Skip to Content

02.எங்கள் குடும்பம்

எங்கள் குடும்பம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கணவர் : எல்லாம் சத்தியத்தில் அடங்குகிறது.

தாயார் : சத்தியத்தை விடாமல் பிடித்துக்கொண்டால், உறவு, நட்பால் சிரமம் வாராது. தானே விலகும்.

கணவர் : நீ சொல்லும் பதில் எல்லாம் சமர்ப்பணம் சுலபமாகத் தெரிகிறது.

தாயார் : சுலபம் என்று ஒன்றை நாடினால், பலன் பெரியதாக இருக்காது. சமர்ப்பணம் மிகவும் கடினமானது.

கணவர் : ஏன்?

தாயார் : மனிதன் இறைவனாகும் முறை அது என்பதால் கடினமானது.

கணவர் : கடினத்தைச் சொல் கேட்போம்.

தாயார் : போன் மணியடித்தவுடன் சமர்ப்பணம் நினைவு வாராது, பேசுவோம்.

கணவர் : நான் பார்த்திருக்கிறேன். அதை என்ன செய்வது?

தாயார் : நாம் செயல்படத் தயாராக இருக்கிறோம். நினைக்கவோ, உணரவோ, சமர்ப்பணம் செய்யவோ தயாராக இல்லை.

கணவர் : மேலும் விளக்கம் தேவை.

தாயார் : இரவில், தோட்டத்தில் சத்தம் கேட்டால், முதலில் என்ன தோன்றுகிறது?

கணவர் : பயம்.

தாயார் : நினைவு என வந்தால், என்ன வருகிறது?

கணவர் : போலீஸ், பக்கத்து வீட்டு உதவி நினைவு வருகிறது.

தாயார் : அன்னை நினைவு வருகிறதா?

கணவர் : கற்பனையாகப் பேசும் பொழுதே நினைவு வரவில்லை.

தாயார் : நாம் மனத்தாலான மனிதன் என்றாலும், செயலளவில், நடைமுறையில் உடலால் வாழ்கிறோம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பதைப் போல், மேலே ஏதாவது விழுந்தால் உதறுவது போல், உடல் செயல்படத் தயாராகக் காத்துள்ளது.

கணவர் : நினைவு?

தாயார் : நினைவெல்லாம் உடல் உற்பத்தியாகின்றது.

கணவர் : சமர்ப்பணத்தில் வேறு விவரங்களுண்டா?

தாயார் : நினைவு என வந்தவுடன் அதை விலக்கினால் உணர்வு வரும். அதை விலக்கினால் உடல் உணர்வு வரும். அதையும் விலக்கினால் ஜீவனின் நோக்கம் தெரியும். அது சுயநலமாக இருக்கும். அதைச் சமர்ப்பணம் செய்ய மனம் வாராது. வந்தால் சமர்ப்பணம் அன்னைக்கு உரியதாகும்.

கணவர் : பார்ட்னரைப் பார்த்தவுடன் பாங்க் விஷயம் என்னாயிற்று எனக் கேட்பதற்குப் பதிலாக அன்னையை மட்டுமே நினைக்கவேண்டும்.

தாயார் : நினைவு, உணர்வு, உடலுணர்வு, ஜீவனுடைய நோக்கம், இடைப்பட்டிருப்பதால் இவற்றைக் கடந்து செல்வது முக்கியம், சிரமம். நினைவைக் கடந்தால் உலகில் எவருடைய மனமும் நமக்குத் தெரியும்.

கணவர் : அது ஞானிகட்கேயில்லாத சித்தியாயிற்றே.

தாயார் : அதுபோல் 4 கட்டங்களிருப்பதால், சமர்ப்பணம் கடினம். Legend of Brahman என்ற கதையில் பிரம்மத்தைச் சித்தித்தவர் அனைவருக்கும் பிரம்மானுபவத்தைக் கொடுக்கிறார்.

கணவர் : பிரம்மம் என்னவாகச் சித்திக்கிறது?

தாயார் : மௌனமாகச் சித்திக்கின்றது. தியானம், நிஷ்டை, ஜபத்திற்குப் பதிலாக தத்துவ விசாரணை, சப்தம், இயற்கையுடன் ஒன்றியிருப்பது ஆகியவை இக்கதையில் பயன்படுகின்றன.

கணவர் : பிரம்மம் அற்புதமாகச் சித்திக்கவில்லையா?

தாயார் : மௌனமாகச் சித்திப்பதையே நோக்கமாகக்கொண்ட கதையிது. எங்கும் உள்ள பிரம்மம் எங்குமில்லாதது என்ற கருத்தில் வகுப்பு ஆரம்பிக்கிறது.

கணவர் : அது முரண்பாடு.

தாயார் : அதை உடன்பாடாக ஏற்பவருக்கு மனம் மௌனத்தைத் தொடுகிறது.

கணவர் : ஏற்றால் மௌனம் வருமா?

தாயார் : இளம் பிள்ளைகள் என்பதால் அவர்கள் மனத்தை ஆழ்ந்து தொடுமன்றோ! பலர் மௌனத்தை ஏற்று ரசிக்கிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள்.

கணவர் : ஏன்?

தாயார் : மௌனத்தை மந்தமாக நினைப்பதால் பயம் வருகிறது. அதைக் கடந்தவருக்கே மௌனம் உரியது. தொடர்ந்து உயர்ந்த நிலைகளில் மௌனத்தை விரும்புகிறவர், கதையில், ஓர் இளைஞன். அவனுக்கு, காடு, மலை போன்ற இடங்கள், ஏற்கனவே சித்தி பெற்ற பெண்மணி ஒருத்தி, ஆகியவற்றால் மௌனம் ஆழ்ந்து நிலைக்கிறது. பிரம்ம ஞானம் பிரம்ம மௌனம் முடிவானது. அதைப் பெற அந்த சித்தி பெற்றவரைத் தன்னையறியாமல் நாடுகிறான். அவர்கள் ஒரு மாதம் மௌனமாக இமயமலையில் சந்தித்து அவன் பிரம்ம விழிப்புப் பெறுகிறான். பின் பிரம்மம் மௌனமாகச் சித்திக்கிறது. உலகம் அதை ஏற்றுப் போற்றிப் பெற விழைவதால், ஒரு பெருங்கூட்டத்தில் - 45 ஆயிரம் பேர் - அனைவரும் கைகளைக் கோத்துக்கொண்டு 5 நிமிஷம் பிரம்மானுபவம் பெற்று, 2 மணி நேரம் அசைவற்றிருந்து அமைதியாகக் கலைகின்றனர்.

கணவர் : நமக்கு?

தாயார் : சமர்ப்பணத்திற்கு அடிப்படை பிரம்ம மௌனம்.

கணவர் : அன்னை என்பது கோயிலுக்குப் போய் தேங்காய் உடைப்பதில்லை போலிருக்கிறதே.

தாயார் : அது வழிபாடு, ஆன்மீகமாகாது.

கணவர் : ஏன் கை கோத்துக் கொள்ளவேண்டும்?

தாயார் : அதுவுமில்லாமல் பிரம்மம் பரவவேண்டும். அது சிரமம். கைப்பட்டால் எளிதாகப் பரவும்.

கணவர் : கைப்பட்டுப் பரவுவது பிரம்மமாக இருக்குமா?

தாயார் : பிரம்மம் (vital) தொடு உணர்வால் பரவும்.

கணவர் : பலன் பெற தொடு உணர்ச்சி போதும்.

தாயார் : சப்தம் உள்ளிருந்து எழவேண்டும். உள்ளிருந்து ஒரு கதிர் எழுந்து உலகில் உலவி அனைவரையும், இந்தக் கருவிகள் - தொடுவது, மணியடிப்பது - இல்லாமல் தொடவேண்டும்.

கணவர் : அது சூட்சுமம்.

தாயார் : சூட்சுமம் அல்லது காரணம்.

வீட்டில் உள்ள அனைவரும் தங்களை உள்ளும், புறமும் ஒழுங்கு செய்ய (organise) ஒத்துக்கொண்டு cleanliness, orderliness, soft speech பிறர் நோக்கில் காண்பது, கடந்த காலச் சமர்ப்பணம், சமர்ப்பணம் என எல்லா அன்னையின் சட்டங்களையும் முழுவதும் பின்பற்ற முயன்றதில் ஒரு சில மாதங்களில் கிண்டல், கேலி, குத்தலாகப் பேசுவது, போன்ற குறைகள் பெரும்பாலும் விலக்கப்பட்டன. அனைவரும் நடப்பனவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்து அன்னைக் கோணத்தில் புரிந்துகொள்ள முயன்றனர். வீட்டின் புறச்சூழல் மாறிவிட்டது. அகம் அந்த அளவுக்கு மாறவில்லை. படபடப்புக் குறைந்து பொதுவாக நிதானம் அதிகரித்தது. கம்பெனியும் அதேபோல் இருந்தது. பார்ட்னருடைய புதுப்போக்கு அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. வீட்டிற்குப் பெரிய மனிதர்கள் வருவதும், பெரிய இடங்களுக்கு அழைப்பு வருவதும் தொடர்ந்தது.இந்தச் சமயம் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் திடுக்கிடச் செய்தது. ஹாஸ்டலில் ஒரு நண்பனைப் பார்க்க சிறியவன் போயிருக்கிறான். அவன் ரூமில் 2000/- ரூபாய் பணம் தொலைந்துவிட்டது. அவன் போலீஸுக்குச் செய்தி அனுப்பியபொழுது,அந்த நேரம் சிறியவன் அங்கிருந்ததால், போலீஸ் அவனைச் சந்தேகப்படுகிறது. நண்பன் எவ்வளவு மறுத்தாலும் போலீஸ் ஏற்பதாக இல்லை. எந்த நேரமும் இவனைத் தேடி வருவார்கள் என்பது செய்தி.வீடு பீதியால் பீடிக்கப்பட்டது. பையன் அழுகிறான். "என்னை அன்னை கைவிட்டுவிட்டார்கள்'' என அழுகிறான். கேஸ் என்று வந்தால் கேஸ் நடத்தலாம். உண்மை என்றும் வெல்லும். அனைவரும் தாயாரைப் பேசச் சொன்னார்கள்.

வீட்டில் யார் மனதில் திருட்டு எண்ணமிருந்தாலும் அது இந்த நிகழ்ச்சியாக மாறியிருக்கும்

என்றார். அனைவரும் திகைக்கின்றனர். எண்ணம் அந்த அளவு பாதிக்குமா? என்ற கேள்வி வருகிறது. விவாதம் அப்புறம். பையன் லாக்கப்பிற்குப் போகாமலிருக்க வேண்டுமானால் எண்ணம் மாறவேண்டும் என்பதை அனைவரும் ஏற்றனர்.

கணவர் : கம்பெனி நடக்க ஆரம்பித்தால் என் கைக்குப் பணம் உபரியாக வரும். கணக்கில் காட்டவேண்டாம் என நினைத்தேன்.

தாயார் : எண்ணத்தை மனதில் மாற்றமுடியுமா?

