Skip to Content

10.சாவித்ரி

சாவித்ரி

P.55, Thus will the masked Transcendent mount his throne.

அப்பாலுக்கப்பாலானவன் ஏறும் சிம்மாசனம் மறையும் திரை.

. இருள் சூழ்ந்து இதயத்தைக் கொல்லும்.

. மனித மனம் சிறுவிளக்கு.

. இரவில் திருடனின் தயங்கிய நடை.

. எவரும் அறியாமல் வீட்டினுள் நுழைபவர்.

. அரைகுறையான குரல் பேசும், ஆத்மா ஏற்கும்.

. மனத்தின் அந்தரங்கக் குகைக்குள் வரும் சக்தி.

. மூடிய வாழ்வின் கதவுகளைத் திறக்கும் கவர்ச்சிகரமான இனிமை.

. உலகின் எதிர்ப்பை மீறி வெல்லும் அழகு.

. இயற்கையைச் சூழ்ந்து கவரும் சத்தியஜோதி.

. இதயத்துள் நுழையும் இறைவன் தரும் ஆனந்தம்.

. எதிர்பாராமல் பூமி தெய்வமயமாகும்.

. ஆன்மீகச் சுடர் ஜடத்தில் ஒளிவிடும்.

. ‘புனித ஜன்மம் உடல்களைப் புதுப்பிக்கிறது.

. நட்சத்திரக் கானம் கேட்டு விழித்த இரவின் நித்திரை.

. நாட்கள் மகிழ்வின் யாத்திரையாகும்.

. மனத்தின் விருப்பம் இறைவனின் சக்தியாகும்.

. எண்ணம் ஆத்மசூரியனின் கதிர்கள்.

. எவருக்கும் புரியாதது சிலருக்கு விளங்கும்.

. ஆன்றோர் பேசிமுடித்து உறங்கும் பொழுது இறைவன் எழுவான்.

. வேலை முடியும் வரை நம்பிக்கை எழாது.

. தன் சத்தியத்தை அறியாத ஜீவியம்.

. தவறான விடியலைத் தேடிவரும் வேடன்.

. ஜீவனின் இருளுக்கும் ஒளிக்கும் நடுவில்,

. அரைகுறையான வெளிச்சத்தில் முழுமையாகத் தோன்றும்.

. பிரம்மத்தின் இடையில் ஏற்பட்ட இடைப்பட்ட நிலை,

. முழுமையான எண்ணத்தையும், சக்தியையும் வெட்டிவிடும்.

. இடைவெளியில் வலம் வரும் வட்டம்.

. தெரியாத ஆரம்பம், புரியாத முடிவு.

. முடிவில்லாத வீதியில் ஓடுபவன்.

. ஆதியின் அரைகுறை வெளிச்சம், முடிவின் முழுத்தழல்.

. சூன்யமான ஜடத்தில் வாழும்.

. வெற்றிடத்தில் நடமாடும் எண்ணம்.

. விவரமற்ற விளக்கம்.

*******


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

துரோகத்தை விஸ்வாசமாகவும், விஸ்வாசத்தைத் துரோகமாகவும் காண்பது பூரணஞானம்.

துரோகமே விஸ்வாசம்.

விஸ்வாசமே துரோகம்.

துரோகத்தை துருவிப் பார்த்தால் விஸ்வாசம் தெரியும்.

விரிவடையும் விஸ்வாசம் துரோகமாக மாறும்.


 


 



book | by Dr. Radut