திடீரென்று இறந்துபோனார். அதனால் 1992இல் என் சித்தப்பா என் மூன்றாவது அக்காவின் திருமணத்திற்கு உதவி புரிந்து அவளை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்தார். அக்கா திருமணத்திற்குப் பிறகு 93இல் என் திருமணம் செய்ய வேண்டும் என்று இருந்தார்கள். அதனால்தான் இவருக்கு letter போட்டு நம் திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டேன். அவரோ 1995இல் செய்து கொள்வதாக assurance கொடுத்துவிட்டார். அதனால் 1995, ஜுன் மாதம் 8-ந் தேதி எங்களுக்கு marriage செய்வது என்று பெரியவர்கள் முடிவு செய்தார்கள். அதனால் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில், என் கணவர் phone செய்து, இன்னும் 6 மாதம் கழித்து திருமணம் செய்து கொள்கிறேன் என்றும், அவருடைய office loss-இல் ஓடிக்கொண்டிருப்பதால்,மூடப்போவதாகவும் சொல்லி திருமணத்தை மறுத்துவிட்டார். உடனே நான் அன்னையிடம் மனமார பிரார்த்தித்து, என் திருமணம் குறித்த தேதியில் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் என் கணவர் phoneசெய்து, உன்னால் 6 months wait பண்ண முடியுமா என்று கேட்டார். நான், ‘உடனே எல்லா ஏற்பாடுகளும் ஆகிவிட்டதால் தயவு செய்து என்னை marriage செய்து கொண்டு விடுங்கள், நான் எல்லாவற்றிற்கும் adjust பண்ணிக்கொள்கிறேன்,’ என்று சொன்னேன். உடனே அவரும் சரி என்று சொல்விட்டார். எங்கள் திருமணம் குறித்த தேதியில், குறித்த நேரத்தில் அன்னையின் கிருபையால் நல்லபடியாக நடந்தது. அன்னைக்கு என் மனமார்ந்த நன்றி.

       திருமணத்திற்குப் பின் என் வேலை மாற்றல் வாங்கிக் கொண்டு (சென்னை தி.நகரில் உள்ள கிளைக்கு) வந்து, joinசெய்து வேலை பார்த்து வந்தேன். இங்கும் மிகப் பொறுப்பான வேலையில் இருந்தேன். மூன்று வருடங்கள் ஓடியது. officeஇல் leave கிடைப்பது ரொம்ப கஷ்டம். நான் என் மாமியார், மாமனாருடன் Bangalore செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் manager கிட்ட leave கேட்க பயந்து கொண்டே இருந்தேன். அன்று october 22, 1998.எனக்குக் காலையிலிருந்தே தலைவலி ரொம்ப ஜாஸ்தியாக இருந்தது. Officeஇல் அன்று ஒரு subscriberக்கு ரூ. 47500/- cheque payment தருவதாகச் சொல்லி மறந்து போய்விட்டேன். Managerஇடம் போய் தகவலைச் சொன்னேன். என்னுடைய knowledge இல்லாமல் நீ எவ்வாறு commitment கொடுக்கலாம் என்று என்னை ஒரு பிடிபிடித்துவிட்டார். மாதக் கடைசி வேறு. அவரிடம் திட்டு வாங்கி வெளியில் வந்தால், customer என்னைத் திட்ட, அன்னையிடம் வேண்டிக் கொண்டே managerஇடம் போய் இனி இம்மாதிரி தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று மன்னிப்புக் கேட்டு, ஒரு வழியாக அந்த customerக்கு cheque வாங்கிக் கொடுத்துவிட்டேன். தலைவலி குறையவே இல்லை. நான் தவறு செய்ததால், managerஇடம் leave கேட்கவே இல்லை. அதன்பிறகு, lunch hourஇல் தோழிகளுடன் சாப்பிட உட்கார்ந்தேன். என் நிலைமையைக் கூறி அழுதும் விட்டேன். திடீரென்று இடக் கையிலிருந்து டிபன் பாக்ஸ் விழுந்துவிட்டது. என் இடப் பக்கம் முழுவதுமே செயலிழந்து விட்ட மாதிரி தோன்றியது. உடனே என் manager leave எடுத்துக் கொள்ளுங்கள். கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். என்னை என் friends மற்றும் என் மாமியார் (எதேச்சையாக shopping செய்ய வந்தார்) எல்லோரும் சேர்ந்து அருகில் உள்ள hospitalக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு எங்களை ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். (நான், என் மாமியார், என் நாத்தனார்) சைதாப்பேட்டை signal வரும் போது எனக்கு வலிப்பு வந்து விழுந்திருக்கிறேன். அவர்கள் மறுபடியும் என்னை hospitalக்கு அழைத்துச் சென்று, brain tumourஆக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு, Dr.Prof.B.Ramamoorthy, V.H.S.Adyar க்கு அனுப்பிவிட்டனர். அங்கும் எனக்கு இருமுறை testகள் எல்லாம் செய்து, brain tumour (non-cancerous) என்று சொல்லி, Nov. 11, 1998 operation date fix செய்துவிட்டார்கள். அன்னையின் அருளால் operation நல்லபடியாக முடிந்து, இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். அன்னைக்கு என் நன்றியை எத்தனை ஜென்மம் எடுத்துக் கூறினாலும் போதாது. இன்று நான் உயிருடன் இருக்கிறேன் என்றால் நிச்சயம் அன்னையின் அருளால் மட்டுமே. அன்னைக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