கணவர் பூஜை அறைக்குப் போனார். போலீஸ் கான்ஸ்டபிள் வேலு வந்தான். இவன் குடும்பத்திற்கு அறிமுகமானவன். அவனைக் கண்டு அனைவரும் தலை குனிந்தனர். "குற்றம் நம் பையன் மீதில்லை என்று சொல்ல வந்தேன்'' என்றான். வேறு விபரம் சொல்லாமல் உடனே போய்விட்டான்.

பெரியவன் : அப்பாவை எழுப்பிச் சொல்லுங்க, அம்மா.

பெண் : அவரே எழுந்து வரட்டும், பொறு.

பெரியவன் : வேலுவைப் பார்த்ததும் வெட்கமாயிற்று.

தாயார் : அவன் நல்லவன். அவன் மூலமாகக் கெட்ட செய்தி வாராது.

சிறியவன் : என்னை அன்னை காப்பாற்றிவிட்டார், தப்பித்துக் கொண்டேன்.

பெண் : தப்பே செய்யவில்லையே, எப்படித் தப்பிப்பது?

சிறியவன் : நான் திருடவில்லை, ஆனால் திருட நினைத்தேன்.

தாயார் : அது என்ன?

சிறியவன் : என் நண்பன் செலவுக்கு 2000/- ரூபாய் வைத்திருப்பதாகச் சொன்னான். எனக்கு அப்படிப் பணமில்லையே, உங்கள் அலமாரியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தேன். அதற்கா இவ்வளவு பெரிய தண்டனை?

பெரியவன் : எப்படி, தம்பி தப்பித்தான்? ஹாஸ்டலில் என்ன நடந்தது? என்று சொல்லாமலேயே வேலு போய்விட்டான். நான் போய்த் தெரிந்துவருகிறேன்.

கணவர் : என்ன விஷயம்?

பெண் : பழி விலகியது. வேலு வந்து சொன்னான்.

கணவர் : ஓர் ஆட்டம் ஆடிவிட்டது. அரெஸ்டாயிருந்தால் அசிங்கம்.

தாயார் : ஏன் வந்தது, எப்படிப் போயிற்று என்றறிவது முக்கியம், பலன் தரும்.

கணவர் : மனம் அசுத்தமாகயிருந்ததால் வந்தது, அருளால் போயிற்று.

தாயார் : நாம் அதை உணருவதும், 5 ஊர்களில் பெரிய ஆஸ்பத்திரி கட்டுவதும் சமம்.

கணவர் : 5 ஊர்களில் ஆஸ்பத்திரி கட்டியவர் பிறருக்கோ, தாய் ஸ்தாபனத்திற்கோ, உறவுக்கோ, உதவ முயலவில்லை. பிறரைத் தம்மைப்போல் தயார் செய்ய முயலவில்லை. தானே செய்தார், பிறரைச் செய்யச் சொல்லவில்லை.

தாயார் : எட்ட இருந்தால், அன்னை அபரிமிதமாகப் பலிக்கிறார் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

கணவர் : உலகம் தன்னளவு ஒருவரில் முன்னேறும் என்று இங்குக் காண்கிறோம். உலகமே ஒன்றுகூடி ஒருவரை முன்னுக்குக் கொண்டுவர முயன்றதுபோல் 5 பெரிய ஆஸ்பத்திரிகளை ஒருவர் நிறுவியுள்ளார்.

தாயார் : அது ஸ்தாபனம் செய்வது (management). அந்த ஆஸ்பத்திரிகளில் சுத்தம் அபரிமிதமாக இருக்கும். அது ஒரு முக்கியக் காரணம். அன்னை இங்கு அபரிமிதமாகச் செயல்பட்டதற்கு இந்த மூன்று காரணங்கள் முக்கியம்.

  1. திட்டம் தோற்கும் வகைகளை விலக்கியது.
    • உதவியை இரண்டாம்பட்சமாக்கியது.
    • தாமே செய்ய முன்வந்தது.
    • பொறாமைக்காரருக்குப் பிடிகொடுக்காதது.
  2. ஸ்தாபன முறைகளைக் கடைப்பிடித்தது.
  3. அளவுகடந்த சுத்தம்.

கணவர் : நாம் இந்த மூன்றையும் பின்பற்றக் கூடாதா?

தாயார் : அவசியம் செய்யவேண்டும். மனம் இந்தப் பெரிய சாதனையைவிடப் பெரியது. மனம் அன்னையை ஏற்றால், சரணாகதியை ஏற்றால், அல்லது அன்னை கோட்பாடுகளை ஏற்றால், அவை மேற்சொன்னவற்றை விடப் பெரியது. மனம் உலகத்தைத் தன்னுட்கொண்டது. அதை நாம் வெல்லுதல் முடியும், அவசியம்.

கணவர் : எப்படி ஆரம்பிப்பது?

தாயார் : இந்த எண்ணத்தை ஏற்க முடியுமா? புரிந்து மனம் ஏற்குமா? ஏற்பது அவசியம், ஏற்றால் பலிக்கும் என மனம் அறியுமா?

கணவர் : மனம் என்றால் என்னவென்று தெரியாதபொழுது இவற்றையெல்லாம் எப்படிச் செய்வது?

தாயார் : கடந்த ஓரிரு ஆண்டுகளாக நடப்பது எப்படி எனப் புரிகிறதன்றோ?

கணவர் : Mother's Grace எனக்கொள்கிறோம்.

தாயார் : மதர் அருள் செயல்பட நம் மனம் இடம் கொடுத்தது தெரிகிறதா?

கணவர் : அதைச் சொல்கிறாயா? எனக்கு மனம் இடம் கொடுக்காதது தெரிகிறது.

தாயார் : மனம் இடங்கொடுக்காதது தெரிவதும், இடம் கொடுப்பது தெரிவதும் ஒன்றே. இரண்டும் மனத்தை அறிவதே. மனம் புரிந்து கொண்டவை நடந்தது, புரிந்ததால் நடந்தது அன்றோ?

கணவர் : அது தெரிகிறது.

தாயார் : மனம் புரிந்துகொள்வது, மனம் விஷயத்தைப் புரிந்துகொள்வது, மனம் அன்னையைப் புரிந்து கொள்வது, மனம் விஷயத்தை அன்னை மூலம் புரிந்து கொள்பவை அடுத்த, அடுத்த கட்டங்கள் அல்லவா?

கணவர் : இது விளங்குகிறது.

தாயார் : புரிந்து கொள்வதால் நடப்பதை விட புரிந்து கொள்ளாததால் நடக்கவில்லை என்ற தெளிவு பெரியது.

கணவர் : ஆமாம், அது முக்கியம். இப்போ நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிகிறது. "உள்ளே" நிறைய வேலை இருக்கிறது. பார்ட்னர் இதைப் பெரிதும் விரும்புவார்.

தாயார் : கம்பெனி வேலைகளை இப்பொழுது எப்படிச் செய்கிறோம்? அன்னை முறைப்படி எப்படிச் செய்ய வேண்டும்? என மனதால் தயார் செய்யவேண்டும். அதற்கு மனம் ஒத்துக்கொண்டால், மனம் தயாராகும்.

கணவர் : விஷயமே மனத்தில்தானிருக்கிறது. சர்க்கார் எடுத்துக்கொண்ட 1½ ஏக்கர் நிலத்தை மீண்டும் அருளால் பெற்றது எனக்கு நினைவிருக்கிறது. பிற்காலத்தில் 47,000 ரூபாய்க்கு விற்ற மனையை எடுத்துக்கொண்டு சர்க்கார் 2,350/- ரூபாய் கொடுக்க முன்வந்தது பரிதாபமன்றோ?

தாயார் : அது கஷ்டப்பட்டுச் சம்பாதித்த காசு, கைவிட்டுப் போகாது. அதனால் அன்னை எளிதில் காப்பாற்றினார்.

கணவர் : அப்படியிருக்கும் பொழுது எப்படிக் கைவிட்டுப் போயிற்று?

தாயார் : மனம்.

கணவர் : என்ன விஷயம்?

தாயார் : நண்பருக்கு நிலம் பேரம் பேசி வாங்கிக் கொடுக்கும் நேரம் அந்த நிலத்தில் பாதியை தமக்குக் கேட்டார்.

கணவர் : இனாமாகக் கேட்டாரா?

தாயார் : நண்பரையே வாங்கிக் கொடுக்கும்படிக் கேட்டார்.

கணவர் : அப்படியும் மனிதர்கள் கேட்பார்களா? நண்பர் என்ன சொன்னார்?

தாயார் : பாதிக்குப் பதிலாக 1/3 பாகம் தர நண்பர் சம்மதித்தார்.

கணவர் : இவர் ஏற்றாரா?

தாயார் : இல்லை.

கணவர் : அதனால்தான் இவர் பொருள் திரும்பிவந்ததா? மனம் பிறர் பொருளை நாடியதால், இவருடைய பொருளுக்கு ஆபத்து வந்ததா?

தாயார் : யார் பொருளை அபகரிக்க இவர் முயன்றாரோ, அவரே வந்து இவர் பொருளைக் காப்பாற்றினார்.

கணவர் : உதவி உபத்திரமாவதற்கு வேறு உதாரணம் வேண்டாம். நினைவே பலிக்கிறது என்பதற்கும் இது பெரிய உதாரணம்.

தாயார் : விஷயம் எவ்வளவு பெரியதானாலும் மனம் மாறினால் காரியம் முடியும்.

கணவர் : ஈராக் போரை அப்படி நிறுத்த முடியுமா?

தாயார் : முடியும். அமெரிக்கா மனம் மாறினால் போரிருக்காது.

கணவர் : ஏன்?

தாயார் ஈராக் அடாவடி செய்வது அனைத்தும் அமெரிக்கா (diplomacy) செய்வது தானே. பலமுள்ள இடம் அடாவடி செய்வது எல்லா நாடுகளும் செய்வதுதானே. காஷ்மீர் பிரச்சினையானது பிரிட்டனும், அமெரிக்காவும் பாக்கிஸ்தானுக்குத் துணை போனதால்தானே. ரஷ்யா ரத்து அதிகாரத்தைச் செலுத்தாவிட்டால் காஷ்மீர் நம் கையை விட்டுப்போயிருக்கும்.

கணவர் : பிணக்கில் இருவரும் தறு என்பது அன்னைச் சட்டம்.

தாயார் : எதிரி சக்திகள் நம்மை அழிக்க முடியும்வரை நிச்சயமாக அழிக்கும். முடியாது எனத் தெரிந்தால் நம் ஸ்தாபனத்துள் வந்து நம்முடனிருந்து உள்ளிருந்து நம் வேலையைக் கெடுக்கும். அவற்றை evil persona தீயவன் என பகவான் கூறுகிறார். நம்முள் உள்ள அத்தீயவனைக் கண்டு அவனைச் சரணம் செய்வது சரணாகதி. நாம் அவற்றைத் தவறான குணமெனக் கூறுகிறோம்.

கணவர் : கேலி, குத்தலாகப் பேசுவது, அதுவா?

