Skip to Content

03.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஸ்ரீ அரவிந்த அன்னைக்கு அனந்தகோடி நன்றிகள்!

தங்கள் கடிதப்படி மணிக்கொருமுறை அன்னையின் கண்ணொளி என் கண்ணில் படும்படி பிரார்த்தித்துக்கொண்டேன். நான் சாதாரணமாக நாள்தோறும் எனக்குக் கிடைக்கும் பூக்களைக் கொண்டு அன்னையின் படத்தின்முன் அலங்கரித்து ஊதுபத்தி பற்றவைத்து 108 முறை "அன்னை சாந்தி" சொல்வேன். பிறகு "அன்னையின் சித்தம் என் பாக்கியம்", "அன்னையே உம் திருவருள் நிறைவேறட்டும்", "ஓம் நமோ பகவதே நம: ஸ்ரீ அரவிந்தாய நம", "ஸ்ரீ அன்னையே நம" என்று மூன்று முறை சொல்லி, அன்றைய என்னுடைய எல்லாப் பணிகளையும் சமர்ப்பணம் செய்து, பிரார்த்திப்பது வழக்கம். தங்கள் ஆலோசனைப்படி என் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து அற்புதமாக என் கண்ணின் கோளாறுகளை சரிசெய்து எனக்குப் பூரண ஆரோக்கியமான பார்வையை அன்னை அளித்துவிட்டார். முதல் கண்ணைப் பரிசோதித்த டாக்டர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். பின்னர் முதலில் மாத்திரைகளைக் கொடுத்து 1 மாதம் சாப்பிடச் சொன்னார். 1 மாதம் கழித்து, ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்று கூறினார். என் வேண்டுதலின் படி அறுவை சிகிச்சை இல்லாமலேயே மாத்திரையில் குணமாகிவிட்டது. என்னே அன்னையின் அற்புதம்! அன்னைக்கு நன்றியுடன் காணிக்கை அனுப்பியுள்ளேன். என் பேரன் SSLC தேர்வில் எல்லாப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று, பள்ளியின் முதல் மாணவனாக வெற்றி பெற அன்னையிடம் பிரார்த்திக்கிறேன். ஸ்ரீ அன்னைக்கும், தங்களுக்கும் மீண்டும் அனந்த கோடி நன்றி கூறுகிறேன்.

 

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

அருள் நிர்ப்பந்தப்படுத்தாது. நிச்சயமாகச் சுட்டிக்காட்டும். நிர்ப்பந்தப்படும் அருள் உள்ளிருந்து எழுவது; அதை ஆன்மாவின் அருள் என்கிறார்.   

****

Comments

 03.அன்பர் கடிதம்   Para  

 03.அன்பர் கடிதம்  
 
Para   1   -  Line  4    -   சாந்தி'                                -  சாந்தி"
Para  1      -   Line  4      -   பாக்கியம்'                                 -   பாக்கியம்"
Para   1   -   Line  5   -   நிறைவேறட்டும்'              -   நிறைவேறட்டும்"
Para   1   -   Line  5   -   ஸ்ரீ அரவிந்தாய நம'         -   ஸ்ரீ அரவிந்தாய நம"
Para   1   -   Line  5   -    "ஸ்ரீ அன்னையே நம'      -    "ஸ்ரீ அன்னையே நம"



book | by Dr. Radut