Skip to Content

13. Friends World College

 Friends World College

Quakers க்வேக்கர் என்பவர்கள் என்பவர்கள் ஏசுவைத் தூய்மையாகப் பின்பற்றுபவர்கள். உலகில் ஏற்பட்ட உன்னத இயக்கங்களில் இது ஒன்று. மகாத்மாகாந்தியைப் பின்பற்றியவரில் வினோபா தலைசிறந்தவர் என்பதுபோல் ஏசுவை இவர்கள் பின்பற்றினர். வினோபாவின் மறைவுக்குப்பின் அவருக்கு அளித்த பாரதரத்னா விருதை அவர் ஆசிரமம் ஏற்க மறுத்தது. கொள்ளைக்காரர்கள் வினோபாவின் பேச்சுக்கு இணங்கி போலீஸில் சரணடைந்தனர். வியாபாரத்தில் சம்பளம் பெறலாம், இலாபம் பெறக்கூடாது என்பது க்வேக்கர்கள் கொள்கை. இவர்கள் பெருவாரியாக வியாபாரம் செய்தனர். பொருள் தரமாகவும், மலிவாகவுமிருப்பதால் வியாபாரம் அளவுகடந்து பெருகியது. அதிர்ஷ்டத்திற்குரியவர் அதை விட்டு விலகினாலும், அதிர்ஷ்டம் அவர்களை நாடும். (அன்னையை அறிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நாம் அன்னையை மறந்தாலும், அன்னை நம்மை மறப்பதில்லை). இந்த க்வேக்கர்கள் நியூயார்க்கில் ஒரு கல்லூரி நடத்தினர். அவர்கள் தலைவர் நம்மை அக்கல்லூரிக்கு உதவியான கருத்துகளைக் கூறும்படிக் கேட்டு கல்லூரியின் brochureஐ அனுப்பியிருந்தார். அதைப் படித்தவுடன் நம் நண்பர்கள் எழுதக்கூடியவற்றைக் குறித்தனர். அவற்றுள் முக்கியமானவை இரண்டு:

- கல்லூரியில் சுத்தம் குறைவு.

- கல்லூரி நடைமுறையில் க்வேக்கர்களுடைய இலட்சியத்தை மறந்துவிட்டது.

நம் சொஸைட்டி உறுப்பினர் கல்லூரிக்குப் போய் ஒரு வாரம் தங்கியிருந்து கல்லூரி நடப்பதைப் பார்வையிட்டு முழு ரிப்போர்ட் எழுதிக் கொடுத்தார். அவற்றுள் பெரும்பாலும் brochureஐப் பார்த்தவுடன் எழுதியவையே. அமெரிக்காவானாலும் சுத்தம் குறைய வாய்ப்புண்டு.

நஷ்டம் வரும் ஸ்தாபனங்களில் சுத்தம் குறையாமலிருக்காது.

 


 

 

*******



book | by Dr. Radut