தாயார் : அவை எழும்பொழுது க்ஷணத்தில் காரியம் கெட்டு விடும். அதேபோல் அருள் எழும்பொழுது க்ஷணத்தில் காரியம் முடியும். அந்த இடங்களில் இயல்பாக உள்ள உண்மையை sincerity என்கிறார் அன்னை.

கணவர் : நமக்குப் புரியவில்லை என அந்த நேரம் கூறுவது insincerity. நான் உன் காரியத்தை அழிக்க வந்துள்ளேன் எனக் கூறுவதாகும். அவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

தாயார் : நாமே அவர்.

கணவர் : பயமாயிருக்கிறது.

தாயார் : நம்மைச் சுற்றியுள்ளவர்கள், நாம் அடிக்கடிச் சந்திப்பவர்களிடம் உள்ள அத்தனைக் குணங்களும் நம்முடைய பிரதிபலிப்பு என எடுத்துக்கொள்ள முடியுமா?

கணவர் : அப்படியானால் நான் பெரிய லிஸ்ட் தரமுடியும். அப்படிச் சொல்ல முடியுமா?

தாயார் : அதுவே உண்மை.

கணவர் : சரி, செய்கிறேன். நல்லதை முதலில் சொல்கிறேனே.

  • இனிமையாக மட்டும் பேசுவது.
  • எவர்க்கும் உதவி செய்வது.
  • செய்வதைத் திறமையாகச் செய்வது.

தாயார்: இது உலகில் உள்ள அனைத்தையும் கூறும்படி அமையும்.

கணவர் : எப்படிச் சொல்ல?

தாயார் : நம்முள் இருப்பதாக நாம் காணும் எந்தச் சிறிய தவறும் பிறரில் கண்டால் அதை மட்டும் கூறவேண்டும்.

கணவர் : நல்லது வேண்டாமா?

தாயார் : கெட்டதை விலக்குவது முக்கியம்

கணவர் : சரி, அப்படிச் சொல்கிறேன்.

  • நல்ல சொல் 10 சொன்னபின், மனம் புண்படும்படி ஒரு சொல் சொல்லி எல்லாவற்றையும் கெடுப்பது.
  • எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் பல ஆண்டுகள் வேலை செய்தபின் முடிவில் ஒரு சிறு பலனை எதிர்பார்த்துக் கெட்ட பெயர் வாங்குவது.
  • நம்மைச் சுற்றி நடப்பதை அறியாதது.
  • எதிரியை நண்பனாக நினைப்பது.
  • பிறர் நம்மை மட்டமாக நினைப்பதை அறியாதது.
  • நாமாகச் செய்யாத தவற்றைப் பிறர் தூண்டுதலால் செய்வது.
  • அடுத்தவரை அவரிஷ்டப்படித் திருப்தி செய்ய முயல்வது.
  • நடக்காததை நடத்த ஆசைப்படுவது.
  • தராதரம் தெரியாமல் பழகுவது.
  • பிறர் குறையை அறிய முடியாததால் சிரமப்படுவது.
  • மனிதனுக்குப் பொறாமை, சுயநலம் உண்டு எனத் தெரியாதது.
  • எவரும் பொய் சொல்வார் என அறியாதது.
  • பிறரை மனிதராக, நல்லவராக, சமமாகக் கருதுவது.
  • நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவரை நம்புவது.
  • பிடியை விட்டுக்கொடுப்பது.
  • மட்டமானவர்க்கு இடம் தருவது.

தாயார் : இவை பிள்ளைகளிடமிருந்தால், கண்டுபிடித்தால் நீக்க முடியும்.

மனம் பக்குவப்படவில்லை எனினும், பாக்டரியும், காரும் வந்ததாலும், பெரிய இடத்துச் சம்பந்தங்கள் ஏராளமாக வந்தபடியிருப்பதாலும், முக்கியமாகக் கணவரும், மற்றபடி பிள்ளைகளும் எல்லா வகையான புறக்கட்டுப்பாடுகளையும், மனக்கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டனர். அதன் பலனாக,

  • வீட்டில் அசம்பாவிதமாக எவரும் பேசுவதில்லை.
  • சுத்தம் தொடர்ந்து உயர்ந்தபடியிருக்கிறது.
  • எவர் வீட்டினுள் நுழைந்தாலும் மலர்ந்த முகத்துடன் வருகிறார்கள்.
  • டெலிபோன் மணியடித்தால் ஓடிப்போய் எடுக்கிறார்கள்.
  • வந்தவர்களைச் சாப்பிடாமல் அனுப்புவதில்லை.
  • யார் வந்தாலும், அனைவரும் அவரவரளவில் விசாரிக்கிறார்கள்.
  • வருபவர் அனைவரும் தங்கள் வீட்டிற்கு வரும்படி வீட்டில் உள்ளவர்களை அழைக்கிறார்கள்.
  • இதுவரை இருந்த சில்லறைப் பிரச்சினைகள் தாமே மறைந்துவிட்டன.
  • டாக்டரிடம் போவது குறைந்தது, மறைந்தது எனலாம்.
  • ஊதுவத்தி ஏற்றாவிட்டாலும், வீடு முழுவதும் வத்தி மணமிருக்கிறது.
  • எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஏதாவது சிறிய, பெரிய
  • வாய்ப்புகள் வந்தபடியிருக்கின்றன.
  • பார்ட்னர் வருந்தோறும் ஒரு பெரிய செய்தியைச் சொல்லிவிட்டுப் போகிறார்.

இவையெல்லாம் ஒரு பெரிய காரியம் நடப்பதன் அறிகுறி எனத் தாயார் அறிவார். நடப்பது ஓரளவு பெரியதானால் வீட்டுச் சூழல் இடம் கொடுக்கும். அளவுகடந்து பெரியது நடந்தால், அந்த அளவுக்கு வீட்டு மக்கள் உடனே உயர்ந்து ஆதரவு தரமுடியுமா என்பது கேள்வி.எழவேண்டியது கேள்வியில்லை, சமர்ப்பணம் என மனம் சமாதானமாயிற்று. மனம் சமாதானமானாலும் அதற்குரிய அமைதி எழவில்லை. இவை பெரிய காரியங்கள் என்பதால், வேண்டாம் என ஒரு நினைவு எழுந்தாலும் காரியம் முழுவதும் கெட்டுப் போகும்.எழுந்த கேள்வியைச் சமர்ப்பணம் செய்வது எளிதன்று எனத் தீவிரமாக நினைத்தபொழுது பார்ட்னர் வந்தார்.

பார்ட்னர் : கவர்னர் கூப்பிட்டு அனுப்பியிருந்தார். நம் பாக்டரிக்கு எந்தவிதமான சர்க்கார் ஒத்தாசை வேண்டுமென்றாலும் செய்கிறேன் என்றார்.

கணவர் : எப்படி கவர்னர் இதுபோல் பேசுகிறார்?

தாயார் : (பார்ட்னரை நோக்கி) கவர்னரிடம் என்ன சொன்னீர்கள்?

பார்ட்னர் : நன்றி கூறினேன். கவர்னர் இதுபோன்ற ஆதரவை முதல் வரிசையிலிருக்கும் முதலாளிகளுக்கே கொடுப்பார்.

கணவர் : கவர்னர் அவர்களை உதவி கேட்பார், கொடுக்கமாட்டார்

தாயார் : அதுவே சரி. அதனுடைய ஆன்மீக அர்த்தம் புரிய வேண்டும்.

பார்ட்னர் : என்ன?

தாயார் : நாம் எது செய்தாலும் கூடிவரும் எனப் பொருள்.

"உனக்கு எது வேண்டுமானாலும் நான் செய்கிறேன்'' என அன்னை கவர்னர் மூலம் கூறுகிறார்.

பார்ட்னர் : நான் என்ன செய்ய?

தாயார் : சமர்ப்பணத்தை மேற்கொள்ளவேண்டும்.

பார்ட்னர் : 500 கோடி கம்பெனிகள் நாணயமான பார்ட்னர்கள் தேடுவதாகவும், நம் பெயரை அவர்கட்குத் தரலாமா எனவும் கவர்னர் விசாரித்தார். என்னிடம் மூலதனம் இல்லையே என்றேன். தேவையில்லை என்றார். எனக்குப் புரியவில்லை.

கணவர் : எனக்கும் புரியவில்லை. நாம் அவர்கட்கு என்ன செய்ய முடியும் என கவர்னர் நினைக்கிறார்.

பார்ட்னர் : ஓரிருவர் நம் பெயரையே கவர்னரிடம் கூறியதாகச் சொன்னார்.

தாயார் :என்ன பதில் சொன்னீர்கள்?

பார்ட்னர் : ஒத்துக்கொண்டேன். கம்பெனியின் நாணயத்தைக் கணக்கிடும்பொழுது நல்ல பெயருக்கு மரியாதை உண்டு.

கணவர் : அது பணத்திற்குண்டு

பார்ட்னர் : பிறகு பெரிய பதவியிலிருந்த ஆபீசர்கட்கு அந்த அந்தஸ்திருந்தது.

தாயார் : நாம் முதலிலிருந்து கம்பெனியின் பெயரை உயர்வு குறையாமல் வைத்திருக்கிறோம்.

கணவர் : அது கணக்கில் சேராது.

பார்ட்னர் : இதுவரை சேராது. இனி சேரும் போலிருக்கிறது. நம் கம்பெனி 7, 8 வருஷமானாலும், சிறிய அளவிலிருந்தாலும் - 5 கோடி அளவில் - அந்த அளவு கம்பெனிகள் செய்யும் தில்லுமுல்லுகளை நாம் செய்யவில்லை.

கணவர் : கறுப்புப் பண முதலை நாம் பல முறை மறுத்துவிட்டோம்.

பார்ட்னர் இது எந்தக் காலத்திலும், எந்தக் கணக்கிலும் சேராது.

தாயார் : இப்பொழுது அன்னையால் சேருகிறது.

பார்ட்னர் : அன்னையால் சேர்வதுதான் சேருவது. இந்த அந்தஸ்தை நாம் எப்படிக் காப்பாற்றுவது?

கணவர் : நம் கம்பெனியை நல்லபடியாக நடத்தினால் போதும்

தாயார் : அன்னை முறைப்படி நடத்தினால் போதும்.

பார்ட்னர் : பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்களைச் சந்தித்துச் சொற்பொழிவாற்ற அழைத்துள்ளனர். பேப்பர் ரிப்போர்டர் வந்து என்னைப் பேட்டி கண்டான். பிரபலம் நம்மைத் தேடி வருகிறது என்பதை நான் அடிக்கடி கேட்டுள்ளேன். இப்பொழுதுதான் பார்க்கிறேன்.

தாயார் : ரேடியோ டைரக்டர் உபசாரமாக பேசச் சொன்னபின் மறந்துவிட்டார். பேப்பரில் பல போட்டோக்களுடன் வந்தபின் தாமே அழைத்துப் பேசச் சொன்னார் என்பது நடக்கக் கூடியதில்லை.

