Skip to Content

04.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

       அன்னையை வழிபடும் பக்தன் எழுதுவது. நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் II Year M.Sc. சுற்றுப்புறச் சூழ்நிலை தொலை உணர்வின் திரையிற்புலம் படித்து வருகிறேன். என் வாழ்க்கையில் அன்னை செய்த அற்புதத்தை உங்களுக்கு சொல்கிறேன்.

       நான் B.Sc. விலங்கியல் 1996 முதல் 1999 கல்வியாண்டில் அரசு கலைக் கல்லூரி, தர்மபுரி மாவட்டத்தில் படித்து அதில் ஒரு தாளில் தோல்வி (fail) அடைந்தேன். மறுமதிப்பீட்டுக்கு (revaluation apply) செய்தேன்.

       நான் revaluation இல் pass ஆகிவிட்டேன். Mark sheet பெற்றுவிட்டேன். Provisional certificate வந்துவிடும் என நினைத்து carelessஆக இருந்தேன்.

       அந்தச் சமயத்தில் தர்மபுரி மாவட்ட வளர்ச்சி கழகத்தில் கணிப்பொறி பயின்று ஆறு மாத காலத்தில் (part time) தேர்ச்சி பெற்றிருந்தேன்.

       எனக்கு Regional Transport Office, Dharmapuri Dist .இல் Data entry operator ஆக தற்காலிகமாக ஆறு மாத காலத்திற்கு வேலை செய்ய அழைப்பு வந்தது. Computerஇல் Data Entry Operatorஆக ஆறு மாதம் வேலை செய்தேன். வேலை செய்யும்பொழுது மேற்படிப்பு படிக்க ஆவலாக இருந்தேன்.

       ஆசிரியர் பயிற்சி (B.Ed) மற்றும் M.Sc. application எல்லாம் போட்டேன். எனக்கு M.Sc. நுழைவுத் தேர்வு எழுதி மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. M.Sc. சேர்ந்தேன்.

       எனக்கு B.Sc. Provisional certificate வருவதில் காலதாமதம் ஏற்படுவதால் தேர்வு அதிகாரி அவர்கள் அனுப்பிய கடிதம் மூலம் சம்பந்தப்பட்ட துறையில் முதல் பருவத் தேர்வு எழுதிவிட்டேன்.

       எனக்கு அந்தச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் M.Sc. முதல் பருவத் தேர்வு திருத்தப்படவில்லை. மேலும் என்னை departmentஇல் discontinue பண்ணச் சொன்னார்கள். மற்றும் provisional certificate இருந்தால்தான் மேற்படிப்பு continue பண்ண முடியும் என எங்கள் துறைத் தலைவர் கூறிவிட்டார். என்னை classஇல் இருந்து துரத்திவிட்டார்கள்.

       Provisional certificate நான் படித்த கல்லூரிப் பல்கலைக் கழகத்தில் விசாரித்தேன்.

       யாரோ ஒரு student (அவனுக்கு) provisional certificate delay செய்த காரணத்தினால் பல்கலைக்கழகத்தின் மீது High courtஇல் case போட்டிருந்தான். சம்பந்தப்பட்ட அலுவலர்களை விசாரித்து பார்த்தேன். Court case முடிந்த பின்புதான் certificate தருவார்கள் என்று கூறினார்கள். இதன் மூலம் certificate இல்லாத காரணத்தினால் மன உளைச்சலும், ஏமாற்றமும் அடைந்தேன்.

      உடனடியாக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அவர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு என் மூலமாக கடிதம் கொடுத்து அனுப்பினார்.

       நான் பதிவாளர் அவர்களைப் பார்த்து அக்கடிதம் கொடுத்தேன். என்னை deptஇல் மேற்படிப்பு continue பண்ண சொல்விட்டார்கள். இப்போது இறுதி செமஸ்டர் படிக்கிறேன். தற்காலிகச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் I, II மற்றும் IIIrd semester தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை.

       எங்கள் வீட்டில், அம்மா அன்னை மீது மிகுந்த பக்தியாக இருப்பார்கள். அன்னை புத்தகங்களை விலைக்கு வாங்கி படிப்பார்கள். வீட்டில் அன்னை படங்கள் அதிகமாக இருக்கும்.

       என்னையும் அன்னை மீது நம்பிக்கை வைக்கச் சொன்னார்கள். மேலும், பாண்டிச்சேரிக்கு பிரார்த்தனை கடிதம் அனுப்பச் சொன்னார்கள்.

        பிரார்த்தனை கடிதம் அனுப்பினேன். அன்னை சமாதியில் இருந்த பிரார்த்தனை மலர்கள் பிரசாதமாகத் தபால் மூலம் நான் படிக்கும் Dept.க்கு வந்தது.

       மேலும், நான் அன்னை புத்தகங்கள் நேரம் கிடைக்கும் பொழுது படிப்பதாலும், என் pocketஇல் அன்னை மலர் பிரசாதம் இருந்த காரணத்தினாலும் உடனடியாகத் தடைப்பட்டிருந்த B.Sc. provisional certificate நான் படிக்கும் துறைக்கு வந்தது. மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இனிமேல் எனக்குக் கவலையில்லை. M.Sc. I, II &IIIrd semester mark sheet release பண்ணிவிடுவார்கள்.

       மேலும், மற்ற ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பம் செய்வேன். அன்னை எத்தனையோ பேர் வாழ்க்கையில் துயரங்களை போக்கியிருக்கிறார். அதேபோல் என் வாழ்க்கை வீணாகி போவதிலிருந்து காப்பாற்றியுள்ளார். இது என் வாழ்வில் நடந்த ஒரு மிகப் பெரிய அற்புதம் எனச் சொல்லலாம்.

****


 



book | by Dr. Radut