Skip to Content

08.சாவித்ரி

 

சாவித்ரி”

P.14   Love came to her hiding the shadow, Death

          அன்பின் நிழலில் அணைந்து வரும் மரணம்

       முரண்பாடான உலகை மனிதன் ஏற்று வாழ வேண்டியது அவசியம். அந்த அவசியம் தவத்திற்கும், யோகத்திற்குமில்லை என்று ஆயிரமாயிரம் துறவிகளை இந்தியா உற்பத்தி செய்தது. விவேகானந்தர் அதனின்றும் சற்றுப் பிறழ்ந்து ‘தரித்திர நாராயணனை’ நமக்கு இலட்சியமாக அளித்தார். முரண்பாடு என்பது உண்மை. தவிர்க்க முடியாதது. தவிர்க்கப்பட வேண்டியதில்லை. ஏற்கப்பட வேண்டும். உடன்பாடாக முரண்பாட்டை ஏற்பது யோகம் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

முரண்பாட்டின் பின்னால் உயர்ந்த உடன்பாடுண்டு,

என்பது ஸ்ரீ அரவிந்தம் என்றும் கூறுவது. அக்கருத்தைப் பிரதிபலிக்கும் சாவித்திரியின் வரி மேலே கூறப்பட்டது. மரணம் வாழ்வுக்கு நித்தியத்துவம் அளிக்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தர் தத்துவங்களில் ஒன்று. சத் ஜடமாக மாறியது என்பது அடிப்படை. அதையொட்டி வாழ்வு life மரணமாயிற்று என்பது வாதம், விளக்கம்.

சிருஷ்டியை விளக்கும் பகவான் ஸ்ரீ அரவிந்தர்,

இறைவன் தன்னுள்ளே தன்னை மறைத்துக் கொண்டு,

சத் என்பதை ஜடமாகவும்,

சித் என்பதை வாழ்வாகவும்,

ஆனந்தத்தை ஆன்மாவாகவும்,

சத்திய ஜீவியத்தை மனமாகவும் மாற்றினான் என்கிறார்.

இதன் விளைவாக,

சத்தியம், பொய்யாகவும்

நல்லது, கெட்டதாகவும்

ஞானம், அஞ்ஞானமாகவும்

சக்தி, திறனற்றதாகவும்

அழகு, விகாரமாகவும்

அன்பு கொடுமையாகவும்

சந்தோஷம் வலியாகவும்

அனந்தம், கண்டமாகவும்

ஒளி இருளாகவும்

தூய்மை, அசுத்தமாகவும் மாறின.

இந்தப் பக்கத்திலுள்ள இதர கருத்துகள்:

தூய்மையின் சத்தியத்தை நித்தியமாகக் காட்டினர்.

தனிமையை இனிமையாக்கும் மனித உணர்வுகள்.

விலங்கின் விவரமில்லாத சிறு தேவை.

பூமாதேவியின் பயங்கர ஆவேசம்.

ஆயிரம் கோடி மரங்களின் அடர்ந்த பொறுமை.

வானமெனும் இரத்தினக் கம்பளத்தின் சிறப்பான சிந்தனை.

ஊர்ந்து செல்லும் காலத்தின் உள்ளுறையும் பாரம்.

சிந்தனைக்கு இடமளித்து சிவனை இருத்திய மனம்.

அனந்தனின் சுவடுகளைத் தாங்கும் உலகம்.

மலையின் எழுச்சியை இதயத்தின் எழுச்சியாகக் காணும் நோக்கம்.

 

****

 



book | by Dr. Radut