பார்ட்னர் : இப்பொழுது நமக்கு நடக்கிறது. பேப்பர் அன்பர்கள் கட்டுரையை வெளியிட்டால் அதிகப் பிரதிகள் விற்கின்றன என்பதை நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். போட்டி பேப்பரைவிட 7 மடங்கு விற்கும் என நான் கருதவில்லை.

தாயார் : எதுவுமே நம்மால் நினைக்க முடியாதபடியே நடக்கும் என்பது மட்டும் நான் அறிவேன். நடக்கும் செய்திகள் நமக்கு மட்டும் தெரிவதில்லை.

கணவர் : தெரிந்தால் நமது அல்ப சந்தோஷம் அத்தனையையும் வீணாக்கும்.

தாயார் : அதிர்ஷ்டம் ஆயிரம் வழியாக வருவது அன்னை வாழ்வு. இந்த எலக்ட்ரிகல் கம்பெனியில் நடந்தது அதிர்ஷ்டம்.

கணவர் : யாரைச் சொல்கிறாய்?

தாயார் : கணபதி எலக்ட்ரிகல்ஸ்.

கணவர் : அவருக்குத் தொழில் கெட்டுப் போயிற்று.

பார்ட்னர் : இன்று நான் அந்த வழியாக வந்தேன். ஏதோ வேலை நடந்ததே.

கணவர் : அவருக்குக் கடனாகிவிட்டது. கம்பெனியை மூடிவிட்டார். கட்டிடத்தை வாடகைக்கு விடமுடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

தாயார் : அவருக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். அவருடைய அண்ணார் மகனுக்கு தோலெல்லாம் நீர் வடிவது அவருக்கு வேதனை. அது குணமாகவில்லை. அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்.

பார்ட்னர் : அது அவருடைய அண்ணார் மகனா? அவர் மகன் என நினைத்தேன். அன்னையைத் தெரியுமா அவருக்கு?

தாயார் : தோல் வியாதி, கனவில் அன்னை வந்து கடலில் குளிக்கச் சொல்லிப் போய்விட்டது. அதனால் நம்பிக்கை வந்து கட்டடத்தில் அன்னை படத்தை வைத்தார். புரோக்கர் கைவிரித்துவிட்டார், கேட்பாரில்லை. கேட்டால்தானே கிராக்கி செய்யலாம்.

பார்ட்னர் : வேலை நடக்கிறதே.

தாயார் : ஒரு பாங்க் வாடகைக்கு எடுத்துக்கொண்டது. பெரிய அட்வான்ஸ் கொடுத்தது. அவருக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது. அதிர்ஷ்டம் ஆயிரம் வழியாக வரும். எந்த வழியாகவும் நம்பிக்கை வருவதில்லை.

பார்ட்னர் : நம்பிக்கை வருவதுதானே அதிர்ஷ்டம்.

தாயார் : தினமும் கேள்விப்படுகிறோம். யாருக்காவது, ஏதாவது நடந்தபடியிருக்கிறது. வயதாகிறது, மாப்பிள்ளை வரவில்லை.

கணவர் : தாயாரும், அக்காவும் எதிரியாக இருந்தால் மாப்பிள்ளை எப்படி அமையும்? பணமில்லை, வயதாகிவிட்டது, வீட்டில் அனைவரும் எதிரி,கல்யாணம் எப்படி நடக்கும்?

தாயார் : பிரபலமான சர்க்கார் வேலையிலிருப்பவர் தாமே வந்து ஏற்றுக்கொண்டது அதிர்ஷ்டமில்லையா? அதிர்ஷ்டத்திற்குக் குறைவில்லை. நம்பிக்கை வருவது இல்லை.

கணவர் : என்ன வித்தியாசம்?

தாயார் : பலனை மட்டும் கருதினால் நம்பிக்கை வாராது.

கணவர் : என்ன செய்யவேண்டும்?

தாயார் : நன்றியிருந்தால் நம்பிக்கை வரும்.

பார்ட்னர் : நம்பிக்கையிருந்தால் நன்றி வருமா, நன்றியால் நம்பிக்கை வருமா?

தாயார் : நன்றி நம்பிக்கையைவிடப் பெரியது.

பார்ட்னர் : எப்படி?

தாயார் : நம்பிக்கை ஆத்ம ஞானம். நன்றி உடலில் வளரும் ஆத்மவிழிப்பு.

கணவர் : நமக்கில்லையே, என்ன செய்வது?

தாயார் : இல்லை என்பதை உணர்வதே நல்லது. நன்றி மனிதனில் சமீபத்தில் பிறந்தது என்கிறார் அன்னை.

பார்ட்னர் : தேவதைகள் நடனமாடிய கதைதானே. வெண்மையான இளம் தேவதை சமீபத்தில் பிறந்தது என்பதுதானே.

தாயார் : நன்றி தேவதை தம்மை எவரும் அழைப்பதில்லை என்று கூறுகிறது.

கம்பெனியிலிருந்து சிமெண்ட் திருடு போனதாகச் செய்தி வந்தது. அனைவரும் மனம் ஒடிந்தனர்.

தாயார் : திருடு போகக்கூடாது.

கணவர் : போய்விட்டதே, என்ன செய்ய?

பார்ட்னர் : ஏன் போயிற்று என அறிந்து மாற்றினால் திரும்பக் கிடைக்குமா?

கணவர் : தத்துவம் வேறே. முதலில் அதைக் கண்டுபிடிப்போம். போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுப்போம். நான் போறேன்.

பார்ட்னர் : நீங்கள் போய்ப் புகார் எழுதிக் கொடுங்கள்.

(தாயாரைப் பார்த்து) ஏன் திருடு போயிற்று?

தாயார் : கவனக்குறைவு, அவநம்பிக்கை, நன்றியில்லாதது காரணம்.

பார்ட்னர் : நம்மிடம் எல்லாமிருக்கிறது. நான் பூஜை அறைக்குப் போகிறேன்.

வேலைக்கும் அன்னைக்கும் ஏதோ ஓரிடத்தில் சிறு தொடர்பிருக்கிறது. ஜீவனுள்ள தொடர்பில்லை என்பதால் ஏதாவது சிரமம் வந்தபடியிருக்கிறது என்று தாயார் கவலைப்பட்டார். வீட்டார் மனதில் பாக்டரியிருக்கிறது, அன்னையில்லை. பார்ட்னர் அன்னையை ஏற்க முயல்கிறார். போதாது என்பது நிலை. கம்பெனியிலிருந்து ஆள் வந்தான். சிமெண்ட் எப்படித் திருடு போயிற்று என்று விசாரித்தால் அவனுக்குத் தெரியவில்லை. திருடு போனதே தெரியவில்லை என்றால் நிலைமை மோசமாக இருக்கிறது என்று விசாரப்பட்டார் தாயார். கணவர் போலீஸில் புகார் கொடுத்துவிட்டு வந்தார். பார்ட்னர் தியானம் முடிந்து எழுந்து வந்து கம்பெனிக்குப் போய் நடந்ததைக் காணவேண்டும் எனப் புறப்பட்டார். எப்படித் திருடு போனது அங்குள்ள ஆட்களுக்குத் தெரியாமற்போகும் என மனம் துவண்டு போனார். வேறோர் ஆள், வந்தவரை அழைத்துக்கொண்டு கம்பெனிக்குப் புறப்பட்டார். அவன் தாயாரிடம் வந்து ஏன் அனைவரும் கவலையாக இருக்கின்றனர் என விசாரித்தான். திருட்டைப் பற்றி அவனுக்குத் தெரியவில்லை என்பது தாயார் கவலை. "நான் 10 மூட்டை சிமெண்ட் எடுத்துப் போனேன். திருடு போனதாகத் தெரியவில்லையே'' என்றான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்ட்னர் விசாரித்தார். யார் திருடு போன தகவல் கொண்டு வந்தார் என்று விசாரித்தால், இவன் 10 மூட்டை வேலைக்கு வேறு இடத்திற்கு எடுத்துப் போனதைத் திருடு என்று கூறியுள்ளார் எனத் தெரிந்தது. மனம் குறையை ஏற்றால் குறை குறையில்லை எனத் தெரியும் என்பது இதனால் நிரூபணமாயிற்று.

பெரியவன் : அப்பாவுடன் வேலை செய்பவர் - நாயுடு - ஒரு சின்ன விசேஷம் நடத்தினார். பெரிய ஏற்பாடுகளெல்லாம் செய்து இருந்தார். விருந்தினரை உபசரிக்கச் செய்த ஏற்பாடுகள் பெரியது. ஒரே ஒருவர் வந்தார். அது ஆபீசில் வேலை செய்பவரில்லை; தெரிந்தவர்.

தாயார் : அவர் யார் வீட்டு விசேஷத்திற்கும் போகமாட்டார். அவர்கள் எப்படி வருவார்கள்?

சிறியவன் : பயங்கரமான ஏற்பாடம்மா.

பெரியவன் : அவர்களை எல்லாம் உள்ளன்புடன் எதிர்பார்த்தார்.

தாயார் : இன்று அவர்கள் வருவது, அன்று அவர் போனதைப் பொருத்தது.

கணவர் : நாயுடு ஏமாந்துவிட்டார். அவருக்கு வழியுண்டா? நான் சொன்னால் கேட்பார்.

சிறியவன் : நாயுடு அப்பாவைப் பார்க்க வந்திருக்கிறார்.

நாயுடு : வெளியில் போகலாம் என அழைக்க வந்தேன்.

கணவர் : வேறு விசேஷம் உண்டா?

நாயுடு : விசேஷம் ஒன்றுமில்லை.

கணவர் : கவலைப்படவேண்டாம்.

நாயுடு : எதற்குக் கவலைப்படவேண்டும்?

வந்த நாயுடு போய்விட்டார். கணவர் அவருடன் வெளியே போகப் பிரியப்படவில்லை.

கணவர் : அவர் ஏதும் பிரச்சினை இருப்பதாக நினைக்கவில்லை.

தாயார் : அவர் தம் பிரச்சினையை உணரவில்லை, உணர்வதாகக் காட்டப் பிரியப்படவில்லை.

கணவர் : நாயுடு வேறு. அவர் பிரச்சினைக்குத் தீர்வுண்டா? இன்று அவர் மனம் மாறினால் நிலைமை மாறுமா?

தாயார் : மனம் மாறினால் விஷயம் மாறும்.

கணவர் : விசேஷம் கடந்துவிட்டதே.

தாயார் : பிரச்சினை மனிதனுக்குரியது, விசேஷம் சந்தர்ப்பம். கணவர் எழுந்து நாயுடுவைத் தேடிப் போனார். தனியே சந்தித்தபொழுது நாயுடு தம் கவலையை, குறையைக் கொட்டித் தீர்த்தார். கணவர் நிலைமை மாறும், அத்தனை பேரும் வருவார்கள் என்றும், இரகஸ்யம் இவர் மனதிலிருப்பதையும் கூறினார். பெரிய போராட்டத்திற்குப்பின் நாயுடுவிற்கு விஷயம் மனதில் பட்டது.