       Operationக்குப் பிறகு, check-up சென்று வந்தேன். இப்பொழுதெல்லாம் - நான் வீட்டை விட்டு இறங்கும்போதெல்லாம் அன்னையை மறக்காமல் அனுப்பிவிட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது. அதேபோல், check-up செல்லும்போதும் அன்னையை அனுப்பிவிட்டு உங்கள் அருளால் தலையில் ஒரு problemமும் இல்லை என்றும், scan செய்யவேண்டாமென்றும் சொல்ல வேண்டும் என்று வேண்டிச் சென்றேன். அதேபோல் doctors என்னை முழுவதுமாக பரிசோதித்துவிட்டு, ஒரு problemமும் இல்லை, tablets மட்டும் சாப்பிட்டால் போதும் என்று கூறிவிட்டார்கள். உடனே மனமார அன்னைக்கு என் நன்றியை கூறிவிட்டு, விரைவில் எனக்குச் சமாதி தரிசனம் கிடைக்க வழி செய்யுங்கள் அம்மா என்று வேண்டினேன். July 5, 2000 அன்று check-up சென்றேன். அன்னையின் அருளால் July 9 பாண்டிச்சேரி சென்று சமாதி தரிசனம் செய்தேன். மனம் முழுவதும் அமைதியால் நிரம்பி வழிந்தது. சமாதி தரிசனம் செய்வதற்கு நான், என் கணவர், என் மாமியார், அவர் நண்பர், அவரின் அக்கா, அவர் மகள் என்று 6 பேர் சமாதி தரிசனம் செய்து திரும்பி வரும் போது, (நாங்கள் சென்ற கார் LPG-gas connection கொண்டது) பாண்டியிலிருந்து 10km தான் வந்திருப்போம், காரின் முன் tyre வெடித்து ஒரே புகை. காரின் டிக்கியில் 3 cylinderகள் இருந்தன. காரின் பின் tyre எதுவும் ஆகியிருந்தால், நாங்கள் அனைவரும் பெரிய விபத்தில் சிக்கியிருப்போம். நாங்கள் East Coast road வழியாக வந்ததால், ஒரே இருட்டாக இருந்தது. காரிலிருந்து எல்லோரும் அவசரம் அவசரமாக இறங்கி வெளியில் நின்று கொண்டு கவலைப்பட்டோம். நான் அன்னையிடம், அன்னையே இது என்ன சோதனை என்று நினைத்து முடிக்கு முன்பே, ஒரு மாருதி கார் எங்கள் அருகில் வந்து நின்றது. அவர்களும் இறங்கிவந்து விசாரித்துவிட்டு, பெண்களை நாங்கள் அழைத்துக் கொண்டு செல்கிறோம் என்று சொன்னார்கள். (அவர்களும் சென்னைக்கு வந்து கொண்டிருந்தவர்கள்) அன்னைக்கு எங்கள் நன்றியைக் கூறிவிட்டு அவர்களுடன் காரில் சென்னைக்குப் பத்திரமாக வந்து சேர்ந்தோம். அன்னை தம்மை நம்புபவர்களை, என்றைக்குமே கைவிடுவதில்லை என்று இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் நான் என் அன்பு அன்னையின் மீதான நம்பிக்கையை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறேன்.

****

____________________________________________________________________________________________________

ஸ்ரீ அரவிந்த சுடர்

கவலையும் அன்னையும் உன் வாழ்வின் இரு முனைகள்.

ஒன்று பிரச்சினையை எழுப்புவது, அடுத்தது தீர்ப்பது.

____________________________________________________________________________________________________

 

 



book | by Dr. Radut