நாயுடு : அது சரி, இப்போ புரிகிறது. என்ன செய்வது?

கணவர் : தவற்றை உணர்ந்து மனத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நாயுடு : விசேஷம் கடந்துவிட்டதே.

கணவர் : பிரச்சினை உங்களுக்குத்தான், விசேஷத்திற்கில்லை.

இருவரும் வெளியிலிருந்து திரும்ப வந்தால் நாயுடு வீட்டில் 10 பேர்கள் ஆபீஸிலிருந்து வந்து பரிசுகளுடன் காத்திருந்தனர். சிலர் காரணம் கூறி வருத்தப்பட்டனர். மற்றவர்கள் ஒன்றும் பேசாமல் பரிசு கொடுத்தனர். ஒரு சிலர் அன்று வாராமல் பிறகு வருவதற்கு வெட்கப்பட்டனர். பலருக்கு வெட்கமில்லை. பெரிய விசேஷமாய் நாயுடுக்கு மனக்குறை தீரும் வகையில் ஆபீஸ் நண்பர்கள் பெருவாரியாய் வந்தது கணவருக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். மனைவி, மக்களிடம் இதைக் கூறும்பொழுது அக்கருத்து மனத்தில் ஆழமாய் அவருக்குப் பட்டுவிட்டது.

தாயார் : தான் எனும் அகங்காரம் தடையாக இருக்கிறது.

பெரியவன் : அம்மா, முதலியார் சொன்னது அதுதானே.

கணவர் : அவர் ரொம்ப தவறானவர்.

தாயார் : அவரைப் பணக்காரராகக் கருதுவதால், உலகம் அவரையே மதிக்கும், நம்மையில்லை.

கணவர் : முதலியார் செய்வது அத்தனையும் அனைவருக்கும் சரி. பார்ட்னருக்குத் துரோகம் செய்து வெளியிலனுப்பி நடுத்தெருவில் நிற்க வைத்ததுடன் அவன் கெட்டலைந்து மீண்டும் தன்னிடம் வரவேண்டும் என்பது எவ்வளவு கெட்ட எண்ணம்.

தாயார் : முதலியார் எண்ணம் கெட்டது. பலியானவன் அவனை நாடி வந்துவிட்டானே.

கணவர் : பணம். பணம் எட்டி உதைத்தாலும் கண்ணுக்குத் தெரியாது. உதை இதமாக இருக்கும்.

தாயார் : அந்த மனம் உடையவர்க்கும், கெட்டலையவேண்டும் என்பவர்க்கும் அன்னையில்லை.

கணவர் : நான் அவரைச் சொல்கிறேன். நான் அப்படி நடக்க மாட்டேன். ஆனால் மனம் அப்படியே நினைக்கிறது.

தாயார் : நாம் தவறு செய்து எதிரி பலியானபின் எதிரி கெட்டுப் போய் மீண்டும் நம்மை வந்து கெஞ்சவேண்டும் என்பது மனித சுபாவம், அது மாறவேண்டும்.

கணவர் : எப்படி?

தாயார் : நமக்கு எதிரி, கெட்டது செய்து கெட்டுப்போனாலும் நாம் அப்படி நினைக்கக்கூடாது.

கணவர் : நாம் அவர்கள் - எதிரி - நல்லபடியாக இருக்கவேண்டும் என நினைத்தாலும் நம்மைப் பாதிக்கும் என்கிறாயே.

தாயார் : எதிரிக்கு வாழ்வில் நல்லது செய்வது பெருந்தன்மை.

கணவர் : சூட்சுமத்தில் அதுவும் நம்மைப் பாதிக்குமே.

தாயார் : பாதிக்கும் என்பது உண்மை. அதுவும் மனப்பான்மையைப் பொருத்தது.

கணவர் : அது நாம் பார்த்தோமே. தாம் பொய் சொல்லி, தம் அதிர்ஷ்டத்தை தவறு செய்து அழித்து, பிறகு முன்னுக்கு வர முயலும்பொழுது அரெஸ்ட் வாரண்ட் வந்ததை விலக்கியதும், அவர் சொத்துப் பெற முயன்றதும் என்ன ஆயிற்று? அதே அரெஸ்ட் வாரண்ட் உதவியவருக்கு வந்தது. அதேபோல் சொத்தும் வந்தது.

தாயார் : இரண்டும் அதேபோல் நடந்தன. வந்த அரெஸ்ட் வாரண்ட்டால் அரெஸ்ட் ஆகவில்லை. இருவரும் அப்படியே. கடன் வாங்கி சொத்து வந்தது. அதுவும் இருவருக்கும் ஒரே மாதிரி.

கணவர் : இவற்றையெல்லாம் பார்த்தால் உடனே மாறவேண்டும் எனத் தோன்றுகிறது. மாறுவது கஷ்டமா?

கணவர் மனமாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துவிட்டார்.இனி மாறுவார் எனத் தாயாருக்குத் தோன்றியது.

தாயார் : அடுத்தவர் வீட்டில் போய் அவ்வளவு நாள் இருந்தது தவறு எனத் தோன்றவில்லை, கோடி ரூபாய் நஷ்டம் வைத்தது, பொறுப்பில்லாமல் வேலையை விட்டுவிட்டு வந்தது, நல்ல பணத்தைக் கறுப்புப் பணமாக்கியது,வம்புக்காரனைத் தூக்கிவிட்டது, ஆபத்தை விலைக்கு வாங்கியது, நல்ல திட்டங்களை நேரடியாக எதிர்த்தது, சம்பாதிக்கத் திறமையில்லாதது, எதுவுமே தப்பாகத் தெரியவில்லை. மீண்டும் அதுபோன்ற காரியங்களைச் செய்ய ஆர்வமாகப் பேசுவதையும் பார்த்தீர்களல்லவா?

கணவர் : இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்தால் என்ன வரும்?

தாயார் : தெம்பில்லாமல் பொறுத்துக்கொண்டால் மீண்டும் வரும். அறிவோடு அர்த்தத்துடன் பொறுத்துக் கொண்டால் அத்தனையும் வரும்.

கணவர் : நீ சொல்பவர் எதையும் சாதிக்கவில்லை.

தாயார் : மற்றவர் எதையும் சாதிக்க விடமாட்டார். சும்மா பேசுவார். சிறிய புத்தி, சின்ன மனம், பொய் சொல்ல மாட்டார். காசு சம்பாதிக்க முடியாது. செலவே செய்ய மாட்டார். எந்தப் பெரிய காரியத்திற்கும் தடையாக இருப்பார், நல்லவர், எதையும் செய்யும் திறமையற்றவர். செய்த தவற்றை மீண்டும் செய்வேன் என்பவரை என்ன செய்ய முடியும்?

கணவர் : நீ சொல்பவரை எனக்குத் தெரியும். ரொம்ப நல்லவராயிற்றே. அவரே தேறமாட்டார் எனில் நான் எப்படித் தேறுவேன்?

தாயார் : நல்லவரா, கெட்டவரா என்பதும், தேறுவாரா, தேறமாட்டாரா என்பதும் வேறு. ஒன்று சுபாவம், அடுத்தது முடிவு. தேறவேண்டும் என முடிவு செய்தவர் தேறுவார். சுபாவம் சரியில்லை என்பது வேறு, அதை வலியுறுத்துவது என்பது வேறு. வலியுறுத்தினால் வழியில்லை, வலியுறுத்தினால் வலியுண்டு.

கணவர் : கோர்ட்டிற்குப் போய் ஜெயித்த கேஸை இப்பொழுது கிளறுகிறார்கள் எனில் என்ன செய்வது? தம்பிகட்குப் பங்கு கொடுக்கக் கூடாது என இவர் மனம் நினைக்கும்பொழுது இவர் பங்கை எடுத்துப்போக ஊழல் ஆபீசர்கள் நினைக்கிறார்கள்.

தாயார் : ஊழல் ஆபீசர்கள், இவர் மனத்தின் ஊழலைக் காட்டுகிறது. சூழல் பலமாக இருப்பதால் அந்த ஊழல் ஆபீசர்கள் அனைவரும் மாற்றலாகிப் போய்விட்டனர்.

கணவர் : இரண்டு பக்கமும் சக்தி வேலை செய்கிறது.

தாயார் : நாம் எந்தப் பக்கமிருக்கிறோம் என்பதே கணக்கு.நாம் வறுமையைப் பிரச்சினை என்கிறோம். அது போக செல்வம் வருவதால் ஏராளமான பிரச்சினைகள் உண்டு. குடி மலிவது பணம் பெருகுவதால்தான்.

கணவர் : கொஞ்சமாகக் கொடுத்து அதிகமாகப் பெற நினைப்பதே பிரச்சினைக்கு ஆரம்பம்.

தாயார் : அது அகந்தையில் உள்ளது. பிறரைத் துன்புறுத்தி சந்தோஷப்பட விரும்புபவர், துன்புறுத்த முடியாவிட்டால், துன்பம் அனுபவிக்கிறார். முகம் வாடிப் போகிறது.

கணவர் : அவர் கெட்டவர் என்பது வேறு. ஏன் அப்படி?

தாயார் : சந்தோஷம் நாடுபவர், பெறும் திறன் அற்றவரானால், தம்மால் முடிந்த வகையில் பெற முயல்கிறார்.

கணவர் : எந்த வகை?

தாயார் : பிறரைச் சந்தோஷப்படுத்தி தாம் சந்தோஷம் அனுபவிக்கும் மனமில்லை. பிறரைக் கொடுமைப்படுத்தி சந்தோஷப்படலாம். அதற்குண்டான வலிமையில்லை. ஏமாற்றம் வருத்தம் தருகிறது.

கணவர் : எவரையும் கொட்ட முடியவில்லை என்ற கஷ்டமா?

தாயார் : நம்மால் முடிந்த அளவில் சந்தோஷம் பெற முடியவில்லையே என்ற வருத்தம். மட்டமான - தவறான - மனிதரை இப்படிப்பட்டவர் ஆதரிப்பார்கள்.

கணவர் : ஆமாம். அது ஏன்?

தாயார் : வலிமையற்ற கெட்ட மனிதர், வலுவான கெட்ட மனிதரைப் பார்த்து அவர்கள்போல் தாமிருக்க முடியவில்லையே என வருத்தப்பட்டு, அவர்களை ஆதரிப்பார்கள்.

கணவர் : பார்ப்பதற்கு அது நம்பமுடியாமலிருக்கும்.

தாயார் : அத்துடனில்லை. 10 பேர் மத்தியில், ஆபீசில், பொது இடங்களில் இந்த வலுவானவர்கள் தங்களை ஆதரிப்பவர்களை அவமானப்படுத்துவார்கள். அப்படி அவமானப்படுத்தினால் அவமானப்படுபவர்கள் சிரித்து மழுப்புவார்கள். அடுத்த நிமிஷம் அவர் பின்னால் போவார்கள்.

கணவர் : இவற்றையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். எனக்குப் புரியவில்லை.

தாயார் : உலகத்து இரகஸ்யம் ஒன்று இங்குண்டு. சிறியது பெரியதை விரும்பி நாடும். அவமானம் பொருட்டன்று. அவமானப்படுத்தினால் பெருமைப்படுவார்கள்.

கணவர் : என்ன பலன் கிடைக்கும்?

தாயார் : அவமானப்படுபவனுக்கு பொக்கிஷம் போன்றது நஷ்டமாகும். இந்த இடத்தில் நஷ்டம் வந்தபிறகும் அவனால் ஏற்கமுடியாது, மாற முடியாது.

கணவர் : நாம் அப்படியிருக்கக் கூடாது. பெரிய இடம் எனில் எல்லாமே தாமே மாறிவிடுகின்றன.

தாயார் : அப்படிப்பட்டவர்க்கு அன்னையில்லை, அடியோடில்லை.

கணவர் : நானும், பிள்ளைகளும் அப்படியிருக்கிறோம். நாங்கள் மாற முயல்கிறோம்.

தாயார் : மாறினால் சமர்ப்பணம் பலிக்கும்.

கணவர் : நீ சமர்ப்பணத்தைப் பற்றிப் பேசினால் எனக்கு கொஞ்சநஞ்சம் புரிந்ததும் போய்விடுகிறது.

தாயார் : பருத்தி புடவையாகக் காய்த்தது, வெட்டிக்கொண்டு வா எனில் கட்டிக்கொண்டு வருவான், எள் என்றால் எண்ணெயாக நிற்கிறான் என்பவை சமர்ப்பணத்திற்குப் பொருந்தும். நாம் ஒரு வேலை செய்கிறோம் என்றால் அந்த வேலைக்குரிய பலன் கிடைப்பது வழக்கம். அந்த வேலையின் பின்னால் உலகமே இருப்பதால் அந்த உலகம் பலிப்பதும், அதன்பின் பிரம்மமும், பிரம்ம ஜனனமும் இருப்பதால் அவை பலிப்பதும் சமர்ப்பணத்தாலும், சரணாகதியாலும் நடப்பவை. ஒரு ஸ்தாபனத்திற்கு வேலை செய்ய வந்தவர் சமர்ப்பணத்தால் அதன் உச்சிக்கு வருவதும், சரணாகதியால் அந்த ஸ்தாபனத்தையே தனக்குரியது ஆக்கிக்கொள்வதும் சமர்ப்பணம். பிரம்மத்தையும், பிரம்ம ஜனனத்தையும் வெளிப்படுத்துவதாகும்.

கணவர் : இவையெல்லாம் பெரிய விஷயங்கள்.

தாயார் : சமர்ப்பணமும், அன்னையும் பெரிய விஷயங்கள்.

கணவர் : நமக்கில்லை.

தாயார் : இல்லை என்றால் இல்லை, உண்டு என்றால் உண்டு.

கணவர் : தலை சுற்றுகிறது.

தாயார் : நமக்குண்டு, இல்லை என்பது நமக்கில்லை. நமக்கு வேண்டியவை நமக்குண்டு. ஒரு மகசூல் தவறியதால் நிலமே வேண்டாம் என சொல்வது தரித்திரம்.

கணவர் : 85,000 வருமானமானாலும் நீ சொல்நான் ஏற்கமாட்டேன் என்பது தரித்திரத்தின் சின்னம். அதுவும் உன்னால் 100 ரூபாய் முழுசாக வசூல் செய்ய முடியவில்லை என்றபொழுது.

தாயார் : நாம் செய்யக் கூடாது, செய்தால் ஒட்டிக்கொள்ளும், தரித்திரத்தின் பாஷையை வரிசையாக எழுதி விலக்க முயலலாம்.

கணவர் : தொடாமலே ஒட்டிக்கொள்ளும் பொழுது எப்படித் தொடுவது?

தாயார் : எந்தச் செயலிலும் அன்னையுள்ளார் என்பதைக் கற்றுக்கொண்டால் போதும்.

கணவர் : வம்புக்காரர்களை வேண்டியவர்களாக நினைத்து வலியப் போய் உதவாமலிருந்தால் தொந்தரவே வாராதோ?

தாயார் : அதில் தேறியாகவேண்டும், கடினம், அவசியம் செய்யவேண்டும்.

கணவர் : பிள்ளைகள் எல்லாம் போய்விட்டார்களே இப்பொழுது எனக்கு விளக்கம் சொல்லேன். Indulgence, enjoyment அழிவு, ஆனந்தம், என்ன தொடர்பு?

தாயார் : மேலிருந்தால் இரண்டும் ஆனந்தம், கீழிருந்தால் இரண்டும் அழிவு. நடுவிலிருந்தால் choice, discipline கட்டுப்பாடு வேண்டும். இதைப் பிள்ளைகட்கே சொல்லலாம். இப்பொழுது சொன்னால் வேட்டை ஆடுவார்கள். மனம் பக்குவப்பட்டால் சொல்லலாம்.

கணவர் : பாக்டரி, கம்பெனியில் நடப்பவை எதுவும் நம்பமுடியவில்லையே. பார்ட்னர் தகப்பனார் போல் இருக்கிறார்.

தாயார் : அவர் முனைந்து அன்னையை ஏற்க முயல்கிறார். நிறைய விஷயங்கள் சொல்லாமல் வைத்திருக்கிறார். சொல்லாத வரை நல்லது. நல்லதை வலியுறுத்துகிறார். அதிர்ஷ்டம், விஷயம், நாம் எங்கிருக்கிறோம் என்பது Higher consciousness. மேலேயிருக்கிறோமா, lower consciousness கீழேயிருக்கிறோமா என்பதே.

கணவர் : சரியாக மறுபடியும் சொல்.

தாயார் : கீழேயுள்ளவர் (lower consciousness) எப்பொழுதும் அடம் பிடிப்பார்கள். அவர்களை வேண்டியவராகக் கொண்டால் அவர்களுடைய அடம் உங்கள் உடல் நலத்தைப் பாதிக்கும்.

கணவர் : அதுவும் பார்த்தோம். தஞ்சாவூரில் கண்டோம். தமக்கையைவிட முடியாமல் ஆஸ்பத்திரிக்குப் போனார்.

தாயார் : அந்த ஆபத்துகளில் சேரக்கூடாது.

கணவர் : சேராமலிருக்க முடியவில்லையே.

தாயார் : ஆப்பரேஷன்தான் வரும். Nightmare வரும். நல்ல response கொடுத்தால் பூகம்பம் வரும்.

கணவர் : கீழேயிருந்தால் வற்புறுத்தத் தோன்றுமா?

தாயார் : தம்மைப் பெரிய பக்தராக வைத்துக்கொள்வார்.

கணவர் : தொந்தரவு low consciousness இல்லை. அன்னையைத் துணைக்குக் கொள்வதால் என்று சொல்லு.

தாயார் : அதுவே அகங்காரம். அகங்காரம் lower consciousness தானே.

கணவர் : எனக்கு ஒரு வழி சொல்லேன்.

தாயார் : பார்ட்னர் மாதிரி மனமும், அன்னைமீது பூரண நம்பிக்கையும் இருந்தால் போதும்.

கணவர் : பார்ட்னர் வைரமாயிற்றே, நான் அதுபோல் ஆக முடியுமா?

தாயார் : அவர் பெற்ற அதிர்ஷ்டத்தைக் கொடுத்திருக்கிறாரே, அவர்போல ஆக வேண்டாமா?

கணவர் : அதுவும் சரி. எங்கே ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது?

தாயார் : ஆசையும், ஆனந்தமும் மனிதனுக்கு முக்கியம். தாழ்ந்தவன் ஆசையை நாடுகிறான். உயர்ந்தவன் ஆனந்தத்தைத் தேடுகிறான். ஒரு நிமிஷம்கூட மனிதன் அனுபவிக்கத் தவறுவதில்லை.

கணவர் : வர வர, அது எனக்குப் புரிகிறது.

தாயார் : அனுபவிப்பதே வாழ்க்கை.

அனுபவிக்காமல் வாழ முடியாது.

பரம்பரையாக அனுபவிப்பது தவறு என்பது கருத்து.

கருத்து எதுவானாலும் நடப்பது அனுபவிப்பதே.

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது என்பது பழமொழி.

The heart never grows old, it grows richer and sincere.

ஸ்ரீ அரவிந்தம் அனுபவிப்பதை ஆமோதிக்கின்றது.

அனுபவிப்பது நல்லதாக உயர்ந்ததாக இருக்கவேண்டும்.

அதிகாரம் செய்வதற்கு அலாதிப் பிரியமுண்டு.

கொடுமை செய்ய விரும்புகிறவர் ஏராளம்.

கேலி செய்வதில் எவரும் விலக்கில்லை.

அன்பாகப் பழகினால் அதிகாரத்தைவிடப் பிரியம் எழும்.

கனிவு இதயத்தை, கொடுமையைவிட நிரப்பும்.

பாராட்டுவது கேலியைவிட ஆனந்தம் தரும்.

கெட்டதைவிட்டு நல்லதிற்கு மாற முடியுமா என்பதே கேள்வி.

அனுபவித்தபடி இருக்கவேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

கணவர் : நாம் நல்ல பழக்கங்களை மனதளவில் ஏற்கவேண்டும். மட்டமான மனிதராக இருக்கக்கூடாது. அதில் பெருமைப்படக் கூடாது என்பதே நீ சொல்வது.

தாயார் : அதை ஏற்பது அதிர்ஷ்டத்தை ஏற்பது. தானே அதை அறிவது self-awareness ஆன்மா தன்னை வாழ்வில் உணர்வது. பார்ட்னரைப் பார்த்து நாம் கற்க வேண்டும். பார்ட்னர் நம்மைப் போற்றுகிறார். அவருக்குள்ள நல்ல குணங்கள் பெரியவை, நினைக்க முடியாது. அன்னை நமக்குப் பார்ட்னராக வந்திருக்கிறார்.

கணவர் : அதுவே சரியா, தெரியவில்லை.

தாயார் : எங்கு அன்னை நேரடியாக வர முடியவில்லையோ, அங்கு அடுத்தவர்மூலம் வருகிறார். தரித்திரம் அப்படி வருபவரைக் கொடுமைப்படுத்தும், தூற்றும், சந்தேகப்படும், துரோகம் செய்யும்.

கணவர் : அன்னையை அறிவது அதிர்ஷ்டம், ஏற்பது அருள், போற்றுவது பேரருள் எனக் கூறலாம் போலிருக்கிறதே.

தாயார் : அன்னை காட்டிக்கொடுக்கவில்லை, ஊட்டிவிடுகிறார். மனிதன் அவர் விரலைக் கடிக்கிறான்.

கணவர் : பிள்ளைகளிடம் வேலை அதிகமாக இருக்கிறது.

தாயார் : வேலை உள்ளேயிருக்கிறது, பிள்ளைகளிடமில்லை.

கணவர் : எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது எப்பொழுதும்.

தாயார் : படிக்கவேண்டும், சிந்திக்கவேண்டும், நடைமுறையைப் பார்க்கவேண்டும், அன்னையை எல்லா இடங்களிலும் காணவேண்டும், காண்பதை மனம் ஏற்கவேண்டும்.

கணவர் : ஒரு மனிதனைப் பின்பற்றலாம், அன்னையைப் பின்பற்ற முடியாது.

தாயார் : பார்ட்னரை ஏற்றுக்கொள்ளுங்கள்.

கணவர் : பார்ட்னர் உன்னிடம் கற்றுக்கொள்கிறார். நான் உன்னை ஏற்கவேண்டும். மனம் மனைவியை ஏற்க மறுக்கிறது. 85,000 இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றவர் போலிருக்கிறது. நான் சரியில்லை எனத் தெரிகிறது. மாற மனம் வரவில்லை.

தாயார் : என்னை விடுங்கள், அன்னையைப் பாருங்கள்.

கணவர் : அன்னை எனக்குத் தெரியவில்லை. மனிதரைத் தெரிகிறது.

தாயார் : சரி, போவோம்.

கணவர் : போகவும் மனமில்லை, ஏற்கவும் முடியவில்லை, இதுதான் choice என்பதா? நாம் இப்படியிருந்தால் பிள்ளைகள் எப்படியிருப்பார்கள்?

தாயார் : நாம் செய்வது நமக்கே திரும்பிவருவதை நாம் அறியவில்லை.

கணவர் : தெரியாதது பாதி; தெரிந்தாலும் பொருட்படுத்தாது மீதி.

தாயார் : துரோகம், அலட்சியம், சூன்யம் போன்றவற்றைக் கருதாமல் பண வரவைக் கருதுவோம்.

கணவர் : எதைச் சொல்கிறாய்?

தாயார் : 20 ஆண்டுகள் சேவை, புதுப் பாடமுறையைச் சாதித்தது. பலனைக் கண்டுபிடித்தவர் தங்களுக்குப் பணம் ஏராளமாக வரக் காத்திருக்கிறது என்று அறியவில்லை.

கணவர் : பணம் வருமா? சேவைக்குப் பணம் வருமா? வசூல் செய்யலாம் என்பதா?

தாயார் : பணம் வரத் தேவையானவை இரண்டு.

  1. அடிப்படையான சாதனை.
  2. பணத்தைச் சரிவரப் பயன்படுத்துவது.

இவற்றுள் முதற்பகுதியை இவர்கள் சிறப்பாகச் செய்துவிட்டார்கள். இரண்டாம் பகுதியைப் பின்பற்றினால் பணம் சுலபமாக வரும்.

கணவர் : தானே வருமா?

தாயார் : எப்படி வந்தால் என்ன? வரும். தானேயும் வரும்.

கணவர் : என்ன செய்யவேண்டும்?

தாயார் :

  1. முதலில் பணம் வரும் என நம்பவேண்டும்.
  2. அதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். சாதனைக்குப் பணம் உண்டு என்பது முக்கியம்.
  3. கணக்கெழுத வேண்டும்.
  4. பணம் வரத் தேவையான சக்தி நம் சேவை விரிவடைவது.
  5. விரயம் செய்யக்கூடாது.
  6. தாராளமாகச் செலவு செய்யவேண்டும்.
  7. வேலையில் ஈடுபாடு அதிகரிக்கவேண்டும்.
  8. பணம் உற்பத்தியாகும் இடங்களில் உற்பத்தி செய்யவேண்டும்.

கணவர் : இவையெல்லாம் இவர்கட்குத் தெரியுமா?

தாயார் : தெரியும், முழுவதும் தெரிவது எளிது. அவர்கள் பராமுகமாக இருக்கிறார்கள்.

கணவர் : நாம் ஏன் இதைப் பின்பற்றக் கூடாது?

தாயார் : செய்யலாம். அவர்கள் முதற்பகுதியை முடித்து விட்டார்கள். நாம் அதை இன்னும் செய்யவில்லை.

கணவர் : இப்பொழுது செய்வோம்.

தாயார் : செய்யலாம். தெரிந்ததை முடிப்பது நல்லது.

கணவர் : மனம் முக்கியம்.

தாயார் : மனம் ஏற்று, தெரிந்ததை முடித்தால் ஆரம்பமாகும். பள்ளிக்கூடத்திற்குப் பணம் வந்தது எப்படி என நினைவிருக்கிறதன்றோ?

கணவர் : 3, 4 வருஷங்கள் வேலை நடந்து, அனைவரும் பாராட்டும் நிலைக்கு வந்தபின் அதன் முக்கியஸ்தர் மனத்தால் பெரும்பணம் ஈட்டலாம் என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை. இப்போராட்டம் 1½ வருஷமாக நடக்கிறது. முக்கியஸ்தருக்குப் பணம் எனில் நன்கொடை.

தாயார் : நன்கொடை என்பது வசூல் செய்வது. நான் சொல்வது பணம் நம்மைத் தேடி வருவது.

கணவர் : அது நீ சொன்னது, நினைவிருக்கிறது. அவர் நன்கொடையை விட்டு நல்லெண்ணத்தை ஏற்கிறேன் என்று ஒரு நாள் வாயால் சொன்னார்.

தாயார் : அடுத்த 10 நிமிஷத்தில் வந்த போன் ஓராண்டிற்குத் தேவையான பணத்தைக் கொண்டு வந்தது.

கணவர் : பள்ளிக்குப் பணமா?

தாயார் : பணம் வந்தது, பள்ளிக்கு என்றதன்று. நாம் பள்ளிக்குத் தரலாம், விசேஷம் மனத்தின் முடிவு. உடனே பெரும் பணம் வருவது நாம் கருதவேண்டியது.

கணவர் : நமக்கு அப்படி நடக்குமா?

தாயார் : பள்ளியைப்போல் சாதனை, முக்கியஸ்தரைப்போல் முடிவு இருந்தால் வருவது சிறியதாக இருக்காது.

கணவர் : ஏன்?

தாயார் : இதுவரை நடந்தது (மனதில்) பெரிய வேலை. பெரிய வேலைக்குப் பெரிய பலன், சிறியதில்லை.

கணவர் : பள்ளிக்கு அப்படியா?

தாயார் : இதுவரை பள்ளியில் செலவு செய்ததற்குச் சமமாக வந்துள்ளது.

கணவர் : அது பெரியது.

தாயார் : பெரியதை எதிர்பார்த்தால் சிறியது வரும். எதிர்பார்க்கக் கூடாது.

கணவர் : என்ன செய்யவேண்டும்?

தாயார் : நாம் மனத்தில் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும்.

கணவர் : அதற்கு அவ்வளவு சக்தியா?

தாயார் : செய்து பார்த்தால் தெரியும். ஒரு வேலை என்று போனால் நாம் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறோம். பார்க்கப்போனால், யார் நம் வேலையைக் கெடுக்கக்கூடியவர்கள், அவர்களிடம் இருந்து எப்படி நாம் நம்மைக் காப்பது என அறிவது வேலையை விட முக்கியம்.

கணவர் : பொறாமைக்கார எதிரிகளைச் சொல்கிறாயா?

தாயார் : அதிலிருந்து தப்ப முடியாவிட்டால், ஆரம்பிக்க முடியாது. அது அவசியம். நமக்கு எதிரிகள்,

  1. பொறாமைக்காரர்கள்,
  2. நாம் செய்யும் வேலை சமூகத்தில் யாரை பாதிக்கின்றதோ அவர்கள்,
  3. நம் வேலை எந்தத் தீய சக்திக்கு ஆபத்தோ அது,
  4. நமது புதிய ஜீவியத்திற்கு எதிரான பழைய ஜீவியம்.

கணவர் : இவையெல்லாம் தத்துவங்களாக இருக்கின்றன.

தாயார் : பொறாமைக்காரர் புரியும். நாம் லஞ்சம் கொடுக்காமல் காரியத்தை முடிக்கிறோம். அதனால் லஞ்சம் பெறுபவரால் நமக்கு எதிர்ப்பு வரும். லஞ்சம் தருபவராலும் வரும். நல்ல பொருளை (product)  உற்பத்தி செய்கிறோம். தரக்குறைவான பொருளை உற்பத்தி செய்பவர்கள் எதிரிகள். சமூகத்தை ஒட்டிப் போகவில்லை, அதனால் சமூகமே எதிரி. சத்தியத்திற்கு வேலை செய்கிறோம், அதனால் பொய் எதிரி.

கணவர் : உலகமே நமக்கெதிரியானால் எப்படிப் பிழைப்பது?

தாயார் : அன்னை நம் பக்கம். அதை மட்டும் நம்பவேண்டும்.

கணவர் : இவர்களிடமிருந்து எப்படித் தப்புவது?

தாயார் : நாம் சரியாக இருக்கிறோம் என்ற பெருமை அவர்களைத் தூண்டும்.

கணவர் : அடக்கம் வேண்டும்.

தாயார் : அடக்கம் அவசியம். அடக்கத்துடன் பொறுமையும், சமர்ப்பணமும் வேண்டும்.

அத்துடன் போன கணவர் 10 நாட்கள் வரை மேற்சொன்னபடி பேச வரவில்லை. வேலையாக இருந்தார். ஒரு நாள் வந்தவர் தம் பழைய நண்பனைச் சந்தித்த விஷயத்தைச் சொன்னார். தம் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்களை நண்பனிடம் கூறியிருக்கிறார். அவனுக்கும் ஓரளவு தெரியும். அவனுக்கு உதவி செய்ய இவர் துடித்துவிட்டார். அவன் கேட்ட உதவி சிறியது, செய்வது எளிது. செய்வதாக வாக்குக் கொடுத்துவிட்டார். அந்த உதவி இவரை ஆபத்திற்குக் கொண்டு போகும் என இவருக்குத் தெரியவில்லை. அந்த நண்பன் பொதுவாகக் கோள் சொல்பவன். இவர்மீது சொல்லிய கோள் அதிகம். இவருக்கு சில தெரியும், பல தெரியா. தெரிந்தாலும் பொருட்படுத்தமாட்டார். மட்டமானவர்க்கு, கெட்ட எண்ணமுள்ளவர்க்கு, உதவி செய்தால் நம் வேலை கெடும் என அறிவார். இந்த நண்பனுக்குக் கெட்ட எண்ணம் என இவர் மனம் ஏற்காது. தாயார் இதைப் பற்றிப் பேசினால் எடுபடாது. அவர் சட்டப்படிப் பேசக்கூடாது.

கணவர் : பாலு லைசென்ஸ் வாங்க முடியவில்லை என்ற நான் வாங்கித் தருகிறேன் என்றேன். 2 வருஷமாக நடக்கிறான், பாவம். நீ என்ன சொல்கிறாய்?

தாயார் : சரி, பார்ப்போம்.

கணவர் : ஏன் நான் செய்தது சரியில்லையா? நான் இரண்டு நாளைக்குமுன் பார்ட்னர் தம்பியைப் பார்த்தேன்.அவர், "நமக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும்பொழுது இந்தப் பரம வைரி டிபார்ட்மெண்ட் தலைவராகவந்திருக்கிறான்'' என்றார். அதுவே நமக்கு முக்கியமான டிபார்ட்மெண்ட்.

தாயார் : எப்பொழுதிலிருந்து?

கணவர் : 4 நாட்களாக.

தாயார் : 4 நாட்களுக்கு முன் வீட்டில் எதுவும் விசேஷம் இல்லையே.

கணவர் : கம்பெனியிலும் விசேஷமில்லையே.

பெரியவன் : அப்பா, உங்கள் நண்பரைப் பார்த்தேன். வீட்டிற்கு வரச் சொன்னார்.

கணவர் : உதவி செய்கிறேன் என்றால் வந்து பெற்றுக் கொள்வானா, வீட்டிற்கு வரச் சொல்கிறான். கொஞ்சம் கூட மரியாதையில்லை. இவனுக்கு உதவ நினைத்ததால் தான் எதிரி வந்தானோ?

தாயார் : நேரம் ஒத்து வருகிறதே.

கணவர் : நம்ம லைசென்ஸுக்கு ஆபத்து வருமா? எப்படி இவனிடமிருந்து தப்புவது? செய்தது தப்பு என பிரார்த்தனை செய்கிறேன்.

சிறியவன் : அப்பா, உங்கள் நண்பர் போனில் கோபமாகப் பேசினார். உங்களுக்காக வீணாகக் காத்திருந்தாராம். இனி வரவேண்டாம் எனக் கோபமாகக் கூறிவிட்டார்.

கணவர் : அன்னை பெரிசு, நான் ஆபத்திலிருந்து தப்பினேன்.

தாயார் : இந்த சக்திகள் நமக்கெதிராகப் போய் தாக்குவதை விட நாமே போய் வம்பை விலைக்கு வாங்குவதே அதிகம்.

கணவர் : இவன் விஷயத்தில் நானேதானே உதவிக்குப் போனேன்.

தாயார் : எதிரி வெளியில் இல்லை, உள்ளே இருக்கிறான்.

"பிறர் தர வாரா'' என்று சங்க இலக்கியம் கூறவில்லையா? பழைய தலைவர்கள், முதலாளிகள், ஆசிரியர்கள், குரு, குடும்பத்தில் பெரியவர்கள், என மனம் இதமாக அவர்களை நாடுவது இயற்கை.அதனால் ஆபத்து வரத் தவறாது.

கணவர் : ESI டைரக்டரால் வந்த தொந்தரவுக்குக் காரணம் அதற்குமுன் அவர் அண்ணனுக்குக் கம்பெனி முதலாளி எழுதிய கடிதம் என்றொருதரம் பேசினோம்.

தாயார் : கம்பர் விழா கொண்டாடுபவரைப் பாராட்டி தமிழ் உரைநடையைப் பற்றி கம்பெனி முதலாளி கடிதம் எழுதினார். அவர் தம்பி 5 வருஷங்கள் கழித்து 1½ இலட்சம் அபராதம் போட்டுவிட்டார். அது கம்பெனி முதலாளிக்குப் புரியுமா? அந்தக் கம்பெனிக்கு வந்த அத்தனைத் தொந்தரவுகளும் முதலாளியே தேடிப் போனவைதாமே.

  1. பழைய முதலாளிக்கு உதவினார், மகசூல் போயிற்று.
  2. பழைய ஆசிரியருக்குச் சமாதி புஷ்பம் அனுப்பினார், வீட்டு மேல் கேஸ் வந்தது.
  3. பழைய தலைவருக்கு வீடு இனாம் கொடுக்க நினைத்தார், சொத்து மேல் கேஸ் வந்தது.
  4. பழைய நண்பனுக்குக் கைமாற்றுக் கொடுத்தார், மானம் போயிற்று.

கணவர் : இவையெல்லாம் நல்ல குணங்களாயிற்றே.

தாயார் : யோகம் குணங்களைக் கடந்தது.

கணவர் : சமர்ப்பணம் செய்ய முடியாதோ?

தாயார் : சமர்ப்பணம் செய்திருந்தால் இந்த வேலைகளுக்கு எல்லாம் போயிருக்கமாட்டார், கம்பெனி முதலாளி. அவருக்குச் சமர்ப்பணம் தோன்றவில்லை. தோன்றியிருந்தால் முடிந்திருக்காது.

கணவர் : ஏன்?

தாயார் : மனம் செய்யவேண்டும் என்பதைக் கைவிடாமல், எப்படிச் சமர்ப்பணம் பலிக்கும்?

கணவர் : நாம் செய்ய ஆசைப்படுவதைச் சமர்ப்பணம் செய்ய முடியாதோ?

தாயார் : ஆசையை விட்ட பிறகே சமர்ப்பணம்.

கணவர் : ஆசையைச் சமர்ப்பணத்தால் வெல்லலாம் என நினைத்தேன்.

தாயார் : ஆசையை விடுவது நம் வேலை. நம் வேலையை நாமே செய்யவேண்டும்.

கணவர் : ஆசையை விடாமல் சமர்ப்பணம் செய்து பார்த்தால்....

தாயார் : சமர்ப்பணமாகாது.

கணவர் : ஏன்?

தாயார் : அந்தச் சமர்ப்பணம் ஆசையைவிட உதவும்.

கணவர் : புரியவில்லை.

தாயார் : சிந்தனை எழுந்தால் சமர்ப்பணமில்லை. வேலை வந்தவுடன் சமர்ப்பணம் உடன் எழுந்தால் அது பலிக்கும். சிந்தனைக்கோ, உணர்ச்சிக்கோ இடையில் வேலையில்லை. இருந்தால் சமர்ப்பணம் பலிக்காது.

கணவர் : எனக்குச் சமர்ப்பணம் வாராது. பிரார்த்தனை வரும். பிரார்த்தனை பலிக்கும் என்பதால் எனக்குப் பிரார்த்தனை போதும். அன்னை பக்தன் என்பதால் எல்லாப் பிரார்த்தனைகளும் பலிக்க வேண்டுமல்லவா?

தாயார் : பிரார்த்தனையின் உண்மை பலிக்கும். பர்சனாலிட்டிக்கு ஏற்றவாறு பிரார்த்தனை பலிக்கும்.

கணவர் : அன்னை பலிக்கும் என்பது பொய்யா? நான் ஏமாந்து விட்டேனா?

தாயார் : பொய்யில்லை, ஏமாற்றமில்லை, புரியவேண்டும்.

கணவர் : புரியும்படிச் சொல்லேன்.

தாயார் : சொன்னால் புரியும், நடக்காது.

கணவர் : ஏன்?

தாயார் : சொல்வது புரிவதற்காக, நடத்துவதற்காக அன்று.

கணவர் : நடக்கின்ற மாதிரி சொல்ல முடியாதா?

தாயார் : முடியாது, முடிந்தால் ஒரு முறைக்கு மேல் சொல்லக் கூடாது.

கணவர் : அந்த ஒரு முறை சொல்லேன்.

தாயார் : நடந்தவரைக்கும் அப்படிச் சொன்னதுதான்.

கணவர் : ஏன் என் பிரார்த்தனை பலிக்கக்கூடாது?

தாயார் : பிரார்த்தனை என்பது நம் ஜீவனுடைய தேவை.

கணவர் : பலிக்கவேண்டியதுதானே.

தாயார் : ஜீவனுக்கு வேண்டிய அளவில் பலிக்கும்.

கணவர் : அந்த அளவை நிர்ணயிப்பது யார்?

தாயார் : நாம்.

கணவர் : நான் அன்னையைத் தவறாகப் புரிந்துகொண்டேனா? கண்ணாடி போட்டுக்கொண்டால் எழுதப் படிக்கத் தெரியாதவர்க்குப் படிக்கத் தெரியும் என நம்புவதுபோல் புரிந்துகொண்டேனா?

தாயார் : கண்ணாடி கண்ணில் உள்ள கோளாற்றைச் சரி செய்யும். அறிவு தாராது.

தொடரும்....

*****

Comments

02.எங்கள் குடும்பம் - 

02.எங்கள் குடும்பம் -  continuation
 
 
Para 77     -  Line 1   -  தாயார் :                         -     தாயார் :
Para 286   -  Line 1   -  சொல்நான்                     -     சொல் நான்
Para 293   -  Line 2   -  disciplineகட்டுப்பாடு        -     discipline கட்டுப்பாடு
Para 315   -  Please align the para to the previous one.
Para 386   -  தலைவராகவந்திருக்கிறான்       -         தலைவராக வந்திருக்கிறான்
Para 402   -  Please join line 3 & 4

02.எங்கள் குடும்பம் Para 

02.எங்கள் குடும்பம்

 
Para  48    -  Line  2    -   soft speechநோக்கில்       -  soft speech, பிறர் நோக்கில் 
Para 106   -  Line  1    -   போரிலிருக்காது            -  போரிருக்காது
Para 107   -  Line  1    -   கணவர் ஏன்?              -   கணவர்: ஏன்?
Para  108  -  Line  1    -   தாயார் : : ஈராக்           -   தாயார்ஈராக்
Para  109  -  Line  1    -   தறு                                 -    தவறு
Para  116  -  Line  2    -   பிரதிபப்பு                        -    பிரதிபலிப்பு
Para   128  - Please make a new paragraph for the following lines
 
மனம் பக்குவப்படவில்லை எனினும்,
:
:
அதன் பலனாக,

Para  131  -  Line  2   -   வேண்டு- மென்றாலும்      -    வேண்டுமென்றாலும்
Para  135  -  Line  1   -   கவர்னர் அவர்களை கொடுக்கமாட்டார். உதவி கேட்பார்,            -      கவர்னர் அவர்களை உதவி கேட்பார்,  கொடுக்கமாட்டார்.
Para   171  -  Line  1   -   கடல்    -    கடலில்
Para   177  -  Line  1   -   வேலையிருப்பவர்    -    வேலையிலிருப்பவர்
Para   187  -  Please make a new paragraph for the following lines
 
பார்ட்னர் : தேவதைகள் நடனமாடிய கதைதானே. வெண்மையான இளம் தேவதை சமீபத்தில் பிறந்தது என்பதுதானே.
 
 
Para 188 - Please make a new paragraph for the following lines
 
கம்பெனியிலிருந்து சிமெண்ட் திருடு போனதாகச் செய்தி வந்தது. அனைவரும் மனம் ஒடிந்தனர்.
 
Para 208 - Please make a new paragraph for the following lines
 
 வந்த நாயுடு போய்விட்டார். கணவர் அவருடன் வெளியே போகப் பிரியப்படவில்லை.
 
Para 215  -  Line  3   -   மனதிருப்பதையும்     -    மனதிலிருப்பதையும்
Para 219  -  Please make a new paragraph for the following
 
இருவரும் வெளியிலிருந்து
:
:
மனத்தில் ஆழமாய் அவருக்குப் பட்டுவிட்டது.
 
Para 236  -  Line  1  -   சொல்       -     சொல்லி



book | by Dr. Radut